Sign in to follow this  
ரஞ்சித்

விடியா விடியலாய்

Recommended Posts

தூரத்து கானல்போல தெரிகிறது ஒரு முகம்
நெருங்க நெருங்க கானலும் காணாமல்ப் போக வெறுமைகள் தொடர்கிறது
சிறுகச் சிறுக சேர்த்துவந்த துளிரெல்லாம் கருகிச் சருகாக
மனம் வெதும்பித் தணிகிறது

சொன்னவையும் கேட்டவையும் ஆழ்கடல் தூரத்தில் எதிரொலிக்க
நியாயங்கள் கேட்டுக் கொல்வதோடு மட்டுமே இப்போது நாட்கள் கடக்கிறது
பதிலில்லாக் கேள்விகள் கேட்பதால் வெறுமையே பதிலாக - ஒரு மனதில்
கோபம் கொப்பளிக்கிறது

விதி பிய்த்தெறிந்து புதிதாக எழுது கதையொன்று
உலகத் தவறெலாம் சுரண்டியெடு -  அதைத்
 தலைமேல் கொட்டிக்கொண்டு ஆர்ப்பரி
கூடவே இரு தளிர் கொண்டு போ - உன்
துயர் சேர்த்துகரைத்து ஊற்று
அது அவற்றின் விதியென்று பறை !
விடியா விடியலாய் உதிக்கும் ஒரு உலகு - உனக்கு !

 • Like 3

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ragunathan said:

சிறுகச் சிறுக சேர்த்துவந்த துளிரெல்லாம் கருகிச் சருகாக
மனம் வெதும்பித் தணிகிறது

------ ----- ---- ---- -----
கூடவே இரு தளிர் கொண்டு போ - உன்
துயர் சேர்த்துகரைத்து ஊற்று
அது அவற்றின் விதியென்று பறை !
விடியா விடியலாய் உதிக்கும் ஒரு உலகு - உனக்கு !

 

அருமை! 🌱 துளிர்விடும் நேர்மறை எண்ணங்களை பெரு விருட்சமாய் வளர்க்கத் தூண்டும் வரிகள்.  🌴

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சிறப்பான ஒரு கவிதை ரகுநாதன்.தொடர்ந்தும் எழுதுங்கள்.......!  😁

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • அலுவலகம் முடிந்து எனது வாகனத்தில் வீடுநோக்கி புறப்பட்டேன்... இரவு 8.30 மணி...   வோர்ட் பிளேஸ் ஊடாக பெரியாஸ்பத்திரி முன் உள்ள சந்தியில் திரும்பி மருதானை நோக்கி வந்தபோது இடையில் கலர் லைட் அருகே சிறிய சத்தம் கேட்டது.. கண்ணாடியை பார்த்தேன்... ஒன்றுமில்லை... கொஞ்சம் முன்னே வந்தபோது ஒரு ஓட்டோக்காரர் என்னை முந்தியபடி சிங்களத்தில் கத்தியபடி வாகனத்தை ஓரமாக்குமாறு பணித்தார்...   என்ன பிரச்சினை...? என்று கேட்டேன்...   “ஓரமாக நிறுத்துங்கள்... சொல்கிறேன்” என்றார்...   சரியென்று நிறுத்தினேன்...   அருகே வந்தார்... நான் வாகனத்தில் இருந்து இறங்காமல்... என்ன பிரச்சினை என்று கேட்டேன்..   “ நீங்கள் இடது பக்கம் வாகனத்தினை திரும்பியதால் எனது வாகனம் சடாரென திரும்பியது...அதனால் நான் அரும்பொட்டில் தப்பினேன்.. இப்போ வாருங்கள் பொலிஸ் செல்வோம்... உங்களை ரிமாண்ட் பண்ணுவார்கள்...” என்றார்..   கையில் இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது... காலிலும் இரத்தக் காயம் இருப்பதாக சொன்னார்...   சில நிமிடங்களில் மிரட்டும் தொனியில் பேச ஆரம்பித்தார்... காலையில் சாமி கும்பிட்டு நெற்றியில் வைத்த மஞ்சள் குங்குமத்தை பார்த்து சுத்த சைவமான சாந்தமான பேர்வழி என்று நினைத்துவிட்டார் போலும்...   இருந்தாலும் ஒரு விபத்து நடந்திருந்தால் என்ன செய்வது? அதுவும் நம்மையறியாமல்..! என்று நினைத்து சரி வாருங்கள் பொலிசுக்கு செல்வோம் என்றேன்... “ உங்களை ரிமாண்ட் பண்ணுவார்கள்... ஊரடங்கு வேறு இருக்கிறது...பரவாயில்லை உள்ளே இருங்கள்..” என்றார்..   “சரி.. என்று நான் பொலிஸ் நோக்கி புறப்பட அவர் அமைதியாக ஒன்றுமில்லாமல் ஓட்டோவில் அமர்ந்தார்...” நான் கொஞ்ச தூரம் முன்னே வந்து மருதானை பொலிஸ் நிலையத்தின் முன்னால் இருந்த பொலிஸாரிடம் இந்த விடயத்தினை கூறினேன்...   “ நீங்க வீட்டுக்கு போங்க சார்.. இந்த கொஞ்ச நாளா குடு காரனுங்க கைய வெட்டிக்கொண்டு இந்த வியாபாரத்த பண்ணுறானுங்க... அதெல்லாம் ஒரு விபத்தும் கிடையாது.. எதாவது ஒன்றை வாகனத்தில் வீசி சத்தம் வர வைப்பது... பின்னர் மிரட்டுவது...இதுதான் வேலை நீங்கள் போங்க... நாங்க பார்க்கிறோம்..” என்று கூறி என்னை அனுப்பினர்...   மக்களே கவனம்... கொஞ்சம் உலகறிவுள்ள நமக்கே இப்படி ஒரு அச்சுறுத்தல் வந்தபோது சாதாரண நிலையில் உள்ள ஒருவரின் நிலைமை என்ன?   இப்படி என்ன சம்பவம் நடந்தாலும் உடனடியாக பொலிசுக்கே போவோம் என கூறுங்கள்.. ஆயிரம் ரெண்டாயிரம்னு கொடுத்து ஷேப் ஆக நினைக்காதீங்க... நீங்க தவறே செய்திருந்தாலும் பொலிஸுக்கு போய் முறையிடுங்கள்.. நீதி கேளுங்கள்...   அவன் குடுக்காரன் அல்ல... ஜூனியர் நடிகர் திலகம்...   கவனம்...! – சிவராஜா ராமசாமி : 3 -6 - 2020 https://www.madawalaenews.com/2020/06/blog-post_24.html
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  • முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களிக்காடு பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி அற்ற முறையில் கிரவல் அகழ்வு இடம்பெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், அவ்விடத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் நேற்று சென்றுள்ளனர். குறிப்பாக குறித்த இடத்திற்கு ஊடகவியலாளர்கள் சென்று செய்தி சேகரிக்கும் பணியை ஆரம்பித்ததும், அந்த இடத்தில் இருந்த டிப்பர் வாகனங்கள் அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றதோடு மீண்டும் அந்த இடத்திற்கு கிரவல் ஏற்றுவதற்காக வருகைதந்த டிப்பர் வாகனங்களும் திரும்பிச் சென்றுள்ளன சம்பவ இடத்துக்கு சென்றதும் சம்பவத்தை அவதானித்த ஊடகவியலாளர்கள் முள்ளியவளை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கும் வனவள திணைக்கள அதிகாரிக்கும் தகவல் வழங்கி இருந்த போதும் அந்த இடத்தில் இருந்த வாகனங்கள் அனைத்தும் அவ்விடத்தை விட்டு செல்லும் வரை சுமார் அரை மணி நேரமாக அந்த இடத்திற்கு பொலிஸாரோ வனவள அதிகாரிகளோ வருகைதரவில்லை அப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பக்கோ இயந்திரமும் வாகனத்தில் ஏற்றப்பட்டு அந்தஇடத்தில் இருந்து அகற்றப்படும் வரை வனத்துறை அதிகாரிகளும் பொலிசாரும் வரவில்லை. அந்த இடத்திலிருந்து மிகவும் அண்மையில் பொலிஸ் நிலையமும் வனவள அலுவலகமும் இருந்தபோதும் அவர்கள் வருகை தராமல் அந்த இடத்திலிருந்து சட்டவிரோத பணியில் ஈடுபட்டவர்கள் விலகிச் செல்லும் வரை இவர்கள் அவ் இடத்திற்கு வரவில்லை இவ்வாறு சட்டவிரோதமாக கிரவல் அகழ்வு காரணமாக காடுகள் அழிக்கப்பட்டு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக அந்தப் பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் அனைத்தும் உயிரற்ற நிலைக்குச் சென்றுள்ளன. இக் கிரவல் அகழ்வானது ஏற்கனவே பிரதேச சபையுடன் இணைந்து மரநடுகைக்கென சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக பாரியளவிலான விருந்தினர் விடுதி ஒன்றை அமைத்து வரும் அவலோன் நிறுவனத்தினராலேயே ஏற்றிச் செல்லப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றார்கள். அப்பகுதியில் கிரவல் அகழ்வில் ஈடுபட்டவர்களிடம் அனுமதிப்பத்திரங்கள் கேட்ட போது அங்கு நின்றவர்கள் அனுமதிப்பத்திரங்களை வைத்திருக்கவில்லை. இவ்வாறு ஊடகவியலாளர்களை கண்டவுடன் வாகனங்களை எடுத்துச் செல்கிறார்கள் எனில் இங்கு சட்டவிரோத தொழில் இடம் பெறுவது உறுதியாகி இருக்கின்றது. இங்கிருந்து அனைத்து வாகனங்களும் திரும்பி சென்றபின்னர் அந்த இடத்துக்கு வருகைதந்த வனவள அதிகாரி 15 கியூப்க்கு அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்ட போதும் அந்த இடத்தில் சுமார் 150 கியூப்க்கு மேல்நேற்று கிரவல் அகழப்பட்டுள்ளமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக குறித்த பகுதியை அண்டிய பகுதிகளில் அனைத்து வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு பாரியளவிலான மரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு இவ்வாறாக சட்டவிரோத கிரவல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் தகவல்கள் வழங்கியுள்ளார்கள். இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகாரிகள் பூரண ஆதரவை வழங்குகின்றார்களா என்ற சந்தேகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றார்கள். குறிப்பாக குறித்த இடத்திற்கு வருகை தந்த வனவள திணைக்கள அதிகாரி அவ்இடத்திலிருந்து திரும்பி செல்லும் போது, அகழ்வில் ஈடுபட்ட ஒரு நபரை மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் கூட அணியாமல் ஏற்றிச் செல்கின்றார். இவ்வாறான செயற்பாடுகள் இவர்கள் குறித்த நபர்களுடன் என்ன ஒப்பந்தத்தில் இந்த வேலைகளை செய்கின்றார்கள் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்த தவறும் பட்சத்தில் முல்லைத்தீவு வனப்பகுதிகள் அழிந்து உரிய காலத்தில் மழைவீழ்ச்சி இன்றி விவசாயத்தையே நம்பி வாழும் மக்களை பாதிக்கும். எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/144608
  • அலிபாபா பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.