Sign in to follow this  
தமிழ் சிறி

ஆஸ்திரேலியாவில்... தமிழ் பாடத்தில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி.. கல்வியமைச்சர் கவுரவம்.

Recommended Posts

Two Tamil students achieved 1st and 2nd places in the New South Wales state

ஆஸ்திரேலியாவில்... தமிழ் பாடத்தில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி.. கல்வியமைச்சர் கவுரவம்.

ஆஸ்திரேலியாவின், நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர தேர்விற்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95 மதிப்பெண்களை பெற்ற ஹரிஷ்ணா செல்வவிநாயகனும், இரண்டாம் இடத்தை 94 மதிப்பெண்கள் பெற்று ப்ரீத்தி சக்தி சிவபாலனும் அசத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வவிநாயகன், பத்மினி தம்பதிகளின் மகனான ஹரிஷ்ணா, ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வென்ற்வேர்த்வில் தமிழ் பாடசாலையில் தமிழ் மொழியை கற்ற இவர் கலைகளிலும் மிகுந்த ஆர்வமுள்ள மாணவனாகும். தேர்வை திணைக்களம் (NESA) தொலைபேசியூடாக பெறுபேறை வெள்ளிக்கிழமை 7ம் தேதி அறிவித்தபொழுது உங்கள் மகிழ்ச்சியை யாருடன் பகிர்ந்து கொண்டீர்கள் என்று கேட்டபொழுது நான் முதன் முதலாக மனதார பகிர்ந்துகொண்டவர்கள் எனது அன்பு பெற்றோரும், தந்தை ஸ்தானத்தில் இருக்கும் எனது குரு நவரட்ணம் ரகுராம் ஆசிரியரும் என்கிறார் ஹரிஷ்ணா பெருமையோடு.

Two Tamil students achieved 1st and 2nd places in the New South Wales state

உயர்தர தேர்வில் ஒவ்வொரு பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநில பிரதமரினால் கௌரவிக்கப்படுவது மரபு. அதற்கமைய இவர்களிற்கான பாராட்டு விழா புதன்கிழமை (12/12/18) அன்று UNSW பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. சான்றிதழ்களை பிரதமரின் சார்பில் கல்வியமைச்சர் வழங்கி கௌரவித்திருந்தார்.

வீட்டிலும், வெளியிலும் தமிழ் நண்பர்களுடன் இயன்றளவு தமிழில் பேசுங்கள் என இளையோர்களிற்கு அறிவுரை கூறும் இவர், தமிழில் ஆர்வத்தை ஏற்படுத்திய பெற்றோர்களிற்கும் நன்றிகளை கூறத் தவறவில்லை. தனது நண்பர்களும், ரகுராம் ஆசிரியரும் ஒரு தனிப்பட்ட குடும்பத்தை உருவாக்கியுள்ளதாகவும் இந்த குடும்பம் தந்த உதவியினாலும், உந்துதலினாலும் தான் இந்த நிலையில் நிற்பதாக பெருந்தன்மையோடு கூறுகின்றார். மாநிலத்தில் தேர்வு எழுதிய 32மாணவர்களில் 20பேர் அதியுயர் சித்தி பெற்றது பெருமையானா விஷயம். பாடசாலைக்கு அப்பால் பிரத்தியேகமாக இலவச தமிழ் வகுப்புக்களை உயர்தர மாணவர்களிற்கு நடாத்திய ஆசிரியர் நவரட்ணம் ரகுராமால், ஒன்பது மாணவர்களில் இருவர் முதலாம், இரண்டாம் இடங்களில் வந்திருப்பதுடன் மேலும் ஐந்து மாணவர்கள் அதியுயர் சித்தி பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஹரிஷ்ணா வழங்கிய பேட்டியை பாருங்கள்.

கேள்வி: பரீட்சை திணைக்களம் (NESA) உங்களுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த பொழுது உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது.

பதில்: அடக்க முடியாத ஆனந்தம். அந்தச் செய்தியை கேட்டபோது என்னால் நம்பவே முடியவில்லை. இது கனவா? நனவா? என்று என்னையே பல தடவைகள் கேட்டேன். அந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.

கேள்வி: இந்த தேர்வு பெறுபேறை எதிர்பார்த்தீர்களா?

பதில்: எனது திறமைகள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், மற்றைய மாணவர்களின் திறமையை நான் அறியவில்லை. அத்தோடு, இந்த வருடம் வழமையையும் விட மிகக் கடினமாக படித்ததால் இந்த வருடமும் வேறு பள்ளி மாணவர்கள்தான் அதியுயர் சித்தி பெறுவார்கள் என்று நினைத்தேன். அதனால், இந்த செய்தி எதிர்பார்க்காததுதான்.

Two Tamil students achieved 1st and 2nd places in the New South Wales state

கேள்வி: இந்த மகிழ்ச்சியை யாருடன் பகிர்ந்து கொண்டீர்கள்?

பதில்: இந்த செய்தி கேட்டவுடன் எனது நண்பர்கள் (அருகில் இருந்த) பலரிடம் சொல்லி விட்டார்கள். ஆனால், நான் முதன் முதலாக மனதார பகிர்ந்து கொண்டவர்கள். எனது அன்பு பெற்றோர்களும் தந்தை ஸ்தானத்தில் இருக்கின்ற எனது குரு நவரட்ணம் ரகுராம் மாமா தான்.

கேள்வி: உங்களின் வெற்றிக்கு காரணமானவர்கள் யார்?

பதில்: எனது வெற்றிக்கு காரணமானவர்கள் எனது பெற்றோர், ஆசியர்கள் மற்றும் நண்பர்கள்தான். ஊக்கமளித்த பெற்றோரும் கல்வி புகட்டிய நண்பர்களும் ஆசிரியர்களும்தான் என்னை இந்த நிலைக்கு கொண்டு சேர்த்தார்கள். இவர்களிலும் முக்கிய பங்கை வகிக்கும் ஒருவர் ரகுராம் மாமா.

Two Tamil students achieved 1st and 2nd places in the New South Wales state

கேள்வி: பெற்றோரின் ஊக்கம் எந்தளவில் உங்களை உந்தியது?

பதில்: எனக்கு என்மீது நம்பிக்கை இல்லாத போது எனது பெற்றோர் தான் உந்துதல் கொடுத்தார்ககள். என்னை தமிழ்ப் பாடசாலையில் சேர்த்து, தமிழ் மீது ஒரு விருப்பத்தை வரவழைத்தவர்களே அவர்கள்தான். மற்றும், தமிழ்ப் பள்ளியை விட்டு ஆசிரியர் ரகுராம் மாமா விலகிச் சென்ற போது எனது பெற்றோர்கள்தான் மீண்டும் அவரது பிரத்தியேக வகுப்புக்களில் சேர்த்துவிட்டார்கள்.

கேள்வி: நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?

பதில்: தமிழோடு ரசாயனத்தையும் ஒரு பாடமாக இந்த வருடம் எடுத்தேன். அதனால் மற்றவர்களைப் போல் முழுக் கவனத்தை தமிழில் மட்டும் செலுத்தாமல், பாதி கவனத்தை இரசாயனவியலிலும் செலுத்த வேண்டியதாக இருந்தது. அத்தோடு, பரீட்சையின் இறுதி நாட்களில் அதிகளவு நேரம் தமிழ்ப் பாடசாலையில் செலவிடப்பட்டது. அதனால் சுயமாக தமிழ்ப் பரீட்சைக்கு என்னை தயார் செய்ய கடினமாக இருந்தது. அதனால், இதுதான் மிகப்பெரிய சவால் என நினைக்கிறேன்.

கேள்வி: ஆஸ்திரேலியாவில் உயர்தர பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக எடுப்பதால் என்ன நன்மை?

பதில்: எனது இயல்பான திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய ஒரு வாய்ப்பாக அமைந்தது. அத்தோடு. எனது பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் சமூகம் மத்தியில் பெருமை தேடிக் கொடுப்பதே மிகப் பெரிய நன்மையென கூறலாம். இது எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்திற்கோ, வேலைக்கோ விண்ணப்பிக்கும் பொழுது தமிழ் நிச்சயமாக உதவும் என நம்புகிறேன்.

Two Tamil students achieved 1st and 2nd places in the New South Wales state

கேள்வி: எதிர்காலத்தில் தமிழை ஒரு பாடமாக எடுக்கும் மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: தமிழை விரும்பிப் பயிலுங்கள். தமிழ் மீது பற்று இல்லாவிட்டால் தமிழை கற்பது வீண். ஆனால், இளமையில் தமிழை கற்றிருக்கலாமே என்ற எண்ணம் எதிர்காலத்தில் வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். அத்தோடு, வீட்டிலும் வெளியே தமிழ் நண்பர்களுடனும் இயன்றளவுக்கு தமிழில் பேசுங்கள். தமிழ் உச்சரிப்பும் பிழைக்காமல் இருந்தால் உங்களுடைய சொற்களஞ்சியமும் பெருகும். தமிழை எழுதுவதும் சுலபமாக இருக்கும்.

கேள்வி: நீங்கள் வாய்மொழி பரீட்சைக்கு எடுத்த தலைப்பு 'நட்பு'. ஆகவே, நண்பர்கள் எவ்வாறு உங்கள் வெற்றிக்கு உதவினார்கள்?

பதில்: வஞ்சகமின்றி எனக்காக பலதை அர்ப்பணித்த நண்பர்களும் எனது வெற்றிக்கு காரணமானவர்கள். அவர்களுடன் ஒவ்வொரு முறை அளவளாவும் போதும் புதிய புதிய விடயங்களை கற்றுக் கொண்டேன். எனக்காக அவர்களும், நான் அவர்களுக்கும் பல உதவிகளை செய்துள்ளோம். அத்தோடு, நானும் அவர்களுடைய குடும்பத்தில் உள்ள ஒருவன் போல் என்னை அரவணைத்தார்கள். ஆகவே, எனது நண்பர்களும், ரகுராம் மாமா வும் ஒரு தனிப்பட்ட குடும்பத்தை உருவாக்கியுள்ளோம். இந்த குடும்பம் தந்த உதவியினாலும், உந்துதலினாலும் தான் நான் இந்த நிலையில் நிற்கின்றேன்.

கேள்வி: இறுதியாக தமிழ் சார்ந்த உங்கள் எதிர்கால லட்சியமென்ன?

பதில்: தமிழை வளர்ப்பது எந்தளவு முக்கியமோ தமிழை பரப்புவதும் அந்தளவு முக்கியம்தான். எனது நீண்ட கால ஆசை என்னவென்றால், எனது நண்பர்களுடன் ஒன்றிணைந்து சமூக ஊடகங்கள் மூலமாக தமிழின் புகழைப் பரப்புவதுதான். உதாரணமாக, வானொலி நிகழ்ச்சிகள் மூலமாக புதிய தலைமுறைக்கு தமிழின் சிறப்பை எடுத்துக் காட்டலாம். அத்தோடு, படவரி, முகநூல் போன்ற வலைத்தளங்களினூடாகவும் தமிழைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கலாம் என நம்புகின்றேன். அத்தோடு, பிற இனத்தை சேர்ந்தவர்களிடம் நாட்டம் இருந்தால், தமிழை கற்றுக் கொடுக்க முயற்சி செய்வேன். ஆதலால், தமிழை நான் பரீட்சை முடிந்தவுடன் கைவிடப் போவதில்லை. தமிழை வளர்க்கவும் பரப்பவும் என்னால் இயன்றளவுக்கு முயற்சி செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 
Read more at: https://tamil.oneindia.com/news/sydney/two-tamil-students-achieved-1st-2nd-places-the-new-south-wal-336463.html

Share this post

Link to post
Share on other sites

இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் என்கிற முறையில் இம்மாணவர்களின் பெறுபேறுகள் பற்றி பெருமகிழ்ச்சி அடைவதோடு, இதுதொடர்பான எனது கருத்தினையும் இங்கே பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.

தமிழினை உயர்தரத்தில் ஒரு பாடமாக எடுப்பதென்பது வெறும் இரண்டு வருடங்களில் தமிழினைக் கற்று அல்லது கற்பித்து நடக்கக்கூடிய ஒரு விடயமல்ல என்பது பலருக்கும் தெரிந்த விடயம். மாணவர்கள் ஆரம்பப் பள்ளியிலிருந்து சிறிது சிறிதாக தாம் பெற்றுக்கொண்ட தமிழறிவினூடாகத்தான் உயர்தரத்தில் சிறப்பாகச் செயற்பட முடியுமேயன்றி, வானிலிருந்து குதித்து வந்து வெறும் ஒன்று அல்லது இரு வருடங்களில் தமிழினை அடிப்படையிலிருந்து கற்று சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுவிடமுடியாது.

இம்மாணவர்களில் பெரும்பாலானவர்களை அவர்களின் சிறுபராயத்திலிருந்து நான் அறிவேன். நான் பாடசாலையில் உதவுவதற்காக இணைந்தபோது இவர்கள் 3 ஆம் அல்லது 4 ஆம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்தார்கள். இவர்களுடன் சேர்த்து இன்னும் குறைந்தது 40 அல்லது 50 மாணவர்கள் இவர்களின் தரத்தில் படித்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வருடமாக இம்மாணவர்கள் தரமேற்றப்படும்பொழுது, ஆசிரியர்களினதும், பெற்றோரினதும் முயற்சியாலும், இடைவிடாத ஊக்குவிப்பினாலும், தமிழினை உயர்தரத்தில் ஒரு பாடமாக எடுக்கவிரும்பிய மாணவர்கள் தொடர்ந்தும் முன்னேற, மற்றையவர்கள் தமிழினை வாழ்க்கைக்கு உபயோகிக்க முடிந்தால் போதும், பரீட்சைக்காக வேண்டாம் என்பதுடன் தமது கற்றலினை நிறுத்திக்கொள்வார்கள்.

ஆக, பலவருடங்களாக வெவ்வேறு ஆசிரியர்களின் ஊக்குவிப்பினாலும், தன்னலமற்றை கற்பித்தலினாலும் தமிழறிவூட்டப்பட்ட இம்மாணவர்கள் உயர்தரத்தினை அடையும்பொழுது தமிழ்பற்றிய ஒரு பூரண அறிவைப் பெற்றிருந்ததுடன், உயர்தரத்தில் மாணவர்களுக்கு தமிழ்ப் பரீட்சையினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான சிறப்புக் கற்பித்தல் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சிறப்புப் பயிற்சிபெற்ற தமிழ் மொழியில் இலங்கை பல்கலைக்கழகங்களில் பட்டம்பெற்ற ஆசிரியர்களினால் மெருகூட்டப்பட்டு வந்தனர்.

உயர்தரத்தில் கற்பித்த ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையும், வேலை அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமது பொன்னான நேரத்தை மாணவச் செல்வங்களுக்குத் தமிழறிவூட்டப் பயன்படுத்தவேண்டும் என்கிற அவாவும், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை எடுத்து பல மீட்டல்ப் பயிற்சிகளைச் செய்ததன் மூலமும் மட்டுமே இப்பெறுபேறு சாத்தியமாயிற்று என்றால் மிகையாகாது.

நான் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டதுபோல, நான்கு பிரிவுகளான, எழுத்துப் பரீட்சை, கேட்டலும் பதிலளித்தலும், வாசித்தலும்  பதிலளித்தலும் மற்றும் வாய்மொழித்தொடர்பாற்றல் ஆகியவற்றினைக் கற்பிக்க 4 அல்லது 5 ஆசிரியர்கள் பொறுப்பாக இருக்கிறார்கள். ஆக, இவற்றுள் ஒரு பாடத்தில் மாணவர்கள் திறம்படச் செய்யாவிட்டாலும்கூட, அவர்களின் மொத்தப் பெறுபேறு சிறப்பாக அமைய வாய்ப்பில்லை.

எழுதுதலுக்கு 20 புள்ளிகள், வாசித்தலுக்கும் எழுதுதலுக்கும் 25 புள்ளிகள், கேட்டலுக்கும் எழுதுதலுக்கும் 30 புள்ளிகள் மற்றும் வாய்மொழித்தொடர்பாடலுக்கு 25 புள்ளிகள் என்று 100 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. ஆகவே இந்த நான்கு பாடங்களிலும் சிறப்பாகச் செய்யும்போது மட்டுமே ஒரு மாணவர் அதியுயர் சித்தியைப் பெற முடியும்.

ஆகவே, இந்த 4 பாடங்களையும் கற்பித்தவர்களில் எவரும் ஒருவர் தன்னால் மாத்திரமே மாணவர்களுக்கு இந்தப் பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றன என்று உரிமை கோருவதோ அல்லது பெருமைகொள்வதோ நகைப்பிற்கிடமானது மட்டுமன்றி, இம்மாணவர்களின் 12 வருடகால தமிழ்க் கற்றலில் தம்மாலான அனைத்து வகைகளிலும் தன்னலமற்ற சேவையாற்றிய ஏனைய பல ஆசிரியர்களின் சேவையையும் தியாகங்களையும் தட்டிப்பறிப்பதுடன் அவர்களைக் கேவலப்படுத்துவதுமாக ஆகிவிடுகிறது.

ஆகவே, ஊடகங்களில் வெளிவரும் இது தொடர்பான செய்திகள் இம்மாணவர்களின் வளர்ச்சியில் பங்குபற்றிய அனைத்து ஆசிரியர்களினதும் தமிழ்ப்பணியை முன்னுக்குக் கொண்டுவருவதோடு, தனிமனித வழிப்பாட்டுக்கான முயற்சிகளை அறவே களைந்துவிடவேண்டும் என்பதும் எனது அவா.

இறுதியாக, இம்மாணவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் மிகவும் பெருமைக்குரியவை. இவர்களின் இந்த சிறப்பில் பங்குகொண்ட சிறுவயது ஆசிரியர்கள் முதல், இறுதியாகக் கற்பித்த அனைத்து உயர்தர ஆசிரியர்கள் வரை போற்றுதற்குரியவர்கள். 

இவர்களை சிறுபராயம் முதல் தமிழில் வளர்த்தெடுத்து இன்று இவ்வாறான உயர்நிலைக்கு உயர்த்த உதவிய அனைத்து வென்ற்வேத்வில் தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்களுக்கும், பாடசாலைக்கும் எனது நன்றிகளும் பாராட்டுதல்களும்.

குறிப்பு : இம்மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பாக வென்ற்வேத்வில்த் தமிழ்ப் பாடசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள முகப்புத்தகப் பதிவு கீழே,

Edited by ragunathan
spelling
  • Like 8

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, ragunathan said:

இப்பாடசாலையின் முன்னால் அதிபர் என்கிற முறையில் இம்மாணவர்களின் பெறுபேறுகள் பற்றி பெருமகிழ்ச்சி அடைவதோடு, இதுதொடர்பான எனது கருத்தினையும் இங்கே பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.

தமிழினை உயர்தரத்தில் ஒரு பாடமாக எடுப்பதென்பது வெறும் இரண்டு வருடங்களில் தமிழினைக் கற்று அல்லது கற்பித்து நடக்கக்கூடிய ஒரு விடயமல்ல என்பது பலருக்கும் தெரிந்த விடயம். மாணவர்கள் ஆரம்பப் பள்ளியிலிருந்து சிறிது சிறிதாக தாம் பெற்றுக்கொண்ட தமிழறிவினூடாகத்தான் உயர்தரத்தில் சிறப்பாகச் செயற்பட முடியுமேயன்றி, வானிலிருந்து குதித்து வந்து வெறும் ஒன்று அல்லது இரு வருடங்களில் தமிழினை அடிப்படையிலிருந்து கற்று சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுவிடமுடியாது.

இம்மாணவர்களில் பெரும்பாலானவர்களை அவர்களின் சிறுபராயத்திலிருந்து நான் அறிவேன். நான் பாடசாலையில் உதவுவதற்காக இணைந்தபோது இவர்கள் 3 ஆம் அல்லது 4 ஆம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்தார்கள். இவர்களுடன் சேர்த்து இன்னும் குறைந்தது 40 அல்லது 50 மாணவர்கள் இவர்களின் தரத்தில் படித்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வருடமாக இம்மாணவர்கள் தரமேற்றப்படும்பொழுது, ஆசிரியர்களினதும், பெற்றோரினதும் முயற்சியாலும், இடைவிடாத ஊக்குவிப்பினாலும், தமிழினை உயர்தரத்தில் ஒரு பாடமாக எடுக்கவிரும்பிய மாணவர்கள் தொடர்ந்தும் முன்னேற, மற்றையவர்கள் தமிழினை வாழ்க்கைக்கு உபயோகிக்க முடிந்தால் போதும், பரீட்சைக்காக வேண்டாம் என்பதுடன் தமது கற்றலினை நிறுத்திக்கொள்வார்கள்.

ஆக, பலவருடங்களாக வெவ்வேறு ஆசிரியர்களின் ஊக்குவிப்பினாலும், தன்னலமற்றை கற்பித்தலினாலும் தமிழறிவூட்டப்பட்ட இம்மாணவர்கள் உயர்தரத்தினை அடையும்பொழுது தமிழ்பற்றிய ஒரு பூரண அறிவைப் பெற்றிருந்ததுடன், உயர்தரத்தில் மாணவர்களுக்கு தமிழ்ப் பரீட்சையினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான சிறப்புக் கற்பித்தல் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சிற்ப்புப் பயிற்சிபெற்ற தமிழ் மொழியில் இலங்கை பல்கலைக்கழகங்களில் பட்டம்பெற்ற ஆசிரியர்களினால் மெருகூட்டப்பட்டு வந்தனர்.

உயர்தரத்தில் கற்பித்த ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையும், வேலை அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமது பொன்னான நேரத்தை மாணவச் செல்வங்களுக்குத் தமிழறிவூட்டப் பயன்படுத்தவேண்டும் என்கிற அவாவும், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை எடுத்து பல மீட்டல்ப் பயிற்சிகளைச் செய்ததன் மூலம் மட்டுமே இப்பெறுபேறு சாத்தியமாயிற்று என்றால் மிகையாகாது.

நான் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டதுபோல, நான்கு பிரிவுகளான, எழுத்துப் பரீட்சை, கேட்டலும் பதிலளித்தலும், வாசித்தலும்  பதிலளித்தலும் மற்றும் வாய்மொழித்தொடர்பாற்றல் ஆகியவற்றினைக் கற்பிக்க 4 அல்லது 5 ஆசிரியர்கள் பொறுப்பாக இருக்கிறார்கள். ஆக, இவற்றுள் ஒரு பாடத்தில் மாணவர்கள் திறம்படச் செய்யாவிட்டாலும்கூட, அவர்களின் மொத்தப் பெறுபேறு சிறப்பாக அமைய வாய்ப்பில்லை.

எழுதுதலுக்கு 20 புள்ளிகள், வாசித்தலுக்கும் எழுதுதலுக்கும் 25 புள்ளிகள், கேட்டலுக்கும் எழுதுதலுக்கும் 30 புள்ளிகள் மற்றும் வாய்மொழித்தொடர்பாடலுக்கு 25 புள்ளிகள் எறு 100 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. ஆகவே இந்த நான்கு பாடங்களிலும் சிறப்பாகச் செய்யும்போது மட்டுமே ஒரு மாணவர் அதியுயர் சித்தியைப் பெற முடியும்.

ஆகவே, இந்த 4 பாடங்களையும் கற்பித்தவர்களில் எவரும் ஒருவர் தன்னால் மாத்திரமே மாணவர்களுக்கு இந்தப் பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றன என்று உரிமை கோருவதோ அல்லது பெருமைகொள்வதோ நகைப்பிற்கிடமானது மட்டுமன்றி, இம்மாணவர்களின் 12 வருடகால தமிழ்க் கற்றலில் தம்மாலான அனைத்து வகைகளிலும் தன்னலமற்ற சேவையாற்றிய ஏனைய பல ஆசிரியர்களின் சேவையையும் தியாகங்களையும் தட்டிப்பறிப்பதுடன் அவர்களைக் கேவலப்படுத்துவதுமாக ஆகிவிடுகிறது.

ஆகவே, ஊடகங்களில் வெளிவரும் இது தொடர்பான செய்திகள் இம்மாணவர்களின் வளர்ச்சியில் பங்குபற்றிய அனைத்து ஆசிரியர்களினதும் தமிழ்ப்பணியை முன்னுக்குக் கொண்டுவருவதோடு, தனிமனித வழிப்பாட்டுக்கான முயற்சிகளை அறவே களைந்துவிடவேண்டும் என்பது எனது அவா.

இறுதியாக, இம்மாணவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் மிகவும் பெருமைக்குரியவை. இவர்களின் இந்த சிறப்பில் பங்குகொண்ட சிறுவயது ஆசிரியர்கள் முதல், இறுதியாகக் கற்பித்த அனைத்து உயர்தர ஆசிரியர்கள் வரை போற்றுதற்குரியவர்கள். 

இவர்களை சிறுபராயம் முதல் தமிழில் வளர்த்தெடுத்து இன்று இவ்வாறான உயர்நிலைக்கு உயர்த்த உதவிய அனைத்து வென்ற்வேத்வில் தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்களுக்கும், பாடசாலைக்கும் எனது நன்றிகளும் பாராட்டுதல்களும்.

குறிப்பு : இம்மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பாக வென்ற்வேத்வில்த் தமிழ்ப் பாடசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள முகப்புத்தகப் பதிவு கீழே,

மேலதிகமாக தகவல்களை தந்தமைக்கும் விளக்கங்களுக்கும் மிக்க நன்றி ரகு. ஒரு காலத்தில் நீங்களும் அதிபராக இருந்ததை அறிந்து நல்ல சன்தோசம்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this