• ×   Pasted as rich text.   Paste as plain text instead

    Only 75 emoji are allowed.

  ×   Your link has been automatically embedded.   Display as a link instead

  ×   Your previous content has been restored.   Clear editor

  ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • நீங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டு அபிவிருத்தி அபிவிருத்தி என்று கத்த வேண்டியான். அங்கு ஓர் அரசியல் விடுதலை இல்லாமல்.. எமது மக்களுக்கான அபிவிருத்தி என்பது காணல் நீர் தான்... என்பதற்கு.. போர் காலத்திற்குப் பின் திருத்தப்படாது கிடக்கும் வீதிகள் சாட்சி. அதைக் கூடவா.. சிங்கள ஆட்சியாளர்களுக்கு வால் பிடிப்போரால் செய்து கொடுக்க முடியவில்லை.  போர் காலத்தில் கூட தடைகளுக்கு மத்தியில் கூட.. வீதிகள்.. பக்கச் சார்பற்ற பராமரிக்கப்பட்டு வந்த நிலை இன்றில்லை. வீதி பராமரிப்புக் கூட சிங்கள தேச சார்ப்பு அரசியலாகிக் கிடக்கிறது. அவசர அவசரமாக.. அரசியல் விளம்பரங்களுக்காக கட்டப்பட்ட மீன் சந்தைகள் எங்கும்.. காகம் பூந்து பறந்து திரிகிறது. டக்கிளசின் கோட்டைக்குள்.. போடப்பட்ட வீதி பாதியில் கிடக்கிறது. மக்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பவுசர்.. வீதியை குளிப்பாட்டி மகிழ்கிறது. இது தானே நீங்கள் எல்லோரும் விரும்பும் அபிவிருத்தி..???! தமிழர்கள் மீதும் தமிழர் மண் மீதும்.. உண்மையான அக்கறையுள்ள அரசியல் அதிகாரம் உள்ள தமிழர் ஆட்சி இல்லாமல்.. தமிழர் நிலம் அபிவிருத்தி என்பது தமிழ் மக்கள் எண்ணுவதற்கு நிகர அமையாது. 
  • வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கப்படுகின்றதா? கஃபே உன்னிப்பாக அவதானிப்பு தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவுபெற்ற அமைதி காலப் பகுதியிலும் தேர்தல் தினத்திலும் வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கப்படுகின்றதா? என்பதை அவதானிக்க, இம்முறை கஃபே அமைப்பு தமது நடவடிக்கையை விஸ்தரித்துள்ளது என கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் தெரிவித்தார் இரத்தினபுரியில் நேற்று நடைபெற்ற செயலமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை கஃபே அமைப்பிற்கு 735முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் அமைதி காலப்பதியானது மிகவும் அமைதியான முறையில் காணப்படுவதை அவதானிக்க முடிந்தது. அமைதி காலப் பகுதியில் எட்டு முறைப்பாடுகள் மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளன. தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட பதாதைகள், சுவரொட்டிகள் போன்றவை இதுவரை அகற்றப்படாமல் இருப்பது தொடர்பாகவே எட்டு முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன. தேர்தல் அண்மிக்கின்ற இந்த அமைதி காலப் பகுதியிலும் தேர்தல் தினத்திலுமே வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கும் செயற்பாடுகள் கடந்த காலங்களில் இடம்பெற்றன. இதற்கு முன்னரான தேர்தல்களில், இக் காலப்பகுதியிலேயே இலஞ்சம் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அவற்றைக் கருத்திற்கொண்டு இம்முறை கஃபே அமைப்பானது, நீண்டகால மற்றும் குறுங்கால கண்காணிப்பாளர்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது என்றார். https://www.thinakaran.lk/2019/11/15/உள்நாடு/43949/வாக்காளர்களுக்கு-இலஞ்சம்-வழங்கப்படுகின்றதா
  • இங்கு தான் முதன்முதலில்.. விச ஊசி ஏற்றும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.. ராஜீவின் ஹிந்திய இராணுவப் படுகொலையாளர்கள்.  இந்த விச ஊசி ஏற்றப்பட்ட பலர்.. எமக்கு தெரிந்த அண்ணாக்கள் உட்பட.. இரத்தப் புற்றுநோய்க்கு ஆளாகி.. குருதி மாற்றுச் சிகிச்சைக்கு முகம் கொடுத்தனர்.  முன்னர் இரவில்.. இந்த விடுதிப் பக்கம் போக முடியாது. ஒரே அலறல் சத்தம் கேட்கும்.  இந்த சித்திரவதை முகாமை நடத்திய ஈபிஆர் எல் எவ் ஒட்டுக்குழு கும்பலைச் சேர்ந்தோர் இப்போது சுறாமீன் புகழ் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாளி.. போர்க்குற்றவாளி.. கோத்தாவுக்கு வக்காளத்து வாங்கித் திரிகின்றனர். இனம் இனத்தோடு சேர்கிறது. ஒன்றை இன்னொன்று முதுகு சொறிய. 
  • உலகம் பூராவும் பொதுமக்களில் குற்றம் சொல்ல முதல்.. பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தான் வழி செய்வார்கள். நீங்கள் என்னடான்னா.. நாங்கள்.. எங்கள் இஸ்டத்துக்கு ஓடுவம்... பொது மக்களுக்கும் வன விலங்குகளும் தான் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்கிறீர்கள். இந்தக் கடவையில்.. 1990 இல்.. இந்தியப் படைகள் காலத்தில்.. கடவையும் போட்டு.. கண்காணிப்பு கண்காணிப்பாளரும் அமர்த்தப்பட்டிருந்தார். அப்போது ஒரு விபத்தும் நிகழவில்லை. அதுக்கு முன்னர் பல இடங்களிலும் மக்கள் நெருக்கடி உள்ள இடங்களில்.. தொடரூந்தை வேகம் குறைத்துப் பயணிக்கச் செய்தனர். தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டு செல்லக் கோரப்பட்டனர். ஆனால்.. இவை எதுவும் இல்லாமல்.. வேகமாக.. தொடரூந்து வருவது தெரியாமல்.. மக்கள்.. வீதிகளை கடக்கும் போது.. விபத்துக்குள்ளாவதற்கு மக்களை விட தொடரூந்து துறையின் கவயீனமே முக்கிய காரணம்.  எல்லாம் மாற்றான் தாய் மனப்பான்மையின் விளைவு. உங்களின் கதை எப்படி என்றால்.. நீங்கள் போராடினால்.. நாங்கள் செல் அடிச்சு சாகடிப்பும்.. இல்லாட்டி.. எங்களுக்கு அடிமையாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்று சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள்.. சிந்திப்பது.. போல் இருக்கிறது.