poet 369 Report post Posted December 14, 2018 (edited) 13 டிசம்பர் இடம்பெற்ற என் பிறந்த தினத்தில் ”பல்லாண்டு ஜெயபாலன்” எனக் கூறி என்னை வாழ்த்தியபடி யாழ் நேயர்களுக்கு. ”உங்க வயசென்ன அங்கிள்” ”எத்தனை தடவைதான் சொலித் தொலைப்பது என்வயசை. கேழ்” . நீலம் - வ.ஐ.ச.ஜெயபாலன் * தோழிகாலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். * ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும். இளமை என்பது வற்றாத ரசனை இளமை என்பது நித்திய காதல். இளமை என்பது அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன். * தோழா உனக்கு எத்தனை வயசு? தோழி எனக்கு சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு. 2011 Edited December 14, 2018 by poet Share this post Link to post Share on other sites