Jump to content

அவுஸ்திரேலிய முருங்கைகாய்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, புங்கையூரன் said:

ஜஸ்டின்....மீண்டும் கண்டது மிக்க மகிழ்ச்சி...!

எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்!

நன்றிகள்! இருப்பேன்!

Link to comment
Share on other sites

58 minutes ago, Justin said:

GMO உணவுகள் மனிதனுக்குத் தீங்கு விளைவிப்பதாக நடு நிலையான ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப் படவில்லை.  ஆனால், இணையக் குப்பையைக் கிளறினால் Institute for Responsible Technology (IRT) எனும் ஒரு அமைப்பு மூலம், GMO உணவுகள் புற்று நோய் முதற் கொண்டு எல்லா நோய்களையும் தரும் என்று  நிரூபிக்கும் ஆய்வுகள் பல காணக் கிடைக்கலாம். ஆனால் இந்த ஆய்வை வேறெந்த ஆய்வு கூடங்களும் பல நூறு தடவைகள் செய்து பார்த்தும் IRT கண்ட முடிவுகளை மீளக் கண்டு பிடிக்க முடியவில்லை! இதனால் இந்த அமைப்பின் ஆய்வு முடிவுகள் நம்பகமற்ற பிதற்றல்கள் என்பது பரவலான அபிப்பிராயம். 

மேலே நிழலி குறிப்பிட்ட அவுஸ் முருங்கைக் காய் முதல் பல உணவுத் தாவரங்கள் பூச்சிகள் பீடைகளிடமிருந்து காப்பதற்காக Bacillus thuringiensis (Bt) எனும் ஒரு நுண்ணுயுரின் ஜீன் ஒன்றை உள்ளடக்கியிருக்கக் கூடும். இதனால் இது GMO உணவாக இருக்கலாம். ஆனால் அது முருங்கை மரத்திற்கு பூச்சி பீடைகளிடமிருந்து பாதுகாப்பளிக்கும் ஒரு ஏற்பாடு மட்டுமே!. இந்த நுண்ணுயிர் சில பூச்சி இனங்களை மட்டுமே பாதிக்கும் ஒன்று, மேலும் அந்த நுண்ணுயிர் அல்லாமல் அதன் ஒரு ஜீன் மட்டுமே முருங்கையில் உள்ளடக்கப் பட்டிருப்பதால் சாப்பிடுபவருக்கு ஒரு தீமையும் இல்லை! இந்த பக்ரீறியாவை ஒரு திரவ வடிவில் கடையில் விற்கிறார்கள். வாங்கி கோடை காலத்தில் மரத்தில் விசிறி விட்டால், மயிர்க்கொட்டிகளை உருவாக்கும் பூச்சிகள் அண்டாமல் காக்கலாம்! பக்ரீறியாவை நீங்கள் குடித்தால் கூட உங்களுக்கு எதுவும் ஆகாது (அதற்காக குடித்து விட வேண்டாம்!)

இந்த றவுண்ட் அப்  மருந்தால் புற்றுநோய்க்கு உள்ளனவர்கள் 5000 த்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்துள்ளனர்.  இழப்பீடாக 289 மில்லியன் டொலரை மொன்சான்ரொவுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.  இதைத் தான் முதல் வீடியோவில்  ஒரு கிளாஸ் குடிக்கலாம் என்று மொன்சான்ரோ பேச்சாளர் சொல்கின்றார்  பின்னர் மறுக்கின்றரர்.

இங்கு இவற்றை பாவிக்கும் போது கையுறை மற்றும் மாஸ்க் அணிந்து பாவிக்கின்றார்கள். போரின் பின்னர் இலங்கையில் தமிழர் பிரசேத்தில் றவுண்டப் மிகப் பிரபலம். அங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இல்லை. 

ஆய்வுகள் எப்போதும் பணம்படைத்த கார்பரேட்டுகளுக்கு சாதகமாகவே இருக்கும். அவற்றை அடிப்படையாக வைத்து மக்களுக்கு பாதிப்பில்லை ஒருகிளாஸ் பக்டிரியாவை வேண்டுமானால் குடிக்கலாம் என்று நாங்களே சொல்வது எந்த விதத்தில் நியாயமானது என்று புரியவில்லை ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலையில் அலுவலகம் வந்தவுடன் யாழ்க் களத்தை பார்க்கலாமென திறந்தால் இந்த முருங்கைக்காய் தலைப்புதான் எங்கும் வியாபித்திருக்கிறது.

கிழிஞ்சது போ..! 

சரி, ஆராய்ச்சியின் முடிவுதான் என்ன?  psychanalyste.gif

உண்மையா..? smileydocteur.gif

கட்டுக்கதையா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, சண்டமாருதன் said:

இந்த றவுண்ட் அப்  மருந்தால் புற்றுநோய்க்கு உள்ளனவர்கள் 5000 த்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்துள்ளனர்.  இழப்பீடாக 289 மில்லியன் டொலரை மொன்சான்ரொவுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.  இதைத் தான் முதல் வீடியோவில்  ஒரு கிளாஸ் குடிக்கலாம் என்று மொன்சான்ரோ பேச்சாளர் சொல்கின்றார்  பின்னர் மறுக்கின்றரர்.

இங்கு இவற்றை பாவிக்கும் போது கையுறை மற்றும் மாஸ்க் அணிந்து பாவிக்கின்றார்கள். போரின் பின்னர் இலங்கையில் தமிழர் பிரசேத்தில் றவுண்டப் மிகப் பிரபலம். அங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இல்லை. 

ஆய்வுகள் எப்போதும் பணம்படைத்த கார்பரேட்டுகளுக்கு சாதகமாகவே இருக்கும். அவற்றை அடிப்படையாக வைத்து மக்களுக்கு பாதிப்பில்லை ஒருகிளாஸ் பக்டிரியாவை வேண்டுமானால் குடிக்கலாம் என்று நாங்களே சொல்வது எந்த விதத்தில் நியாயமானது என்று புரியவில்லை ! 

அன்புள்ள சண்டமாருதன், நாம் பேசிக் கொண்டிருப்பது GMO உணவுகளில் இருக்கும் பக்ரீரியாவின் ஜீன் அல்லது அந்த பக்ரீரியா மனிதனுக்குப் பாதிப்பில்லை என்பது பற்றி. நீங்கள் மொன்சான்ரோவின் (அந்த தாவரங்களை உருவாக்கும் கம்பனி) விற்கும் கிளைபொசேற் என்ற வேறொரு இரசாயனம் பற்றிய வீடியோவைப் பதிலாக இட்டிருக்கிறீர்கள்! கிளைபொசேற் பாவித்ததால் புற்று நோய் வந்ததாக அந்த ஆயிரக்கணக்கான பேர்களில் நிரூபிக்க இயலாது! கோர்ட் தீர்ப்புக் கொடுத்திருப்பது உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஒரு அமைப்பான IARC இனால் ஆய்வு கூட எலிகளிலும், சில meta-analysis ஆய்வுகள் மூலமும் "கிளைபொசெட் புற்று நோய்க் காரணியாக இருக்கக் கூடும்" (group 2a) என்ற முடிவை அடிப்படையாக வைத்துத் தான். நீங்கள் சொல்லும் இரசாயனமும் நான் சொல்லும் பூச்சிகளை மட்டுமே தாக்கும் என்று நிரூபிக்கப் பட்ட பக்ரீரியாவும் ஒன்றல்ல! நான் குடித்தாலும் ஒன்றும் ஆகாது என்று சொன்னத்ற்குக் காரணம், இந்த பக்ரீறியா ஏற்கனவே எங்கள் தாவரங்கள் வளரும் மண்ணில் இருக்கின்றன. நீங்கள் ஒர்கானிக் தாவரங்களை சாப்பிடும் போது கூட இவற்றில் சில ஆயிரங்களை உள்ளெடுப்பீர்கள். பாதிப்பில்லை, ஏன் அப்படி இல்லை என்று கூட மூலக் கூற்று லெவலில் கண்டறிந்திருக்கிறார்கள். போலி விஞ்ஞானம் (pseudo-science)  இப்படியான பச்சைத் தண்ணி பக்ரீரியாவையும் சந்தேகத்திற்குரிய இரசாயனத்தையும் கலந்து ஒரு உண்மை போல மக்களைப் பயமுறுத்துவது தான் இப்போதைய போக்காக இருக்கிறது! 

மற்ற படி பணம் படைத்தவர் பக்கம் தான் தீர்ப்பு சாதகம் என்றால், எப்படி மொன்சான்ரோவிற்கு எதிராக அமெரிக்காவில் தீர்ப்பு வந்தது? கொஞ்சம் விஞ்ஞானத்தையும் நம்ப வேண்டும், சிஸ்ரத்தையும் நம்ப வேண்டும். செயற்கையாக விஞ்ஞானம் உருவாக்குவது எல்லாம் ஆபத்தானதாகத் தான் இருக்க வேண்டுமில்லை! 1500 இல் 40 ஆக இருந்த மனித வாழ்வு காலம் இன்று 65 வரை உயர்ந்திருப்பதூ செயற்கையாக விஞ்ஞானம் உருவாக்கிய antibiotic உட்பட்ட பல விடயங்களால் தான்!

பி.கு: நீங்கள் ஆய்வுகள் எப்போதும் கார்பரேட் பக்கம் என்று எழுதியிருப்பதை நான் கவனிக்கவில்லை!  தீர்ப்புகள் என்று வாசித்து விட்டேன். நான் அறிய கார்பரேட் காரர்கள் அல்ல பெரும்பாலான ஆய்வுகளை நிதி கொடுத்து நடாத்துவது. அப்படி நடத்தப் படும் ஆய்வுகளை இலகுவாக சஞ்சிகைகள் பிரசுரிக்காது! மக்களின் வரிப் பணத்தில் பல் கலைக் கழகங்களில் செய்யப் படும் ஆய்வுகளே நம்பிக்கையானவையாக ஏற்றுக் கொள்ளப் படுகிறன. நான் நடு நிலையான ஆய்வுகள் என்று முதலே குறிப்பிட்டிருப்பது இவற்றைத் தான்! விஞ்ஞானிகள் கூலிக்கு மாரடிக்க வேண்டிய நிலை  இன்னும் வரவில்லை! அடிக்கும் ஒரு சிலரும் ஓரங்கட்டப் படும் நிலையே இருக்கிறது!

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

bt ஐ குடித்தால் ஒரு தீங்கும் இல்லை என்று நீங்கள் சொன்னதுபோலவே றவுண்டப்பைக் குடித்தாலும் தீங்கில்லை என்று மொன்சான்ரோ பேச்சாளர் சொன்னார். அதை எடுத்துக்காட்டவே எனது பதிலை எழுதினேன்.

மரபணுமாற்றப்பட்ட உணவுகள் அச்சுறுத்தலாகவே அணுகப்படுகின்றது. உலகம் முழுவதும் இவற்றைத் தடைசெய்வதற்கான போராட்டங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. 

அதிக விழைச்சல், அதிக லாபம் என்ற நோக்கில் உணவு உற்பத்தியை நகர்த்தும் முதலாளித்துவத்துத்திற்கே மரபணுமாற்றம் சார்ந்த விஞ்ஞானம் முதற்படி சாதகமானது தவிர ஏழைகளின் பசியாற்றுவதற்கோ இல்லை மனுடத்தின் ஆரோக்கியத்தில் கரிசனை கொண்டு இல்லை. 

இங்கே எதுவும் வியாபாரததுககு அப்பாற்படட மானுட நேயத்தில் இல்லை. மரபணுமாறறபபடும் உணவும் வியாபாரம் கானசரும் வியாபாரம மருத்துவமும் மிகபபெரும் வியாபாரம். அனைத்தும் வியாபாரச் சுழற்சிக்குள் உட்பட்டது. 

நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையில் நடுநிலை என்ற ஒன்று கிடையாது. நடுநிலை என்பதன் அர்த்தமே கெடுதலுக்கு துணைபோதல் ஆகும். ஆதலால் நடுநிலை ஆய்வுகள் என்பதில் உடன்பாடுகிடையாது. 

மரபணுமாற்றப்பட்ட உணவுகள் ஆரோககியம் என்பது உஙகள் நிலைப்பாடாக இருக்கலாம் ஆனால் அவை மனிதகுலத்துக்கு ஆபத்தானது என்பது எனது நிலைப்பாடு. இநத நிலைப்பாட்டில் எந்த ஒரு கருத்து இணக்கப்பாட்டிற்கும் வாய்பே இல்லை. ' அவரவரின் புரிதல் சார்ந்தது. உங்கள் பதில் கருத்துக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சண்டமாருதன் said:

சண்டமாருதன், உங்கள் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக  இணையத்தில் பெயர், பின்புலம் தெரியாதோரால் ஏற்றப் படும் வீடியோக்கள் தவிர்ந்த விஞ்ஞான  ஆதாரங்கள் ஏதும் உண்டா? அபிப்பிராயம் என்பது அபிப்பிராயம் மட்டுமே! தரவுகள் எங்கே? இலக்கங்கள் வரைபுகள் எங்கே? உணவுகளால் இத்தனை பேருக்கு இந்த தீங்குகள் வந்தது என்ற சொலிட்டான தரவுகள் தேவையில்லையா? இது அரசியல் வாதிகளின் தேர்தல் அல்லவே இனம், கட்சி மதம் பார்த்து முடிவுகள் எடுக்க? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இணையத்தில் இருக்கிறதை பார்த்துவிட்டு காங்கேரியன் செய்த வேலை .

http://upriser.com/posts/hungarians-just-destroyed-all-monsanto-gmo-corn-fields 

Hungary-Burns-Monsanto-Crops-740x477.png?zoom=2&fit=810%2C9999

gmo-brazil-soybeans_735_350

சிகரெட் வரும்போது என்ன விளம்பரம் குடுத்தார்கள் இப்போ ஒளித்துவைத்து விற்கிறார்கள் .

ஒரு சாதாரண கம்பளி பூச்ச்சியை விட்டுவைக்காத நுட்ப்பம் இயற்கையாக உள்ள மற்றைய பங்காளர்களை விட்டு வைக்குமா ? முக்கியமாய் தேனிக்கள் வாழ்வியல் முழுதாக சிதைக்கப்படும் பின்பு எல்லோரும் மன்செண்டோ இருக்கும் இடத்தை பார்த்து கோயில் போல் கும்பிட வேண்டி வரும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதைகள் இயற்க்கைக்கு சொந்தம் அமெரிக்காவின் கொம்பனிக்கு அல்ல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

தகவலுக்கு நன்றி பெருமாள். GMO என்ன விதத்தில் மனித உடலை பாதிக்கும் என்று தெரியுமா?

உடலை பாதிக்கும் என்று எழுதி வந்த கட்டுரைகள் ஒரு கிழமையில் தூக்க பட்டு மன்னிப்பும் கேட்டவர்கள் அந்த ஆராட்ச்சி செய்த விஞ்ஞனியையும் தண்ணியில்லா காட்டுக்கு தூக்கி அடித்தவர்கள் எல்லாம் இங்கு லண்டனில் நடந்தது கனகாலம் ஆகி விட்டது மறந்தும் விட்டது அந்த விவசாய செய்தி பத்திரிகையின் பெயர் தேடிக்கொண்டு இருக்கிறன் .

இப்போது நிரூபிக்கப்படவில்லை எனும் வாதத்தை வைத்து சின்கியடிக்கினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

சும்மா இணையத்தில் இருக்கிறதை பார்த்துவிட்டு காங்கேரியன் செய்த வேலை .

http://upriser.com/posts/hungarians-just-destroyed-all-monsanto-gmo-corn-fields 

Hungary-Burns-Monsanto-Crops-740x477.png?zoom=2&fit=810%2C9999

gmo-brazil-soybeans_735_350

சிகரெட் வரும்போது என்ன விளம்பரம் குடுத்தார்கள் இப்போ ஒளித்துவைத்து விற்கிறார்கள் .

ஒரு சாதாரண கம்பளி பூச்ச்சியை விட்டுவைக்காத நுட்ப்பம் இயற்கையாக உள்ள மற்றைய பங்காளர்களை விட்டு வைக்குமா ? முக்கியமாய் தேனிக்கள் வாழ்வியல் முழுதாக சிதைக்கப்படும் பின்பு எல்லோரும் மன்செண்டோ இருக்கும் இடத்தை பார்த்து கோயில் போல் கும்பிட வேண்டி வரும் .

ஹங்கேரியன் செய்தால் அவன் எங்கே பார்த்துச் செய்தாலும் சரியாகத் தான் இருக்கும் என்பது வேறொரு மனநிலை பெருமாள்! தரவுகளைத் தந்து பேசுங்கள், திரி சரியாக நகரும்! அபிப்பிராயமொன்றை ஏற்படுத்தி விட்டு அதற்கு சான்றுகளாக இணையக் குப்பைகளைக் கிளறுவது ஒன்றையும் புதிதாக அறிய விடாது. GMO உணவு மனிதனில் நோய் உருவாக்கியது என்று ஒரு மதிப்பு மிக்க ஆய்வு கூடம் (ஹார்வார்ட், ஹொப்கின்ஸ் இன்ன பிற போன்ற) செய்து வெளியிட்ட தகவலை இணையுங்கள்! யூ டியூப் வீடியோக்களுக்கு என்னிடம் துலங்கல் இல்லை!

நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/18/2018 at 5:26 AM, புங்கையூரன் said:

வடமாநிலத்தில்...டார்வின்...கதரின் போன்ற இடங்களில்..காடுகளில் முருங்கை மரங்கள் வளர்கின்றன! எனவே இயற்கையாக வளருகின்றன என்றே நினைக்கிறேன்! உள்ளூர் வாசிகள் ...இவற்றைச் சாப்பிடுவதில்லைப் போல உள்ளது! ஆனால்..ஐரோப்பியர் முருங்கைக் காய்களைக் குதிரைகளுக்கு உணவாகக் கொடுப்பார்கள்! மேற்கு ஆபிரிக்காவில்....முருங்கைக் காய் மரங்கள் உண்டு! எனினும் ....அங்குள்ளவர்கள்...அதனைப் பேய் பிசாசுகளுடன் தொடர்பு படுத்தியிருப்பதால்...அவர்கள்....முருங்கைக் காய் சாப்பிடுவதில்லை! நாங்கள்...இருந்த காலத்தில்...உயிரியல் படிப்பிப்பவர்களிடம் கெஞ்சி....பிரக்டிகல் செய்யத் தேவை...என்று மாணவர்களிடம் கூறி....முருங்கைக்காயைப் பெற்றுக்கொள்வதுண்டு!

அதேபோலத் தான்....பலாப்பழங்களும்...மல்லிகை வாசம் கூறியது போல...குயின்ஸ்லாந்து பகுதிகளில்....மரங்களில்..பழுத்து...வெடித்த படியே கிடக்கும்! ஒருவரும்...கண்டு கொள்வதில்லை!

சுமே,  சிட்னியில்...முருங்கை மரங்கள் வளரும் எனினும்....குயின்ஸ்லாந்து..அல்லது வட மாநிலங்களில் வளர்வது போல...அடர்த்தியாகவும்...உயரமாகவும் வளர்வதில்லை! வீட்டில் நிற்கும் முருங்கையில்...ஒரு மூன்று நான்கு மாதங்களுக்குக் காய்கள் பிடுங்கக் கூடியதாக இருக்கும்! ஆனால்...நிறைய இலைகள் கிடைக்கும்! வறுக்கலாம்!

தென் மாநிலம், மேற்கு அவுஸ்திரேலியா போன்ற இடங்களிலும்...முருங்கை, பலா, புளி போன்ற மரங்கள் அதிகமாக வளரும்!

கள உறவு...உடையார் காரை இடையில் நிறுத்திவிட்டு...புளியங்காய் பொறுக்கும் வழக்கம் உள்ளவர் என்று ஒரு முறை அவர் எழுதிய நினைவு உண்டு!

புங்கை இப்ப பெறுக்க கிடைப்பதில்லை, வேலை இடம் மாற்றிவிட்டார்கள் .

வீட்டில் மூன்று முருங்கை மரம் நிற்கின்றது, பசளையாக உணவுக்கழிவுகள் தான் பயன்படுத்துகின்றனான், நல்ல பெருந்த காய்கள் கிடுக்கும், அவித்து பதப்படுத்தினால் வருடம் முழுக்க சமைக்கலாம்.

நிழலி முருங்கைக்காய் ஏற்றுமதி செய்வது Brisbane இல் இருந்து, எனது நண்பர் லண்டனில் கடை வைத்திருக்கின்றார் அவர்தான் சென்னவர். பெரிய இடத்தில் முருங்கை பண்ணை வைத்து எல்லா இடமும் அவர்தான் ஏற்றுமதி செய்கின்றார் என்று ,

இங்குள்ள முருங்கை காய்கள், நல்ல மொத்தம், அடுத்த முறை வீட்டு முருங்கைகாய் மரத்தில் இருக்கும் போது படம் எடுத்து இணைத்து விடுகின்றேன்,  படத்தில் போட்டதைவிட இன்னும் மொத்தமாக வரும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.