• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

வடக்கிற்கு அபிவிருத்தி அமைச்சு உள்ளது கிழக்கிற்கு இல்லை - வியாழேந்திரன்

Recommended Posts

வடக்கிற்கு அபிவிருத்தி அமைச்சு உள்ளது கிழக்கிற்கு இல்லை - வியாழேந்திரன்

வடகிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் மிகவும் பாதிக்க்பபட்ட பகுதிகள் வட மாகாணத்துக்கு என்று ஒரு தனியான அமைச்சு உள்ளது ஆனால் கிழக்கு மாகாணமும் யத்தத்தினால் பாதிகப்பட்டது அதற்கு ஒரு அமைச்சு இல்லை என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

viyaleandiran.jpg

1990 ஆண்டுகளில் நடபெற்ற வன்செயல்களில் மிகவும் மேசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏறாவூர் நான்காம் ஐந்தாம் குறிச்சி மிக முக்கயமானதாகும் இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இருந்து சொந்த இடங்களுக்கு திருப்பிய போது எந்த வித அடிப்படை வசதிகளும் இன்றி இருந்தார்கள்.

ஏறாவூர் நகருக்குள் ஏறாவூர் நான்காம் ஐந்தாம் குறிச்சி கிராமங்கள் இருந்தாலும் உட்கட்டமைப்பு சார்ந்த வசதிகளில் முஸ்லிம் தமிழ் கிராமங்கள் மலை மடு போன்று காட்சிகளிக்கின்றன.

வீடற்ற, மலசல கூடம் இல்லாதவர்கள் வீதிகள் சரியான முறையில் செப்பனிடப்படவில்லை. இவ்வாறு பல்வேறுபட்ட தேவைப்பாடு இங்கே காணப்படுகிறது.

2015ல் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசிலே சில வேலைத்திட்டங்கள் நடைபெற்றாலும். பரிபூரணம் என்ற நிலையை எட்டவில்லை. இந்த பகுதியில் 180 வீடுகள் தேவைப்படும் நிலையில் குறைந்தளவான வீடுகளை கிடைத்துள்ளன.

2020 வரை இந்த நாட்டில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இருப்பார் கடந்த காலத்தில் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு என வேலைத்திட்டமொன்றினை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அந்த பணியை முன்னெடுத்திருந்தேன்.

வடகிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் மிகவும் பாதிக்க்பபட்ட பகுதிகள் வட மாகாணத்துக்கு என்று ஒரு தனியான அமைச்சு உள்ளது ஆனால் கிழக்கு மாகாணமும் யத்தத்தினால் பாதிகப்பட்டது அதற்கு ஒரு அமைச்சு இல்லை.

மட்டக்களப்பு மாவட்டதில் 36 ஆயிரம் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் உள்ளனர் பல்வேறு பிரச்சினைகள் உள்ள இவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் 11 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பெறுப்பை எடுத்துக்கொண்டேன்.

ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2020 வரை இந்த நாட்டில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இருப்பார்  அவரிடம பேசி அரசியல் கைதிகள் விடுவிப்பு காணி விடுவிப்பு உட்பட எமது 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்றார்.

http://www.virakesari.lk/article/46705

Share this post

Link to post
Share on other sites

அவரை நியமிக்க சொல்லி கேட்க்கிறாரோ?

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

100% உண்மை

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

அவரது கோரிக்கையிலும் கேள்வியிலும் எந்த தவறும் இல்லை. சிங்களம் வடக்குக்கும் கிழக்குக்கும் இடையில் பிரதேசவாதம் மேலும்  வலுக்க வேண்டும் என்றே  இவ்வாறு செய்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது வேறு எந்த தமிழ் கட்சிகளோ இதற்காக குரல் கொடுக்காது அரசின் நரித்தனத்துக்கு ஏற்ப அமைதியாக இருக்கின்றமை கண்டிக்கத்தக்கது.

Share this post

Link to post
Share on other sites

நம்மாளு மகிந்தவிடம் இலஞ்சமாக பெற்றுக்கொண்ட கோடிகளை என்னசெய்தார் என்று யாராவது கேட்டுச்சொல்லுங்கப்பா. 

Edited by vanangaamudi

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, vanangaamudi said:

நம்மாளு மகிந்தவிடம் இலஞ்சமாக பெற்றுக்கொண்ட கோடிகளை என்னசெய்தார் என்று யாராவது கேட்டுச்சொல்லுங்கப்பா. 

மகிந்தா கொடுத்தது உங்களுக்கு தெரியுமா நீங்கள் கண்ணால் பார்த்தீர்களா  அப்படி இருந்தால் நீங்கள் நிருபியுங்கள் நான் கேட்டு சொல்கிறேன்.:grin:

9 hours ago, நிழலி said:

அவரது கோரிக்கையிலும் கேள்வியிலும் எந்த தவறும் இல்லை. சிங்களம் வடக்குக்கும் கிழக்குக்கும் இடையில் பிரதேசவாதம் மேலும்  வலுக்க வேண்டும் என்றே  இவ்வாறு செய்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்போ அல்லது வேறு எந்த தமிழ் கட்சிகளோ இதற்காக குரல் கொடுக்காது அரசின் நரித்தனத்துக்கு ஏற்ப அமைதியாக இருக்கின்றமை கண்டிக்கத்தக்கது.

கிழக்கு பறிபோனது கன நாள் இப்ப ஒன்றும் செய்ய ஏலாது யாராவது முஸ்லீம் அமைச்சர்கள் கிள்ளி எறிந்தால் தான் ஏதாவது தமிழர்களுக்கு  

Share this post

Link to post
Share on other sites

இன்று கிழக்கு மாகாண சனத்தொகையில் 40%தமிழர்கள் ,இந்தநிலையில் கிழக்கு அபிவிருத்தி அமைச்சினால் யாருக்கு கூடுதலான நன்மைகள் கிடைக்கும் ?

கிழக்கு பறிபோனதற்கு காரணமே தமிழர்கள் ?இதில் வடக்கு தமிழர்களாலா அல்லது கிழக்கு தமிழர்களாலா என்ற விவாதத்துக்குள் போக விரும்பவில்லை .

வியாழேந்திரன் வாயாலே வடைசுடுவதில் வல்லவர் ,அவரது குறிக்கோள் குறிக்கியகாலத்தில் பதவி ,பணம் சம்பாதிப்பதுதான் ,போராட்டகாலத்தில் இவரது குடும்பத்தை ஊரில் இருந்து புலிகள் வெளியேற்றியவர்கள் .இவர் மட்டக்கிளப்பு பல்கலை கழகத்தில் கல்விகற்ற காலத்தில் எந்த ஒரு போராட்ட்ங்களிலும் கலந்த கொள்ளாதவர் ,முதலில் தமிழரசு கட்சியில் போட்டியிட விண்ணப்பித்து அது கிடைக்காத நிலையில் PLOT ஊடாக தேர்தலில் நின்று வென்றார் .புதிய அரசியலமைப்பில் தொகுதிவாரியாக தேர்தல் பிரேரிக்கப்பட்ட போது வியாழேந்திரனுக்கு தான் மீண்டும் தேர்தலில் போட்டியிட வெல்லக்கூடிய தொகுதி தேவையென தமிழரசு கட்சி தலைவர்களுடன் முரண்பட தொடங்கினார் .கடந்தவருடம் UNP யில் சேர முயன்று முடியவில்லை .

மக்கள் பிரச்சனைகளை அனுபவிக்கின்றார்கள் என்று சொல்லும் வியாழேந்திரன் பதவிக்கு வருமுன் இதை பற்றி யோசனை செய்ததுண்டா ?2016இல் கனடாTNA  தலைவர் தாயகம் சென்றபோது வியாழேந்திரன் தன்னையும் கனடாவுக்கு அழையுங்கள் என்று கேட்டதற்றகிணங்க கனடாTNA அவரை கனடா அழைத்து பல்வேறு அமைப்புகளுக்கு அறிமுகம் செய்தது ,இதன் பலனாக கனடா தமிழர் பேரவை 2016இல் நடைபவணிமூலம்பால்பண்ணை அமைக்க  நிதிதிரட்டியது ,அனால் இதற்கு   தேவையான காணியை இதுவரையில் வியாழேந்திரனால் பெறமுடியவில்லை .அனால் தற்போது திரு .ச .குகதாசன் அவர்களினால் மட்டக்கிளப்பு பால்பண்ணைகாண காணி அடையாளம் காணப்பட்டுஅமைச்சரின்  அனுமதிக்காக மத்திய காணி அமைச்சுக்கு மட்டக்கிளப்பு அரசாங்க அதிபர் அனுப்பியுள்ளார் .இதே போல் தென்னைமரவடி பண்ணைக்கு 20 ஏக்கர் காணி பெறப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது .

இதே ஜனாதிபதியிடம் நல்லிணக்க அமைச்சு இருந்தபோது சிவஞான சோதி செயலாளராக இருந்தவர் ,அப்பொழுது வியாழேந்திரன் ஜனாதிபதியுடன் கதைத்து ஏன் உதவிகளை பெறமுடியவில்லை ?கைதிகளின் விடுதலை பற்றி வியாழேந்திரனின் பேச்சு ? 

Share this post

Link to post
Share on other sites
22 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மகிந்தா கொடுத்தது உங்களுக்கு தெரியுமா நீங்கள் கண்ணால் பார்த்தீர்களா  அப்படி இருந்தால் நீங்கள் நிருபியுங்கள் நான் கேட்டு சொல்கிறேன்.:grin:

பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா வின் நேர்காணலில் தனக்கு 50 கோடிவரை மகிந்த பேரம்பேசியதாக சொல்லியிருந்தார் ,அப்படியாயின் வியாழேந்திரனிடம் பேரம் பேசாமலா இருந்திருப்பார்கள் ?? வியாழேந்திரன் பாராளுமன்ற உறுப்பினரானவுடன் பல லட்சங்கள் பெறுமதியான வீடு கட்டியதாக மக்கள் பேசிக்கொள்கின்றார்கள் .முகநூலில் படங்களும் பகிரப்பட்டது .

Share this post

Link to post
Share on other sites

வியாழேந்திரன் கூட்டமைப்பில் இருந்த போது ஒன்றும் பேசாமல் இருந்து விட்டு இப்போ அவரைப்பற்றி  கரி குறை கூறுவது ஏனோ??

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, Gari said:

பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா வின் நேர்காணலில் தனக்கு 50 கோடிவரை மகிந்த பேரம்பேசியதாக சொல்லியிருந்தார் ,அப்படியாயின் வியாழேந்திரனிடம் பேரம் பேசாமலா இருந்திருப்பார்கள் ?? வியாழேந்திரன் பாராளுமன்ற உறுப்பினரானவுடன் பல லட்சங்கள் பெறுமதியான வீடு கட்டியதாக மக்கள் பேசிக்கொள்கின்றார்கள் .முகநூலில் படங்களும் பகிரப்பட்டது .

அப்ப பஜ்ஜட்டை ஆதரித்தப்பதற்கு பல பலகோடி வாங்கியதாக மற்றவர்களை சொன்னதை நீங்கள் ஏன் சொல்லிக்காட்டவில்லை சிவசத்தி ஆனந்தன் சொன்னதை மறந்துவிட்டீர்கள் போல

அப்ப கூட்டமைப்பில் இருக்கும் எம்பிக்கள் அனைவரதும் வீட்டையும் பாருங்கள் நான் அமலுக்கு ஆதரவாளனும் அல்ல சார் மாவையும் ஏதோ கருங்கல் வீடு கட்டினதா படம்  வந்துச்சு முகநூலில் அதையும் பார்க்கல போல அடுத்து ஜ்னாதிபதியே பிள்ளையின் பிறந்த நாளுக்கு பங்கு கொள்ள கேக்கும் வெட்டினார்கள் இதுவும் நடந்திருக்கு அது போக வியாழேந்திரன் இன்று மாறாமல் இருந்திருந்தால் அவர் பாற்பண்ணைக்கு அமைக்க தேடிய நிலம் பற்றிய பேச்சுக்கள் வந்திருக்காது  காரணம் அவர் கூட்டமைப்பில் இருப்பதால் கூட்டமைப்பில் இருந்து எந்த வேலையும் செய்யலாம் ( அடார்) அவர்கள் மாறினால் தான் எல்லா குட்டுகளையும் போட்டு உடைப்பது 

கனடாவுக்கு போய் வந்த கையுடன் தான் அவரே மாறினார் அமல் 

  • Like 1
  • Thanks 2

Share this post

Link to post
Share on other sites

... ஒரு வருடமல்ல. மட்டுநகருக்கு போய் வந்த அனுபவம், எனது உடன்பிறவா சகோதரனை நீண்ட வருடங்களாக பார்க்க முடியவில்லை, அச்சந்தர்ப்பத்தை தவற விடவிரும்பவில்லை ...

போனபின் .. வாவ்.. உலகில் விரல் விட்டுக்கூடிய மிக அழகான நகர்களில் முன்னணியில் ... அழகோ அழகு! வாவிகள் சூழ ... சூரியன் எழும், மறையும் ... அற்புதம்!  அதற்கு மேல் அங்குள்ள மக்கள் ... எதையும் எதிர்பாராது, அன்பாக உபசரிக்கும் ... தலை வணங்க வேண்டும்! ... 

என் சகோதரன், நாம் அங்கு நின்ற நேரத்ததை வீணடியாமல் ... மட்டக்களப்பு முழுவதிலும் சுற்றிக் காண்பித்தான்,,இரவு பகலாக ... 

... முதலூர் தமிழ் ... அடுத்தது முஸ்லீம் ... அடுத்தது தமிழ் .. இதுதான் மட்டக்களப்பு!  ... முதலூர் ரோட்டு கரடு முரடு, இரவில் வெளிச்சமில்லை, அது தமிழ் ... அடுத்தது பேரீச்சை மரங்களும், இரவில் பட்டொலி, டுபாயில் நிற்கின்றோமா என்னும் பிரமையில், அது முஸ்லீம் நகராம்! 

யுத்தத்தில் அங்குள்ள தமிழ் மக்கள் கொடுத்த விலை .. இன்றுவரை எம் அரசியல்வாதிகள் .. குறிப்பாக கிழக்கு அரசியல்வாதிகள்வரை வெளிக்கொணரவில்லை! 

சிங்களவர்களால் அல்ல அழிக்கப்பட்ட முஸ்லீங்களால் தமிழ்க்கிராங்கள், இன்று வரை திரும்ப போக முடியாதநிலை!

... எழுதிக்கொண்டே போகலாம் ... 

தயவு செய்து வியாளாந்திரன் போன்றவர்கள் எமக்கு தேவை! ... இன்றுவரை எம் அரசியல்வாதிகள் ஏதாவது ... கிழக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல வடங்கு தமிழ் மக்களுக்கும் செய்தார்களா????????????

தயவு செய்து புலம் பெயர் தமிழ் ஊடங்கள் வியாளாந்திரன் போன்றவர்களை " துரோகி" என்ற வட்டத்துக்களும் கட்டிப்போடுவததை விடுத்து, ... ஊக்குவியுங்கள்! 

... மண்ணும், மக்களும் இல்லையெனில் நாளை எம்குரல்கள் ...??????

  • Like 3
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
25 minutes ago, Nellaiyan said:

இதைத்த தான் நானும் நெடுக சொல்கிறன்.நன்றி

Edited by சுவைப்பிரியன்

Share this post

Link to post
Share on other sites

வியாளேந்திரனின் ஆதங்கம் புரிகின்றது.

அதிக நெருக்கடிகளை சந்திக்கும் மாகாணமாக கிழக்கு மாகாணம் இருக்கின்றது .   

80களிலிருந்தே  ஒரு மறைமுக முக்கோணபோராடம் அங்கு நடைபெறுகின்றது. ஒரு பக்கம் தமிழ்.....இன்னொரு பக்கம் முஸ்லீம்....அடுத்த பக்கம் சிங்களம்.அங்கு வாழ்ந்தவர்களால் தான் அதை உணர முடியும்.

இங்கேதான் கிழக்கில் தமிழ்கூத்தமைப்பு தன் வலிமையை காட்ட தவறி விட்டது.

இதுதான் உண்மை.
 
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, குமாரசாமி said:

ம்ம் உண்மைதாம் கிழக்கு அரசியலில் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து ஏமாந்த கட்சினர் தான் இவர்கள்  முஸ்லீம் பிரதேசங்கள் எப்படி இருக்கும் இரவில் கூட பகல் போல் மிளிரும் தமிழ் பிரதேசங்களோ இன்னும் இருட்டுக்காடுகளாகத்தான் இருக்கும் இருக்கிறது இப்ப வரைக்கும் கிராம புறங்கள் ஏன் நகர்புறங்கள் கூட இதை இங்கு வந்து பார்த்தவர்கள் அறிவார்கள் என நான் நினைக்கிறன் அனால் இத்து போன கொள்கை அரசியலை வைத்து இன்னும் இன்னும் அரசியல் செய்கிறார்கள் 

Share this post

Link to post
Share on other sites
16 hours ago, Nellaiyan said:

... ஒரு வருடமல்ல. மட்டுநகருக்கு போய் வந்த அனுபவம், எனது உடன்பிறவா சகோதரனை நீண்ட வருடங்களாக பார்க்க முடியவில்லை, அச்சந்தர்ப்பத்தை தவற விடவிரும்பவில்லை ...

போனபின் .. வாவ்.. உலகில் விரல் விட்டுக்கூடிய மிக அழகான நகர்களில் முன்னணியில் ... அழகோ அழகு! வாவிகள் சூழ ... சூரியன் எழும், மறையும் ... அற்புதம்!  அதற்கு மேல் அங்குள்ள மக்கள் ... எதையும் எதிர்பாராது, அன்பாக உபசரிக்கும் ... தலை வணங்க வேண்டும்! ... 

என் சகோதரன், நாம் அங்கு நின்ற நேரத்ததை வீணடியாமல் ... மட்டக்களப்பு முழுவதிலும் சுற்றிக் காண்பித்தான்,,இரவு பகலாக ... 

... முதலூர் தமிழ் ... அடுத்தது முஸ்லீம் ... அடுத்தது தமிழ் .. இதுதான் மட்டக்களப்பு!  ... முதலூர் ரோட்டு கரடு முரடு, இரவில் வெளிச்சமில்லை, அது தமிழ் ... அடுத்தது பேரீச்சை மரங்களும், இரவில் பட்டொலி, டுபாயில் நிற்கின்றோமா என்னும் பிரமையில், அது முஸ்லீம் நகராம்! 

யுத்தத்தில் அங்குள்ள தமிழ் மக்கள் கொடுத்த விலை .. இன்றுவரை எம் அரசியல்வாதிகள் .. குறிப்பாக கிழக்கு அரசியல்வாதிகள்வரை வெளிக்கொணரவில்லை! 

சிங்களவர்களால் அல்ல அழிக்கப்பட்ட முஸ்லீங்களால் தமிழ்க்கிராங்கள், இன்று வரை திரும்ப போக முடியாதநிலை!

... எழுதிக்கொண்டே போகலாம் ... 

தயவு செய்து வியாளாந்திரன் போன்றவர்கள் எமக்கு தேவை! ... இன்றுவரை எம் அரசியல்வாதிகள் ஏதாவது ... கிழக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல வடங்கு தமிழ் மக்களுக்கும் செய்தார்களா????????????

தயவு செய்து புலம் பெயர் தமிழ் ஊடங்கள் வியாளாந்திரன் போன்றவர்களை " துரோகி" என்ற வட்டத்துக்களும் கட்டிப்போடுவததை விடுத்து, ... ஊக்குவியுங்கள்! 

... மண்ணும், மக்களும் இல்லையெனில் நாளை எம்குரல்கள் ...??????

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் உண்மைதாம் கிழக்கு அரசியலில் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து ஏமாந்த கட்சினர் தான் இவர்கள்  முஸ்லீம் பிரதேசங்கள் எப்படி இருக்கும் இரவில் கூட பகல் போல் மிளிரும் தமிழ் பிரதேசங்களோ இன்னும் இருட்டுக்காடுகளாகத்தான் இருக்கும் இருக்கிறது இப்ப வரைக்கும் கிராம புறங்கள் ஏன் நகர்புறங்கள் கூட இதை இங்கு வந்து பார்த்தவர்கள் அறிவார்கள் என நான் நினைக்கிறன் அனால் இத்து போன கொள்கை அரசியலை வைத்து இன்னும் இன்னும் அரசியல் செய்கிறார்கள் 

புத்தராக மாறி சித்தராக  தன்னை காட்டிக்கொள்ளும் கருணாவால் கூட கிழக்குமாகாணத்திற்கு  எதுவும் செய்ய முடியவில்லையே? :cool:

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, குமாரசாமி said:

புத்தராக மாறி சித்தராக  தன்னை காட்டிக்கொள்ளும் கருணாவால் கூட கிழக்குமாகாணத்திற்கு  எதுவும் செய்ய முடியவில்லையே? :cool:

ஆனால் பிள்ளையான் கிழக்கை அபிவிருத்தி செய்தாரே :104_point_left:

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this