கிருபன்

எப்படி ஈழத் தமிழினம் இப்படி ஒரு அதியசயத்தை நிகழ்த்துகிறது?

Recommended Posts

•எப்படி ஈழத் தமிழினம்
இப்படி ஒரு அதியசயத்தை நிகழ்த்துகிறது?

சிங்கள அரசு உதவவில்லை ஏனெனில் பாதிக்கப்பட்டிருப்பது தமிழ் இனம்.

நம்பிய தலைவர்கள் வந்து ஆறுதல் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் பதவியை காப்பாற்றுவதிலே அக்கறையாக இருக்கிறார்கள்.

ஆனாலும் தமிழ் மக்கள் துவண்டுவிட வில்லை. வெள்ள பாதிப்பு என்றவுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரணடு வந்து உதவி செய்கின்றனர்.

கிளிநொச்சியில் எங்கு பார்த்தாலும் இளைஞர் கூட்டம். ஏதோ நல்லூர் திருவிழா போல் கூட்டம் கூட்டமாக வந்து உதவி செய்கிறார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களும் நிதி சேகரித்து தம்மால் இயன்ற உதவிகளை அனுப்பிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எந்தவித தலைவரோ அல்லது அமைப்போ அல்லது வழிகாட்டலோ இல்லாமல் தமிழ் இனம் எப்படி ஒருவருக்குகொருவர் இப்படி உதவுகின்றனர் என்பது ஆச்சரியமாக இருக்கலாம்.

அதைவிட அதிசயம் போரினால் பாதிகப்பட்ட ஒரு இனம் எப்படி தைரியமாக இப்படி பாதிப்பை எதிர் கொள்கிறது என்பதே. இத்தகைய மனோதிடம் எப்படி வந்தது?

ஆம். இது போர்த்துக்கேயருக்கு எதிராக நூறு வருடம் போராடிய இனம். இது ஒல்லாந்தருக்கு எதிராக 100 வருடம் போராடிய இனம். ஆங்கிலேயருக்கு எதிராக 150 வருடம் போராடிய இனம். ஒரு லட்சம் இந்திய ராணுவத்திற்கு எதிராக 2 வருடம் போராடிய இனம். 1948ல் இருந்து சிங்கள அரசுக்கு எதிராக போராடி வரும் இனம்.

இத்தகைய வீரம்செறிந்த போராட்ட வரலாறு கொண்ட ஈழத் தமிழினம் மீண்டும் எழுந்து நிற்பது அதிசயம் இல்லை. அது எழுந்து நிற்காவிட்டால்தான் அதிசயம்.

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

உந்த கேடுகெட்ட  அரசியல்வாதிகள் இல்லாட்டில் தமிழ்ச்சனத்தின்ரை ஒற்றுமையை ஆராலையும் பிரிக்கேலாது.:cool:

Share this post

Link to post
Share on other sites

பலருடைய வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டுள்ளன வெள்ளம் வடிந்த பின் தான் முழுமையான இழப்பீடு தெரியும் .

Share this post

Link to post
Share on other sites

இந்த இயற்கை அனர்த்தத்தின் போதும் தாயகத்து தமிழ் இளைய சமூகம் தன்னார்வமாக ஒன்றிணைந்து பல சிரமங்களை எதிர்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னின்று பாடுபடுகின்றதை அவதானிக்க முடிகின்றது. கைத் தொலைபேசியினூடாகவும் சமூக வலைத்தளங்களினூடாகவும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவுகின்றனர். தேவை என்று ஒன்று வரும் போது அதற்காக தம்மை ஈடுபடுத்த முன்னிற்கும் சமூகமாக இருக்கின்றனர்.

தாயக தமிழர்கள், குறிப்பாக தாயகத்து இளம் சமூகம் வெளி நாடுகளில் இருந்து அனுப்பும் காசில் குடித்து வீணடிக்கும் கூட்டம் என்று முத்திரை குத்துகின்றவர்கள், இவற்றை ஒரு போதும் காண்பதில்லை, காண விரும்புவதும் இல்லை.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, நிழலி said:

தாயக தமிழர்கள், குறிப்பாக தாயகத்து இளம் சமூகம் வெளி நாடுகளில் இருந்து அனுப்பும் காசில் குடித்து வீணடிக்கும் கூட்டம் என்று முத்திரை குத்துகின்றவர்கள், இவற்றை ஒரு போதும் காண்பதில்லை, காண விரும்புவதும் இல்லை.

அங்கே அதுவும் இருக்கு  இதுவும் இருக்கு.

ஒரு குடும்பத்தில் எதிர்க்கருத்துத்தான் ஆரோக்கியம் தரும். சரி பிழைகளை தெரிய வைக்கும். 
எதெற்கெடுத்தாலும் ஆமா போட்டால் எவருக்குமே சரி பிழை தெரியாது.

தெரியவும்  சந்தர்ப்பம் இல்லை.:)

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, கிருபன் said:

•எப்படி ஈழத் தமிழினம்
இப்படி ஒரு அதியசயத்தை நிகழ்த்துகிறது?

சிங்கள அரசு உதவவில்லை ஏனெனில் பாதிக்கப்பட்டிருப்பது தமிழ் இனம்.

நம்பிய தலைவர்கள் வந்து ஆறுதல் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் பதவியை காப்பாற்றுவதிலே அக்கறையாக இருக்கிறார்கள்.

ஆனாலும் தமிழ் மக்கள் துவண்டுவிட வில்லை. வெள்ள பாதிப்பு என்றவுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரணடு வந்து உதவி செய்கின்றனர்.

கிளிநொச்சியில் எங்கு பார்த்தாலும் இளைஞர் கூட்டம். ஏதோ நல்லூர் திருவிழா போல் கூட்டம் கூட்டமாக வந்து உதவி செய்கிறார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களும் நிதி சேகரித்து தம்மால் இயன்ற உதவிகளை அனுப்பிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எந்தவித தலைவரோ அல்லது அமைப்போ அல்லது வழிகாட்டலோ இல்லாமல் தமிழ் இனம் எப்படி ஒருவருக்குகொருவர் இப்படி உதவுகின்றனர் என்பது ஆச்சரியமாக இருக்கலாம்.

அதைவிட அதிசயம் போரினால் பாதிகப்பட்ட ஒரு இனம் எப்படி தைரியமாக இப்படி பாதிப்பை எதிர் கொள்கிறது என்பதே. இத்தகைய மனோதிடம் எப்படி வந்தது?

ஆம். இது போர்த்துக்கேயருக்கு எதிராக நூறு வருடம் போராடிய இனம். இது ஒல்லாந்தருக்கு எதிராக 100 வருடம் போராடிய இனம். ஆங்கிலேயருக்கு எதிராக 150 வருடம் போராடிய இனம். ஒரு லட்சம் இந்திய ராணுவத்திற்கு எதிராக 2 வருடம் போராடிய இனம். 1948ல் இருந்து சிங்கள அரசுக்கு எதிராக போராடி வரும் இனம்.

இத்தகைய வீரம்செறிந்த போராட்ட வரலாறு கொண்ட ஈழத் தமிழினம் மீண்டும் எழுந்து நிற்பது அதிசயம் இல்லை. அது எழுந்து நிற்காவிட்டால்தான் அதிசயம்.

போராட்டம் மட்டுமே வாழ்க்கையாய் போன இனம்…
 
  • Sad 1

Share this post

Link to post
Share on other sites

உடற்கூறியல் மரபணு சார்ந்ததைப் போல் உளவியலும் அமையலாம். எனவே போராட்டக் குணமும் பரம்பரையாய் வர வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன். முயற்சியால் அதனை மாற்றிக் கொள்வதும், தாங்கொணாத அடக்குமுறையால் புதிதாய் ஏற்படுத்திக் கொள்வதும் விதிவிலக்காக ஏற்படுவது உண்டு. போராட்டக் குணம் இயற்கையாய் அமைந்தமைக்கு எடுத்துக்காட்டாக யூத இனத்தைச் சொல்லலாம் (அவர்களது கோட்பாடுகளிலும் பார்ப்பனியத்தைப் போன்ற ஒருவகை உயர்வு  மனப்பான்மையிலும் நமக்கு மாறுபாடு இருப்பினும்). 1960களில் நடந்த 'துவி'ப் போராட்டத்தில் தாம் சார்ந்த மத நிறுவனத்தையும் அரசின் அடக்குமுறையையும் எதிர்த்துப் போராடிய இடிந்தகரை மீனவர்கள் அணு உலைக்கெதிரான போராட்டத்தில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது வியப்பன்று. அவ்வாறே தமிழினமும். பார்ப்பனியத்தின் சமஸ்கிருதத் தாக்குதலிலிருந்தும் தன் மொழியை  மீட்டெடுத்து மீள் உருவாக்கம் செய்வது தமிழினம். ஆகவே தொல்மொழிகளில் இன்றும் என்றும் வாழ்வது தமிழ். போராடாத சமூகம் மழுங்கிப் போகும். தம் போராட்டக் குணத்தினால் தமிழர் எங்கும் வென்று நிற்பர். மானிடம் அனைத்தும் வெல்ல வைப்பர். "வெள்ளம் போல் தமிழர் கூட்டம். வீரங்கொள் கூட்டம்" எனும் பாரதிதாசன் கூற்று மிகையுரையன்று.

Edited by சுப.சோமசுந்தரம்
  • Like 1
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now