Jump to content

நெட்டி முறித்தல் ஆபத்தா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அடிக்கடி நெட்டி முறிக்கக் கூடாது  என பாட்டி சொல்கிறார். உண்மையில் அது தவறா டொக்டர்?
எஸ். பிரணவி, சாவகச்சேரி
 
MAIN-Cracking-Knuckles%2B%25282%2529.jpg
 
 

பதில்:- நெட்டி முறிப்பது தீங்கானது என்பது உங்கள் பாட்டியினது மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும் பாட்டிகள் சொல்லி பரம்பரை பரம்பரையாக நம்பப்படுகிறது. ஏன் பல மருத்துவர்கள் கூட அது தீங்கானது எனச் சொல்லக் கூடும். மாற்றுக் கருத்துகளும் உள்ளன.

அண்மையில் அதாவது 2017 ல் செய்யப்பட்ட ஆய்வுகள் நெட்டி முறிப்பதால் பாதிப்பு இல்லை என்கின்றன.

நெட்டி முறிக்கும்போது என்ன நடக்கிறது என 400 பேரை அல்டரா சவுண்ட் ஸ்கான் பரிசோதனை செய்து பார்த்தார்கள். அந்நேரம் சடுதியாக தனித்துவமான ஒளிப்பாய்ச்சல் போன்று மூட்டிற்குள் ஏற்பட்டது. நெட்டி முறிக்கும்போது மூட்டிற்குள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொண்டிருக்கும் இருக்கும் இரு எலும்புகளினதும் மேற்பரப்புகள் இழுப்பட்டு விலகுகின்றன.

மூட்டிற்குள் இருக்கும் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உராயாது சுலபமாக அசைவதற்கு உதவியாக அதற்குள் சிறிது திரவம் இருக்கிறது. அதை synovial fluid  என்பார்கள். இது கிறீஸ் போன்று செயற்படும். நெட்டி முறிக்கையில் எலும்பு மேற்பரப்புகள் சற்று விலகும். அப்போது போது மூட்டிற்குள் இருக்கும் அழுத்தம் குறைவதனால் அதற்குள் மேலதிக திரவம் வேகமாக உள்ளிழுக்கப்படும். இதன் போதே நெட்டி முறியும் சத்தம் உண்டாகிறது.
 
MAIN-Cracking-Knuckles.jpg



இவ்வாறு நெட்டி முறிக்கும் போது மூட்டினது உள்ளவு தற்காலிகமாக சற்று அதிகரிக்கிறது. அதனால் மூட்டினது செயற்பாட்டு வீதம் அதிகரிக்கிறது. அதாவது கூடியளவு வளையவும் நிமிரவும் முடிகிறது. எனவே நல்லது என்றுதானே சொல்ல வேண்டும்.

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் அதாவது 1990 ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வானது நெட்டி முறிப்பதால் கைகள் சற்று வீங்குவதுடன் பிடிக்கும் வலிமையும் குறைகிறது என்றது. ஆனால் அந்த ஆய்வானது சரியான முறையில் நடைபெறவில்லை என இப்பொழுது சுட்டிக் காட்டப்படுகிறது. அத்துடன் 2017 ல் செய்யப்பட்ட இரு ஆய்வுகள் நெட்டி முறிப்பதால் பிடிக்கும் வலிமை குறையவில்லை எனத் தெளிவாகச் சொல்லின.

எனவே நெட்டி முற்பதால் பாதிப்பு இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. மாறாக சற்று சுகமான உணர்வு ஏற்படுகிறது. அதாவது சுலபமாக வளையவும் நிமிரவும் முடிவதால்.

சவ்வுகள் மாட்டு;படுவதாலும், எலும்புகள் தேய்ந்து ஒன்றோடு ஒன்று உரசுவதாலும் சில வகை சத்தங்கள் கழுத்து, தோள்மூட்டு, முழங்கால் போன்ற மூட்டுகளில் கேட்பதுண்டு. இவை முற்றிலும் வோறன சப்தங்கள். நெட்டி முறித்தல் சத்தங்கள் அல்ல. அவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும். ஏனெனில் அவை நோய்கள் காரணமாக ஏற்படலாம் என்பதால் அடிப்படைக் காரணம் கண்டறியப்பட வேண்டும்.

நெட்டி முறித்தவருக்கு அதன் பின்னர் அந்த மூட்டானது சுகமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறிவோம். எனவேதான் அவர் அவ்வாறு செய்கிறார். ஆந்த சுக உணர்வானது நாம் எற்கனவே கூறிய விளக்கங்களின் அடிப்படையில் உண்மையும் கூட.

ஆனால் நெட்டி முறிப்பதைப் பார்த்தும் கேட்டும் கொண்டிருப்பவருக்கு அந்த சத்தமானது எலும்புகள் முறிவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அதைச் கேட்கச் சகிக்க முடியாதிருக்கிறது. அதனாலேயே அது ஆபத்தானது என்ற உணர்வைக் கொடுக்றது. அதுவும் வயதானவர்களுக்கு அது நரகாசமாக ஒலிக்கலாம். அதனால்தான் காலம் காலமாக அது ஆபத்தானது என்று சொல்லப்படுகிறது என நினைக்கிறேன்.

நீண்ட காலம் நெட்டி முறித்தவர்களுக்கு எலும்பு தேய்வு ஏற்படுமா என்பதற்கான ஆதாரங்களும் ஆய்வுகள் ஊடாக கண்டு பிடிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பட வேண்டும்.

எனவே இன்றுள்ள தரவுகளின் அடிப்படையில் நெட்டி முறிப்பது ஆபத்தானது அல்ல என்றே சொல்ல முடியும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

 

http://hainallama.blogspot.com/?m=1

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒன்றும் பிரச்சினையில்லை. நெட்டி முறிக்காமல் சோம்பலை எப்படி விரட்டுவதாம்.....!  🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, கிருபன் said:


மூட்டிற்குள் இருக்கும் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உராயாது சுலபமாக அசைவதற்கு உதவியாக அதற்குள் சிறிது திரவம் இருக்கிறது.

அந்த திரவம் அதிகரிக்க ஏதாவது வழிகள் அல்லது மருத்துவங்கள் இருக்கின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

அந்த திரவம் அதிகரிக்க ஏதாவது வழிகள் அல்லது மருத்துவங்கள் இருக்கின்றதா?

தேகப்பயிற்சிதான் இயற்கையாக திரவத்தை அதிகரிக்க உதவும். மூட்டுகளில் ஏற்படும் நோவினைக் குறைக்க படுத்திருக்கக்கூடாது. இயன்றவரை எல்லா மூட்டுக்களையும் அசைக்கக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும். யோகாசனம் (சரியான முறையில்) செய்வது நல்லது.

ஆங்கிலத்தில் உள்ளது.

https://m.wikihow.com/Increase-Synovial-Fluid

நவம்பர் ஆரம்பத்தில் இத்தாலிக்குப் போயிருந்தேன். விமான இருக்கையில் அரைமணிநேரம் தாண்டிய பின்னர் இருக்கமுடியாதளவுக்கு நோ வந்தது. திரும்பவரும்போது அதே பிரச்சினை. எல்லா வேலைகளையும் குனிந்து நிமிர்ந்து செய்யக்கூடியதாக இருந்தும் இப்படி ஏன் வந்தது என்று ஆராய்ந்தபோது தொடர்ச்சியாக இருந்து வேலை செய்வதும், கார் ஓடுவதும் காரணம் என்று தெரிந்தது. Physioவிடம் போனபோது அவரும் அதையே சொல்லி, தினமும் குறைந்து அரைமணி நேரம் நடக்கவும், முதுகை  வளைத்து பாரத்தைத் தூக்கவும் சொன்னார். முதுகை நேராக வைத்து பாரத்தை தூக்குவது சரியான முறை. ஆனால் எனது பிரச்சினைக்கு பிழையான முறையில் அதிக எடையை தூக்கச் சொன்னார். ஒரு 24kg kettlebell வாங்கி சில உடற்பயிற்சிகளைச் செய்து நோவைக் குறைத்துவிட்டேன். அடுத்த விமானப்பயணம் போகும்போது எல்லாம் சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கிருபன் said:

தேகப்பயிற்சிதான் இயற்கையாக திரவத்தை அதிகரிக்க உதவும். மூட்டுகளில் ஏற்படும் நோவினைக் குறைக்க படுத்திருக்கக்கூடாது. இயன்றவரை எல்லா மூட்டுக்களையும் அசைக்கக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும். யோகாசனம் (சரியான முறையில்) செய்வது நல்லது.

ஆங்கிலத்தில் உள்ளது.

https://m.wikihow.com/Increase-Synovial-Fluid

நவம்பர் ஆரம்பத்தில் இத்தாலிக்குப் போயிருந்தேன். விமான இருக்கையில் அரைமணிநேரம் தாண்டிய பின்னர் இருக்கமுடியாதளவுக்கு நோ வந்தது. திரும்பவரும்போது அதே பிரச்சினை. எல்லா வேலைகளையும் குனிந்து நிமிர்ந்து செய்யக்கூடியதாக இருந்தும் இப்படி ஏன் வந்தது என்று ஆராய்ந்தபோது தொடர்ச்சியாக இருந்து வேலை செய்வதும், கார் ஓடுவதும் காரணம் என்று தெரிந்தது. Physioவிடம் போனபோது அவரும் அதையே சொல்லி, தினமும் குறைந்து அரைமணி நேரம் நடக்கவும், முதுகை  வளைத்து பாரத்தைத் தூக்கவும் சொன்னார். முதுகை நேராக வைத்து பாரத்தை தூக்குவது சரியான முறை. ஆனால் எனது பிரச்சினைக்கு பிழையான முறையில் அதிக எடையை தூக்கச் சொன்னார். ஒரு 24kg kettlebell வாங்கி சில உடற்பயிற்சிகளைச் செய்து நோவைக் குறைத்துவிட்டேன். அடுத்த விமானப்பயணம் போகும்போது எல்லாம் சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

 

தகவல்களுக்கு நன்றி.

பலருக்கு பயனாக இருக்கும் என்பதால் பகிர்கின்றேன்.
படிகள் ஒழுங்காக ஏறி இறங்க முடிவதில்லை
நீண்டதூரம் நடக்க முடிவதில்லை.
நீண்டநேரம் நிற்க முடிவதில்லை.
அரைமணி நேரம் நாற்காலியில் இருந்தால் எழும்பி நிற்க முடிவதில்லை.
முழங்கால் தசையின் இறுக்கம் அதிகமாக இருக்கின்றது.
முதல் நாள் இருந்த வலி போல் இன்று இருப்பதில்லை. நாளையும் வேறு இடங்களில் இருக்குமென 100% நம்பலாம்
மசாஜ் சென்றால் அன்றையநள் சுகமாக இருக்கும்.
மறு நாள் மீண்டும் அதே பல்லவி.

யோகாசனம்????????? 

யோகசனங்களில் நாட்டமுள்ளவன். 30 வருடங்களுக்கு மேலாக 10/20 நிமிடங்கள் தினசரி செய்து வந்தவன். என்று முழங்காலில் பிரச்சனை வந்ததோ அன்றுடன் அதையும் விட்டு விட்டேன்.வீட்டில் ஜிம் சைக்கிள் இருக்கின்றது.  மனப்பயம் தலைக்கு மேல் வந்து விட்டது.

சென்ற மாதம் இடது முழங்கால் சத்திரசிகிச்சை. வருகின்ற மாதம் வலது முழங்கால்.

முழங்கால் பிரச்சனைகள் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை சொல்கின்றார்கள்.

உண்மையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

முழங்கால் பிரச்சனைகள் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை சொல்கின்றார்கள்.

 உண்மையா?

ஆமாம். X-Ray, MRI scans மூலம் மூட்டு எலும்பு தேய்ந்துள்ளதா, cartilages பழுதடைந்துள்ளதா, ligament வலிவிழுந்துள்ளதா என்று கண்டுபிடிக்கலாம். அதற்கேற்ப தேவையான சிகிச்சைகளை செய்வது நல்லது. மனப்பயம் கொண்டு உடற்பயிற்சிகளை கைவிடக்கூடாது. வைத்தியர்கள் சொல்லும் ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடந்தால் வலிகளை ஓரளவு கட்டுப்படுத்தி நாளாந்த வாழ்க்கையை ஓட்டலாம். 

சத்திர சிகிச்சைகள் மூலம் நன்மை கிடைக்கும் என்பதால் மனதை தைரியமாக வைத்திருங்கள். உளத்தைரியமே எல்லா பிரச்சினைகளையும் விரைவில் குணப்படுத்தும் மருந்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.