Jump to content

கிறிஸ்துமஸ் பண்டிகை: அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தடை செய்யப்பட்ட கதை தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
கிறித்துவ தூய்மைவாதிகள் மதத்தின் கடும் விதிகளை பின்பற்றி வாழ்ந்தனர்படத்தின் காப்புரிமை Universal History Archive Image caption கிறித்துவ தூய்மைவாதிகள் மதத்தின் கடும் விதிகளை பின்பற்றி வாழ்ந்தனர்

அது ஒரு காலம். அப்போது கிறிஸ்துமஸ் கொண்டாடுவது என்பது ஆங்கிலேயர்களால் கிறித்தவர்கள் செய்யக்கூடாத ஒரு செயலாக பார்க்கப்பட்டது. கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் எண்ணினார்கள்.

 

ஒவ்வொரு டிசம்பர் மாதமும், பொதுமக்கள் மத்தியில் வழக்கத்து மாறான வகையில் ஆடம்பரமான ஒரு உண்டாகும். மக்கள் சற்று அதிகப்படியான நடத்தையை வெளிப்படுத்துவார்கள். அது கிறித்தவ வாழ்வுக்குச் செய்யும் அவமானம் என்றெல்லாம் எண்ணினார்கள்.

டிசம்பர் மாதத்தில் உற்சாகமாக குழுவாக இணைந்து மது அருந்துவார்கள், வணிக கடைகள் விரைவிலேயே சாத்தப்படும். நெருங்கிய நண்பர்கள், குடும்பங்கள் இணைந்து சிறப்பு உணவுகளை அருந்துவார்கள். வீடுகள் பசுமையான தாவரங்களால் அலங்கரிக்கப்படும். தெருக்களில் உணர்ச்சிகரமாக பாடுவார்கள்.

 

'உண்மை' கிறித்தவர்கள் யார்?

1964-ம் ஆண்டு ஆங்கிலேய கிறித்துவ தூய்மைவாதிகள் கிறிஸ்துமஸை ஒழிக்க முடிவு செய்தார்கள். ப்ரொட்டஸ்டன்ட் கிறித்துவர்கள் கடுமையான மத விதிகளின் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

கிறித்துவ தூய்மைவாத அரசு கிறிஸ்துமஸை ஒரு 'பாகன்'பண்டிகையாக கருதியது. ஏனெனில் டிசம்பர் 25-ம் தேதிதான் இயேசு பிறந்தார் என்பதற்கு விவிலியத்தில் விளக்கம் இல்லை என்றார்கள்.

19-வது நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் குறித்த ஆங்கிலேயர்களின் விளக்கப்படம்படத்தின் காப்புரிமை Getty Images Image caption 19-வது நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் குறித்த ஆங்கிலேயர்களின் விளக்கப்படம்

''எங்களின் கிறிஸ்துமஸை திரும்பக்கொடுங்கள்''

1960 வரை அனைத்து கிறிஸ்துமஸ் நடவடிக்கைகளும் இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டது.

டிசம்பர் 25 அன்று அனைத்து கடைகள் திறக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது. தேவாலயங்கள் மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. கிறிஸ்துமஸ் சேவையை வழங்குவது சட்டத்து புறம்பான ஒன்றாக பார்க்கப்பட்டது.

அந்தத்தடை எளிதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மீண்டும் குடிக்கவும், பாட்டு பாடவும், களிப்படைவதற்கான சுதந்திரம் வேண்டும் எனக்கூறி போராட்டங்கள் நடந்தன.

ஆனால் இரண்டாம் சார்லஸ் அரசராக பதவியேற்றபிறகுதான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு எதிரான சட்டங்கள் வாபஸ் வாங்கப்பட்டது.

கொண்டாட்டமும் விருந்தும் அமெரிக்க தூய்மைவாதிகளாலும் தடை செய்யப்பட்ட காலமுண்டு.

ஆம். அமெரிக்காவிலும் கிறிஸ்துமஸ் தடை செய்யப்பட்டது.

மஸாசுஷெட்சில் இங்கிலாந்தில் சொல்லப்பட்ட அதே காரணங்களுக்காக 1659 - 1681 வரை கிறிஸ்துமஸ் பண்டிகையே இல்லை.

கிறிஸ்துமஸ் கொண்டாட்ட தடைச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டபோதிலும், பல தூய்மைவாதிகளும் டிசம்பர் திருவிழாவை பாகன் மீதான வெறுப்பாகவே கருதினார்கள்.

கிறிஸ்துமஸ்படத்தின் காப்புரிமை Getty Images

உண்மையாக கிறிஸ்து பிறந்ததினம் எது?

உண்மையில் கிறிஸ்து பிறந்த தினம் குறித்த துல்லியமான சரியான ஒருமித்த தகவல்கள் இல்லை.

சில இறையியலார்கள் கிறிஸ்து பிறந்தது வசந்தகாலமாக இருக்கக்கூடும் என எண்ணுகிறார்கள். ஏனெனில் மேய்ப்பர்கள் வயல்களில் தங்களது மந்தைகளை கவனித்துக்கொண்டிருந்த குறிப்புகள் உள்ளன. அல்லது, அது இலையுதிர் காலமாகவும் இருந்திருக்கலாம் என்றும் எண்ணுகிறார்கள்.

ஆனால் விவிலியத்தில் தேதிகள் கொடுக்கப்படவில்லை.

ரோமானியர்கள் நல்லதொரு விருந்தை விரும்பியதை விவரிக்குமாறு 19-வது நூற்றாண்டில் ஆங்கிலேயரால் தீட்டப்பட்ட படம்படத்தின் காப்புரிமை Getty Images Image caption ரோமானியர்கள் நல்லதொரு விருந்தை விரும்பியதை விவரிக்குமாறு 19-வது நூற்றாண்டில் ஆங்கிலேயரால் தீட்டப்பட்ட படம்

பாகன் சடங்குகள்

ரோமன் காலத்திலிருந்தே பாகன் சடங்குககளில் ஒரு பகுதியாக டிசம்பரின் இறுதிப் பகுதிகளில் வலுவான விருந்துகளை கொண்ட விழா காலம் இருந்தது நமக்குத் தெரியும்.

அறுவடை கால திருவிழாவின் சாராம்சமாக மற்றவர்களுக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டன, வீடுகள் அலங்கரிக்கப்பட்டன. பெரும் உணவுகளும் அதிகப்படியான மதுவும் விருந்தின் மைய அம்சங்களாக இருந்தன.

வரலாற்று ஆசிரியரான சைமன் செபாக் மான்டிஃபோர் கருத்துப்படி ''ஆரம்பகால கிறிஸ்துவர்கள் சமூக அளவில் பாகன் மரபு வழக்கங்களில் இருந்த கேளிக்கைகளுடன் போட்டியிட வேண்டியிருந்தது''

குறிப்பிட்ட காலம் வரை, ரோமானியர்கள் இரண்டு மரபுகளையும் கொண்டாடினார்கள். நான்காவது நூற்றாண்டின் இறுதியில் டிசம்பர் மாதத்தின் 14 நாள்களில் பாகன் சடங்குகளும் கிறித்துவமும் இணைந்து கொண்டாடப்பட்டது. ஆனால் அதில் மோதல்களில்லாமல் இல்லை.

வென்றது யார்?

கிறிஸ்துமஸ் விருந்து கார்ட்டூன்படத்தின் காப்புரிமை Getty Images Image caption கிறிஸ்துமஸ் விருந்து கார்ட்டூன்

இறுதியில், கிறித்தவம் வென்றது.

பாகன் மரபு வழக்கங்களின் சுவடுகளாக தூய்மைவாதிகள் கிறிஸ்துமசை கருதியதால் 17-ம் நூற்றாண்டில் கிருஸ்துமஸ் விழாவை ஒழிக்க முயற்சி நடந்தது.

ஆனால் இன்று உங்களைச் சுற்றி நடக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை கவனித்தீர்களே ஆயின், தூய்மைவாதிகள் தோற்றது தெளிவு.

ஆகவே, உலகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட மரத்தின் அருகே

கிறிஸ்தவர்கள் வான்கோழியை கடிப்பதும், கோப்பைகளில் மது ஊற்றி அருந்துவதும், அவர்ளின் பண்டிகையும் தோராயமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை.

https://www.bbc.com/tamil/global-46671900

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.