Jump to content

இரணைமடு குளத்திற்குள் ஏற்பட்ட அதிசயம்! வியந்து போன மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரணைமடு குளத்திற்குள் ஏற்பட்ட அதிசயம்! வியந்து போன மக்கள்

Report us Suman 2 hours ago

கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் வான்பகுதிக்குள் அதிகளவு மீன்கள் பிடிபடுவதனால் இன்று பலர் மகிழ்ச்சியில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பெருமளவானவர்கள் வான்பகுதிக்குள் மீன் பிடியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான கிலோ மீன்கள் பிடிப்படுவதனால் வியாபாரிகளும் இரணைமடுவில் குவிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேற்று மாத்திரம் பல இலட்ச ரூபாவுக்கு மீன்கள் விற்பனை இடம்பெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு தொடர்ந்தும் வான்பகுதிக்குள் பலர் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதோடு அவற்றை கொள்வனவு செய்வதற்கு மக்களும் வியாபாரிகள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/community/01/202667?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ir.jpg

இரணைமடு வான்கதவுகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது – மக்களே அவதானம்!

வடக்கில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக தொடர்ந்தும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) அதிகாலை முதல் மீண்டும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.

இதன் காரணமாக இரணைமடுக் குளத்திற்கான நீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகின்றது. நிலையில் அதன் 9 வான்கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக வரத்து நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

தற்போது இரனைமடுக்குளத்தின் நீர் மட்டம் 35 அடி 11 அங்குலமாகக் அதிகரித்துக் காணப்படுகின்றது. தொடரும் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளமையால் இரணைமடுக்குளத்தின் 9 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதில் 5 வான் கதவுகள் 1.5 அடியாகவும் 4 வான்கதவுகள் 6 அங்குலமாகவும் திறக்கப்பட்டுள்ளன.

இரணைமடுக்குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களின் மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழை வெள்ளப்பெருக்குக் காரணமாக பல கிராமங்களின் மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தஞ்சமடைந்துள்ள நிலையில் மீண்டும் தொடரும் சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/இரணைமடு-வான்கதவுகள்-இன்ற/

Link to comment
Share on other sites

குளத்திற்குள் மீன் பிடிபடுவதெல்லாம் அதிசயமா? நல்ல காலம் உலக அதிசயம் என்று கூறவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகா தர்மம் அற்ற தலைப்புக்களும்..செய்திகளையும் வெளியிடும் ...நின் குழுமமும் . ஐ .பி ..குழுவும் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

குளத்திற்குள் மீன் பிடிபடுவதெல்லாம் அதிசயமா? நல்ல காலம் உலக அதிசயம் என்று கூறவில்லை. 

நீங்க வேற செய்திக்கு பஞ்சத்தை பாருங்கள் மற்றது அதற்கு இடும் தலைப்புக்கள பார்த்தால் தலையே சுத்தும் 

இது இந்திய ரயில் இலங்கை யாழ்ப்பாணத்திற்கு வந்த போது

48395526-2144535658918655-49473728282624

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ச்சி,அதிரடி,முச்சரியம்,மகிழ்சி,சிறலங்காவுக்கு ஏற்டப்போகும் ஆபத்து,இடைக்கிடை விடுதலைப்புலிகள்.செய்த செயல் இந்தச் சொற்கள் இல்லாமல் தமிழ்வின்னில் செய்திகள் வராது.உள்ளே போய்ப் பார்த்தால் செய்திகள் சப்பென்றிருக்கும்.இது ஒரு செத்தவீட்டு இணையத்தளம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய லங்காசிறி(தமிழ்வின்னின்) தலைப்புச்செய்திகள் சில.ஒழுங்காககச்செய்திகள் போடத்தெரியாது. பரபரப்புச் செய்தித் தலைப்புகள் உள்ளே ஒன்றம் இருக்காது. சப்பென்று இருக்கும்.

கொழும்பில் தமிழ் அரசியல்வாதி அதிரடியாக கைது!

முதலில் குழந்தை, பிறகு தான் திருமணம் - அதிர்ச்சி அளித்த பிரபல தமிழ் நடிகை!

மைத்திரி தொடர்பில் குடும்பத்தின் திடீர் முடிவு? மகள் தொடர்பில் புதிய செய்தி..

 

கட்சிக்குள் ஏற்பட்ட அடிதடி! மைத்திரி எடுத்த அதிரடி முடிவு

இரணைமடு குளத்திற்குள் ஏற்பட்ட அதிசயம்! வியந்து போன மக்கள்

படுதோல்வி அடைந்துள்ள மைத்திரி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

அதிர்ச்சி,அதிரடி,முச்சரியம்,மகிழ்சி,சிறலங்காவுக்கு ஏற்டப்போகும் ஆபத்து,இடைக்கிடை விடுதலைப்புலிகள்.செய்த செயல் இந்தச் சொற்கள் இல்லாமல் தமிழ்வின்னில் செய்திகள் வராது.உள்ளே போய்ப் பார்த்தால் செய்திகள் சப்பென்றிருக்கும்.இது ஒரு செத்தவீட்டு இணையத்தளம்.

தமிழ் இணையம்களே கொப்பி பேஸ்ட் கூட்டம் அதுக்குள்ளே இவை தமிழ்வின் காரர் பறந்து பறந்து எல்லா இணையத்தையும் கொப்பி பண்ணுவினம் நாங்களும் எல்லாத்தையும் மேயாமல் பிள்ளையார் கணக்காய் அங்கிருந்து நேரே கொப்பி பண்ணி போடுவது உண்டு என்ன அவர்களின் பக்க்ம்கள் திறக்க திறக்க விளம்பரம் மூலம் காசு மழை கொட்டும் அதிகபடியான பார்வையாளர்களை பக்கம்களை திறக்க வைக்க இப்படி தூண்டில் வசனம்களை போடுவினம் உள்ளே ஒன்றும் இருக்காது ஆனால் தேவையில்லாத விளம்பரங்கள் கிடக்கும் அதை தவிர்க்க ஒன்லி ரீடர்ஸ் மூட் அந்த இணையம் படிக்க மட்டும் என பிரவ்சரில் செட்டிங் செய்யனும் அவ்வளவும் காணும் .

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இது இந்திய ரயில் இலங்கை யாழ்ப்பாணத்திற்கு வந்த போது

newjaffna.com இங்கு யாழில் தடை செய்யபட்டுள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

அதிர்ச்சி,அதிரடி,முச்சரியம்,மகிழ்சி,சிறலங்காவுக்கு ஏற்டப்போகும் ஆபத்து,இடைக்கிடை விடுதலைப்புலிகள்.செய்த செயல் இந்தச் சொற்கள் இல்லாமல் தமிழ்வின்னில் செய்திகள் வராது.உள்ளே போய்ப் பார்த்தால் செய்திகள் சப்பென்றிருக்கும்.இது ஒரு செத்தவீட்டு இணையத்தளம்.

விடிய வெள்ளன நித்திரைப்பாயாலை எழும்பினவுடனை கண்டகளிசறையளை வாசிச்சுப்போட்டு அதை லைக் பண்ணி பேஸ்புக்கிலை ஏத்தி வெளிச்சம் காட்டிப்போட்டு வேலைக்குப்போற எங்கடை சனங்களும் எக்கச்சக்கம்...:cool:

உதாரணத்துக்கு இப்பிடியொரு தலையங்கம்.

"உங்களுக்கு அந்த பிரச்சனையா???? உடனே இதைபடியுங்க" :grin:

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போதும்..... வேண்டாம்.

அவர்களின் குறைகளை சுட்டிக்காட்டுகின்றோம் என்று இங்கு வேண்டாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

newjaffna.com இங்கு யாழில் தடை செய்யபட்டுள்ளது .

செய்திக்காக இணைந்தது பெருமாள் ஐயா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.