Jump to content

இலங்கை பொலிசார் குறித்து வெளிவந்துள்ள திடுக்கிடும் தகவல்கள்!


Recommended Posts

நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டிய பொலீசார் குறித்து மிகமோசமான பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

என்னதான் பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும் கடத்தல் கொள்ளை சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்தவண்ணமே உள்ளது இதற்கு பெலீஸ் திணைக்களத்தில் உள்ள சிலரது மோசமான நடவடிக்கைகளே காரணம்.

பொலிஸாருக்கு எதிராக தினமும் சுமார் 50 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 600ற்கும் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ.எச். மனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு வருகைதாராமல் மாகாண மட்டத்திலும் தங்களின் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ.எச். மனதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் உதவியின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாகாண மட்டத்தில், கிடைக்கப்பெறுகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு மாகாண மட்டத்தில் குழு நியமிக்கப்படவுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/111483

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

யார் திடுக்கிட்டதாம்? 😎

ஹலோ ஜஸ்டின் அண்ணை 
எப்பிடி  சுகம் ......? நல்ல ஆள் ஐயா நீங்கள்  போவதென்றால் இப்பிடி ஒரேயடியாகவா ஓடிவிடுவ்து ....
திரும்ப கண்டதில் ரொம்ப சந்தோசம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஹலோ ஜஸ்டின் அண்ணை 
எப்பிடி  சுகம் ......? நல்ல ஆள் ஐயா நீங்கள்  போவதென்றால் இப்பிடி ஒரேயடியாகவா ஓடிவிடுவ்து ....
திரும்ப கண்டதில் ரொம்ப சந்தோசம் 

சந்தோஷம் கண்டது! மீள அனுப்பத் தான் பார்க்கிறார்கள், தாக்குப் பிடிக்கலாம்! நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

யார் திடுக்கிட்டதாம்? 😎

வேறு யாருமல்ல ராணுவம் தான்.
அவர்களை மிஞ்சிக் கொண்டு போக விடுவார்களா என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.