Sign in to follow this  
கிருபன்

நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட: இலங்கை அணிக்கு இமாலய வெற்றி இலக்கு!

Recommended Posts

நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட: இலங்கை அணிக்கு இமாலய வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் நியூசிலாந்;து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி, 660 என்ற வெற்றி இலக்கை நோக்கி, இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள இலங்கை அணி, ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 24 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில் குசல் மெண்டிஸ் 6 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 14 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

கிறிஸ்ட்சேர்ச்சில் நேற்று முன் தினம் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 50 ஓவர்களிலேயே 178 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்க தவற, அதன்பிறகு களமிறங்கிய வீரர்களும் சொற்ப ஓட்டங்களுக்கு நடையை கட்டினர்.

எனினும் விக்கெட் காப்பாளர் வட்லிங்கின் 46 ஓட்டங்களுடனும், வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தீயின் 68 ஓட்டங்களுடனும் சற்று வலுப்பெற்ற நியூசிலாந்து அணி, இறுதியில் 178 ஓட்டங்களுக்கு மடிந்தது.

இதன்போது, பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் 5 விக்கெட்டுகளையும், லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 104 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் இறுதிவரை களத்தில் இருந்த அஞ்சலோ மெத்தியூஸ் மட்டும், ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக்கொண்டார்.

இதன்போது நியூசிலாந்து அணி சார்பில், வெறும் 15 பந்துகளை வீசிய டிரென்ட் போல்ட், 4 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிம் சவுத்தீ 3 விக்கெட்டுகளை சாய்தார்.

74 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, இன்றைய நாளில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 585 ஓட்டங்களை பெற்ற போது, தனது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதனால் இலங்கை அணிக்கு 660 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நியூசிலாந்து அணி சார்பில், ஜீட் ராவல் 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அதன் பிறகு களமிறங்கிய கேன் வில்லியம்சன் 48 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தார். மேலும், டொம் லதம் 176 ஓட்டங்களையும், ரோஸ் டெய்லர் 40 ஓட்டங்களையும், பெற்று ஆட்டமிழந்தனர்.

ஹென்ரி நிக்கோல்ஸ் 162 ஓட்டங்களுடனும், கிராண்டஹோம் 71 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சு சார்பில், லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும், தில்ருவான் பெரேரா மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், 636 ஓட்டங்களை நோக்கி இலங்கை அணி, நாளை போட்டியின் நான்காவது நாளை தொடங்கவுள்ளது.

 

http://athavannews.com/நியூசிலாந்து-அணிக்கெதி-11/

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கட்சி உறுப்பினர் அட்டை , ரேசன் அட்டை  , வேலை வாய்ப்பு அலுவலகம் , கடன் அட்டை , ஏரி வேலை அட்டை அந்த வரிசையில்  மனித உரிமைகள் பேரவையின்ர "ரினிவல்" 😎
  • வெற்றி திருமகன் "எடுப்சை" காண அலைமோதும் கூட்டம்.. 😍
  • முனிவர்ஜீ மற்றும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
  • நோர்வே தமிழரின் நிதியுதவியில் வாகனேரியில் புதிய மருத்துவமனை   மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவ நிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. நோர்வே தமிழரான ‘ஏஞ்சல்’ மண்டப சேவை நிறுவனத்தின் உரிமையாளர் சுதர்சன் பத்மநாதன் அவர்களின் நிதியுதவியுடன் தமிழ் நோர்வே வள ஒன்றியம் (TNRA), மற்றும் தாயகத்திலுள்ள அஹிம்சா சமூக நிறுவனத்தின் கூட்டு அனுசரணையுடன் இந்த மருத்துவ நிலையக் கட்டடம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மருத்துவ நிலையம் புதன்கிழமை 20.03.19 இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjørn Gaustedsæter அவர்களினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான திறப்பு விழாவில் சுதர்சனின் பெற்றோர் மருத்துவமனையின் பெயர்ப்பலகையினைத் திரைநீக்கம் செய்து வைத்தனர். அஹிம்சா சமூக நிறுவனத்தின் உபதலைவர் இராஜ்மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். எதிர்காலம் நோக்கிய இணைந்த செயற்பாடுகள் பற்றி தமிழ் நோர்வே வள ஒன்றிய இணைப்பாளர் மருத்துவக் கலாநிதி ச.விமலநாதன் , இலங்கையின் அபிவிருத்தியில் புலம்பெயர் தமிழர்களின் பங்கு குறித்து இலங்கைக்கான நோர்வே தூதுவர் தூர்பியொர்ன் ஹவுஸ்ட்சாதர் ஆகியோர் உரை நிகழ்த்தினர். நோர்வே தூதுவர் தனது உரையில், புலம்பெயர் தமிழர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பும் பணத்தில் கைத்தொலைபேசி கொள்வனவு செய்தல், கல்யாண மண்டபங்கள் கட்டி ஆடம்பர செலவுகள் செய்வதற்கு பதிலாக தமிழ்ப் பகுதிகளின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையிலான முதலீடுகளைச் செய்வது அவசியமென வலியுறுத்தினார். அத்துடன் அபிவிருத்திப் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தையும் குறிப்பாக வாகனேரி போன்ற கிராமத்தை தெரிவு செய்ததற்காக தமிழ் நோர்வே வள ஒன்றியத்திற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வண.பிதா ஜோசப் பொன்னையா ஆசியுரை வழங்கினார். மாவட்டச் செயலாளர் ராஜ்பாபு, வைத்தியர் சுகுணன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்திருந்தனர். தாயக மக்களின் மருத்துவத் தேவையினை உணர்ந்து இப்பாரிய பணிக்குரிய நிதியுதவியை வழங்கிய சுதர்சனின் மனிதநேயச் சிந்தனைக்கும் கொடை உணர்வுக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தமிழ் நோர்வே வள ஒன்றியத்தினர் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 489 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் இன்னல்களை அனுபவித்து வந்தனர். நிரந்தர கட்டிடவசதிகளற்ற நிலையில் நடமாடும் மருத்துவ சேவை மூலம் மரநிழலிலும், கூடாரங்களிலும் அவர்களுக்கான மருத்துவதேவைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்தது. தமிழ் நோர்வே வள ஒன்றியம் இக் கிராமத்து மக்களின் அவலங்களை அஹிம்சா சமூக நிறுவனத்தின் உதவியுடன் வெளிக்கொணர்ந்தது. இக்கிராமத்து மக்களின் அவலங்களை தீர்க்கும் முகமாக ஆரம்ப சுகாதார நிலையம், சிகிச்சைப்பிரிவு, பரிசோதனைப் பிரிவு என பல்வேறு பாகங்களை உள்ளடக்கிய கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் கடந்த ஆண்டு பங்குனி மாதம் நாட்டப்பட்டது. கட்டிட வேலைகள் துரிதகதியில் நடைபெற்று, இம்மாதம் கட்டிடவேலைகள் நிறைவு பெற்றன. புலம்பெயர்ந்து வாழும் மருத்துவதுறைசார் ஊழியர்கள், மாணவர்கள் இந்த மக்களுக்கு சேவை செய்யவிரும்புமிடத்து தமிழ் நோர்வே வள ஒன்றியம் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதரக் காத்திருக்கின்றது. ஜேர்மன், பிரான்ஸ், நோர்வே நாடுகளில் மருத்துவதுறைசார் எமது இரண்டாம் தலைமுறையினர் அடுத்த கோடை விடுமுறையின் போது அங்கு பணிபுரிய தயாராகி வருகிறார்கள். இவ்வாறு சேவையாற்ற விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுமிடத்து அதற்கான ஒழுங்குகளைச் செய்து சேவையை சீரமைக்க இலகுவாக இருக்கும் எனவும் தமிழ் நோர்வே வள ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயகத்தில் போருக்குப் பின்னரான சூழ்நிலையில் வாழ்வாதார, மருத்துவ, கல்வி மேம்பாட்டுச் செயற்பாடுகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் ஈடுபட்டுவருகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய செயற்பாடுகளில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள மைலந்தனை கிராமத்தினை முன்மாதிரிக் கிராமமாகத் தத்தெடுத்து அபிவிருத்தி செய்யும் பணிகளில் தமிழ் நோர்வே வள ஒன்றியம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2019/03/23/news/37029
  • மிக நன்றாக இருந்தது. ஈழத்தின் நடைமுறை வாழ்கையைப் பற்றி அறியக்கூடியதாக இருந்தது. அனுபவ பகிர்விற்கு நன்றி.