Jump to content

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி – தென்னாபிரிக்கா அணி வெற்றி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி – தென்னாபிரிக்கா அணி

DvgVNA4X0AIUjyg.jpg

தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்கா அணி, 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

சென்சூரியனில் பொக்ஸிங்டே அன்று ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக பாபர் அசாம் 71 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் டூன்ஹேன் ஒலிவியர் 6 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து, பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக பவுமா 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் மொஹமட் ஆமிர் மற்றும் சயீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளையும், ஹசள் அலி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

42 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 190 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் தென்னாபிரிக்கா அணிக்கு 149 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதில் பாகிஸ்தான் அணி சார்பில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ஷான் மசூத் 65 ஓட்டங்களையும். இமாம் உல் ஹக் 57 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் டூன்ஹேன் ஒலிவியர் 5 விக்கெட்டுகளையும், ரபாடா 3 விக்கெட்டுகளையும், டேல் ஸ்டெயின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

149 ஓட்டங்கள் என்ற எளிய வெற்றி இலக்கை நோக்கி, போட்டியின் நான்காவது நாளான இன்று, தனது ஆட்டத்தை தொடர்ந்த தென்னாபிரிக்கா அணி, 4 விக்கெட்டினை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதனால் தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அதிகபட்ச ஓட்டங்களாக அஷிம் அம்லா, ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களையும், டீன் எல்கர் 50 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தமாக 11 விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாபிரிக்காவின் டூன்ஹேன் ஒலிவியர் தெரிவுசெய்யப்பட்டார்.

 

http://athavannews.com/பாகிஸ்தான்-அணிக்கெதிரா-3/

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.