• 0
Sign in to follow this  
ஈழப்பிரியன்

அடுத்த வருடத்திலிருந்து எதை தவிர்க்கிறோம்?

Question

ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் புதிய வருடத்திலிருந்து புகைக்கமாட்டேன் தண்ணியடிக்க மாட்டேன் அதை விடுகிறேன் இதை விடுகிறேன் என்று மனதில் படுபவைகளை வெளியே சொல்லாவிட்டாலும் எமது மனதுக்குள் எண்ணுவோம்.

அப்படி எண்ணியிருந்தவை மணிக்கணக்கு நாள்கணக்கு கிழமைக்கணக்கில் போனாலும் மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாகவே முடிந்திருக்கிறது.இதில் வெற்றியடைந்தவரென்று இருந்தாலும் நான் இதுவரை காணவில்லை.

சரி ஆண்கள் மறப்பதற்கென்று நிறைய இருக்கும் போது பெண்கள் எதை எதை விடலாமென்று எண்ணவார்கள்.எனக்கு இதில் எதுவுமே எழுதத் தோன்றவில்லை.

இங்கே யாராவது இப்படி எண்ணியிருக்கிறீர்களா?உங்கள் வெற்றி தோல்வி பற்றி எழுதுங்கள்.

நான் பதின்மவயதில் தண்ணி புகை இரண்டும் பழகி புதுவருடம் வரும் வேளை சபதம் எடுத்து நிறைய தடவை தோற்றுப் போனேன்.
கடைசியில் எதுவித நிர்ப்பந்தமும் இல்லாமல் 87 இல் திடீர் என்று ஒருநாள் தண்ணியை விட்டேன்.புகை பிடித்தலை விட முடியாமல் இருந்தேன்.கடைசியில் அதுவே வினையாகிப் போக  97இல் அதையும் விட்டுவிட்டேன்.

 • Like 4

Share this post


Link to post
Share on other sites

Recommended Posts

 • 0

உடல் எடை குறைவதற்கு உணவைக் குறைக்க வேண்டும் என்று எண்ணியதுதான். ஆனால் முதல் நாளே அது தோல்வியில் முடிந்துவிட்டது.

மற்றப்படி பெண்கள் எதை நினைக்கப் போகின்றார்கள். ???

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
 • 0

 

 • Confused 1

Share this post


Link to post
Share on other sites
 • 0
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உடல் எடை குறைவதற்கு உணவைக் குறைக்க வேண்டும் என்று எண்ணியதுதான். ஆனால் முதல் நாளே அது தோல்வியில் முடிந்துவிட்டது.

மற்றப்படி பெண்கள் எதை நினைக்கப் போகின்றார்கள். ???

உங்கள் உடல் உயரத்துக்கு ஏற்ற எடையை வைத்திருக்கப் பாருங்கள்.

7 hours ago, tharsan1985 said:

 

தர்சன் நீங்க என்ன பண்ணப் பேறீங்க?

Share this post


Link to post
Share on other sites
 • 0
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உடல் எடை குறைவதற்கு உணவைக் குறைக்க வேண்டும் என்று எண்ணியதுதான். ஆனால் முதல் நாளே அது தோல்வியில் முடிந்துவிட்டது.

மற்றப்படி பெண்கள் எதை நினைக்கப் போகின்றார்கள். ???

ஏலாத விசயத்தை ஒரு நாளும் ட்ரை பண்ணக்கூடாது கண்டியளோ.....பிறகு அதுக்கெண்டே தனியாய் பிரசர் வந்திடும்.....:grin:

Share this post


Link to post
Share on other sites
 • 0
5 hours ago, ஈழப்பிரியன் said:

தர்சன் நீங்க என்ன பண்ணப் பேறீங்க?

1. எதுக்கு எடுத்தாலும் ஓம் என்று சொல்லாமல் இல்லை என்றும் சொல்ல பழக வேண்டும்.

2. வேலையில் அடுத்த கடடத்திற்கு செல்ல வேண்டும் 

 

Share this post


Link to post
Share on other sites
 • 0
On 12/31/2018 at 10:46 PM, நிழலி said:

கடந்த சில வருடங்களாக கருத்துக்கள பொறுப்பாளராக இருப்பதால் என் அரசியல் கருத்துகளை, விமர்சனங்களை யாழில் எழுதாமல் தவிர்க்க வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கேற்ப அநேகமான நேரங்களில் தவிர்த்து இருந்தேன்.

2019 இல் அந்த முடிவுக்கு விடுதலை.

wow....

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Answer this question...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • செம்மண்ணோடு ஒன்றித்த பெருவாழ்வு: தற்சார்பு பொருளாதாரம் குறித்து விளக்குகிறார் செம்புலம் மூர்த்தி ஊரில இயற்கையாகவே கிடைக்கின்ற மூலிகை செடிகளையும், பாரம்பரியமாக எங்கள் ஊரில் விளைந்த மரக்கறிகளையும் தானியங்களையும் மீண்டும் மக்களிடம் கொண்டு செல்வது தான் எங்களின் நோக்கம்.  தான் சார்ந்த பிரதேச மக்களின் நலன் கருதி "செம்புலம் கிராமிய பொருளாதார அபிவிருத்தி நிறுவனம்" ஊடாக பயன்தரு மூலிகை, காய்கறி, மரக்கன்றுகளை உற்பத்தி செய்து வழங்கி வருவதோடு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார் செம்புலம் மூர்த்தி. (ஞானமூர்த்தி விக்னேஸ்வரமூர்த்தி -ரகு).செம்மண் கிராமமான யாழ்ப்பாணம் - குப்பிளானை சேர்ந்த இவர் இயற்கை வழி இயக்கத்திலும் செயற்பாட்டாளராக விளங்கி வருகிறார்.  எமது பிரதேசத்தில் சுண்டங்கத்தரியின் அடையாளமாக விளங்கும் இவர் 2018 இல் வெறும் 500 சுண்டங் கத்தரிகளை நாட்டி ஒரு வருடத்தில் 6 இலட்சம் ரூபாக்களுக்கு மேல் இலாபமீட்டி இருக்கிறார். பெரிதாக நோய்த்தாக்கமில்லாத, வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய  எம்மண்ணின் பயிரான சுண்டங் கத்தரியை நடுமாறு விவசாயிகளை ஊக்குவித்து வருவதோடு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.பாகற்காய், முருங்கையிலை, பனங்கிழங்கு போன்ற பல்வேறு உணவுப்பொருள்களையும் பாதுகாப்பான முறையில் சூரிய ஒளியில் உலர்த்தி தனது செம்புலம் நிறுவனமூடாக விற்பனை செய்தும் வருகின்றார். இன்று எமது பிரதேசங்களில் மரக்கறிகளை விற்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். ஆனால், அவற்றை உலர்த்தி மாதக்கணக்கில் பேணி வைக்க முடியும் என்பதனை கடந்த சில வருடங்களாக செயற்படுத்தி வருகிறார்.கடந்த வருடம் இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பனம் சொக்லேட்க்கு யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் நல்ல கிராக்கி இருந்தது. சிங்களவர்கள், வெளிநாட்டவர்கள் மட்டுமல்லாது எம்மவர்களும் போட்டி போட்டு வாங்கினர்.      எங்களுடைய சாப்பாட்டு முறைகள் என்றைக்கு மாறியதோ அன்றைக்கே எங்களின் சந்ததிகளை வருத்தக்காரர் ஆக்கி வைத்திருக்கிறோம். இளைய சமுதாயத்தினர் விவசாயம் செய்வதனை தரக்குறைவாக நினைக்கிற நிலை உள்ளது. ஊரில இருந்த பாரம்பரிய இனங்களை அழித்து விட்டோம்.   எங்களின் ஊருக்கு ஒவ்வாத மாங்கன்றையும், வாழைக்குட்டியையும், தென்னங்கன்றையும் நடுவதால் எந்தப் பயனும்  இல்லை.   என தனது இயற்கை வாழ்வியல் சார்ந்த உரையாடலை ஆரம்பிக்கின்றார்.நாங்கள் உள்ளூரில் கிடைக்கின்ற மூலிகை தாவரங்களை சாப்பிட்டு வந்தாலே மருத்துவரை தேடிப் போக வேண்டிய தேவை இல்லை.கறிமுருங்கையில் ஆரம்பித்து மணத்தக்காளி, குறிஞ்சா, முசுட்டை,  தவசி முருங்கை, வாத நிவாரணி, தூதுவளை, மொசுமொசுக்கை என பல்வேறு மூலிகைத் தாவரங்களையும் வளர்த்து ஒரு நாளைக்கு ஒரு இலைவகை தாவரத்தை சாப்பிட்டு வந்தாலே எங்களது ஆரோக்கியம் மேம்படும்.   இன்று இவ்வளவு மூலிகை தாவரங்கள் இருந்தும் கிராமப்புறங்களில் வளரும் குழந்தைகள், சிறார்கள் ஆரோக்கியம் இல்லாத நிலையில் தான் வளர்க்கின்றனர். ஆரோக்கியமில்லாத வருங்கால தலைமுறையை உருவாக்கி என்ன செய்யப் போகிறோம்? இது மிகவும் ஆபத்தானது.எமது பிரதேசங்களில் கைவிடப்பட்ட இன்னொரு பாரிய வளம் பனை. அதிலிருந்து எவ்வளவோ ஆரோக்கியமான உணவுப்பொருள்களை செய்யக் கூடியதாக இருந்தாலும், அதனை நாங்கள் யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை.ஒவ்வொரு வீடுகளிலும் கோழிகள், ஆடு, மாடுகள் என்று இருக்குமானால் முட்டை பாலால் எமது குழந்தைகளின் ஆரோக்கியத்தை இன்னும் சிறப்பாக பேண முடியும்.தற்சார்பு வாழ்க்கையை நாம் வாழுவோமாக இருந்தால் கொரோனா இல்லை இன்னும் வரப்போகும் எந்த நெருக்கடிகளையும் நாம் எதிர்கொள்ள முடியும்.தொடர்புக்கு: 0772281820 http://www.nimirvu.org/2020/04/blog-post_28.html  
  • இன்றைய கீழடி நிலவரம் பற்றி பதிவுகளை புதுப்பித்து பதிவிடவும் தோழா/தோழி  நன்றி 🙏
  • மலையக மக்களின் வாக்குப்பலத்தை கொண்டு கிடைத்த அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு தமிழினப் படுகொலைகாரர்களில் ஒருவரான ஹிந்தியாவுக்கு விசுவாசமான அடிமையாக காலத்தை ஓட்டிய ஆறுமுகன் தொண்டமான் வாக்களித்த மலையக மக்களுக்கு விசுவாசமாக நடந்தது இல்லை.     இந்த கொரோனா தொற்று காலத்திலும் அவரது மகனும் கட்சியும் அவரது பிரேதத்தை வைத்து 5 நாட்கள் அரசியல் செய்ய முடிவெடுத்து மிகவும் மோசமான குணத்தை வெளிப்படுத்துகிறது, அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியது.
  • நிர்வாகம் ??? கறுப்பு ?? மனிதன் ??/          கர்த்தாவே இவர்களை மன்னித்தருளும் ( என்ன எழுதுகிறார்கள் என அவர்கள் அறியாதிருக்கிறார்கள் !!!)