Jump to content

அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.-சுமந்திரன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 சிறிசேன கிரகப்பெயர்ச்சியால் இலங்கைத் திருநாட்டைபீடித்திருந்த மகிந்தசனியை சன்னதம் ஆடி வேப்பிலை அடித்து துரத்தி வைத்ததற்கு தென்னிலங்கை சிங்களவரின் அனுக்கிரகத்தை பெற்றுவிட்டதாக அதீத பெருமிதத்தில் மிதக்கிறார் சுமேந்திரன்.  இப்போதெல்லாம் அவரின் வாயால் வருவது அவருக்கே என்னவென்று தெரிவதில்லை. பார்ப்போம் மக்கள் தீர்ப்பு எப்படி அமையப்போகிறது என்பதை. கூட்டமைப்பு  அளவுக்கதிகமாகவே ரணிலின் மேல் நம்பிக்கை வைத்து செங்சோத்து கடன் தீர்ப்பார் என்று வேறு நம்புகிறது. நான் முன்னொருமுறை சொன்னதைத்தான் இன்றும் சொல்வேன். மைத்திரியின் அனுமதியும் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையும் இல்லாமல் ரணில் ஒரு துரும்பைக்கூட அசைக்கமுடியாது. 

Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nellaiyan said:

.... அரசியல்/சகோதர படுகொலைகள் எம்மை புதைப்பதற்கு மிக முக்கிய காரணிகளில் ஒன்றென்பதை யாரும் மறுக்க முடியாத உண்மை!!

... துரையப்பாவை விஞ்சிய அமிர், அமிரை விஞ்சிய சித்தார்த்தன், மாவை, டக்லஸ், கதிர்காமர் என்று இன்று சுமந்திரனில்! ... நாளை சுமந்திரனை விஞ்ச இன்னுமொரு ?! ... போடுவதினால் தடுக்கப்படுமா, எட்டப்பர் கூட்டம் உருவாவது?

... ஆனால் இதில் நகைச்சுவை என்னவெனில், ஈழத்தமிழ் அரசியல்/சகோதர படுகொலைகள் என்றவுடன்,  எம்மவர் மட்டுமல்ல சர்வதேசமும் புலிகளை முத்திரை குத்துவதுதான்!!!

சகோதர படுகொலைகளின் தோற்றுவித்தவர்களே, இன்று சுமந்திரனின் வேறூற்றுக்கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியோ அல்லது தமிழரசுக்கட்சிதான்!

அன்று தமிழ் இளைஞர்களை தமது அரசியல் வாழ்வுக்காக பலியாக்கிய அமிர்/மாவை/யோகேஸ்வரன்... போன்றோரே என்பது மறுக்க முடியாத உண்மை! அன்று சிங்கள சுதந்திர கட்சியில் இருந்து யாழ் மாநகரசபை முதல்வராகவும் இருந்த துரையப்பாவின் அபிவிருத்தி செயர்பாடுகள், தமது அரசியல் வாழ்வுக்கு குறுக்கிடுகிறது என்பதனால்,ஈழத்தமிழர் வரலற்றில் "துரோகி" எனும் பட்டம் அமிர் கும்பலினால் சூட்டப்பட்டு,  இளைஜர்களை ஏவி சுட்டுக்கொல்லப்பட்டவரே துரையப்பா! ... 

பின்னர் சகோதரப்படுகொலைகள் புளொட், ரெலோ அமைப்புகளுக்குள் ஆயிரக்கணக்கில் நிகழ்ந்தவைகள் இன்று மறைக்கப்பட்டுள்ளன>.

83/84 காலபகுதியில் ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் போன்ற சிறிலங்கா பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பின், பலரது விரல்கள் புலிகளை நோக்கியே நீன்றன. பின் தான் தெரியவந்தது, சிறி சபாரட்னத்தின் உத்தரவில் ரெலோவினரால் இக்கொலைகள் நடாத்தப்பட்டுள்ளன என்று!

அமிர்தலிங்கள், யோகேஸ்வரன் போன்றோர் புலிகளின் இரு உறுப்பினர்களால் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டனர். புலிகளின் உறுப்பினர்கள் சுட்டமையினால் இக்கொலைகளும் புலிகளின் தலையில்! ... உண்மையில் எந்த பிராந்திய வல்லரசின் உத்தரவில், அன்று பிராமதாச-புலிகளின் பேச்சுவார்த்தையை குழப்புவதற்காக, யார் மூலம் அவ்வுதரவு வழங்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டது என்பதெல்லாம், புலிகளின் அழிவுடன் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது!

பின்னர் ஈபிடிபி/கருணாவினால் நடத்தப்பட்ட படுகொலைகள் ... மண்ணெண்ணை மகேஸ்வரன்,  ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், ... பெரிய பட்டியல் இவற்றை பற்றி சுமந்திரனின் பினாமிகள் சயந்தன் உட்பட சுமந்திரன் கூட கதைப்பார்களா??

... கொழும்பு வட்டாரத்தில் கதிர்காமர் கொலை, கோத்தபாயாதான் திட்டமிட்டு சுட்டுக்கொன்றதாக தகவல். சகோதரரின் அரசியல் நகர்வுக்கு பாரியதடையாக கதிர்காமர் இருந்தததினால், தமிழ்த்தரப்பையே வைத்து கொல்லப்பட்டதாக தகவல். புலிகளும் உரிமையும் கோரவுமில்லை, உறுதியாக மறுக்கவுமில்லை, இது புலிகளின் தலை மீதே வீழ்ந்தது.

கூட்டமைப்பிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் "Sleeping Cell Leading Member" ஆன சுமந்திரன்/சுமந்திரனின் அல்லக்கைகள் வரலாற்றை/உண்மைகளை திட்டமிட்டு மறைத்து, எஜமானர்களின் உத்தரவுகளை கடந்த சில காலங்களாக சிறப்பாக நிறைவேற்றி வருகிறார்கள்!

.... நாளை சுமந்திரன் சிங்களத்தினால் போடப்படத்தான் போகிறார்! ... ஆனால் அக்கொலையும் புலிகளின் ஆதரவாலர்கள் மேல்தான்! ... நாமும் விசிலடுத்து வரவேற்போம்!!!

நெல்லையன், 

யாரை யார் கொன்றிருக்கலாம் என்பதைப் பொறுத்த வரையில், ரொம் கிளான்சி றேஞ்சுக்கு இருக்கிறது உங்கள் கதை! என்ன பிரச்சினையென்றால் இது போன்ற கொன்ஸ்பிறேசிக் கதைகளுக்கு ஆதாரம் ஒன்றும் இருக்காது. யாரோ எங்கோ அரை வெறியில் உளறியது கூட ஒரு "முக்கிய" ஆதாரமாகக் காட்டப் படும். நான் இன்னும் காத்திருப்பது எங்கள் ஆட்கள் அடுத்த லெவல் கற்பனைக்குப் போய், "அமிர், யோகேஸ்வரன், நீலன், கதிர்காமர் யாரும் சாகவேயில்லை, எங்கோ மர்மத் தீவில் இன்னும் உயிரோடு சி.ஐ.ஏ வினால் தடுத்து மறைத்து வைக்கப் பட்டிருக்கிறார்கள், இது புலிகளுக்கு எதிரான சர்வ தேச சதி!" என்று எழுதும் காலத்திற்காக!

இடையிடையே பகிடியும் வேண்டும் தானே?

Link to comment
Share on other sites

என் பதிலுக்கான பின்னூட்டங்கள் மற்றும்  பிறறது பின்னூட்டங்களையும் மேலோட்டமாக வாசித்து பார்த்தேன்.

புலிகள் சனனாயக ரீதியில் நின்றவர்களை படுகொலை செய்தது ஒரு தவறான மோட்டுத்தனமான எந்த ஒரு விடுதலை அமைப்பும் மக்களின் விடுதலைக்காக ஆற்றக் கூடாத செயல் என்பதை புரிந்து கொண்டதன் விளைவுகளில் ஒன்றுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பை உள்வாங்கி அவர்களை செயலாற்ற விட்டது. விடுதலைப் புலிகள் தங்கள் தவறுகளை திருத்த தொடங்கியதன் ஒரு பிரதான அம்சம் அது. ஆனால் கால தாமதமான செயல் அது.

டக்கிளஸ் போன்ற அரசியல் தறுதலைகளை உருவாக்கி அவர்களை வளரும் சூழல் உருவானதே புலிகளின் இப்படியான மோட்டுத்தனமான முடிவுகளால் தான். 90 களில் தமிழ் கட்சிகளை தேர்தலில் நிற்கவிடாமல் தடுத்தன் விளைவு 100 இற்கும் குறைவான வாக்குகள் பெற்று டக்கிளஸின் கட்சி எம்பிக்கள் ஆனதும் இன்று வரைக்கும் தமிழர்களின் நலன்களுக்கு எதிராக அவர்கள் செயலாற்றுவதும் புலிகள் ஆயுதம் தூக்காத தமிழ் கட்சிகளை தேர்தலில் நிற்கவிடாமல் தடுத்ததன் விளைவு.

இன்று தலைமை பண்பு எதுவுமற்ற சுமந்திரன், சம்பந்தர் போன்றவர்கள் தான் தமிழர்களின் தலைவிதியை எழுதும் நிலைக்கு வந்தமை சனனாயக ரீதியில் இயங்க கூடிய அனைவரையும் புலிகள் ஒதுங்கச் செய்ததன் விளைவாலும் தம் பிரதேசங்களில் சுதந்திரமாக இயங்க கூடிய அரசியல் கட்சி ஒன்றைத்தானும் உருவாக இடமளிக்காமையும்.

எல்லா தமிழ் இயக்கங்களுக்கும் இதில் பங்கு உண்டு என்றாலும் புலிகளுக்கு இருக்கும் பங்கு பல மடங்கு. ஏனென்றால் அவர்கள் மட்டும்தான் இராணுவ ரீதியில் பலமாக இயங்கியது மட்டுமன்றி இதய சுத்தியுடன் மக்களுக்காக போராடியதும் அதற்காக மகத்தான தியாகங்களை புரிந்ததும். புலிகளின் / தமிழர்களின் தோல்விகளுக்கு இது மட்டும்தான் காரணமா என்றால் இல்லை என்பது தான் பதில். ஆனால் இதுவும் ஒரு முக்கிய காரணம் என்பதை 2001 இன் புலிகள் மிகத் தெளிவாக புரியத் தொடங்கி இருந்தனர் எனபதன் அடையாளம் தான் த.தே.கூ உடனான உறவும் அங்கீகாரமும். அதுவும் கடும் போர்க் குற்றவாளியான சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற படுகொலையாளிகளுடன் கூட கைகுலுக்கி கொள்ளும் அளவுக்கு தம்மை மாற்றத் தொடங்கி இருந்தனர்.

ஆனால் புலம்பெயர் நாடுகளில் இன்னமும் கனவில் மிதந்து கொண்டு விண்ணாளம் கதைப்பவர்களும் இன்னமும் தம்மை புலிவால்கள் என்று நம்புகின்றவர்களும் இதை ஒரு போதும் புரிந்து கொள்ளப் போவதில்லை. இப்படியானவர்களின் வெற்று கூச்சல்களை தாயக மக்கள் கொஞ்சமும் கணக்கில் எடுக்காமல் தம் அரசியலை தாமே தீர்மானிக்க தொடங்கியமை தான்  அண்மைக் காலங்களில் நான் கண்ட சந்தோசமான விடயம். அது மேலும் மேலும் தொடரட்டும்.

நன்றி வணக்கம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நிழலி said:

இதுதான் எனது கருத்தும். நன்றி நிழலி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நிழலி said:

என் பதிலுக்கான பின்னூட்டங்கள் மற்றும்  பிறறது பின்னூட்டங்களையும் மேலோட்டமாக வாசித்து பார்த்தேன்.

புலிகள் சனனாயக ரீதியில் நின்றவர்களை படுகொலை செய்தது ஒரு தவறான மோட்டுத்தனமான எந்த ஒரு விடுதலை அமைப்பும் மக்களின் விடுதலைக்காக ஆற்றக் கூடாத செயல் என்பதை புரிந்து கொண்டதன் விளைவுகளில் ஒன்றுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பை உள்வாங்கி அவர்களை செயலாற்ற விட்டது. விடுதலைப் புலிகள் தங்கள் தவறுகளை திருத்த தொடங்கியதன் ஒரு பிரதான அம்சம் அது. ஆனால் கால தாமதமான செயல் அது.

இது உங்கள் தனிப்பட்ட எண்ணம்..... புலிகள் எந்த அரசியல் கட்சியையும் தடை செய்யவில்லை 
தமது சுயமாக எந்த ஒரு தமிழர் தரப்பும் தெற்கில் செயல்பட கூடிய சாத்தியம் இருக்கவில்லை 
உண்மையை பேசுவது என்றால்  உயிரை விட துணிந்த பிறகுதான் பேச முடியும் என்ற நிலைதான் 
இருந்தது. மற்றதெல்லாம் சிங்கள இந்திய கைக்கூலிகளே இவர்கள் இன அழிப்புக்கு எதோ ஒரு வகையில் 
உதவியதோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ விடுதலை போராட்டத்தை முன்னெடுத்த புலிகளை 
குறிவைத்தே வந்துள்ளார்கள். எல்லா தெரிவும் அவர்கள் தெரிவுதான் ..... இப்போது புலிகள் இருப்பின் 
சிங்களம் எப்போதோ சம்மந்தரை புலிகள் பெயரில் மேலே அனுப்பி இருக்கும். சுமந்திரனை சம்மந்தர் கொண்டுவந்ததே தனது உயிரை பாதுகாக்கவே.

எல்லாம் முடிய பிள்ளையான் முதலைச்சர் ஆனதுக்கு என்ன வியாக்கினம் சொல்ல போகிறீர்கள்?
தமது பயங்கரவாத சட்டத்துக்கு ஆதரவு கொடுக்க எழாத கைகள் எதோ ஒரு வகையில் தண்டிக்கபட்டது.

சுயமான ஒரு அரசியல் கட்சியின்  தேவை எப்போதும் இருந்துகொண்டே இருந்தது 
இது இந்திய இராணுவ காலத்திலேயே உணரப்பட்ட விடயம். உயிரை பணயம் வைத்து செய்லபட கூடியவர்கள் யாரும் தெற்கில் இருக்கவில்லை என்பதுதான் உண்மையான விடயம். அதனால்தான் இந்திய இராணுவம் கிளம்பிய கையுடன் தமது இயக்கத்தை பிரித்து மாத்தையா தலைமையில் மக்கள் முன்னணியை உருவாக்கினார்கள். 

டக்கிளஸ் போன்ற அரசியல் தறுதலைகளை உருவாக்கி அவர்களை வளரும் சூழல் உருவானதே புலிகளின் இப்படியான மோட்டுத்தனமான முடிவுகளால் தான். 90 களில் தமிழ் கட்சிகளை தேர்தலில் நிற்கவிடாமல் தடுத்தன் விளைவு 100 இற்கும் குறைவான வாக்குகள் பெற்று டக்கிளஸின் கட்சி எம்பிக்கள் ஆனதும் இன்று வரைக்கும் தமிழர்களின் நலன்களுக்கு எதிராக அவர்கள் செயலாற்றுவதும் புலிகள் ஆயுதம் தூக்காத தமிழ் கட்சிகளை தேர்தலில் நிற்கவிடாமல் தடுத்ததன் விளைவு.

எந்த கட்சியை  எந்த தேர்தலில் தடுத்தார்கள் என்று கொஞ்சம் 
எழுத முடியுமா? 

இன்று தலைமை பண்பு எதுவுமற்ற சுமந்திரன், சம்பந்தர் போன்றவர்கள் தான் தமிழர்களின் தலைவிதியை எழுதும் நிலைக்கு வந்தமை சனனாயக ரீதியில் இயங்க கூடிய அனைவரையும் புலிகள் ஒதுங்கச் செய்ததன் விளைவாலும் தம் பிரதேசங்களில் சுதந்திரமாக இயங்க கூடிய அரசியல் கட்சி ஒன்றைத்தானும் உருவாக இடமளிக்காமையும்.

நீங்கள் எதோ புலிகள் மட்டுமே போராடியது போலவும் 
சிங்கள - ஹிந்திய அரசுகள் கடந்த 30 வருடமாக கிரிக்கெட் விளையாடியதுபோலவும் 
எழுதுவதை வாசிக்க சிரிப்பு வருகிறது. தெற்கில் உண்மை பேசவே உயிரை பணயம் வைக்க வேண்டிய 
தேவை இருந்தது. அதை சிங்களம் செய்ய தேவை இல்லை ... கைக்கூலிகளான ஈப்பிடிபி புளட் போன்ற 
துரோ கூடத்துக்கு ஆயுதம் கொடுத்து வைத்து இருந்ததே அதுக்கு தானே. 

எல்லா தமிழ் இயக்கங்களுக்கும் இதில் பங்கு உண்டு என்றாலும் புலிகளுக்கு இருக்கும் பங்கு பல மடங்கு. ஏனென்றால் அவர்கள் மட்டும்தான் இராணுவ ரீதியில் பலமாக இயங்கியது மட்டுமன்றி இதய சுத்தியுடன் மக்களுக்காக போராடியதும் அதற்காக மகத்தான தியாகங்களை புரிந்ததும். புலிகளின் / தமிழர்களின் தோல்விகளுக்கு இது மட்டும்தான் காரணமா என்றால் இல்லை என்பது தான் பதில். ஆனால் இதுவும் ஒரு முக்கிய காரணம் என்பதை 2001 இன் புலிகள் மிகத் தெளிவாக புரியத் தொடங்கி இருந்தனர் எனபதன் அடையாளம் தான் த.தே.கூ உடனான உறவும் அங்கீகாரமும். அதுவும் கடும் போர்க் குற்றவாளியான சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற படுகொலையாளிகளுடன் கூட கைகுலுக்கி கொள்ளும் அளவுக்கு தம்மை மாற்றத் தொடங்கி இருந்தனர்.

ஒருமித்த பலமான ஒரு அரசியல் தோற்றம் வடிவம் பெற வேண்டும் என்ற எண்ணம் 
எப்போதும் புலிகளிடம் இருந்துகொண்டே இருந்தது. ராமணனுக்கும் பலருக்கும் இடையில் 
எப்போதும் தொடர்பு இருந்தது ......... அப்போ அப்போ சில கரும்புலிகள் மாட்டுப்பட போகிறார்கள் 
என்றால் இவர்களின் தொடர்புகளினாலேயே பாதுகாக்க படார்கள். 90ஆம் ஆண்டு கூட்டுப்படை தலைமையகம் 
தாக்கியபோது வாகனத்தின் இலக்க தகடு இராணுவம் எடுத்து விட்டது .. அவர்கள் அப்படியே வர தொடங்கி விடார்கள் அப்போ ஒரு டெலிபோன் பேசும் கொமின்கசனை திறந்து இரண்டு பெண் போராளிகளை வேலை ஆட்கள் போல் வைத்து இருந்தார்கள் இது வெள்ளவத்தை ஐ பி சி -கண்டி ரோட்டில் இருந்தது. இவர்களையும் சார்லஸையும் பாதுகாப்பு வேண்டி கொண்டு சென்ற இடம் ... டெலோ அடைக்கலனாதான் வீடு. அன்று தொட்டு 
இப்படி அடைக்கலம் தேடுவதும் அரசியல் பேசுவதும் தொடர்ந்துகொண்டே இருந்தது. மண்டைதீவில் இருந்து டோராவை கடத்திய வேவு புலிகள் திட்டம் பிழைத்து விட்டது .... அன்று இரவு அவர்கள் அடைக்கலம் புகுந்தது 
மண்டைதீவு ஈப்பிடிபி முகாம் ..... கொழும்பில் இருந்து அற்புதனுடன் பேசியே அதை ஒழுங்கு செய்தார்கள். மறுநாள் இரவுதான் டோராவை கடத்தி கொண்டு வந்தார்கள். 

துரோகிகளை கொல்லும் எண்ணம் புலிகளுக்கு எப்போதும் இருக்கவில்லை 
சில கசப்பான என்னால் கூட மறக்க முடியாத சில சம்பவங்கள் நடந்து என்பது எந்த திட்டமிடலும் 
இன்றி சில போராளிகளின்  அக்கண முடிவுகள்தான் நடந்து முடிந்தது. 1987லேயே நான் உட்பட எல்லோரையும்  பொதுமன்னிப்பு வழங்கித்தான் விட்டார்கள் .... பின்பு 1990லும் எல்லோருக்கும் பொது மன்னிப்பு கொடுத்து தயவு செய்து விலகும்படி அறிவித்தார்கள் அப்போது எனக்கு தெரிய  ... சிரத்தார்தனுடன் ஒரு 25 பொறுக்கிகள்  .... டக்ளசுடன் ஒரு 25 பொறுக்கிகள் மட்டுமே இருந்தார்கள் ...... இவர்கள் பொறுக்கிகள் என்பதுக்கு ஆதாரம்  இவர்களில் கூடுதலானவர்கள் பின்பு சிரத்தார்தான் டக்ளசைலேயே கொல்லப்படடார்கள் என்பதுதான். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடிவமைப்பு  பொறுப்பு தராக்கி சிவராம் இடம் இருந்தாலும் என்ன நடக்கிறது 
என்பது உடனுக்குடன் ராமணனுடன் பகிரப்பட்டுக்கொண்டே இருந்தது. இதுக்கு எமது முழு ஆதரவும் இருக்கிறது எனும் உறுதிமொழி சம்மந்தர் மாவை ஆகியோருக்கு ரமணன் மூலமே தெரிவிக்க பட்டும் இருந்தது. காகம் இருக்க பணம்காய் வீழவில்லை ..... கனிய வைக்கப்பட்ட்து என்பதை நீங்கள் தண்ணிக்குள் மூழ்கி  மூழ்கியும் கத்தலாம் உண்மை பலரும் அறிந்ததுதான்...... இதை பட்டும் படாமல் சிர்த்தர்தான் ஒரு தொலைக்காட்ச்சி நேர்காணலில் சொல்லிஇருந்தார். இதில் ஆனந்தசங்கரியை சேர்க்க சொன்னதே புலிகள்தான் 

மாத்தையாவை கூட சுடுவதுக்கு தலைவர் விரும்பவில்லை என்று பலரும் சொல்கிறார்கள் நீங்களும் 
கேள்வி பட்டு இருப்பீர்கள் ......... விடயம் மிகவும் சிக்கலானது என்பதாலதான் இறுதி முடிவு சூடுவது என்று 
எடுக்கப்பட்ட்து அப்போது கூட யோகியை மன்னித்து விட்டார்கள். 

ஆனால் புலம்பெயர் நாடுகளில் இன்னமும் கனவில் மிதந்து கொண்டு விண்ணாளம் கதைப்பவர்களும் இன்னமும் தம்மை புலிவால்கள் என்று நம்புகின்றவர்களும் இதை ஒரு போதும் புரிந்து கொள்ளப் போவதில்லை. இப்படியானவர்களின் வெற்று கூச்சல்களை தாயக மக்கள் கொஞ்சமும் கணக்கில் எடுக்காமல் தம் அரசியலை தாமே தீர்மானிக்க தொடங்கியமை தான்  அண்மைக் காலங்களில் நான் கண்ட சந்தோசமான விடயம். அது மேலும் மேலும் தொடரட்டும்.

இது கங்கையில் போய் மூழ்கினால் பாவம் கரையும் என்று 
நம்பும் அடிப்படை இல்லாத எண்ணம். மக்களின் எண்ணம் என்பது 
எந்த நாட்டிலும் அரசியல் தளத்தில் எடுபடுவதில்லை. சுவிஸ் நாட்டில் நேரடி 
டெமோகிராசி நாடு என்பதால் வாக்குகள் மூலம் மக்கள் எண்ணம் பிரதிபலிக்கிறது 
என்றாலும் கூட நாட்டின் எதிர்காலம் எனும்போது அது பெரிதாக உதவ போவதில்லை.
முக்கிய காரணம் எல்லா மக்களுக்கும் எல்லா விடயம் சார்ந்தும் அறிவு இல்லை 
மற்றது பரப்புரைகளை குறைந்த பட்ஷம் என்றாலும் நம்பிவிடுவார்கள்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டிஷ் பிரிவது என்பது பெரும்பான்மை 
இங்கிலாந்து நாட்டவர்களின் விருப்பு இல்லை. இது வெல்லாது என்று பலர் வாக்கு சாவடி 
செல்லவில்லை ..... போனவர்கள் பிரிந்தால் பில்லியன் பில்லியனாக பணம் கொட்டும் என்ற 
பொய் பரப்புரையை நம்பி வாக்கு போடடவர்கள். இப்போதான் கொஞ்சம் கொஞ்சம் புரிந்து கொள்கிறார்கள்.

புரிந்ததாகவும் புத்தனாகவும் சுயவிளம்பரம் செய்யும் நீங்கள் திரும்ப திரும்ப 
வரும் ... வராது என்றுதான் எழுதுகிறீர்கள். வருமா? வராத? என்று எழுத்துவதில்லையே 
உங்களின் கருத்து உண்மையென்றோ அல்லது ஒரு நியாமானது என்றோ எழுத்துவதில்லையே?
அவருடைய கருத்து புலிவால் சம்மபந்தமானது என்று எழுதிதானே உங்களுக்கு புத்த மூலம் பூசவேண்டி இருக்கிறது. தாயக மக்கள் ஒருபோதும் சுயமாக செயல்பட முடியாது    இது அனைத்து ஆக்கிரமிப்புக்குள் அகப்பட்ட இனங்களின் சொந்த சுயசரிதை. புலத்தில்தான் ஒரு தளத்தை உருவாக்க சாத்தியம் ...... ஆனால் உருவாகாது  என்பது தெளிந்த உண்மை. புலம்பெயர் மக்களின் ஒருமித்த எண்ணம்தான் பொருளாதார ரீதியாக  தாயகத்து தமிழரை தலை  நிமிர்த்தி இப்போது இருப்பதை என்றாலும் தக்க வைக்க கூடிய ஒரே ஒரு சாத்தியமான  வழி. உங்களை புத்தன் ஆக்க சுயவிளம்பரம் செய்ய இதை கெடுக்கிறீர்கள்... அல்லது அப்படியொரு  சிங்களத்தின் திட்டமிடலுக்கு நீங்கள் பலியாக்குகிறீர்கள். 

நன்றி வணக்கம்!

புத்தாண்டு வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும் கும்பலின் தேவை.. எல்லாப் பழிகளையும் புலிகள் மீது போட்டுவிட்டு.. தமிழ் மக்களின் உரிமைகளையும் இழப்புக்களையும் மலினப்படுத்தி விட்டு.. தம் சுயநல சுகபோகத்துக்கு வித்திட்டுக் கொள்வதே.

இவர்களுக்கு கடந்த கால வரலாற்று உண்மைகளை உள்வாங்கும் பக்குவம் சிறிதளவும் இல்லை. அது இன்றி.. இவர்களால்... தமிழ் மக்களின் இதயங்களை நிச்சயமாக வெல்ல முடியாது. வேண்டும் என்றால்.. சிங்கள இனவாதிகளிடம் இவர்களுக்கு மிதவாத முகமூடி கிடைக்கலாம் போட்டுக்கொள்ள. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nedukkalapoovan said:

நெடுக்கு,

உங்கள் போலவே இங்கு எல்லோருக்கும் தனியான தமிழீழம் வேண்டுமென்பதும், எம்மை நாமே ஆளவேண்டுமென்பதும் விருப்பமாக இருக்கிறது. ஆனால், அது இப்போது சாத்தியமா என்று எம்மை நாமே கேட்கிறபோதுதான் இனி என்ன செய்யலாம் என்கிற எண்ணங்கள் உருவாகின்றன.

இன்று கூட, ஆயுதப் போராட்டமொன்றின் முழுமையான வெற்றி ஒன்றின்மூலம் மட்டுமே தமிழர்கள் விரும்பும் ஒரு தீர்வு கிடைக்குமென்று நாம் நம்புகின்றேன். ஆனால், அதற்கு துளியளவேனும் சாத்தியம் இல்லையென்பது எனக்கு நன்கு தெரியும். அதனால்த்தான் வேறு வழிகளில் குறைந்தபட்ச தீர்வொன்றையாவது பெற்றுக்கொள்ளலாம் என்று பலர் விரும்புகிறார்கள்.

மாற்றுத் தீர்வு பேசும் எவருமே புலிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியதாக நான் நினைக்கவில்லை. விமர்சனங்களுக்கும் சேறுபூசல்களுக்கும் நிறையவே  வேறுபாடு இருக்கிறது. தர்க்கத்தினூடு ஒருவரையொருவர் வசைபாடுவதும், தமது பக்க நலனுக்காக வேண்டுமென்றே மற்றையவரின் எண்ணங்களைக் குதர்க்கமாகப் பேசுவதும்தான் இங்கு நடக்கிறது.

ஜஸ்டினோ அல்லது ஜூட்டோ நான் அறிந்தவரை புலியெதிர்ப்பாளர்கள் கிடையாது. யதார்த்தத்தைப் பேசுகிறார்கள். தாமே முன்னர் நியாயப்படுத்திய புலிகளின் செயற்பாடுகளை இன்று விமர்சிக்கிறார்கள். அதை விமர்சனங்களால் எதிர்கொள்வோம். அவர்பக்க நியாயங்களைக் கேட்கலாம். 

வெறுமனே சிங்களத்திற்கு வால்பிடிக்கிறார்கள் என்பது, அவர்பக்க நியாயங்களை நாம் பார்ப்பதை முற்றாக மறைப்பதோடு, அவர்களையும் தவறான நிலயொன்றினை எடுக்க நாமே தள்ளிவிடுவதாக அமைந்துவிடுகிறது.

என்னைக் கேட்டால், எனது முதலாவது தெரிவு, புலிகளின் தலைமையில் தனித் தமிழீழ அரசு. அது இல்லையென்றால், இருக்கும் மக்களையும், தாயகத்தின் எச்ச சொச்சங்களையும் காத்துக்கொள்ளக்கூடிய ஏதோ ஒரு அரசியல் தீர்வு.

ஏனென்றால், எங்களுக்கு இன்னொரு வேலுப்பிள்ளை பிரபாகரன் வரப்போவதில்லை.

Link to comment
Share on other sites

4 hours ago, ragunathan said:

ரகுநாதன்,  எங்களைப் பற்றிய உங்கள் விளக்கத்துக்கு நன்றி. இதுவே உண்மையும் ஆகும்.

இன்னொரு வேலுப்பிள்ளை பிரபாகரன் வராவிட்டாலும், விக்னேஷவரனோ, சுமேந்திரனோ ஒரு நல்ல தீர்வை பெற்றுத் தருவதில் வெற்றி பெறத்தான் போகிறார்கள். அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம். இங்கே நான் நாம் என்று சொல்வது எம் போன்றவர்களையே. ஜஸ்டின் வேறு விதமாக நினைத்தால் அது பற்றி அவர் தான் சொல்ல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ragunathan said:

நீங்கள் குறிப்பிட்ட ஆக்கள் இன்று பேசுவது.. எழுதுவது யதார்த்தம் கிடையாது. வெறும் சந்தர்ப்பவாதமே ஆகும். அவர்கள் வரலாற்று உண்மைகளை மறைத்து தங்களுக்கு வேண்டாத பக்கங்களில் எல்லாம் புலி என்பதை இட்டுக்கொள்ள விரும்புகிறார்கள் அவ்வளவே.

மேலும்.. சிங்கள தேசத்துடனான சம் சும் மாவை கும்பலின் அணுகுமுறையோ.. ஒட்டுக்குழுக்களின் அணுகுமுறையோ எமக்கு எதுவும் பெற்றுத் தராது. அதாவது நீங்கள் கூறும் அந்த 'எதையாவதை' கூடத் தராது என்பதே.. விடுதலைப் புலிகளின் களச் செயற்பாடற்ற.. கடந்த 10 வருடம் எமக்கு உணர்த்தி உள்ளது.

முழு இனப்படுகொலையாளனான.. சரத் பொன்சேகாவை.. சனநாயகவாதி ஆக்கும் போதும் இவர்கள்.. ஒத்தூதினார்கள்.. சிங்களக் கொடியை தூக்கிப் பிடித்த போதும் ஒத்தூதினார்கள்.. தமிழீழத்தை கைவிட்டு விட்டோம் என்ற போதும் ஒத்தூதினார்கள்.. புலிகளைப் பயங்கரவாதிகள் என்ற போதும் ஒத்தூதினார்கள்.. வடக்குக் கிழக்கு பிரிந்தே இருக்கும் என்பதற்கும் ஒத்தூதினார்கள்.. விக்கி ஐயாவை விரட்டனும் என்பதற்கும் ஒத்தூதினார்கள்.. முழு இனப்படுகொலையாளி சந்திரிக்காவை.. நல்லிணக்கத் தேவதை ஆக்கவும் ஒத்தூதினார்கள்... முழு இனப்படுகொலையாளன்.. மைத்திரியை நல்லாட்சியின் கதாநாயகன் ஆக்கவும் ஒத்தூதினார்கள்..  இனப்படுகொலையாளன் மகிந்தவை தேசிய தலைவராக்கியும் ஒத்தூதினார்கள்.. சிங்கள சுதந்திர தினத்தில் போய் குந்தி இருந்த போதும் ஒத்தூதினார்கள்.. சிங்கள இராணுவ வெற்றிக் கொண்டாட்டங்களில் போய் குந்தி இருந்த போதும்.. ஒத்தூதினார்கள்... விகாரைகள் தமிழர் தேசம் எங்கனும் பெருகிய போதும் ஒத்தூதினார்கள்.. சிங்கள, முஸ்லீம் திட்டமிட்ட குடியேற்றங்கள் பெருகிய போதும் ஒத்தூதினார்கள்.. தமிழர் வளம் பறிபோன போதும் ஒத்தூதினார்கள்.. காணி விடுவிப்பு என்பது சுத்த அரசியலாகி நின்ற போதும் ஒத்தூதினார்கள்.. தமிழர் நிலத்தில் சிங்கள இராணுவ பிரசன்னம் அவசியம் என்றும் கூட ஒத்தூதினார்கள்.. இனப்படுகொலையே நடக்கவில்லை பயங்கரவாத அழிப்பே நிகழ்ந்தது என்றும் ஒத்தூதினார்கள்.. போர்க்குற்றத்தில்.. சர்வதேச நீதி விசாரணை அவசியமில்லை உள்ளூர் விசாரணை போதும் என்றும் ஒத்தூதினார்கள்.. இறுதியில் புலிகளின் ஆட்சேர்ப்புக் குறித்து விசாரித்தால் மட்டும் போதும் என்ற அளவுக்கு ஒத்தூதினார்கள்.. இப்போ.. புலிகள் எங்களை அரசியலே செய்யவிடவில்லை என்றும்... புலம்புகிறார்கள்.. இவ்வளவு ஒத்தூதல்கள் ஊதியும்.. இவர்கள் சாதித்தது என்ன...??!

ஏக்கய இராச்சியம்.. தமிழில்.. ஒன்றையாட்சியை சொல்லுதா.. கூட்டாட்சியின் இன்னொரு அர்த்தமா.. என்ற சொல்லாரய்ச்சி மட்டுமே. சிங்களத்தில் அது ஒற்றையாட்சி தான் என்று சிங்களவன் அடிச்சு சொல்லுற அளவுக்கு.. இவர்கள் எதுக்கு அதற்குள் பம்புகிறார்கள். இதனால்.. தமிழ் மக்கள் பெற்ற நன்மை என்ன..??????! 

ஆக.. எல்லாத்தையும் காட்டியும் கூட்டியும் கொடுத்து ஒத்தூதியும்.. இருக்கும் கிழிந்து தொங்கும் தமிழ் மக்களின் கோவணத்தை கூட இப்ப உருவி எறிய முனைவது.. சிங்கள பேரினவாதத்தை காக்குமே தவிர தமிழர்களுக்கு எள்ளளுவு நன்மைகளையும் பெற்றுத் தராது. நீங்கள் இதனையும் கண்கூடே பார்க்கத்தான் போகிறீர்கள்.

நல்லாட்சி என்று இவர்கள் கூப்பாடு போட்டு வந்த மைத்திரி என்ன செய்தார் என்றும் பார்த்தீர்கள்..  இப்ப ஒற்றையாட்சி அரசியலமைப்பை நீதிமன்றம் போய் காப்பாற்றி இவர்கள் பெறப் போவதாக பாசாங்கு செய்யும் தீர்வு.. நகல்.. வரைபு என்பதும்.. வெறும் வாக்கு அரசியலாகி நிற்குமே தவிர.. தமிழ் மக்கள் தலையில் முழுமையான மிளகாய் அரைப்பாய் நிற்குமே தவிர.. வேறு எதனையும் செய்யாது.. சாதிக்காது என்பதையும் நீங்கள் கண்கூடே காண்பீர்கள்.

போர்க்குற்றம்.. இனப்படுகொலை.. நீதிவிசாரணை.. அவை சார்ந்து சர்வதேச கண்காணிப்பின் கீழ் பிரிந்து போவதற்கான சனநாயக உரிமை வழங்கத் தக்க தேர்தல் மூலம்.. தமிழ் மக்கள்  தாம் விரும்புவதை சர்வதேசம் அங்கீகரிக்கக் கூடிய சனநாயக வழிமுறைகளின் கீழ் பெற முனையாமல்.. புலிகளை பயங்கரமாகக் காட்டியோ.. சிங்களவனுக்கு எல்லா வகையிலும் ஒத்தூதியோ.. முஸ்லீம் மதவாதத்தை அதன் பயங்கரவாதத்தை மறைத்து.. புட்டும் தேங்காய்பூவும் ஆக்குவதாலோ.. தமிழ் மக்களுக்கு ஈழத்தில் எந்த நிரந்தர தீர்வும்.. அதன் மூலமான.. நல்ல நிம்மதியும் கிடைக்கப் போவதில்லை. 😊

அந்த வகையில்.. இவர்களின் இந்தப் போலி ஒத்தூதல்களுக்கு ஆமாப் போட எங்களால் மட்டுமல்ல.. எந்த இனமானமுள்ள.. மண் பற்றுள்ள தமிழனாலும்.. எப்போதும் ஒத்துவர முடியாது.

Link to comment
Share on other sites

21 hours ago, Justin said:

நெல்லையன், 

யாரை யார் கொன்றிருக்கலாம் என்பதைப் பொறுத்த வரையில், ரொம் கிளான்சி றேஞ்சுக்கு இருக்கிறது உங்கள் கதை! என்ன பிரச்சினையென்றால் இது போன்ற கொன்ஸ்பிறேசிக் கதைகளுக்கு ஆதாரம் ஒன்றும் இருக்காது. யாரோ எங்கோ அரை வெறியில் உளறியது கூட ஒரு "முக்கிய" ஆதாரமாகக் காட்டப் படும். நான் இன்னும் காத்திருப்பது எங்கள் ஆட்கள் அடுத்த லெவல் கற்பனைக்குப் போய், "அமிர், யோகேஸ்வரன், நீலன், கதிர்காமர் யாரும் சாகவேயில்லை, எங்கோ மர்மத் தீவில் இன்னும் உயிரோடு சி.ஐ.ஏ வினால் தடுத்து மறைத்து வைக்கப் பட்டிருக்கிறார்கள், இது புலிகளுக்கு எதிரான சர்வ தேச சதி!" என்று எழுதும் காலத்திற்காக!

இடையிடையே பகிடியும் வேண்டும் தானே?

ஜஸ்ரின்,  ... உமது பாசையில் கதைப்போமாயின் ..  இங்கு இப்போ நாமெல்லாம் புலிகளால் கொல்லப்பட்டவர்கள் என்று கூறுவதும், அதுவும் ஒரு கொன்ஸ்பிரசி கதைதான்! பார்த்தோமா? சுடுவதை? கொல்லப்பட்டதை? ... என்ன ஆதாரம்???

அதற்கு மேல் கொன்ஸ்பிரசி கதைகள் ... கென்னடி சுடப்பட்டது முதல் டயானாவின் விபத்து, 9/11, ... எல்லாவற்றிற்கும் ஆதாரம் இல்லைத்தான். ஆனால் உண்மை?

இன்று கைதுசெய்யப்பட்ட/சரனடைந்த முன்னாள் போராளிகள் பலர் சிங்கள பகுதிகளில் உள்ள காடுகளில் உள்ள இரகசிய சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டது என்பதும், உமது பார்வையில் கொன்ஸ்பிரசிதான்!

நாமும் நாலு ஆங்கில வார்த்தை தெரிந்தவுடன், கலந்து, போட்டுத் தாக்குகிறதுதான்!

Link to comment
Share on other sites

ஜஸ்ரின் இன்னொமொரு கொன்ஸ்பிரசி ....

கேள்வி: ஏன், தமிழ் தேசியத்தின் சிறிலங்கா பா.ம இற்கான பிரதிநிதி, புலி அழிந்த பின்பும், தொடர்ந்து புலி வாந்தி எடுத்து வருகிறார்?

பதில்: கரவையில் பிறந்து குடத்தனையில் செட்டிலாகிய டாடி, அக்காலத்தில் செய்த சில கூத்துகளுக்கு, பச்சை மட்டை அடி வாங்கினாராம்!?..

... எனக்கு மச்சை மட்டை, எனக்கு வீழ்ந்திருந்தாலும், நானோ, எனது சந்ததி கூட வாந்தி எடுத்துக் கொண்டிருப்போம் தானே???!!!

பச்சை மட்டை வீழ்ந்தது? வீழாதது? பார்த்தீரா? ஆதாரம்? ... கேள்விகளுக்கு பதில் .. "யாமறியோம் பராபரமே" ...

Link to comment
Share on other sites

On 12/30/2018 at 2:32 AM, விசுகு said:

அதே...

சம்பந்தர்  இறுதி  நேரத்தில்  தான்  தலைவராக்கப்பட்டார் (அதுவும்  கிழக்கு மாகாணத்தவர்  என்பதால்)

முதலில் கூட்டமைப்பின் தலைவர் ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டு.. அவர் இந்தியா வின் ஆளுகைக்கு உட்பட்டு புலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏற்க மறுத்த பின்னர் தான் சம்பந்தர் தலைவர் ஆக்கபட்டார்..

தமிழ் தேசியகூட்டமைப்பின் உருவாக்கத்தில் புலிகளின்  புலனாய்வு துறையின் மறைமுகஅனுமதி/ ஆதரவு இருந்ததாக சிவராமின்? கட்டுரை ஒன்றில் படித்த நினைவு,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/31/2018 at 6:37 PM, ragunathan said:

நெடுக்கு,

உங்கள் போலவே இங்கு எல்லோருக்கும் தனியான தமிழீழம் வேண்டுமென்பதும், எம்மை நாமே ஆளவேண்டுமென்பதும் விருப்பமாக இருக்கிறது. ஆனால், அது இப்போது சாத்தியமா என்று எம்மை நாமே கேட்கிறபோதுதான் இனி என்ன செய்யலாம் என்கிற எண்ணங்கள் உருவாகின்றன.

இன்று கூட, ஆயுதப் போராட்டமொன்றின் முழுமையான வெற்றி ஒன்றின்மூலம் மட்டுமே தமிழர்கள் விரும்பும் ஒரு தீர்வு கிடைக்குமென்று நாம் நம்புகின்றேன். ஆனால், அதற்கு துளியளவேனும் சாத்தியம் இல்லையென்பது எனக்கு நன்கு தெரியும். அதனால்த்தான் வேறு வழிகளில் குறைந்தபட்ச தீர்வொன்றையாவது பெற்றுக்கொள்ளலாம் என்று பலர் விரும்புகிறார்கள்.

மாற்றுத் தீர்வு பேசும் எவருமே புலிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியதாக நான் நினைக்கவில்லை. விமர்சனங்களுக்கும் சேறுபூசல்களுக்கும் நிறையவே  வேறுபாடு இருக்கிறது. தர்க்கத்தினூடு ஒருவரையொருவர் வசைபாடுவதும், தமது பக்க நலனுக்காக வேண்டுமென்றே மற்றையவரின் எண்ணங்களைக் குதர்க்கமாகப் பேசுவதும்தான் இங்கு நடக்கிறது.

ஜஸ்டினோ அல்லது ஜூட்டோ நான் அறிந்தவரை புலியெதிர்ப்பாளர்கள் கிடையாது. யதார்த்தத்தைப் பேசுகிறார்கள். தாமே முன்னர் நியாயப்படுத்திய புலிகளின் செயற்பாடுகளை இன்று விமர்சிக்கிறார்கள். அதை விமர்சனங்களால் எதிர்கொள்வோம். அவர்பக்க நியாயங்களைக் கேட்கலாம். 

வெறுமனே சிங்களத்திற்கு வால்பிடிக்கிறார்கள் என்பது, அவர்பக்க நியாயங்களை நாம் பார்ப்பதை முற்றாக மறைப்பதோடு, அவர்களையும் தவறான நிலயொன்றினை எடுக்க நாமே தள்ளிவிடுவதாக அமைந்துவிடுகிறது.

என்னைக் கேட்டால், எனது முதலாவது தெரிவு, புலிகளின் தலைமையில் தனித் தமிழீழ அரசு. அது இல்லையென்றால், இருக்கும் மக்களையும், தாயகத்தின் எச்ச சொச்சங்களையும் காத்துக்கொள்ளக்கூடிய ஏதோ ஒரு அரசியல் தீர்வு.

ஏனென்றால், எங்களுக்கு இன்னொரு வேலுப்பிள்ளை பிரபாகரன் வரப்போவதில்லை.

அப்படியான ஒரு எண்ணம் எனக்கும் எப்போதும் உண்டு.
ஜஸ்ட்டினை பொறுத்தவரை இவரின் பல கருத்துக்களில் எனக்கு மிகுந்த மரியாதையும் உண்டு.
இங்கு விடயம் என்னவென்றால் புலிகள் பற்றிய இவர்களின் அறியாமையும் 
அப்ப அப்ப எடுக்கும் புலிவாந்தியும்தான் 
உண்மையான தமிழன் ஒரு போதும் எந்த போராளியையும் கொச்சை படுத்த மாட்டான்.
சந்தர்ப்பம் கிடைத்தால் இவர்கள் இருவரும் ஒட்டுமொத்த தமிழர்களையும் 
புலிகள்தான் கொன்றார்கள் என்று 1000 தடவை இங்கு எழுதி இருக்கிறார்கள்.
50000 வரையான இளம் ஆண்களும் பெண்களும் ஏன் புலிகள் ஆகி இறந்தார்கள்?
இது இவர்கள் இருவரின் பிரச்சனை இல்லை .....
இது யாழ்ப்பாண தமிழனின் பொதுவான ஒரு மனோ நிலை.
தம்மை எதோ பெரிய புத்ததனாக எப்போது ஒருவனுக்கு மேலான எண்ணம் வருகிறதோ 
அப்போதே அடுத்தவனை மட்டம் தட்டும் கீழ்நோக்கி பார்க்கும் ஒரு பார்ப்பன எண்ணம் போன்ற 
சிந்தனை வந்து விடுகிறது. இதுதான் இங்கு பிரச்சனை.

பல வேளைகளில் இவர்கள் சிலரை இலக்குவைத்து திரிக்கு திரி மட்டம் தட்ட தொடங்கிய பின்புதான் 
இவர்கள் எரிய தொடங்கிய அதே கற்களால் நானும் ஏறிய தொடங்கினேன்.  

இவர்களின் காட்டு கத்துக்களோ கருத்துக்களோ புலிகளை ஒருபோதும் 
மக்களாகிய எங்களிடம் இருந்து பிரித்துவிட போவதில்லை. காரணம் புலிகள் என்பது 
ஒரு குழுவாகவோ ஒரு பிரிவாகவோ பின்னாளில் இருக்க வில்லை. ஈழ தமிழர்களின் 
இன்னொரு வடிவமாகவே இருந்தது அதானல் வந்த நன்மை தீமை அனைத்திலும் மக்களாகிய 
எமக்கும் பங்கு உண்டு.

தீர்வு பற்றிய உங்களுடைய கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
சாத்தியமானது - சாத்தியம் இல்லாதது என்பது சோம்பேறிகளின் பேச்சு 
அல்லது ஒரு இயாலாமையின் எண்ணம். சம் சும் கும்பலுடன் பிரச்சனை படுவதே இங்குதான் 
சிங்கள ஆதிக்கம் என்பது கடந்த 50 வருடங்கள் மேலாக ( எல்லாளன் காலத்திலேயே இருந்தது நாம் எமது காலத்தை  பார்ப்போம்) தமிழர்களை ஆக்கிரமித்து அடிமை படுத்தும் போக்கோடு இருக்கிறது.
இது மிக மிக அறிவார்ந்த மிக பக்குவமான மனிதநேயம் உள்ள சிங்களவர்களிடம் கூட இருக்கிறது.
நாம் பாவம் என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் சரிபாதி உரிமை என்றுவந்தால் 
ஏதும் பம்மாத்து பேசுவார்கள். ஆக தமக்கு கீழ் நாம் வாழவேண்டும் என்ற மனநிலை அவர்களிடம் இருக்கிறது .
சாத்தியமானது என்று நீங்கள் கூறுவது? அது ஒன்றுதான் சிங்களவருக்கு அடிமையாக 
வாழ்வது. இந்த அடிமை வாழ்வை பெறுவதுக்கு எதுக்கு ஒரு அரசியல் கட்சி எமக்கு வேண்டும்?
ஒரு சூழலில் எது சாத்தியம் இல்லையோ அதை பெறுவதுக்குதான் மனிதர்களுக்கு ஒரு வழிகாட்டி வேண்டும்.
காலத்தையும் சூழலையும் எவன் ஒருவன் தனக்கு சாதகம் ஆக்குகிறானோ அவனே வழிகாட்டி.
எந்த அரசியல் சூழலும் சாத்தியமான இடத்தில் உலகில் உருவாகவில்லை. சாத்தியம் இல்லை என்று 
வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதரிடையே  சாத்தியப்படுத்தலாம் என்று ஒருவன் முனைந்த போது  உருவானதுதான் உலகின் அத்தனை அரசியல்  பெறுபேறுகளும். 

இப்போ ஆயுத போராட்டத்துக்கு உகந்த அரசியல் சூழலோ ஒரு வழிகாட்டியோ 
எமக்கு இல்லை. தர்க்கம் பண்ணுவதுக்கான சூழலும் உலகின் அனைத்து அரசியல் பிரமுகர்களுடன் 
பேசுவத்துக்கான சூழலும் , இதுவரையில் இல்லாததது  போன்று இப்போ கனிந்து கிடக்கிறது. 
அந்த சூழலை சம் சும் கும்பல் தமது சொந்த நலனுக்காக மக்களின் வாழ்வை அடகுவைத்து 
கெடுத்து வருகிறது என்பது வெளிப்படையான உண்மை.
தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவு படுத்தியவர்கள் இந்த இருவரும் இவர்களின் சொந்த சுகபோக எண்ணங்களும்தான். இன்றைய சூழலில் ஈழத்தமிழரின் ஒரு பலமான மக்கள் நலன் சார்ந்த ஒரு அரசியல் கட்சி உடைகிறது என்றால் ........... சிங்களவனின் மிக பெருத்த வெற்றி அது. அதை இரவு பகலாக உழைத்து  சாத்தியப்படுத்தியவர்கள் இந்த இரு தமிழ் இன துரோகிகளும்தான். 
இந்த இரண்டு சுக போகிகளை துரோகிகளை கடந்துதான் ... தமிழ் இனத்துக்கு சாத்தியமான ஒரு அரசியல் 
சூழல். அப்படியொரு இடைவெளியை சிங்களவன் உருவாக விட மாட்டான்...... அது ஆதிக்க சிங்களத்தின் பெரு வெற்றி. ஈழ தமிழரின் படுதோல்வி. 

Link to comment
Share on other sites

கூட்டமைப்பின் தோற்றமும் ‘டீல்’ அரசியலும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த சில ஆண்டுகளாகத் தென்னிலங்கையோடு ‘டீல்’ அரசியலில் ஈடுபட்டு வருவதாக, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்தச் குற்றச்சாட்டு தொடர்பில் கூட்டமைப்போ, அதன் தலைமையோ கிஞ்சித்தும் கவனத்தில் கொண்டதில்லை; எதிர்வினை ஆற்றியதுமில்லை. ஆனால், அண்மையில் கூட்டமைப்பின் உருவாக்கமே விடுதலைப் புலிகளுடனான ‘டீலின்’ அடிப்படையிலானது என்று கே.சயந்தன் தெரிவித்த கருத்தொன்று, யாழ். மையவாத அரசியல் அரங்கில், பேசு பொருளாகி இருக்கின்றது.

அரசியலில், கூட்டுகளும் கூட்டணிகளும் புரிந்துணர்வு, இணக்கப்பாடு, இலாபம் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தியே உருவாகி வருகின்றன. அது, இன விடுதலை, உரிமை மீட்பு உள்ளிட்ட அறம் சார் இலக்குகளைக் கொண்டதாகவோ, தேர்தல் வெற்றி போன்ற குறுகிய இலாபங்களைக் கொண்டாதாகவோ கூட அமையலாம்.

தமிழ்த் தேசிய அரசியலில் உருவான இருபெரும் கூட்டுகளான தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூட, மேற்சொன்ன அடிப்படைகளில் உருவான கூட்டுகளேயாகும். அவை, ஒட்டுமொத்தமாக அறம் சார் இலக்குகளை மாத்திரம் கொண்டு உருவாகிய அமைப்புகள் அல்ல. அவை, குறுகிய இலாப நோக்கங்களைக் கருத்தில் கொண்டும், தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகளாகும். அல்லது, அதில் பங்கெடுத்த தரப்புகளில் சில, அவற்றின் போக்கில் இணைந்தவையாகும்.

அப்படியான தருணத்தில், அந்தக் கூட்டுகளின் உருவாக்கத்தில் பங்கெடுத்த ஒவ்வொரு தரப்புக்கும், ஒவ்வொரு தனிநபருக்கும் அவை தொடர்பில் ஒவ்வொரு கதை இருக்கும். அந்தக் கதைகளில் சில புள்ளிகள் வெளியில் உரையாடப்படக் கூடியவையாகவும், இன்னும் சில புள்ளிகள் வெளியில் உரையாட முடியாதவைகளாகவும் இருக்கும். அது, அந்தக் காலத்து அரசியலின் போக்கு, கள யதார்த்தம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அமையலாம்.

கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று, 2015ஆம் ஆண்டு, தொலைக்காட்சி விவாதமொன்றில் இரா. சம்பந்தன் குறிப்பிட்டார். நெறியாளர் அந்தக் கேள்வியை, வெவ்வேறு கோணத்தில் கேட்ட போதும், கூட்டமைப்புக்கும் புலிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அவர் அடித்துக் கூறினார். ஒருகட்டத்தில், தொடர்பு இருந்தது பற்றித் தனக்குத் தெரியாது என்றார். ஆனால், இதே சம்பந்தனால், 2009களுக்கு முன்னர், இவ்வாறான கருத்தொன்றைப் பேசியிருக்கவே முடியாது. அந்தக் களமும் காலமும் அவரை அனுமதித்தும் இருக்காது. 2004ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில் தான் ஏன் போட்டியிட வேண்டும் என்று விடுதலைப் புலிகளுடனான சந்திப்பின்போது, 30 நிமிடங்களுக்கும் அதிகமான நேரம் உரையாற்றிய சம்பந்தன், புலிகளுடனான தொடர்பு பற்றித் தனக்குத் தெரியாது என்று, புலிகளின் காலத்துக்குப் பின்னர் கூறியிருக்கிறார். சம்பந்தன் கூறுவது அப்பட்டமான பொய் என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரியும். அதுபோல, தமிழ் மக்களுக்குக் கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய வெளிப்படையான உண்மைகளும் தெரியும். அதை யாரும் எந்தக் காரணத்தாலும் மறுத்தாலும், மறைத்தாலும் அவை எடுபட்டுவிடாது.

தமிழ்த் தேசிய அரசியலில், ஜனநாயக விழுமியங்கள் என்பது, எப்போதுமே காலில் போட்டு மிதிக்கப்படும் ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது. அது, சுதந்திரத்துக்கு முந்தையை இலங்கையில் தொடங்கிய சாபக்கேடு. அருணாச்சலம் மகாதேவாவை, துரோகி என்று சொல்லிக் கொண்டு, அரசியல் அரங்கில் சம்மணமிட்டு உட்கார்ந்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை, அதே துரோகி வாதத்தால், தமிழரசுக் கட்சி தோற்கடித்தது வரலாறு.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் இருந்து பிரிந்து, தமிழரசுக் கட்சியைத் தந்தை செல்வநாயகம் தோற்றுவிக்கும் போது, அப்போது பலமாக இருந்த காங்கிரஸிடமிருந்து எதிர்கொண்ட தாக்குதல்கள், நெருக்கடிகள் ஜனநாயக விழுமியங்கள் சார்ந்தவை அல்ல. தமிழரசுக் கூட்டங்களில், குடிகாரக் குண்டர்களை இறக்கி ரவுடித்தனம் பண்ணியது முதல், பாம்புகளை எறிந்து மக்களை விரட்டியது வரை, காங்கிரஸ்காரர்களில் ஜனநாயக விழுமியம் பல்லிளித்த வரலாற்றைத் தமிழ் மக்கள் கண்டு வந்திருக்கின்றார்கள்.

காங்கிரஸின் ரவுடித்தனங்களில் இருந்து தப்பித்துப் பிழைத்து, வெற்றிக் கொடி நாட்டிய தமிழரசுக் கட்சியும் ஜனநாயகத்துக்கு முரணான நடவடிக்கைகளை ஏனைய கட்சிகள் மீது பிரயோகித்தது வரலாறு. குறிப்பாக, அ.அமிர்தலிங்கம், தமிழரசு இளைஞர்களைக் கொண்டு, அரசியல் எதிரிகளுக்கு எதிராக நடத்திய ஜனநாயக விழுமியங்களுக்கு அப்பாலான நடவடிக்கைகளே, ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சிப் பாதையில், சகோதரப் படுகொலைகளுக்கு விதை போட்டது. ஏனெனில், துரோகி வாதத்தை வைத்துக் கொண்டு, யாரைப் பலி எடுத்தாலும், அது, அறம் சார்ந்த ஒன்றாக, அதைக் கொண்டாட்டமாக ஒப்புவிக்கும், குறு அரசியலை யாழ். மையவாத அரங்கு திறந்தது. அது, அமிர்தலிங்கத்தையும் பலி எடுத்தது. அந்த மனநிலையின் கட்டங்களை, இன்றைக்குச் சமூக ஊடகங்களில், தமது அரசியல் எதிரிகளுக்கு எதிராக எழுதப்படும் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் பலரும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது தொடர்பில் கேள்வி எழுப்பினால், ஒட்டுமொத்தமாக மூளைச் சலவை செய்யப்பட்ட மனநிலையை வெளிப்படுத்துகிறார்கள்.

தமிழரசுக் கட்சி உருவாக்கத்துக்கு எதிராக, காங்கிரஸ்காரர்கள் அயோக்கியத்தனங்களைப் புரிந்த போதும், காலம் இருதரப்பையும் ஒன்றாக இயங்கும் சூழலை உருவாக்கியது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் உருவாக்கம், தமிழ்த் தேசிய அரசியலைத் தாங்கிப் பிடிக்கும் போக்கில் மாத்திரம் உருவான ஒன்றல்ல. அவற்றுக்கு, காங்கிரஸ் - தமிழரசு முக்கியஸ்தர்களின் தேர்தல் தோல்விகளும் காரணமாக இருந்திருக்கின்றன.

அதுபோலவே, கூட்டமைப்பின் உருவாக்கத்தின் பின்னாலும், பல காரணங்கள் உண்டு. தமிழ்த் தேசிய விடுதலை அரங்கின் ஏக வாரிசுகள் தாங்களே என்கிற நிலையைப் புலிகள் அடைந்துவிட்ட பின்னர், தேர்தல் அரசியல்வாதிகளை அவர்கள் அரங்குக்குள் அனுமதித்ததில்லை. மக்களும் ஊடகங்களும் கூட, அதைப் பெரிதாகக் கண்டு கொண்டதில்லை. ஆனால், அந்த நிலையையும் காலம் மாற்றியது. கூட்டமைப்பின் உருவாக்கம் புலிகளுக்கும் அவசியமான ஒன்றாக இருந்தது. ஜனநாயக முகமொன்று புலிகளுக்குத் தேவை, என்பதை புலிகளின் ஆலோசகர்களாக இயங்கிய பலரும் திரும்பத் திரும்பக் கூறி வந்தனர்.

அத்தோடு, புலிகளைப் பகைத்துக் கொண்டு, தேர்தல் வெற்றிகளையோ, எதிர்கால இருப்பையோ பலப்படுத்த முடியாது என்பதை, தேர்தல் அரசியலுக்குள் வந்துவிட்ட முன்னாள் ஆயுத இயக்கங்களும் கூட்டணியும் காங்கிரஸும் புரிந்துகொண்டே இணக்கப்பாட்டுக்கு வந்தன. புளொட் அமைப்பை, உள்வாங்குவது தொடர்பில், புலிகள் ஆதரவு தெரிவித்த நிலை காணப்பட்டது. அதற்கான பேச்சுகளும் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும், ஆரம்பப் பேச்சுகளிலிருந்தே புளொட் விலகிவிட்டது. இது, வெளிப்படையாகத் தெரியும் செய்தி. ஆனால், இதன்பின்னால், ஒவ்வொரு கட்சிக்குள், புலிகளின் ஒவ்வொரு பிரிவுக்கும்கூட ஒவ்வொரு இலக்கு கூட்டமைப்பை உருவாக்குவது சார்ந்து இருந்தது. அவை, தொடர்பில் ஆயிரத்தெட்டுக் கதைகள் எழுதப்பட வேண்டியிருக்கின்றன. ஒவ்வொரு கதைகளும் ஏதோவொரு புள்ளியில் சந்திக்கலாம்.

ஆயுதப் போராட்டத்தை நோக்கி, கூட்டணி (தமிழரசுக் கட்சி) தமிழ் இளைஞர்களைத் தள்ளிய போதிலும், அதன்பால் எந்தவித அக்கறையையும் காட்டாதவர் சம்பந்தன். அவர் என்றைக்குமே, ஆயுதப் போராட்ட நிலைக்கு எதிராகவே நின்றார். அவரே, விடுதலைப் புலிகளை ஏக தலைமையாக, ஏக பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளும் கட்டம் ஏன் உருவானது. அதுபோல, யாழ்ப்பாணத்தையே அறியாதவர்கள் எல்லாம், வாகனத்தில் இருந்து இறங்காமலேயே, தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்றது, கூட்டமைப்பு என்கிற அமைப்பு, புலிகளை ஏக பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்டதன் பின்னராக நிகழ்ந்ததுதான். இல்லையென்றால், கூட்டமைப்பு என்கிற கூட்டுமில்லை. அதில் போட்டியிடுவதற்கு ஆட்களும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

விடுதலைப் புலிகளின் முடிவின் பின்னராக கூட்டமைப்பு என்பது, இயங்கு நிலையில் தமிழரசுக் கட்சியே. (2009க்குப் முன்னரான கூட்டமைப்பும், அதன் பின்னராக கூட்டமைப்பும் அதன் தலைமைத்துவம், போக்கு, களம் உள்ளிட்ட அனைத்திலும் மாற்றங்களைக் கொண்ட அமைப்பு.) அதனை, மக்களும் உணர்ந்தே வைத்திருக்கிறார்கள். அதன் போக்கையே, சம்பந்தன் அடிக்கடி பிரதிபலித்தும் வந்திருக்கின்றார். அவர், ஆயுதப் போராட்டத்துக்கு எதிரான மனநிலையோடு எழுந்துவந்த ஒருவர், ஆயுதப் போராட்ட வீழ்ச்சியொன்றின் பின்னராக தன்னுடைய கட்சியைப் பலப்படுத்த நினைக்கிறார். அதன்போக்கில், கடந்த காலத்தில் பேச மறுத்த உண்மைகளை, இப்போது தமிழரசுக்கட்சியினர், பேச விளைகிறார்கள். சயந்தனின் பேச்சும் அதனை நோக்கியதே.

-தமிழ்மிரர் பத்திரிகையில் இன்று வெளியான  பத்தி.

புருஷோத்தமன் தங்கமயில்

Link to comment
Share on other sites

4 hours ago, Maruthankerny said:

உண்மையான தமிழன் ஒரு போதும் எந்த போராளியையும் கொச்சை படுத்த மாட்டான்.
சந்தர்ப்பம் கிடைத்தால் இவர்கள் இருவரும் ஒட்டுமொத்த தமிழர்களையும் 
புலிகள்தான் கொன்றார்கள் என்று 1000 தடவை இங்கு எழுதி இருக்கிறார்கள்.
50000 வரையான இளம் ஆண்களும் பெண்களும் ஏன் புலிகள் ஆகி இறந்தார்கள்?
இது இவர்கள் இருவரின் பிரச்சனை இல்லை .....
இது யாழ்ப்பாண தமிழனின் பொதுவான ஒரு மனோ நிலை.
தம்மை எதோ பெரிய புத்ததனாக எப்போது ஒருவனுக்கு மேலான எண்ணம் வருகிறதோ 
அப்போதே அடுத்தவனை மட்டம் தட்டும் கீழ்நோக்கி பார்க்கும் ஒரு பார்ப்பன எண்ணம் போன்ற 
சிந்தனை வந்து விடுகிறது. இதுதான் இங்கு பிரச்சனை.

பல வேளைகளில் இவர்கள் சிலரை இலக்குவைத்து திரிக்கு திரி மட்டம் தட்ட தொடங்கிய பின்புதான் 
இவர்கள் எரிய தொடங்கிய அதே கற்களால் நானும் ஏறிய தொடங்கினேன்.  

இவர்களின் காட்டு கத்துக்களோ கருத்துக்களோ புலிகளை ஒருபோதும் 
மக்களாகிய எங்களிடம் இருந்து பிரித்துவிட போவதில்லை. காரணம் புலிகள் என்பது 
ஒரு குழுவாகவோ ஒரு பிரிவாகவோ பின்னாளில் இருக்க வில்லை. ஈழ தமிழர்களின் 
இன்னொரு வடிவமாகவே இருந்தது அதானல் வந்த நன்மை தீமை அனைத்திலும் மக்களாகிய 
எமக்கும் பங்கு உண்டு.

என்னை போன்றவர்கள் முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்ததற்கு காரணம் புலிகளை குறை சொல்ல விடாமல் அவர்கள் தவறுகளை மூடி மறைத்து அவர்களை பலவீனமாக்கியவர்கள் தான். அவர்களுள் நீங்களும் அடக்கம். இன்னொரு வகையில் சொல்லப் போனால்,  இன்று புலிகள் முற்றிலும் தோற்று மக்களின் அழிவுக்கும் காரணமாகி இருப்பதற்கு நீங்களும் நான் 'மட்டம் தட்டும்' மற்ற புலி விசுவாசிகளும் தான் காரணம். நீங்கள் இப்படியே உங்கள் கனவுடன் வாழ்ந்து விட்டு போங்கள். எனது உறவுகளும் இந்த கனவுடன் தான் மாண்டு போனார்கள். ஆனால் அங்கு வாழும் மக்களுக்கு வாழ்வளிக்கும் முயற்சிகளுக்கு நான் ஆதரவளிப்பதை நீங்களோ வேறு யாருமோ தடுக்க முடியாது.

இன்று எமது மக்களுக்கு கிடைத்துள்ள ஆற்றல் மிக்க தலைவர்கள் சுமேந்திரனும் விக்னேஸ்வரனும் மட்டுமே. இவர்களின் சிங்கள மற்றும் ஆங்கில அறிவு, சட்ட அறிவு, வல்லரசுகளின் புவியல் அரசியல் பற்றிய அறிவு ஆகியவை எமது மக்களில் பலருக்கும் புரியாது, புரிய வேண்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. இந்த வல்லரசுகளின் புவியல் அரசியலை விடுதலை புலிகளே சரியாக கையாண்டு தீர்வு காண முடியவில்லை. இன்று சுமேந்திரன் முயற்சிக்கிறார். அவரை நான் ஆதரிக்கிறேன். விக்னேஸ்வரன் வேறு கோணத்தில் அணுகுகிறார். அவரையும் நான் ஆதரிக்கிறேன். இவர்களின் முயற்சி எமது மக்களுக்கு விடிவு தரும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இங்கே சுமேந்திரனை கொச்சைப்படுத்தும் விதமாக நீங்களும் மற்றவர்களும் எழுதும் போது உங்களை மட்டம் தட்டுவது பொருத்தமானதே. இதற்கு காரணம் சுமேந்திரன் செய்வது எமது மக்களின் விடிவுக்கு தேவையான முயற்சி. விடுதலை புலிகளே தோற்று போன இந்த விடயம் சிக்கலானது. ஆகவே அவரின் இந்த முயற்சிக்காக அவரை இந்த களத்தில் நீங்கள் கொச்சை படுத்தினால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உங்களின் மொழியில் பதில் தர நான் பின் நிற்க போவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

அப்படியான ஒரு எண்ணம் எனக்கும் எப்போதும் உண்டு.
ஜஸ்ட்டினை பொறுத்தவரை இவரின் பல கருத்துக்களில் எனக்கு மிகுந்த மரியாதையும் உண்டு.
இங்கு விடயம் என்னவென்றால் புலிகள் பற்றிய இவர்களின் அறியாமையும் 
அப்ப அப்ப எடுக்கும் புலிவாந்தியும்தான் 
உண்மையான தமிழன் ஒரு போதும் எந்த போராளியையும் கொச்சை படுத்த மாட்டான்.
சந்தர்ப்பம் கிடைத்தால் இவர்கள் இருவரும் ஒட்டுமொத்த தமிழர்களையும் 
புலிகள்தான் கொன்றார்கள் என்று 1000 தடவை இங்கு எழுதி இருக்கிறார்கள்.
50000 வரையான இளம் ஆண்களும் பெண்களும் ஏன் புலிகள் ஆகி இறந்தார்கள்?
இது இவர்கள் இருவரின் பிரச்சனை இல்லை .....
இது யாழ்ப்பாண தமிழனின் பொதுவான ஒரு மனோ நிலை.
தம்மை எதோ பெரிய புத்ததனாக எப்போது ஒருவனுக்கு மேலான எண்ணம் வருகிறதோ 
அப்போதே அடுத்தவனை மட்டம் தட்டும் கீழ்நோக்கி பார்க்கும் ஒரு பார்ப்பன எண்ணம் போன்ற 
சிந்தனை வந்து விடுகிறது. இதுதான் இங்கு பிரச்சனை.

பல வேளைகளில் இவர்கள் சிலரை இலக்குவைத்து திரிக்கு திரி மட்டம் தட்ட தொடங்கிய பின்புதான் 
இவர்கள் எரிய தொடங்கிய அதே கற்களால் நானும் ஏறிய தொடங்கினேன்.  

இவர்களின் காட்டு கத்துக்களோ கருத்துக்களோ புலிகளை ஒருபோதும் 
மக்களாகிய எங்களிடம் இருந்து பிரித்துவிட போவதில்லை. காரணம் புலிகள் என்பது 
ஒரு குழுவாகவோ ஒரு பிரிவாகவோ பின்னாளில் இருக்க வில்லை. ஈழ தமிழர்களின் 
இன்னொரு வடிவமாகவே இருந்தது அதானல் வந்த நன்மை தீமை அனைத்திலும் மக்களாகிய 
எமக்கும் பங்கு உண்டு.

தீர்வு பற்றிய உங்களுடைய கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
சாத்தியமானது - சாத்தியம் இல்லாதது என்பது சோம்பேறிகளின் பேச்சு 
அல்லது ஒரு இயாலாமையின் எண்ணம்.
சம் சும் கும்பலுடன் பிரச்சனை படுவதே இங்குதான் 
சிங்கள ஆதிக்கம் என்பது கடந்த 50 வருடங்கள் மேலாக ( எல்லாளன் காலத்திலேயே இருந்தது நாம் எமது காலத்தை  பார்ப்போம்) தமிழர்களை ஆக்கிரமித்து அடிமை படுத்தும் போக்கோடு இருக்கிறது.
இது மிக மிக அறிவார்ந்த மிக பக்குவமான மனிதநேயம் உள்ள சிங்களவர்களிடம் கூட இருக்கிறது.
நாம் பாவம் என்பதை இவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் சரிபாதி உரிமை என்றுவந்தால் 
ஏதும் பம்மாத்து பேசுவார்கள். ஆக தமக்கு கீழ் நாம் வாழவேண்டும் என்ற மனநிலை அவர்களிடம் இருக்கிறது .
சாத்தியமானது என்று நீங்கள் கூறுவது? அது ஒன்றுதான் சிங்களவருக்கு அடிமையாக 
வாழ்வது. இந்த அடிமை வாழ்வை பெறுவதுக்கு எதுக்கு ஒரு அரசியல் கட்சி எமக்கு வேண்டும்?
ஒரு சூழலில் எது சாத்தியம் இல்லையோ அதை பெறுவதுக்குதான் மனிதர்களுக்கு ஒரு வழிகாட்டி வேண்டும்.
காலத்தையும் சூழலையும் எவன் ஒருவன் தனக்கு சாதகம் ஆக்குகிறானோ அவனே வழிகாட்டி.
எந்த அரசியல் சூழலும் சாத்தியமான இடத்தில் உலகில் உருவாகவில்லை. சாத்தியம் இல்லை என்று 
வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதரிடையே  சாத்தியப்படுத்தலாம் என்று ஒருவன் முனைந்த போது  உருவானதுதான் உலகின் அத்தனை அரசியல்  பெறுபேறுகளும். 

இப்போ ஆயுத போராட்டத்துக்கு உகந்த அரசியல் சூழலோ ஒரு வழிகாட்டியோ 
எமக்கு இல்லை. தர்க்கம் பண்ணுவதுக்கான சூழலும் உலகின் அனைத்து அரசியல் பிரமுகர்களுடன் 
பேசுவத்துக்கான சூழலும் , இதுவரையில் இல்லாததது  போன்று இப்போ கனிந்து கிடக்கிறது. 
அந்த சூழலை சம் சும் கும்பல் தமது சொந்த நலனுக்காக மக்களின் வாழ்வை அடகுவைத்து 
கெடுத்து வருகிறது என்பது வெளிப்படையான உண்மை.
தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவு படுத்தியவர்கள் இந்த இருவரும் இவர்களின் சொந்த சுகபோக எண்ணங்களும்தான். இன்றைய சூழலில் ஈழத்தமிழரின் ஒரு பலமான மக்கள் நலன் சார்ந்த ஒரு அரசியல் கட்சி உடைகிறது என்றால் ........... சிங்களவனின் மிக பெருத்த வெற்றி அது. அதை இரவு பகலாக உழைத்து  சாத்தியப்படுத்தியவர்கள் இந்த இரு தமிழ் இன துரோகிகளும்தான். 
இந்த இரண்டு சுக போகிகளை துரோகிகளை கடந்துதான் ... தமிழ் இனத்துக்கு சாத்தியமான ஒரு அரசியல் 
சூழல். அப்படியொரு இடைவெளியை சிங்களவன் உருவாக விட மாட்டான்...... அது ஆதிக்க சிங்களத்தின் பெரு வெற்றி. ஈழ தமிழரின் படுதோல்வி. 

மருது,

உங்களைப்போலவே தனி ஈழத் தாயகம்தான் எனது இலட்சியமும். புலிகள் இருக்கும்வரை 100% இது நடக்கும் என்று நான் நம்பியிருந்தேன். ஏனென்றால் புலிகள் காலத்தில் இப்படியொரு  அதிசயம் தமிழர்களுக்கு நடந்தால் ஒழிய, வேறு வழியில்லை என்பதுதான் எனது நிலைப்பாடும். ஆனால், 2009 உடன் புலிகளின் நிலைபற்றி ஓரளவிற்கு நாம் எல்லோருக்கும் தெரியும். 

இப்போது நமது முன்னாலிருக்கும் தெரிவுகள் என்ன மருது? 

1. எமது தாயகத்தை ராணுவ ரீதியிலான வெற்றி ஒன்றின்மூலம் மீட்டு, அதன் எல்லைகளைப் பாதுகாத்துக்கொள்ளுதல்.

2. பேரம் பேசக்கூடிய நிலையில் இல்லாமல் சிங்களத்துடன், அது தர விரும்புகின்ற, எதற்குமே பிரயோசனமற்ற தீர்வென்கிற பெயரில் தரும் ஒரு அதிகாரமற்ற தீர்வொன்று.

3. பிராந்திய, சர்வதேச வல்லரசுகளின் அனுசரணையில், அவற்றின் நலன்களுக்குச் சமாந்திரமான முறையில் சிங்களத்தின் மேல் அழுத்தம் பிரயோகிப்பதன் மூலம் பெறப்படக்கூடிய ஓரளவு அதிகாரத்துடனான  தீர்வொன்று.

இதில் முதலாவது தெரிவுக்கு பலம்சேர்க்க எம்மிடம் இப்போது இருப்பது என்ன?

- தன்னலமற்ற, தியாக சிந்தையுடைய தலைமை
- போராடக்கூடிய இளைஞர்கள்
- போராட்டத்தை தக்கவைத்துக்கொள்ளக்கூடிய மக்கள் பலம்
- பிராந்திய , சர்வதேச அதிகாரங்களின் அனுசரணை
- நீண்ட 35 வருடகால இனவழிப்புப் போரின் பின்னர், இன்னுமொரு போராட்டத்தை தாங்கக்கூடிய மக்களின் மனோநிலை
- குறையில்லாத நிதி வழங்கல்

இவற்றில் இறுதியானதைத்தவிர ( இதுகூட, புலிகள் நிதிவளம் என்பது நாம் நினைப்பது போல புலம்பெயர் மக்களின் அன்பளிப்பு அல்லாமல் , புலிகளின் சர்வதேச வலையமைப்பினால் பெறப்பட்ட நிதியே என்று இப்போது சொல்கிறார்கள்) மற்றையவை எவையுமே எமக்குச் சார்பாக இப்போது இல்லை.
யுத்தம் முடிந்து 9 வருடங்களாகியும்கூட, போரின் வடுக்களை இன்னும் சுமந்து வாழும் தாயகம். தலைமை தாங்க எவருமின்றி அநாதைகளாகத் தமிழினம். இன்னொரு ஆயுதப் போராட்டத்திற்கெதிரான பிராந்திய சர்வதேச சக்திகள். இனியொரு போர் வேண்டாம், இந்த அழிவுபோதும் என்கிற தாயக உறவுகளின் மனோநிலை. திட்டமிட்டு அழிக்கப்பட்ட ஒரு சந்ததி. தாயக விடுதலை எனும் நோக்கிலிருந்து மிகவும் திட்டமிட்ட ரீதியில் வேறு ஆசைகளில் நாட்டம் கொள்ள வைக்கப்பட்டிருக்கும் இன்றைய தமிழ் இளைஞர். புலம்பேர் நாடுகளிலிருந்து ஆயுதப் போராட்டம் ஒன்றிற்கு தமது இளையோர்களை வழங்க மறுக்கும் புலம்பெயர் தமிழர்.

நிலமை இப்படியிருக்க, இன்னொரு ஆயுதப் போராட்டத்திற்கு வழியுண்டா??

இரண்டாவ்து, நாம் எதுவுமே செய்யாமல், உள்நாட்டு அரசியலில் மட்டுமே எமது கவனத்தைச் செலுத்தி, எமது இழக்கப்பட்ட உரிமைகள், ஆக்கிரமிக்கப்பட்ட தாயகம், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதிகோரல்...இப்படி எது பற்றியும் கவலைப்படாமல், சிங்களவனே மறந்துபோகும்படி அரசியல் செய்வது. சிலவேளை ஏதோ போனால் போகிறது என்று ஒரு கிராம சபையோ அல்லது மாவட்ட சபையோ எமக்குக் கிடைக்கலாம்.

மூன்றாவது இப்போது நடப்பது. அதாவது, இந்திய, மேற்குல நலன்களுக்கு இசைவாக அரசியல் செய்வதன் மூலம், சிங்களத்தை ஓரளவு அதிகாரம் மிக்க தீர்வொன்றுக்கு அழுத்துவது. இதற்கு போர்க்குற்றங்கள் மீதான விசாரணைக்கான கோரிக்கை என்பதை ஒரு நெம்புகோலாகப் பாவிப்பது. மேற்குலகிற்கு ஆதரவான சிங்கள அரசொன்றை ஆதரிப்பதன் மூலம், மேற்குலகின் அழுத்தங்களை அவ்வரசு மீது எமது நலன்களுக்காகப் பிரயோகிப்பது. இது எவ்வளவு தூரத்திற்கு எமக்கு நண்மையாக அமையும் என்பது தெரியாவிட்டாலும் கூட, முதலாவது மற்றும் இரண்டாவது தெரிவுகளுடன் ஒப்பிடும்பொழுது இப்போதைக்கு எம்மால் செய்யக்கூடியது.

இது எனது கருத்து.

இதுபற்றிய உங்களின் கருத்துபற்றியும் அறிய விரும்புகிறேன். சிலவேளை, நான் யோசிக்காத இன்னொரு கோணத்தில் நீங்கள் இதைப் பார்க்கலாம்.  இங்கு நான் குறிப்பிட்ட தெரிவுகளுக்கு மேலதிகமாக இன்னொரு தெரிவு உங்களுக்குத் தெரியலாம். முடிந்தால், அதை இங்கே பதியுங்கள்.

தொடர்ந்து பேசலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

என்னை போன்றவர்கள் முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்ததற்கு காரணம் புலிகளை குறை சொல்ல விடாமல் அவர்கள் தவறுகளை மூடி மறைத்து அவர்களை பலவீனமாக்கியவர்கள் தான். அவர்களுள் நீங்களும் அடக்கம். இன்னொரு வகையில் சொல்லப் போனால்,  இன்று புலிகள் முற்றிலும் தோற்று மக்களின் அழிவுக்கும் காரணமாகி இருப்பதற்கு நீங்களும் நான் 'மட்டம் தட்டும்' மற்ற புலி விசுவாசிகளும் தான் காரணம். நீங்கள் இப்படியே உங்கள் கனவுடன் வாழ்ந்து விட்டு போங்கள். எனது உறவுகளும் இந்த கனவுடன் தான் மாண்டு போனார்கள். ஆனால் அங்கு வாழும் மக்களுக்கு வாழ்வளிக்கும் முயற்சிகளுக்கு நான் ஆதரவளிப்பதை நீங்களோ வேறு யாருமோ தடுக்க முடியாது.

இன்று எமது மக்களுக்கு கிடைத்துள்ள ஆற்றல் மிக்க தலைவர்கள் சுமேந்திரனும் விக்னேஸ்வரனும் மட்டுமே. இவர்களின் சிங்கள மற்றும் ஆங்கில அறிவு, சட்ட அறிவு, வல்லரசுகளின் புவியல் அரசியல் பற்றிய அறிவு ஆகியவை எமது மக்களில் பலருக்கும் புரியாது, புரிய வேண்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. இந்த வல்லரசுகளின் புவியல் அரசியலை விடுதலை புலிகளே சரியாக கையாண்டு தீர்வு காண முடியவில்லை. இன்று சுமேந்திரன் முயற்சிக்கிறார். அவரை நான் ஆதரிக்கிறேன். விக்னேஸ்வரன் வேறு கோணத்தில் அணுகுகிறார். அவரையும் நான் ஆதரிக்கிறேன். இவர்களின் முயற்சி எமது மக்களுக்கு விடிவு தரும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இங்கே சுமேந்திரனை கொச்சைப்படுத்தும் விதமாக நீங்களும் மற்றவர்களும் எழுதும் போது உங்களை மட்டம் தட்டுவது பொருத்தமானதே. இதற்கு காரணம் சுமேந்திரன் செய்வது எமது மக்களின் விடிவுக்கு தேவையான முயற்சி. விடுதலை புலிகளே தோற்று போன இந்த விடயம் சிக்கலானது. ஆகவே அவரின் இந்த முயற்சிக்காக அவரை இந்த களத்தில் நீங்கள் கொச்சை படுத்தினால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உங்களின் மொழியில் பதில் தர நான் பின் நிற்க போவதில்லை. 

திரு விக்கினேஸ்வரன் மற்றும் சுமந்திரன் பற்றிய உங்களின் கருத்துடன் உடன்படும் அதேவேளை, நீங்கள் விமர்சனங்களை முன்வைக்கும்பொழுது உங்களின் கோபத்தை புலிகள் மீது திருப்புவதுதான் பலருக்கு உங்கள் மீது ஆத்திரத்தை உண்டுபண்ணுகிறது என்று நான் நினைக்கிறேன்.

புலிகளை வழிநடத்தியது புலம்பெயர் நாடுகளில் இருந்த சிலர்தான் என்று நீங்களே கூறிவிட்டு, பிழையைப் புலிகள் மீது போடுவதேன்?

புலிகளின் போராட்டம் நியாயமானது என்று நீங்கள் நம்பியதால்த்தானே அவர்களை 2009 வரை ஆதரித்தீர்கள்? 

நீங்கள், நான் உற்பட பலரும் அவர்கள் செய்த சில தவறான விடயங்களைக் கூட இறுதி நோக்கம் ஒன்றிற்காக விட்டுக் கொடுத்து சரியென்று நியாயப்படுத்தவில்லையா? 

இப்பொழுது எல்லாமே தோற்கடிக்கப்பட்டு, இழக்கப்பட்ட பின்னர் தவறுகளைப் யாராவது ஒருவரின் தலையில் போட்டு எமது தேடல்களையும் ஏமாற்றங்களையும் தீர்த்துக்கொள்கிறோம். தாயக விடுதலைப் போர் தோற்றதற்கும், கனவு கலைக்கப்பட்டதற்கும் நீங்களும் நானுமில்லாத இன்னொருவரை நாம் தேடியபோது, உங்களுக்குக் கிடைத்தவர்கள் புலிகள், எனக்குக் கிடைத்தவர்கள் இன்னும் சிலர், அதுபோல இங்கே இன்னும் சிலருக்குக் கிடைத்தவர்கள் தமிழர் கூட்டமைப்பு உறுப்பினர்கள். 

உண்மையில், நான், நீங்கள், இங்கே இருப்பவர்கள், புலிகள், புலம்பெயர் தமிழர்கள், எமது அரசியல்வாதிகள், துரோகிகள், பிராந்திய வல்லரசு..இப்படி எல்லமேதான் எமது தோல்விக்குக் காரணம்.

புலிகள் இப்போது இல்லை. அவர்களை விமர்சிப்பதால் நாம் செய்வதெல்லாம் அவர்கள் செய்த தியாகங்களையும், முயற்சிகளையும் கொச்சைப்படுத்துவதுதான். ஆகவே, அவர்களைத் தாண்டி வருவோம்.

சுமந்திரன் பற்றிய பலருக்கும் இருக்கும் இப்போதைய அபிப்பிராயங்கள் பல்வேறுபட்டவை.  அவர் செய்யும் காரியங்களின் விளைவு எப்படியாக அமையப் போகிறதென்பதிலேயே அவர் தொடர்பான விமர்சனங்களோ அல்லது நிலைப்பட்டுகளோ பலருக்கு மாறப்போகிறது.

ஐயா விக்கினேஸ்வரன் மீது, உங்களைப் போன்றே எனக்கும் நல்ல அபிப்பிராயம் உண்டு. இன்றுள்ள தமிழ்த் தலைவர்களில் நான் அவரை வித்தியாசப்பட்டவராகப் பார்க்கிறேன். அவரிடமுள்ள சில குணாதிசயங்கள் தலைவர் பிரபாகரனிடமும் இருந்ததாக நான் நம்புகிறேன். 

நான் உங்களிடம் கேட்பது, உங்களின் விமர்சனங்களை எழுதப்படும் கருத்துக்களுக்கு முன்வையுங்கள். தயவுசெய்து புலிகளை மீண்டும் மீண்டும் விமர்சிப்பதால் நீங்கள் நண்பர்களை அடையப்போவதுமில்லை, உங்களின் கருத்தை மற்றையவர்களிடம் கொண்டுசெல்லப்போவதுமில்லை. ஏனென்றால், நான் உற்பட இன்னும் லட்சோப லட்சம் தமிழர்களுக்கு அவர்களே என்றும் நாயகர்கள் , உங்களுக்குப் புரிந்தால்ச் சரி !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/31/2018 at 3:08 AM, Justin said:

அன்புள்ள எழுஞாயிறு, 
நன்றி குறு விளக்கத்திற்கு. ஆனால் நீங்கள்  இடியப்பச் சிக்கலின் காரணிகளைத் தெரிந்திருந்தால், ஏன் த.தே.கூவோ அல்லது அவர்கள் இடத்தில் இருக்கும் புலிகள் சாராத ஒரு தலைமையோ சில இடங்களில் இணங்கியும் சில இடங்களில் தமிழர் நலனை இரண்டாம் இடத்தில் வைத்தும் (அண்மையில் ரணில் ஆதரவைச் சொல்கிறேன்) சில இடங்களில் அடம் பிடித்தும் நடக்க வேண்டி இருக்கிறது என்று புரிந்திருப்பீர்கள். எழுபது மட்டுமல்ல, அதற்கு முதலே 1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் வந்த காலத்தில் இருந்து இந்தச் சிக்கலின் பெரிய காரணி சிங்களவர்கள்! இலங்கையில் சிங்களவர்களின் 2/3 பெரும் பான்மை எடுத்து தமிழர்களுக்கு 90% சார்பான ஒரு தீர்வைக் கொண்டு வருவது இன்னுமொரு தலைமுறைக்கு இயலாது! இதனால் அவர்களது விருப்பத்தோடு அடையக்கூடிய எமக்கு ஒரு 50% சார்பான தீர்வைப் பெறும் முயற்சி மட்டுமே இப்போது முடியும்!  எனக்கு விளங்கிய வரை, த.தே.கூ இதையே செய்ய முயல்கிறது. இந்தச் சிக்கலின் ஏனைய காரணிகள்: இந்தியா, இந்தியாவை மீறி எதுவும் செய்ய விரும்பாத மேற்கு நாடுகள். இந்தக் காரணியால் எங்களுக்கு தனி நாடு கிடைக்காது, இந்தியா விடாது. எனவே உள்ளதை வைத்து கை நழுவிப் போய்க்கொண்டிருக்கும் நிலம், மாகாண அதிகாரம், மாவட்ட அதிகாரம், வெளிநாடுகளின் கரிசனை என்பவற்றைக் காப்பாற்றுவது மட்டுமே இப்போதைக்கு சாத்தியமான ஒன்று என்பது என் அபிப்பிராயம். இதை விட வேறு தெரிவுகள் இருந்தால், அவை என் சிறு மூளைக்கு எட்டவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். உரையாடலாம். 

மேலும், இந்த விவாதம் புதிய விடயங்களை அறியத் தர வேண்டிய ஒரு அரிய வாய்ப்பு என நினைக்கிறேன். இதில் என் தனிப்பட்ட இயல்புகள், தொழில், இன்னபிற மீதான தாக்குதல்கள் ஒருவருக்கும் ஒன்றையும் புதிதாகப் படிப்பிக்காது என்பதை இந்தத் தாக்குதலை நடத்துவோர் புரிந்து கொள்ள வேண்டும்! இவர்களுக்கு இது பற்றி நான் எழுதும் ஒரே பதிலும் கடைசிப் பதிலும் இது! பயனுள்ள கருத்துகளை இடுவோருக்கு தொடர்ந்து துலங்கல் தருவேன்!

 சரி  நீங்கள் சொன்னபடி நியாயமாக வாதாடுவோம். நீங்கள் கூறிய (மேலே சிவப்பு வர்ணத்திலுள்ள) எமது மிக முக்கியமான, மாநில  சுயாட்சிக்கு  தேவையான அதிகாரங்களை பெற சம் சும்  குழுவினர் செய்த அல்லது விடுத்த நியாயமான கோரிக்கைகளையோ போராட்டங்களையோ சொல்லுங்கள் or பட்டியலிடுங்கள் நாமும் விவாதிக்கிறோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்ன கவலையெனில் முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு தமிழர் தரப்புச் செய்த தவறுகள் செய்யப்போகும் தவறுகள் இவைகளையெல்லாம் யாரது தலையில கொண்டுபோய்க்கொட்டுவது என்பதுதான்.

சர்வதேச போர்குற்றவிசாரணை போர்க்குற்றம் நிகழ்ந்ததற்கான காரணம் அதில் தமிழர்களது நியாயம் அதன்பின்னதான தமிழர்கான நியாயம் எப்படி இருக்கவேண்டும் இவைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச்செல்ல முடியாது தாயகத்தில் எமது அரசியல்வாதிகளை சிங்களமும் இந்தியாவும் முடக்கிப்போட்டுவிட்டது.

இப்போது புலம்பெயர்தேசங்களில் தமிழ்தேசியம் போர்குற்றம் இவைகளைப்பற்றிப்பேசுவோரை ஒரு குறிப்பிட்ட வேலைத்திட்டத்துதில் உள்ளெடுத்து இறுதியில் அவர்களைக்காயடிக்கும் புதிய திட்டத்துடன் இந்திய உளவுப்பிரிவு நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றது.

இதனது ஆரம்ப நடவடிக்கையாகவே பிரான்ஸில் பரிதியைப்போட்டுத்தள்ளியது. பரிதியைப்போட்டுத்தள்ளிய மட்டக்களப்பைச்செர்ந்த கொலையாளி இப்போது சீமனுடன் திரிகிறார் ராஜீவ்காந்தி கொலையில் வெடிகுண்டுக்கு பற்றரி வாங்கிக்கொடுத்தார் எனக்குற்றம் சாட்டப்பட்டு ஆயுள்தண்டனைகைதி பாக்கியநாதன் இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் ஒரு கொலைக்குற்றவாளியை சீமான் தன்னுடன் அரவணைத்திச்செல்வதை இந்திய உளவுப்பிரிவு கண்டும்கானாததுபோலவும் இருப்பது சீமானது போலித் தமிழ்த்தேசியமேயாகும்.

புலம்பெயர்தேசத்தில் தமிழ்தேசியச்செயற்பாட்டாளர்கள் அனேகமாக சுக்ளா ரூட் ரவியர் இவர்கள் உட்பட அனைவரும் இந்த நிகழ்சித்திட்டத்தில் வளைக்கப்பட்டுவிட்டனர். அவர்களது பலவீனங்களைப் பயன்படுத்தியே இவர்கள் அனைவரும் வளைக்கப்பட்டிருக்கிறார்கள் தவிர புலம்பெயர்தேசங்களில் காணப்படும் கோவில் கல்விநிறுவனம் பாடசாலை நலன்விரும்பிகள் இவர்கள் அனைவருமே இதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள் எல்லோரும் இல்லை எனிலும் கணிசமானவர்கள் உள்வாங்கப்பட்டு எமது பலத்தினை வேறு பக்கம் செலுத்து ஒப்புக்குச்சப்பாணியான புலம்பெயர் அமைப்பொன்றை (டயஸ்பொறாவை) உருவாக்கி அனைத்து நாட்டிலும் ஆடவிட்டு பின்பு அவர்களைகொண்டே தமிழ்த்தேசியத்தின் மையப்புள்ளியில் குண்டுவைக்கப்போகிறார்கள். ஆகவேதான் சயந்தன் சுமந்திரன்போன்றோர் இப்போ புலிகளி நேரடியாகவே வசைபாடி புலத்தில் தமிழர் உரிமைமீதான கொஞ்சநஞ்சமுள்ள போராட்டத்துக்கும் மங்களம் பாடுகிறார்கள்.

எவர் தடுத்தாலும் இவை அனைத்தும் நடந்தே தீரும் காரணம் நாம் இல்லாத புலிகளின் முதுகின்மீது எமது அண்மைக்காலத் தவறுகளை மூட்டையாகக் கட்டிவிடத்தயாராக இருக்கின்றோமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ragunathan said:

மருது,

உங்களைப்போலவே தனி ஈழத் தாயகம்தான் எனது இலட்சியமும். புலிகள் இருக்கும்வரை 100% இது நடக்கும் என்று நான் நம்பியிருந்தேன். ஏனென்றால் புலிகள் காலத்தில் இப்படியொரு  அதிசயம் தமிழர்களுக்கு நடந்தால் ஒழிய, வேறு வழியில்லை என்பதுதான் எனது நிலைப்பாடும். ஆனால், 2009 உடன் புலிகளின் நிலைபற்றி ஓரளவிற்கு நாம் எல்லோருக்கும் தெரியும். 

இப்போது நமது முன்னாலிருக்கும் தெரிவுகள் என்ன மருது? 

1. எமது தாயகத்தை ராணுவ ரீதியிலான வெற்றி ஒன்றின்மூலம் மீட்டு, அதன் எல்லைகளைப் பாதுகாத்துக்கொள்ளுதல்.

2. பேரம் பேசக்கூடிய நிலையில் இல்லாமல் சிங்களத்துடன், அது தர விரும்புகின்ற, எதற்குமே பிரயோசனமற்ற தீர்வென்கிற பெயரில் தரும் ஒரு அதிகாரமற்ற தீர்வொன்று.

3. பிராந்திய, சர்வதேச வல்லரசுகளின் அனுசரணையில், அவற்றின் நலன்களுக்குச் சமாந்திரமான முறையில் சிங்களத்தின் மேல் அழுத்தம் பிரயோகிப்பதன் மூலம் பெறப்படக்கூடிய ஓரளவு அதிகாரத்துடனான  தீர்வொன்று.

இதில் முதலாவது தெரிவுக்கு பலம்சேர்க்க எம்மிடம் இப்போது இருப்பது என்ன?

- தன்னலமற்ற, தியாக சிந்தையுடைய தலைமை
- போராடக்கூடிய இளைஞர்கள்
- போராட்டத்தை தக்கவைத்துக்கொள்ளக்கூடிய மக்கள் பலம்
- பிராந்திய , சர்வதேச அதிகாரங்களின் அனுசரணை
- நீண்ட 35 வருடகால இனவழிப்புப் போரின் பின்னர், இன்னுமொரு போராட்டத்தை தாங்கக்கூடிய மக்களின் மனோநிலை
- குறையில்லாத நிதி வழங்கல்

இவற்றில் இறுதியானதைத்தவிர ( இதுகூட, புலிகள் நிதிவளம் என்பது நாம் நினைப்பது போல புலம்பெயர் மக்களின் அன்பளிப்பு அல்லாமல் , புலிகளின் சர்வதேச வலையமைப்பினால் பெறப்பட்ட நிதியே என்று இப்போது சொல்கிறார்கள்) மற்றையவை எவையுமே எமக்குச் சார்பாக இப்போது இல்லை.
யுத்தம் முடிந்து 9 வருடங்களாகியும்கூட, போரின் வடுக்களை இன்னும் சுமந்து வாழும் தாயகம். தலைமை தாங்க எவருமின்றி அநாதைகளாகத் தமிழினம். இன்னொரு ஆயுதப் போராட்டத்திற்கெதிரான பிராந்திய சர்வதேச சக்திகள். இனியொரு போர் வேண்டாம், இந்த அழிவுபோதும் என்கிற தாயக உறவுகளின் மனோநிலை. திட்டமிட்டு அழிக்கப்பட்ட ஒரு சந்ததி. தாயக விடுதலை எனும் நோக்கிலிருந்து மிகவும் திட்டமிட்ட ரீதியில் வேறு ஆசைகளில் நாட்டம் கொள்ள வைக்கப்பட்டிருக்கும் இன்றைய தமிழ் இளைஞர். புலம்பேர் நாடுகளிலிருந்து ஆயுதப் போராட்டம் ஒன்றிற்கு தமது இளையோர்களை வழங்க மறுக்கும் புலம்பெயர் தமிழர்.

நிலமை இப்படியிருக்க, இன்னொரு ஆயுதப் போராட்டத்திற்கு வழியுண்டா??

இரண்டாவ்து, நாம் எதுவுமே செய்யாமல், உள்நாட்டு அரசியலில் மட்டுமே எமது கவனத்தைச் செலுத்தி, எமது இழக்கப்பட்ட உரிமைகள், ஆக்கிரமிக்கப்பட்ட தாயகம், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதிகோரல்...இப்படி எது பற்றியும் கவலைப்படாமல், சிங்களவனே மறந்துபோகும்படி அரசியல் செய்வது. சிலவேளை ஏதோ போனால் போகிறது என்று ஒரு கிராம சபையோ அல்லது மாவட்ட சபையோ எமக்குக் கிடைக்கலாம்.

மூன்றாவது இப்போது நடப்பது. அதாவது, இந்திய, மேற்குல நலன்களுக்கு இசைவாக அரசியல் செய்வதன் மூலம், சிங்களத்தை ஓரளவு அதிகாரம் மிக்க தீர்வொன்றுக்கு அழுத்துவது. இதற்கு போர்க்குற்றங்கள் மீதான விசாரணைக்கான கோரிக்கை என்பதை ஒரு நெம்புகோலாகப் பாவிப்பது. மேற்குலகிற்கு ஆதரவான சிங்கள அரசொன்றை ஆதரிப்பதன் மூலம், மேற்குலகின் அழுத்தங்களை அவ்வரசு மீது எமது நலன்களுக்காகப் பிரயோகிப்பது. இது எவ்வளவு தூரத்திற்கு எமக்கு நண்மையாக அமையும் என்பது தெரியாவிட்டாலும் கூட, முதலாவது மற்றும் இரண்டாவது தெரிவுகளுடன் ஒப்பிடும்பொழுது இப்போதைக்கு எம்மால் செய்யக்கூடியது.

இது எனது கருத்து.

இதுபற்றிய உங்களின் கருத்துபற்றியும் அறிய விரும்புகிறேன். சிலவேளை, நான் யோசிக்காத இன்னொரு கோணத்தில் நீங்கள் இதைப் பார்க்கலாம்.  இங்கு நான் குறிப்பிட்ட தெரிவுகளுக்கு மேலதிகமாக இன்னொரு தெரிவு உங்களுக்குத் தெரியலாம். முடிந்தால், அதை இங்கே பதியுங்கள்.

தொடர்ந்து பேசலாம்.

நீங்கள் எதிர்பார்க்கும் எதையும் செய்ய தகுதி இல்லாத சுத்த சுயலாவதிகளாக சம்மந்தனும் 
சுமந்திரனும் இருக்கிறார்கள் ... இந்த  இருவரால் தமிழர்கள் பொன்னான காலத்தை கூட இளந்துகொண்டு இருக்கிறார்கள். 
வார்த்தை ஜாலம் போட்டு தயவுசெய்து உண்மை நிலைமையை மறைக்காதீர்கள்.

இன்றைய நிலையில் சிங்களத்துடன் தயவு பண்ணி கேட்டோ, அல்லது வாய்த்தர்க்கம் செய்தோ 
பெற கூடிய நிலையில் ஏதும் இல்லை. 
காரணம் உண்மை நிலைமையை புரிந்துகொள்ள வேண்டும். தெற்கு அரசியல் நிலைமை அப்படி 
யார் ஒருவர் கொடுக்க முயற்சி செய்தாலும் அது அவரின் அரசியல் தற்கொலையாகவே இருக்கும் 
ஆகவே காலத்தை இழுத்து இனப்பரம்பலை சீர்குலைத்து யாழில் கூட முஸ்லீம் சிங்களம் தமிழ் என்று வாக்கை 
சிதறடித்து தமிழரின் வாக்கு பலத்தைக்கூட சிதறடிக்க வேண்டும் என்பதே சிங்களத்தின் திட்டம். 

இப்போ தாயக தமிழர் பொருளாதார ரீதியாக விருட்ஷமாக எழவேண்டும் 
இதுக்கான அனைத்த்து சாத்தியமும் எம் கண் முன்னே கிடக்கிறது. இலங்கை பொருளாதாரத்தில் 
குறைந்த பட்ஷம் 25% கட்டுப்படுத்த கூடிய சக்தி புலம்பெயர் தமிழரகளிடம் இருக்கிறது.
இப்போ எமக்கு தேவை நேர்மையுடன் தமிழர் நலன் சார்ந்து இருக்க கூடிய ஒரு தலைவர்.கனடாவில் மட்டும்.
2-3 லட்ஷம் மக்கள் இருக்கிறார்கள் ஒவ்வருவரும் மாதம் வெறும் $10 கொடுத்தால் $25 லட்ஷம். இதை இலங்கை பணத்தில் இப்போது மாத்தினால்  457,350,688.00 ரூபா. இவளவு பணத்திலே போதும் போதும் என்று ஒரு மாதம் யுத்த பாதிப்புக்கு உள்ளன மக்களை பார்த்துக்கொள்ள முடியும்.
இனி புலம்பெயர் மக்கள் நண்கொடையாக கொடுக்க தேவை இல்லை 
ஒவ்வருவரும் $500 முதலீடு செய்கிறோம் என்று வைத்து பாருங்கள் குறைந்த பட்ஷம் 10% சாத்தியமான வருமானம் இப்போ இலங்கை பொருளாதார நிலைமையில் இருக்கிறது.
இப்போதைய அரசியல் சூழலில் இலங்கை சந்தையை 25% என்றாலும் கைப்பற்றுவதே தமிழர்களின் பெரு வெற்றி. இதுக்கான சாத்தியம் என்னவோ 1980 களில் கோவில் திருவிழாவில் கச்சான் வாங்குவதுபோன்று 
கனிந்து கிடக்கிறது. 

இந்த பொருளாதார சக்திதான் பிராந்திய அரசியல் பேச முடியும் 
பேசினால் அவர்கள் கேட்ப்பார்கள் ... கேட்கவேண்டிய ஒரு சூழ்நிலை உண்டு 
ஒற்றுமையின்பால் நம்பிக்கையின்பால் கட்டியமைக்க எமக்கு ஒரு தலைமை மட்டுமே வேண்டும்.
பொருளாதார வியூகங்களை விளங்க கூடிய மக்களுக்கு விளக்க கூடிய வெறும் 25 ஈழத்தமிழர்கள் போதும்.

இலங்கையில் எத்தனை ஒப்பந்தங்கள் எம் கண்முன்னே கிழித்தும் பாராளுமன்றில் தீயில் போட்டும் 
இல்லாமல் செய்யப்பட்ட்து?
இந்த முக்கிய ராஜ்ஜியம் என்பது காலத்தை கடத்தும் அவர்கள் திட்டம் ... இது விளங்காத பால்குடி அல்ல 
சுமந்திரன். சுமந்திரனுக்கு போதிய சட்ட அறிவு இருக்கிறது .. இது நிறைவேறினால் கூட 5 ஆண்டில் 
கிழித்து போடுவார்கள் என்பது தெரியும். 

திரும்ப திரும்ப ராஜததந்திரம்  ..... சாத்தியமானது ... என்று அடைமொழி பேசுவதை 
விடுங்கள். ஆயுத போராட்டம் சாத்தியம் இல்லாத ஒன்று என்று இங்கு யாழில் 2005லேயே நான் எழுதி இருக்கிறேன். அது எமது தற்பாதுகாப்பு போராட்டமே தவிர. எமது வெற்றிக்கான போராட்டம் அல்ல.
புலிகள் தம் சக்திக்கு விஞ்சி பலமாக இருந்தும்..... மக்களாகிய நாம் அவர்களின் தலையில் அனைத்தையும் 
கட்டிவிட்டு சோம்பேறியாக இருந்தோம் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும். 

கல்வியை எடுத்தால் மனப்பாடம் செய்து பரீடசையில் பாஸ் ஆகி பல்கலை போகிற கூட்டமாக 
மட்டுமே யாழ் சமூகம் இருக்கிறது. இதை தகர்த்து "கற்றல்" என்ற நிலையில் மாணவர்களை கல்வியில் 
மேம்படுத்த வேண்டும். தென் கொரிய 25 ஆண்டுக்கு முன்பு கல்விக்கு செலவு செய்ய தொடங்கியது 
இன்று உலகின் முதலாவது தரமான கல்வி கற்கும் நாடாக மாறி உலகின் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இவையெல்லாம் சிங்களத்தால் திட்டம் இட்டு அழிக்க படுகிறது.
சிங்கள ஆதிக்க சக்தி 2009 புலிகளை வென்றவுடன் வீட்டுக்கு போகவில்லை ஒவ்வரு நாளும் எதோ ஒன்றை சிந்தித்துக்கொண்டே இருக்கிறது 
இவர்களுக்கு வழிகாட்டியாக இஸ்ரேல் யூதரும்  ஆரிய பார்ப்பனர்களும் இருக்கிறார்கள் என்பதை 
மறந்த நிலையில்தான் நீங்கள் எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்.

எதிரி எதிர்பார்க்காத இடத்தில் நாம் தாக்குதல் செய்வதுதான் எதிரியை வெல்ல ஒரே வழி 
இது ஒரு பழைய சிர்த்தந்தம் என்றாலும் எக்காலமும் பொருந்துகிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Maruthankerny said:

சுப்பர் கருத்து.ஆனால் இதுக்கு நம்மவர்கள் சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு இருக்கிநார்கள்.

Link to comment
Share on other sites

சுமந்திரன்...எம்.ஏ! ... காலம் 2017, வடமராட்சி கிழக்கில் கொலை முயற்சியிலிருந்து மயிரிளையில் உயிர் தப்பினாராம்! இவர் மீது கொலை வெறித்தாக்குதல் நடாத்த முற்பட்டது, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளாம்! ரணில்/சுமந்திரன் கூட்டு இக்கொலை முயற்சியை தெட்டத்தெளிவாக துப்புத்துலக்கி முறியடித்துள்ளனராம்!

இந்தநாடகம், புலிகளின் அழிவிற்கு 10 வருடங்களுக்கு பின்னர் அரங்கேற்றப்பட்டது. இந்நாடகத்தை தொடர்ந்து சில முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்பட்டோ/சரனடைந்த பின் விடுவிக்கப்பட்ட மீண்டும் கைது செய்யப்பட்டனர்.  

ஒருபுறம் எமக்காக தம் வாழ்வை அர்பணித்து சென்றவர்கள், பின் கைது செய்யப்பட்டோ/சரணடந்தவர்களில், சிலர் விடுவிக்கப்பட்டு தமது வாழ்வை கட்டியெழுப்ப பெரும் போராட்டத்தில் அங்கு தத்தளிக்க, அவர்களின் இருப்புக்கே உலை வைக்க அரங்கேறியது இந்நாடகம்.

மறுபுறம் விடுதலைக்காக .. பெற்றோர்/மனைவிமார்/பிள்ளைகளின் ஓயாத போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்க .. ஒளிக்கீற்று தெரியுமா என உள் காத்திருக்கும் முன்னாள் போராளிகளுக்கு ... இவர்களும் வெளியே வந்தால்???? 

மேலாக, இந்நாடகத்தை எவ்வாறு எம்.ஏயும், செம்பு தூக்கிகளும் சர்வதேசத்துக்கு கொண்டு செல்கிறார்கள் பாருங்கள்....

1. தமிழ் விக்கிபீடியாவில், இந்நாடகம் பற்றிய எவ்வித தகவலும் இல்லை.

https://ta.wikipedia.org/wiki/ம._ஆ._சுமந்திரன்

2. ஆங்கில விக்கிபீடியாவில் ... விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் ... வர்னணைகளுடன்

Assassination plot[edit]

Four Ex-LTTE members were arrested in 2017 for allegedly plotting to assassinate Sumanthiran. They were accused of planning to use claymore mines on the Soranpatru-Thaalayady road on two occasions - December 12, 2016 and January 13, 2017. It is believed overseas LTTE faction headed by the Norway-based Perinbanayagam Sivaparan alias Nediyavan. As a result the National Security Council led by President Maithripala Sirisena and Prime Minister Ranil Wickremesinghe expressed concern and increased security to Sumanthiran.[30]

Before the assassination plot Sumanthiran was attacked and called a traitor both locally and internationally a practice termed "traitorisation" carried out by the LTTE in assassinations of Tamil politicians such as Neelan Tiruchelvam. However the attempt failed after an Ex-LTTE member that believed in Sumanthiran's idea of Tamils living equally in Sri Lanka as well as his service to Ex-LTTE members and fearing upsetting the fragile peace refused an offer of money and safe passage to Europe by a group of Ex-LTTE members and notified the Terrorism Investigation Department(TID) of the Police. The TID despite initial doubts became convinced and notified Sumanthiran who was going for a cultural festival but he was too late to turn back and continued. Security for Sumanthiran was increased and Bomb squads were deployed to the cultural festival. Both the police and the army using their intelligence networks began tracking the Ex-LTTE members. Murugiah Thavavaenthan was arrested and interrogated leading to the arrest of Karalasingham Kulendran alias "Master". After interrogation the police raided houses of Kulendran's relatives which led to Calymore mines being found. After arrests of two more Ex-LTTE members Chandrasekaralingam Vasudevan alias Mathan an Ex-Tiger was arrested with a couple with Kerala ganja. Mariyanayagam Lewis Ajanthan was known by the nom de plume "Jana" was arrested and six exploders alongside several Kilos of Kerala Ganja was found.[31][29] After being inquired about the incident Sumanthiran said, "I will continue to go to the North as before and continue to directly engage with the people as I have been doing in the past". He also expressed concern about Former LTTE members being manipulated by cash incentives[29]

Northern Province Chief Minister C. V. Vigneswaran expressed doubts over the alleged plot and called it a "a ploy by the government to not reduce the presence of military in the north." He also noted that those arrested "They have not been charged with attempting to murder a parliamentarian, but only charged for possessing narcotics." Sumanthiran in response said " he could not verify the truthfulness of the assassination plot."[32]

The Global Tamil Forum expressed shock at the assassination attempt and praised Sumanthiran's "courage, passion and commitment to peacefully resolve the grievances of the Tamil people by adopting consensual approach, particularly through the constitutional process"[33]

https://en.wikipedia.org/wiki/M._A._Sumanthiran

... வடமராட்சி பகுதியில் உள்ள மக்கள், கடந்த தேர்தலில் எம்.ஏ, எவ்வாறு வென்றார் என்று கதை கதையாக கூறுவதை போய் கேளுங்கள்! எம்.ஏக்கு, வடமராட்சியில் எவ்வளவு செல்வாக்கு உள்ளது, என்பதனை படித்த/பாமர மக்களிடம் கேளுங்கள்! ... அதை விடுத்து அவரை பற்றி பேசினால், எமக்கு மூலம் கொதிக்குதாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/31/2018 at 11:52 PM, Jude said:

ரகுநாதன்,  எங்களைப் பற்றிய உங்கள் விளக்கத்துக்கு நன்றி. இதுவே உண்மையும் ஆகும்.

இன்னொரு வேலுப்பிள்ளை பிரபாகரன் வராவிட்டாலும், விக்னேஷவரனோ, சுமேந்திரனோ ஒரு நல்ல தீர்வை பெற்றுத் தருவதில் வெற்றி பெறத்தான் போகிறார்கள். அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம். இங்கே நான் நாம் என்று சொல்வது எம் போன்றவர்களையே. ஜஸ்டின் வேறு விதமாக நினைத்தால் அது பற்றி அவர் தான் சொல்ல வேண்டும்.

இதில் நாம் வேறாக நின்று என்ன சாதிக்க இயலும்? நானும் உங்கள் ரகம் தான். ரகு சொன்னது உண்மை தான்! அதைப் புரிந்து கொள்ளாத அளவுக்கு உணர்ச்சி வசப்பட்டவர்கள் தான் இங்கே உடனே பொல்லெடுப்பதும் பட்டம் கட்டுவதும்! பதிலுக்கு நானும் (நீங்கள் செய்வதில்லை) பொல்லெடுத்தால் கல்வித் திமிர் என்பார்கள். அதனால் இவர்களுக்குப் பதில் அளிப்பதையே விட்டு விட்டாலும் சம்பந்தமில்லாத திரிகளில் எல்லாம் காவித் திரிந்து கருத்து வைப்பார்கள்! பார்க்கலாம், மட்டுறுத்தினர்கள் கையில் விட்டு விடலாம்! 

On 1/1/2019 at 10:13 AM, Nellaiyan said:

ஜஸ்ரின்,  ... உமது பாசையில் கதைப்போமாயின் ..  இங்கு இப்போ நாமெல்லாம் புலிகளால் கொல்லப்பட்டவர்கள் என்று கூறுவதும், அதுவும் ஒரு கொன்ஸ்பிரசி கதைதான்! பார்த்தோமா? சுடுவதை? கொல்லப்பட்டதை? ... என்ன ஆதாரம்???

அதற்கு மேல் கொன்ஸ்பிரசி கதைகள் ... கென்னடி சுடப்பட்டது முதல் டயானாவின் விபத்து, 9/11, ... எல்லாவற்றிற்கும் ஆதாரம் இல்லைத்தான். ஆனால் உண்மை?

இன்று கைதுசெய்யப்பட்ட/சரனடைந்த முன்னாள் போராளிகள் பலர் சிங்கள பகுதிகளில் உள்ள காடுகளில் உள்ள இரகசிய சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டது என்பதும், உமது பார்வையில் கொன்ஸ்பிரசிதான்!

நாமும் நாலு ஆங்கில வார்த்தை தெரிந்தவுடன், கலந்து, போட்டுத் தாக்குகிறதுதான்!

எனக்கு அவ்வளவு ஆங்கிலம் தெரியாது! ஆனால், கொன்ஸ்பிரசி என்றால் என்னவென்று தெரியும். கொன்ஸ்பிரசிக் காரரின் இயல்பே முழு உண்மை, பாதி உண்மை, முழுப்பொய் இவை மூன்றையும் சேர்த்து, அவசரத்தில் இருக்கும் வாசகர்களைப் பேய்க்காட்டுவது தான்! இதற்கு நீங்கள் மேலே போட்டிருக்கும் கலவை நல்ல உதாரணம்: போராளிகளின் சிறை வாழ்வு, புலிகளில் யார் போட்டார்கள், என்ன வழி முறையில் போட்டார்கள் இவை உண்மையான தகவல்கள் (நான் பக்கத்தில் நின்று பார்க்கவில்லை, நீங்களும் பார்த்திருந்தால் இங்க இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்!). கெனடி கொலை, டயான மரணம்- முழுப் பொய் - ஒரு ஆதாரமும் இல்லை கொன்ஸ்பிரசி தியரிகளுக்கு! 

உங்களுக்கு மேலும் சில கொன்ஸ்பிரசி கதைகள் சொல்லவா? 9/11 அல் கைடா செய்யவேயில்லை, உலகம் உருண்டயென்பது பொய்-தட்டை தான் அது, நீரிழிவை முற்றாகக் குணமாக்கும் மருந்து கண்டு பிடிக்கப் பட்டு விட்டது, இன்னும் வெளியே விடவில்லை..இப்படி ஈசியாக அடுக்கிக் கொண்டே போகலாம், வலு சுலபம் ஏன் என்றால் "நீ பாத்தியா?" என்ற கேள்வியைத் தவிர வேறெதையும் கொன்ஸ்பிரசிக் காரர் காட்டவே தேவையில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ragunathan said:

நான் உங்களிடம் கேட்பது, உங்களின் விமர்சனங்களை எழுதப்படும் கருத்துக்களுக்கு முன்வையுங்கள். தயவுசெய்து புலிகளை மீண்டும் மீண்டும் விமர்சிப்பதால் நீங்கள் நண்பர்களை அடையப்போவதுமில்லை, உங்களின் கருத்தை மற்றையவர்களிடம் கொண்டுசெல்லப்போவதுமில்லை. ஏனென்றால், நான் உற்பட இன்னும் லட்சோப லட்சம் தமிழர்களுக்கு அவர்களே என்றும் நாயகர்கள் , உங்களுக்குப் புரிந்தால்ச் சரி !

  ரகு, உங்கள் கடைசிக் கருத்துக்கு மட்டுமே எனது பதில்: நண்பர்களை அடைவதற்காக ஒரு அமைப்பின் தவறுகளை அப்படியே பேசாப் பொருளாக நான் கடந்து போகப் போவதில்லை! இது நான் ஆதரித்த, இன்றும் நினைவு நாளுக்குப் போகிற ஒரு அமைப்பு. அதன் சரி பிழைகளைச் சொல்ல எனக்கு யாரின் அனுமதியும் தேவையில்லை! இது வட கொரியா அல்லவே , ஒரு நாயகர்/நாயகர்களை வைத்துக் கொண்டு வழி பட? எனவே நான் நினைக்கிறேன் உங்கள் பக்தியை யார் மீதும் நீங்கள் திணிக்க முடியாது! அது தவறு! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

   உங்கள் பக்தியை யார் மீதும் நீங்கள் திணிக்க முடியாது! அது தவறு! 

அதுபோலத்தான் உங்கள் கருத்துக்களையும் யார் மீதும் திணிக்க முடியாது.
அதெப்படி நீங்கள் சொல்வதெல்லாம் அப்பட்டமான உண்மை மற்றவர்கள் சொல்வதெல்லாம் கற்பனை அல்லது கான்ஸபிரசி. முதலில் நான்தான் அதிமேதாவி சுமந்திரன்தான் எங்களை மீட்டெடுக்க வந்த கலியுக கடவுள் என்ற புராணத்தை விடுத்து தாயகத்தின் பொருளாதாரத்தை கட்ட எழுப்ப யாழ் கள உறுப்பினர்களாகிய  நாம் என்னென்ன செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என்ற மருதுவின் யோசனைக்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக நாம் என்ன செய்யப்போகிறோம் அல்லது அதற்கான திட்ட வரைபுகள் ஏதேனும் இருந்தால் அது பற்றி விவாதிப்போம். கைவிடப்பட்ட மக்களுக்காவது எதாவது நல்லது செய்ய யோசிப்போமா?? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.