Jump to content

யமனை பச்சடி போட்டவர்கள்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

image_1545877862-532835e823.jpg

நம்ம ஊர் பேச்சு வழக்கில, யமனை பச்சடி போட்டவர்கள் என்றால்.... தோல் இருக்க சுளை விழுங்கும், அடப்பாவி ரகம்.

விசயம் என்னெவெண்டால், தென்னிலங்கை மவாத்தகம என்ற ஊரில் இரண்டு பொம்பிளையளுக்க சண்டை. 

சீட்டுக் காசு சண்டையோ, ஒருத்தியின் கணவருடன் அடுத்தவோ, தொடுப்போ.... ஏதோ ஒண்டு....

சண்டை முத்தி, போலிஸைக் கூப்பிட்டாச்சு...

போன போலீசுக்காரர்கள்..... பிரச்சனையை முடித்து வைக்க முடியல்ல..... ஸ்டேஷனுக்கு வந்து இன்ஸ்பெக்டர் ஐயாவை (மாத்தையாவை) பாருங்கோ எண்டு துண்டு எழுதிக் கொடுத்துப்போட்டு வந்திட்டினம்.

இரண்டு பொம்பிளையளும் ஸ்டேஷன் வந்தாச்சு.

மாத்தையா விளப்பம் கேட்க தொடங்கிட்டார். இடையில சில போலீசுக்காரர் வந்து ஏதாவது கேட்டால் அதுக்கும் எதாவது சொல்லுறார்.... இன்ஸ்பெக்டர் ஐயா எண்டால் சும்மாவே... பிஸியா தானே இருப்பர்.

பொம்பிளையளிடம் மேல சில கேள்விகளை கேட்க்கிறார். 

இடையில யாருக்கோ போன் போடுவதாக சொன்ன நினைவு வருகிறது. போனை தேடினால் காணம்... எங்கப்பா, இப்பதானே இந்த மேசையில் வச்சேன்.... மேசை, லாச்சி எல்லாம் தேடியாச்சு.... காணம்....

எங்கப்பா போனது.... சடாரென்று ஒரு ஐடியா... ஒரு போலீஸ்க்காரரை கூப்பிட்டு.... தனது நம்பருக்கு போனைப் போடுமாறு சொல்ல....

சத்தம்... ஒரு பெண்ணின் கைப்பையில் இருந்து வருகிறது.... இன்ஸ்பெக்டர் ஐயா.... பையை சோதனை செய்தால் அதுக்குள்ள அவரது போன் சிரிக்கிறது...

இப்ப பிரச்சனை என்னெண்டா.... அவையள் உண்மையில சண்டையா, அல்லது போன் களவெடுக்க ரூம் போட்டு ஐடியா போட்ட கூட்டுக் களவாணிகளா...

அடுத்த பிரச்சனை என்னவெண்டால், சட்டப்படி அந்த இன்ஸ்பெக்டர் ஐயா நடவடிக்கை எடுக்க ஏலாது.

அவர் முறைப்பாடு மட்டுமே கொடுக்கலாம். வேற போலீஸ் ஆக்கள் விசாரிப்பினமாம்....

ஆகவே.... இன்ஸ்பெக்டர் ஐயா .... போலீஸ் ஸ்டேஷனிலேயே வேலையை காட்ட வெளிக்கிட்ட, உந்த யமனை பச்சடி போட்ட பொம்பிளையள் மேல முறைப்பாட்டினை கொடுத்துப் போட்டு....நொந்து போய்... விசாரணைக்கு தயாராகிறார்.

http://www.dailymirror.lk/article/Policeman-s-phone-rings-in-woman-s-bag-inside-police-station-160333.html

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அந்த  இன்ஸ்பெக்டர்,  அந்த  போனை (வாங்க)  ஆட்டையை  போட...   
எவ்வளவு கஸ்ரப் பட்டிருப்பார் என்பது, அவருக்கு மட்டுமே தெரியும். :grin:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மனிதர் சுதந்திரமாக வாழ்ந்தார்கள்  தொலைபேசி  சுவரோடு கட்டியிருந்தபோது.
  • விவசாயியுடன் சண்டைக்கு வரவேண்டும் என்றால் கொஞ்சம் விடயத்தோடு வரவேண்டும்.  இல்லையோ அவதாரில் உள்ள  மிளகாய் தலையில் அரைக்கப்படும். Amid COVID-19 pandemic, flu has disappeared in the US NEW YORK (AP) — February is usually the peak of flu season, with doctors’ offices and hospitals packed with suffering patients. But not this year. Flu has virtually disappeared from the U.S., with reports coming in at far lower levels than anything seen in decades.  Experts say that measures put in place to fend off the coronavirus — mask wearing, social distancing and virtual schooling — were a big factor in preventing a “twindemic” of flu and COVID-19. A push to get more people vaccinated against flu probably helped, too, as did fewer people traveling, they say. Another possible explanation: The coronavirus has essentially muscled aside flu and other bugs that are more common in the fall and winter. Scientists don’t fully understand the mechanism behind that, but it would be consistent with patterns seen when certain flu strains predominate over others, said Dr. Arnold Monto, a flu expert at the University of Michigan. Nationally, “this is the lowest flu season we’ve had on record,” according to a surveillance system that is about 25 years old, said Lynnette Brammer of the U.S. Centers for Disease Control and Prevention.  Hospitals say the usual steady stream of flu-stricken patients never materialized. At Maine Medical Center in Portland, the state’s largest hospital, “I have seen zero documented flu cases this winter,” said Dr. Nate Mick, the head of the emergency department. Ditto in Oregon’s capital city, where the outpatient respiratory clinics affiliated with Salem Hospital have not seen any confirmed flu cases.  “It’s beautiful,” said the health system’s Dr. Michelle Rasmussen. The numbers are astonishing considering flu has long been the nation’s biggest infectious disease threat. In recent years, it has been blamed for 600,000 to 800,000 annual hospitalizations and 50,000 to 60,000 deaths. Across the globe, flu activity has been at very low levels in China, Europe and elsewhere in the Northern Hemisphere. And that follows reports of little flu in South Africa, Australia and other countries during the Southern Hemisphere’s winter months of May through August. The story of course has been different with coronavirus, which has killed more than 500,000 people in the United States. COVID-19 cases and deaths reached new heights in December and January, before beginning a recent decline. Flu-related hospitalizations, however, are a small fraction of where they would stand during even a very mild season, said Brammer, who oversees the CDC’s tracking of the virus. Flu death data for the whole U.S. population is hard to compile quickly, but CDC officials keep a running count of deaths of children. One pediatric flu death has been reported so far this season, compared with 92 reported at the same point in last year’s flu season. “Many parents will tell you that this year their kids have been as healthy as they’ve ever been, because they’re not swimming in the germ pool at school or day care the same way they were in prior years,” Mick said. Some doctors say they have even stopped sending specimens for testing, because they don’t think flu is present. Nevertheless, many labs are using a CDC-developed “multiplex test” that checks specimens for both the coronavirus and flu, Brammer said. More than 190 million flu vaccine doses were distributed this season, but the number of infections is so low that it’s difficult for CDC to do its annual calculation of how well the vaccine is working, Brammer said. There’s simply not enough data, she said.  That also is challenging the planning of next season’s flu vaccine. Such work usually starts with checking which flu strains are circulating around the world and predicting which of them will likely predominate in the year ahead. “But there’s not a lot of (flu) viruses to look at,” Brammer said. ___ The Associated Press Health and Science Department receives support from the Howard Hughes Medical Institute’s Department of Science Education. The AP is solely responsible for all content. https://apnews.com/article/flu-has-disappeared-us-pandemic-2145d999319b53d8a32a829a324f398d  
  • இறந்த உடல்களை புதைக்க எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவில் போராட்டம்: ஊடகங்களுக்கு தடை கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இறந்த உடல்களை புதைப்பதற்கு அரசங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து இன்றைய தினம் புதன் கிழமை காலை 9 மணியளவில் இரணை மாதா நகர் பகுதியின் பங்குதந்தை மடுத்தீன் பத்தினாதர் அடிகளார் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது. குறித்த போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட கோட்ட முதல்வர், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் மெசிடோ நிறுவனத்தினர், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அரசாங்கத்தின் தீர்மனத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததுடன் அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பதற்கான  மகஜரும்  வாசிக்கப்பட்டது. குறித்த போராட்டத்தின் பின்னர் இரணை மாதா நகர் பகுதியில் இருந்து படகு மூலம் இரணை தீவுக்கு பொது மக்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் செல்ல முயன்ற போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போராட்ட குழுவினரால் பூநகரி பிரதேச செயலாளர் ,யாழ் மறைமாவட்ட ஆயர் ,யாழ் மனித உரிமை ஆணைகுழு காரியாலங்களுக்குரிய மகஜர் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளது.     https://www.virakesari.lk/article/101483  
  • ஆபத்தான உணவாக இடியப்பங்கள்.! இடியப்பம் இலங்கையில் பிரபலமாக விற்பனையாகும் அல்லது வீட்டில் செய்யப்படும், எம்மில் பெரும்பாலானோருக்குப் பிடித்த ஆரோக்கியமான காலை, மாலை உணவாகும். சுமார் இருபது வருடங்கள் முன் பிரம்பு மற்றும் பனையோலை தட்டுகளில் அவிக்கப்படும் இடியப்பம் உண்மையிலேயே ஓர் பாதுகாப்பான உணவாக இருந்தது. ஆனால், தற்போது பிளாஸ்டிக் தட்டுகளின் வருகையுடன் அவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. அண்மையில் கொழும்பில் உள்ள ஓர் சகோதர மொழி பொறியியலாளரான நண்பர் ஒருவர் இடியப்பம் பற்றி வெளியிட்ட கருத்துக்கள் உண்மையில் அதிர்ச்சி தரக்கூடியனவாக இருந்தன. தினசரி மூன்று வேளை கூட இடியப்பம் விரும்பி உண்ணக்கூடிய அவரின் உறவினர் ஒருவருக்கு வந்த புற்றுநோய்க்கு, பிளாஸ்டிக் இடியப்ப தட்டுக்களும் ஓர் காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் மட்டத்தில் கருத்து நிலவியதாக அவர் கூறினார். இதனை நிரூபிக்க இப்போது முடியாவிடினும், நிச்சயமாக நிராகரிக்க முடியாது. பிளாஸ்ட்டிக்கினை உயர் வெப்பத்தில் அவிக்கும் போது நிச்சயம் உடல் நலத்திற்கு தீங்கு தரும். ஆகவே இதனை ஓர் முன்கூட்டிய எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு பதில் பனையோலை மற்றும் பிரம்பு தட்டுகளுக்கு உடனே மாறுவோம். கற்பகம் பனம்பொருள் விற்பனை நிலையம் மற்றும் கைப்பணி பொருட்கள் விற்கப்படும் கடைகளில் இயற்கை மூலப்பொருட்களாலான இடியப்ப தட்டுக்களை வாங்கலாம். இதனால் நமது உள்ளூர் உற்பத்தியாளர்களும் ஊக்குவிக்கப்படுகின்றனர். மேலும் இடியப்பம் வாங்கும் நுகர்வோரும், அடுப்பிலிருந்து இறக்கிய சூடான இடியப்பங்களை உடனே பொலித்தீன் பைகளில் போட்டு பெற்றுக்கொள்வதை தவிர்க்க வேண்டும். வீட்டிலிருந்து பிளாஸ்டிக் அல்லாத பாத்திரங்களை அல்லது வாழை இலையை கொண்டு சென்று வாங்கலாம். சில தசாப்தங்கள் முன் இவ்வாறே நாம் வாங்கினோம். இடியப்பம் மட்டுமல்லாது, சூடான பிட்டுக்கு, அதன் முழு நீளத்துக்கும் வாழை இலை போடாமல் நேரடியாக பொலித்தீன் தாளினால் (Lunch Sheets) சுற்றி விற்பனைக்கு வைப்பதையும், சூடான கறி, சாம்பார், சொதி போன்றவற்றை போலித்தீன் பைகளில் கட்டுவதை ஊக்குவிக்காதிருப்போம். பெருமளவில் சோறு மற்றும் பிரியாணி சமைப்போர், அரிசி வேகுவதற்கு வாழையிலைக்குப் பதில் பொலித்தீன் போட்டு மூடுவதை தவிர்ப்போம். அலுவலகம், பாடசாலை செல்வோருக்கு நேரடியாக பொலித்தீன் தாளில் (Lunch Sheets ) உணவு கட்டிக்கொடுப்பதை தவிர்த்து, வாழை, தாமரை இலை பயன்படுத்துவோம். முடியாவிடின் பிளாஸ்டிக் அல்லாத உணவுப் பெட்டிகளையும், வாகனங்களில், முச்சக்கர வண்டிகளில் செல்வோர் பீங்கான் கோப்பைகளில் சிரமம் பாராது உணவு கொண்டு செல்வோம். வாகனங்கள், Racing சைக்கிள், ஸ்கூட்டர், முச்சக்கர வண்டி வைத்திருப்போர், பிளாஸ்டிக் போத்தல்களில் குடிநீர் வைப்பதை முற்றிலும் தவிர்ப்போம். அவற்றுக்குப் பதில் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் அல்லாத வேறு பாதுகாப்பான போத்தல்களை பயன்படுத்துவோம். இன்று நம் அறியாமை மற்றும் சோம்பேறித்தனத்தால், அதீத பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை மூலம் எம்மையையுமறியாது, கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலில் விஷமேற்றிக் கொண்டுவருகிறோம் என்பது நிச்சயமான உண்மை. மாற்று வழிகளைத் தேடுவோம். தெரிந்தே ஆபத்தினுள் வீழ்வதை தவிர்ப்போம். இது நம் ஆரோக்கியமான வருங்காலச் சந்ததிகளுக்கும் மற்றும் நமக்குமாக. https://puthusudar.lk/2021/03/01/ஆபத்தான-உணவாக-இடியப்பங்க/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.