• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • அறிவியல் வளர்ச்சியையும் மக்களின் நம்பிக்கையையும் அவர்களின் அனுபவ ஆதாரங்களையும்  ஒன்றாக்கிச் சிலர் குழப்பமடைந்து மற்றவர்களையும் குழப்ப முயல்கினறனர் இப்போது வளர்ந்திருக்கும் அறிவியல் எல்லாம் எமது முன்னோர்களின் நம்பிக்கையின்   ஆதாரத்தின்படிதான் வளர்த்துக்கொண்டு வருகின்றது எமது முன்னோர்கள் அன்றே சூரிய மண்டலத்தையும் கிரகங்களையும் அறிந்திருந்தார்கள். சமுதாயத்தில் சுகாதாரம் பேணுதல் நலமான வாழ்க்கை எனப்பலவற்றையும் பேணி வந்துள்ளார்கள் கருவிலே குழந்தை எப்போது ,  எப்படி வளர்ச்சியடையும் என்பதையும் அறிந்து வைத்திருந்தனர் அதற்கு ஒரு உதாரணம்  இந்த உடலும், உயிரும் எப்போது எப்படித் தோன்றுகின்றன? எது முதலில் உருவாகிறது?, உடலா?, உயிரா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அகத்தியர் தனது "அகத்தியர் ஆயுள் வேதம்” என்ற தனது நூலில் பதில் வைத்திருக்கிறார். சென்மமனிதர் தாமுஞ் சென்மிக்கும்வாறு கேளாய் இன்னமுஞ் சுக்கிலத்தில் பிராணவாய்வதுவுஞ் சென்று தின்னமாய் பிராணவாயுவு சென்றது கோபமுற்றி யுன்னுமாமி ரத்தஞ்சூழ்ந்து வுதாரணவாய் வளர்க்கம் சூழ்ந்து சுக்கிலதில் சுரோணிதங் கலக்குமென்று பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திடும் குமிழிபோல ஏந்தியே திரளுமேழிலீரேழு தன்னிலூர்க்கு மாய்ந்த நாளிருபத்தைந்தி லருங்முளை போற்றோன்றும்  -அகத்தியர். -முந்திய திங்கள்தன்னில் கருமுளைத்தது கட்டியாகும் பிந்திய திங்கள் தன்னிற் பிடரிதோள் முதுகுமன்றி யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா யரையுங்கால்கள் ளுந்திக்கு யுயிரும்வந்தே யிணைந்திடுமென்றே. -அகத்தியர் இதைவிட இன்னும்பல விடையங்களை நமது முன்னோர்கள் அறிவியல் வளர்ச்சிக்கு முன்னரே அறிந்து வைத்துள்ளார்கள். ஆகவே பொதுவாக நமது முன்னோர்களையும் அவர்களது அனுபவ ஆதாரங்களையும் நம்பிக்கைகளையும் மட்டந்தட்டுவதை நிறுத்துங்கள்   
    • அவ்வாறான தேவை எனக்கில்லை. எனது நம்பிக்கையை கேவலப்படுத்த யாருக்கும் உரிமையும் இல்லை.  உங்கள் கருத்துக்களை நன்கு வாசித்தே அதற்கான விளக்கத்தை அதுவும் தெளிவாக quote பண்ணி தான் பதில் தந்துள்ளேன். மீண்டும் முழுமையாக வாசித்துப் பாருங்கள். புரியும். அது எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் இருவரும் எழுதிய கருத்துக்களுக்கு தனித்தனியாக தெளிவான பதில்களையே தந்துள்ளேன்.
    • சாமியார் என்ரைபெயரையும் உங்கள் பின்னூட்டத்தில் இணைத்து விடுங்கோ. ஒரு அமெரிக்க இராணுவநபர் என்னிடம் 10 யூரோ கடன் வாங்கினவர். இன்றுவரை அதற்கான வட்டியுமில்லை முதலும் இல்லை. 
    • கடின உழைப்பாளிகள் என்று எழுதினத பார்க்க, பொறாமையில் பொய்யாக மாட்டியிருப்பார்களோ?
    • பிகு:   திரியை மீளாய்வு செய்ததில்: மல்லிகை, நீங்கள் துல்பென் எழுதியவற்றை என் தலையில் கட்டி, எனக்கும் சேர்த்து பயான் ஓதுகிறீர்கள் (கவனிக்க: தனியே உடுக்கடித்தல் என்ற சொல்லாடலை மட்டும் பாவிக்கவில்லை 😂). துல்பென் இந்த திரியை அணுகும் கோணத்துக்கும் நான் அணுகும் கோணத்துக்கும் பாரிய இடைவெளி இருக்கிறது. ஆனால் குழுநிலைவாதம், இந்து மதத்தின் பாப்பரசராக உங்களை நிறுவும் ஆர்வம், உங்கள் கண்களுக்கு இந்த இடைவெளியை மறைத்து விட்டிருக்கிறது. அதுதான் துல்பெனுக்கு எழுத வேண்டியதை எனக்கு பதிலாக எழுதிக் கொண்டிருகிறீர்கள்.   காலக்கொடுமடா சாமி 🤦‍♂️