Jump to content

என் தோழமை - சுப. சோமசுந்தரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                                             என்   தோழமை

                                                (My Comradery or Camaraderie)

                                                                                                            - சுப. சோமசுந்தரம்

 

            எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து திராவிட இயக்கச் சிந்தனையாளர்களால் பகுத்தறிவு எனும் உளி கொண்டு மொழியுணர்வு எனும் மெருகேற்றி செதுக்கப்பட்டேன் என்று நான் மார்தட்டிக் கொள்ளலாம். நான் சிறுவனாயிருந்த போதே என் இல்லத்தில் நிலவிய ஜனநாயகச் சூழலால் பெரியாரும் அண்ணாவும் என் உயிரிலும் உணர்விலும் கலந்தமை நான் பெற்ற பேறு. அவ்வயதிலேயே எல்லோர்க்கும் இது வாய்ப்பதில்லை. அதன்பின் திராவிட இயக்கத்தில் வந்தவர்களை பெரியாரோடும் அண்ணாவோடும் ஒப்பிட ஒருபோதும் மனம் ஒப்பவில்லை.

 

            பிற்காலத்தில் இடதுசாரிச் சிந்தனையாளர்களுடன் 'உடம்பொடு உயிரிடையென்ன' நட்பு ஏற்படினும் , அஃது 'முந்தையிருந்து நட்டல்' என மார்தட்டிக் கொள்ள வாய்ப்பில்லை. தோழர் பொன்னுராஜ் போன்ற ஆளுமைகளால் நான் ஈர்க்கப்பட்டதன் விளைவே மார்க்சீயத்தை நோக்கிய என் நகர்தல். என் போன்ற பாமரர்கள் முதலில் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டுப் பின்னர் ஆளுமைகளைப் பார்ப்பதில்லை. கொண்ட கொள்கையுடன் வாழ்வியலைப் பின்னிய ஆன்றோர் பிற்காலத்திய சந்ததிகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்த இயலும், கொள்கையின்பால் ஈர்க்க இயலும் என்பதற்கு என் போன்றோர் சான்றுகள். சான்றாண்மை மிக்க தொ.பரமசிவன் அவர்களால் மற்றுப் பற்றில்லாத மக்கட் பற்றாளர் தோழர் ஆர்.நல்லகண்ணு, மாமனிதர் தோழர் ஜீவா, ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு, அச்சுதானந்தன், ஜோதிபாசு போன்ற நல்லோர் பலரை அறியப் பெற்றேன். இடதுசாரித் தோழமைக்கு நான் ஒரு தாமத வரவு. எனினும் தகர்க்க முடியாத உறவு. இவர்களிடம் படித்தது, கேட்டது, உணர்ந்ததன் அடிப்படையில் எனது முதல் கண்டுபிடிப்பு - நான் முதலில் பார்த்த மார்க்சிஸ்டுகள் பெரியாரும் அண்ணாவும் என்பதே; அதன்பின் சாஸ்திரி, காமராசர், கக்கன் என்று பெரிய பட்டியல். இது எனக்கு மட்டும். எனது இடதுசாரித் தோழர்கள் சிலர்/பலர் இப்பட்டியலை முழுமையாக ஏற்க மாட்டார்கள் என நினைக்கிறேன். ஏற்க வேண்டிய அவசியம் நிச்சயமாய் அவர்களுக்கில்லை. அவர்கள் அதனை ஏற்க வேண்டிய அவசியம் எனக்குமில்லை என்பதுவும் அவர்களிடமே நான் படித்த பாடம். ஒரு கால கட்டத்திற்கு மேல் என் சிந்தனையைச் செதுக்கியவர்களும் தோழர்கள்தானே ! அண்ணாவைத் தெரிந்த பின்தான் எனக்கு தம்பிகளைத் தெரியும். ஆனால் தோழர்கள் மூலமாகத்தான் எனக்கு காரல் மார்க்ஸையே தெரியும். இப்போதும் எப்போதும் திராவிட இயக்கமும் பொதுவுடைமையும் கலந்த கலவையாகவே என்னை வரித்துக் கொள்ள விரும்புகிறேன். எதையும் முழுமையாகச் செய்வதில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

 

            இதுவரை படர்க்கையில் வந்த தோழர்கள் இனி முன்னிலையிலோ படர்க்கையிலோ இடத்திற்கேற்றாற் போல். இங்கு நான் குறிப்பிட வேண்டிய விடயம் ஒன்றுண்டு. இந்திய கம்யூனிஸ்ட், இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் போன்ற தீவிர கம்யூனிஸ்ட்கள் (முன்னவர்கள் கணிப்பின்படி ultra left) என்ற சாதி பேதம் நான் பார்ப்பதில்லை. ஏனெனில் எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சி செய்ய மாட்டேன் என்று முரண்டு பிடிப்பவன் நான். இவ்விடயத்தில் எனக்கு அறியாமையே வரமாய் அமைந்ததில் உங்களுக்கு என்ன பிரச்சனை, தோழர்? என்னைப் பொறுத்த மட்டில் 'தன் பெண்டு, தன் பிள்ளை' என மட்டுமே வாழ்ந்து மடியும் கூட்டத்திலிருந்து நீங்கள் அனைவரும் வேறுபட்டவர்கள். இப்பண்பே உங்களிடத்தில் எனக்கான ஈர்ப்பின் ஆணிவேர். ஆழ்ந்த வாசிப்பினால் உற்று நோக்கி தத்துவார்த்தமாகப் பார்த்தால்தான் அந்த அரசியல் எல்லாம் எனக்குப் புரியும்  என்று நீங்கள் சொல்லலாம். "அட போங்க, தோழர் ! உங்களுக்கு வேற வேலையில்லை. உங்களைப் போல் ஆழத்தில் மூழ்கி முத்தெடுக்காமல், வாழும் மட்டும் பொதுவுடைமைக் குரவையில் (கடலில்) நீந்தி, கரைந்து முடிந்து போகிறேனே !" என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

 

            மேலும் நான் என்ன பெரிய செயல்வீரனா? எனக்குப் பெரிய பணப்பிரச்சனை இல்லாததால் சிறிய அளவில் இயக்கங்களுக்கும் போராட்டங்களுக்கும் அவ்வப்போது பொருளுதவி செய்கிறேன். உள்ளூரில் இருக்கும் பட்சத்தில் நீங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் கோஷம் போட வருகிறேன். மற்றபடி உங்கள் ஈடுபாட்டின் முன் எனது இருப்பு எம்மாத்திரம் ? நான் ஒரு அரசாங்க அடிமை என்பதால் நீங்களும் என்னை எல்லை தாண்ட விடுவதில்லை. இது தனிப்பட்ட முறையிலும் இயக்கம் சார்ந்தும் நீங்கள் என் மீது கொண்ட அக்கறை.

 

            'பெயக் கண்டும் நஞ்சுண்டமையும்' வலுவான தோழமை என்னிடம் கொண்ட உங்களிடம் நான் கொண்டது

                        "குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

                          மிகை நாடி மிக்க கொளல்"

என்ற வலிமை குறைந்த தோழமையே. அவ்வகையில் நான் சிறிது நன்றி மறந்தவன். உதாரணமாக, என் நிறுவனத்தில் அதிகார வர்க்கத்தின் நியாயமற்ற ஒரு நிலைப்பாட்டிற்கு அத்தனைப் பேரும் அடிபணிந்து செல்கையில் நானும் என்னுடன் தோழர் ஒருவரும் உறுதியாக எதிர்த்து நிற்பதற்குக் காரணம் எங்கள் தோள் வலிமையல்ல. 'MUTA' என்ற இயக்கப் பெயரில் உங்கள் தோழமை தரும் வலிமையே. எனக்கு அமைந்த சிறப்புகள் பல தோழர்களாலேயே அமைந்தது எனும் உணர்வு எனக்கு உண்டு. குணம் நாடியதைப் போல் தோழர்களின் குற்றமும் நாடியதுண்டு. ஈழத்தமிழர் விவகாரத்திலும் கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் போன்றவற்றிலும் இந்திய கம்யூனிஸ்ட், இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுடன் பெரிதும் மாறுபாடு எனக்கு உண்டு. கூடங்குளம் (ரஷிய) அணுமின் நிலையத்தை வளர்ச்சி என்ற பெயரில் ஆதரித்த இடதுசாரிகள் ஜைதாப்பூர் (பிரெஞ்சு) அணுமின் நிலையத்தை எதிர்த்தது வெட்கக்கேடு எனக் கருதுபவன் நான். கட்சியின் பொலிட்பியூரோ முடிவை எடுத்த பின் அதற்கான நியாயங்களைத் தேடுவதில் என் தோழர்கள் கை தேர்ந்தவர்கள். அந்த நியாயங்களை அவர்களிடம் கேட்பதை விட அவர்களது பத்திரிக்கைகளில் தேடிக் கொள்ளலாம். கட்சியை இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் கிண்டல் பண்ண நமக்கு என்ன தகுதி இருக்கிறது? மற்றக் கட்சிகளைப் போல் சொந்தக் கருத்துக்களை நட்பு வட்டத்தில் கூட வெளிப்படுத்தாத மனத்தடையோ கட்சிக் கட்டுப்பாடோ இடதுசாரிகளுக்கு அவசியந்தானா? மார்க்ஸியம் ஒரு சித்தாந்தம்; அடுத்து அது ஒரு வாழ்வியல், அவ்வளவுதானே ! ஏதோ நம் துரதிருஷ்டம். நாமும் ஓட்டுக்காக மக்களிடம் கையேந்தும் அவலம்.

 

            சுதந்திரப் போர், மொழிப் போர், ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் என மக்களின் பெரும் போராட்டங்களில் எல்லாம் முக்கிய இரண்டு பொதுவுடைமைக் கட்சியினர் காணாமல் போனதை அல்லது அடக்கி வாசித்ததை யாரிடம் சொல்லி அழுவது தோழர் ? காணாமல் போனதோ அல்லது அடக்கி வாசித்ததோ எண்ணிக்கையில் நம் பலம் குறைந்தமையால் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். பலம் குறைந்தமையால் அடக்கி வாசித்தோமா அல்லது அடக்கி வாசித்ததால் பலம் குறைந்தோமா? மேலும், இந்தியப் பொதுவுடைமைக் கதிர் சீன, ரஷிய மண்ணிலும் , தமிழ்ப் பொதுவுடைமைக் கதிர் கொல்கத்தா மண்ணிலும் விளையுமா என்ன ? பொதுவுடைமை பொதுத்தன்மை கொண்டதல்ல என்பது உங்களை விட வேறு யாருக்கு விளங்கப் போகிறது? மற்ற ஓட்டுக் கட்சிகளிடம் இவற்றையெல்லாம் நான் கேட்பதில்லை. ஏனெனில் அவர்கள் எனக்கு அந்நியர். அந்நியர்களிடம் உங்களை விட்டுத் தரவும் என்னால் இயலாது, தோழர் !

 

            அப்படியென்ன தோழமை? உலகில் தோன்றிய தலைசிறந்த பொதுவுடைமைவாதிகளில் ஒருவனான வள்ளுவன் சொன்ன 'மிகை நாடி மிக்க கொளலே' அத்தோழமை. நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை. நீ என்னைக் கைவிடுவதுமில்லை. 'குறையொன்றுமில்லை' என்பதற்குப் பதிலாக 'குறைகளையெல்லாம் மீறி மக்களுக்காகக் கரையும் உன்னில் கரைந்து போவதே பேரின்ப நிலை' என்பதே எனக்கான ஆன்மீகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

என்னைப் பொறுத்த மட்டில் 'தன் பெண்டு, தன் பிள்ளை' என மட்டுமே வாழ்ந்து மடியும் கூட்டத்திலிருந்து நீங்கள் அனைவரும் வேறுபட்டவர்கள். இப்பண்பே உங்களிடத்தில் எனக்கான ஈர்ப்பின் ஆணிவேர்.

சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்கள் இடதுசாரிச் சிந்தனையுள்ளவர்களாக இருப்பார்கள். எனினும் குடும்பமாகிவரும்போது அதே பொதுநல நோக்கோடு இருப்பவர்கள் ஒரு சிலரே.

இடதுசாரிக் கட்சிகளும் தாம் காணாமல்போகாமல் இருப்பதற்காக சமசரங்களை இடையிடையே செய்துகொள்வார்கள். அப்படிச் செய்யாத தீவிர இடதுசாரிகளின் குரலை எவரும் சட்டைசெய்வதில்லை!

Link to comment
Share on other sites

"தோழமை"யின் சொற்கள் அனைத்தும் "நாலும் இரண்டும்" போன்று நட்புக்கும், நாட்டுக்கும் உறுதியாக இருப்பதால், அன்னபோஜராஜன் ஆக ஆசை. (அட்சர லட்சம் தந்த அன்ன போஜராஜனைப் போல், 'தோழமை'யின் ஒவ்வொரு எழுத்துக்கும்  லட்சம்  பொன் வழங்க ஆசை.).

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.