• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

கனடா தந்த இசைக்குயில் சின்மயி சிவகுமார்!

Recommended Posts

கனடா தந்த இசைக்குயில் சின்மயி சிவகுமார்!

கனடா தந்த இசைக்குயில் சின்மயி சிவகுமார்!

தற்போது விஜே ரிவியில் இடம்பெறும் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் புலம் பெயர்ந்த மக்கள் அதிகமாகப் பார்ப்பதற்கு முக்கியமான காரணம், புலம் பெயர்ந்த மண்ணில் இருந்து புதிய தலைமுறையினர் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதேயாகும். அந்த வகையில் எமக்கு நன்கு அறிமுகமான சின்மயி சிவகுமாரும் இந்த நிகழ்வில் இம்முறை கலந்து கொள்கின்றார்.

49285338_2617592474935933_69345063891170 

ஏற்கனவே ஜெசிக்கா யூட் சுப்பர் சிங்கர் மூலம் பலருக்கும் அறிமுகமாகி இருந்தார். அப்போது அவரைப்பற்றி உதயன், தினக்குரல் போன்ற பத்திரிகைகளில் நான் எழுதியிருந்தேன். அந்த வரிசையில் மிகத் திறமையாகப் பாடக்கூடிய சின்மயி கனடாவில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் தனது இசைத் திறமையை பல தடவைகள் வெளிக்காட்டியிருந்தார். சின்மயியின் பெற்றோர்களான திரு. திருமதி சிவகுமார் அவர்கள் தங்கள் மகளின் ஆர்வத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து அவரை இந்த நிலைக்குக் கொண்டு வந்ததற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும். யாராக இருந்தாலும், எந்தத் துறையாக இருந்தாலும் அவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வரும் போதுதான் பலராலும் பாராட்டப் படுவார்கள். எனவே சந்தர்ப்பங்களைப் பயன் படுத்தி உங்கள் பிள்ளைகளின் திறமைகளையும் அது எந்த துறையாக இருந்தாலும் அதை வெளிக் கொண்டு வர பெற்றோராகிய நீங்கள்தான் முன்வந்து உதவவேண்டும்.

சின்ன வயதிலே மேடையில் பாடும் போதே சின்மயி போன்ற சிலரின் திறமையை என்னால் அடையாளம் காணமுடிந்தது. அவர்களிடம் நல்ல குரல் வளமும் திறமையும் இருப்பதை அவ்வப்போது பெற்றோர்களுக்கு எடுத்துச் சொல்லி அடுத்த கட்டத்திற்கு அவர்களைத் தயார்படுத்துங்கள் என்று முக்கியமாக சின்மாயியின் பெற்றோருக்கும், அபிநயாவின் பெற்றோருக்கும் ஆலோசனை கூறியிருந்தேன். போட்டி என்று வந்தால் திறமை மட்டுமல்ல, கடின உழைப்பும் தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சண்சுப்பசிங்கர் சுபவீனும், அவரது சகோதரி அபிநயாவும் என்னிடம் தமிழ் மொழி கற்றவர்கள்.


மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் 2014 ஆம் ஆண்டு நடத்திய இசைப் போட்டியின் போது சின்மயின் அப்பா சிவகுமாரிடம் இந்தப் போட்டி பற்றி கூறி, சின்மாயியைப் பங்கு பற்றும்படி ஊக்கப்படுத்த முடிந்தது. எந்தப் போட்டியிலும் திறமைசாலிகளுக்கு வெற்றி தோல்விகள் முக்கியமில்லை, உங்களால் அந்த அறைகூவலை துணிவோடு ஏற்றுக் கொள்ள முடிகிறதா என்பதுதான் முக்கியமானது. தோல்விகள் தான் வெற்றியின் முதற்படி என்று சொல்வார்கள், பல போட்டிகளில் பங்கு பற்றி அதை எல்லாம் கடந்து வந்த அனுபவத்தால்தான் இன்று சின்மாயியால் சுப்பர் சிங்கர் மேடையில் நிற்க முடிகின்றது.

எழுத்தாளர் இணையத்தின் முத்தமிழ் விழாவின் போது எங்கள் அழைப்பை ஏற்று தன்னார்வத் தொண்டராக வந்து தமிழ் வாழ்த்தை அழகாக இசைத்திருந்தார். ரிஇரி தொலைக்காட்சியில் நடைபெற்ற தமிழினி போட்டியின் போது நடுவராகச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததால் சின்மையின் திறமையைப் பல சந்தர்ப்பங்களில் அறிந்து கொள்ள முடிந்தது. 2014 ஆம் ஆண்டு அந்த நிகழ்ச்சியில் அவர் ‘அம்மா’ என்ற தலைப்பில் அழகான கவிதை ஒன்றைப் பாடி அவையில் இருந்த எல்லோர் மனதையும் கவர்ந்திருந்தார். அதேபோல பாரதி ஆட்ஸ் போட்டி நிகழ்வில் ‘பாடவா பாடவா’ என்ற பாடலைப்பாடி எல்லோர் கவனத்தையும் திருப்பி இருந்தார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற உதயன் விழாவில் சின்மாயி பாடியிருந்தார். அப்போது பிரபலமாக இருந்த ‘காற்றின் மொழி’ என்ற பாட்டைத் தெரிவு செய்து பாடியதால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துக் கொண்டார். ரிவிஐ தொலைக்காட்சி நடத்திய சுப்பர் ஸ்டார் யூனியர் பிரிவில் பங்கு பற்றி ‘தத்தித்தோம்’ என்ற பாடல் மூலம் அடுத்த கட்டத்திற்குத் தெரிவானார். ஐரிஆர் பெட்டகம் நிகழ்வில் நிகழ்ச்சியை நடத்திய இளங்கோ அவர்கள் மிகச் சிறப்பாக சின்மாயியை அறிமுகம் செய்திருந்தார். அவர் குறிப்பிட்டது போல ‘சின்மாயியின் அந்த சின்னச்சிரிப்பு’ எல்லோரையும் கட்டாயம் கவர்ந்திருக்கும். எனக்குப் பிடித்த பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே பாடலை நான் அந்த நிகழ்வின்போது ரசித்துக் கேட்டேன். ‘நீ ஒரு காதல் சங்கீதம்,’ ‘தென்கிழக்குச் சீமையிலே,’ ‘சின்னத்தாய் அவள் தந்த ராசாவே’ போன்ற பாடலல்களையும் அந்த நிகழ்வில் அழகாகப் பாடியிருந்தார்.48430352_2617594421602405_75618407455737

‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி’ என்ற பாடல் மூலம் மீண்டும் சுப்பர் சிங்கர் நேயர்களின் மனதை சின்மாயி தொட்டிருக்கின்றார். எந்த ஒரு தயக்கமும் இன்றித் தமிழில் பேசும், பாடும் இவர்களைப் போன்ற எங்கள் அடுத்த தலைமுறையினரின் திறமைகளை நாங்கள் பாராட்ட வேண்டும். மேலை நாடான கனடாவில் இருந்து தமிழ் குரல்கள் ஒலிப்பதே தமிழ் நாட்டுக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. பிரபல எழுத்தாளர் ஒருவருடன் உரையாடும் போது, ‘தமிழ்நாட்டுப் பாடகிகள் தமிழில் பாடுவது ஆச்சரியமல்ல, கனடாவில் பிறந்து வளர்ந்த சிறுமி ஒருத்தி தமிழில் அழகாகப் பாடுவதுதான் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது’ என்றார். எம்மவர்களைப் பாராட்டினால் மட்டும் போதாது, அவர்கள் வெற்றி பெறுவதற்கு எம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். அதற்காக நாம் வாக்களிக்க வேண்டும். சிறுதுளி பெருவெள்ளம் என்பதை நீங்கள் அறிவீர்கள், கனடாவின் பக்கம் சர்வதேசத்துப் பார்வையைத் திருப்புவதற்கு, குறிப்பாகத் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைப்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. முடியாதது என்று எதுவுமே இல்லை, நீங்கள் மனது வைத்தால் முடியும், எனவே சின்மாயியின் வெற்றிக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

பாடல்களைவிட அவற்றை முந்திக் கொண்டு அரவது உதட்டில் மெல்ல விரியும் புன்சிரிப்பு, அவரது பணிவு எல்லோரையும் முதலில் கவர்ந்து விடும். மகாஜனக் கல்லூரி பரிசளிப்பு விழாவில் அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் கையால் பரிசு பெறும் பாக்கியம் சின்மயிக்குக் கிடைத்திருந்தது. வீடு திரும்பும் போது பொதுவாக அவருடன் நிகழ்ச்சி பற்றி உரையாடுவேன், ‘மட்டுவில் ஐயாவுடைய பேர்த்தி, இந்தப் பிள்ளைக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்று அப்பொழுதே சின்மயியைப் பாராட்டியிருந்தார். கனடா வாழ் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் சின்மாயி போட்டியில் வெற்றி பெற்றுப் பரிசுகளும், பாராட்டுக்களும் பெறவேண்டும் என்று மனப்பூர்வமாக வாழ்த்திப் பாராட்டுவோம். இன்னும் பலர் இங்கே இலைமறைகாயாக இருக்கிறார்கள், அவர்களையும் எங்களால் முடிந்தளவு ஆதரிப்போம்.

குரு அரவிந்தன்.

 

http://akkinikkunchu.com/?p=70652

 

 

Share this post


Link to post
Share on other sites
59 minutes ago, கிருபன் said:

கனடா தந்த இசைக்குயில் சின்மயி சிவகுமார்!

கனடா தந்த இசைக்குயில் சின்மயி சிவகுமார்!

தற்போது விஜே ரிவியில் இடம்பெறும் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் புலம் பெயர்ந்த மக்கள் அதிகமாகப் பார்ப்பதற்கு முக்கியமான காரணம், புலம் பெயர்ந்த மண்ணில் இருந்து புதிய தலைமுறையினர் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதேயாகும். அந்த வகையில் எமக்கு நன்கு அறிமுகமான சின்மயி சிவகுமாரும் இந்த நிகழ்வில் இம்முறை கலந்து கொள்கின்றார்.

சத்தியமங்கலம் பிரச்சனை வியாபார விஜய் ரிவிக்காரருக்கும்.....
தேன் சொட்ட புகழ்ந்து தள்ளிய கட்டுரையாளருக்கும் தெரியுமா? 

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, குமாரசாமி said:

சத்தியமங்கலம் பிரச்சனை வியாபார விஜய் ரிவிக்காரருக்கும்.....
தேன் சொட்ட புகழ்ந்து தள்ளிய கட்டுரையாளருக்கும் தெரியுமா? 

கனடாவைப் பொறுத்தவரை .....யாரை முன்னிறுத்தி அழைப்புக்கொடுத்தால் ..அவர்  ஆகா ..ஓகோ என்று புழுகிவினம்...அப்படி இல்லாவிட்டல் அந்த நிகழ்வுக்கு ..எதோ ஒரு சாயம் பூசிவிடுவினம்.....இது பாடகர்களுக்கு நன்கு தெரியும்...

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சின்மயிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

வேறு எந்த டிவி கம்பெனியும் சந்தா பணம் மூலம் நிகழ்ச்சி நடாத்த முடியாத நிலையில், இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒன்றை வைத்தே, விஜய் டிவி சந்தா  மூலம் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் பணம் பார்க்கிறது. சன் டிவி கூட சந்தாவில் பெரிதாக இல்லை.

லைக்கா, ஐபிசி டீவிக்கள் 30 நிமிட விளம்பரத்துக்கு கேட்பதிலும் பார்க்க, 350% அதிகமாக இவர்கள் விளம்பரத்துக்கு வாங்குகிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites

இந்த விஜய் டீவிக்காரனுக்கு தனது டீவியை பிரபலப்படுத்த ஓர் ஈழத்து மன்னிக்கவும் ஓர் புலம் பெயர்ந்த நாட்டில் இருக்கும் ஓர் தமிழன் தேவைப்படுகிறான் 

வியாபார யுத்திதான்  

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • போரிஸ் என்றதும் சிலருக்கு இன்றைய உருசியாவை உருவாக்கிய போரிஸ் எல்சனும் ஞாபகத்திற்கு வரலாம். இந்த எல்சனே உருசியாவை ஒரு திறந்த வர்த்த கொள்கைக்கு உள்ளாக்கினார்.  இன்று, பிரித்தானிய போரிஸ் ஒரு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்து பொருளாதார சுபீட்சத்தை பெற்றுத்தருவேன் என கூறி -பெரும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அவரின் திட்டம் தான் என்ன ? ஒரு திட்டம் - நாட்டில் திறந்த, வரிகள் குறைந்த துறைமுகங்களை உருவாக்குவது. சிங்கப்பூரை ஒத்ததாக இந்த திட்டம் இருக்கும் என  போரிஸ் கூறுகிறார்.  உதாரணத்திற்கு, ஜப்பானில் வடிவமைக்கப்படும் மகிழூந்து ஒரு பிரித்தானிய துறைமுகத்தில் சேர்க்கப்பட்டு இன்னொரு நாட்டில் விற்கப்படும். இதனால் துறைமுகத்தை அண்டிய நகரில் வேலைவாய்ப்பு உருவாகும்.  அப்படியானால் ஏன் இதுவரை இவ்வாறு முயற்சிக்கவில்லை ?   
  • காத்தான் குடியிலும் கெளம்பீட்டாங்க.டங்கை தாங்கள் புலிக்கு எதிரான போரில் உதவி செய்த்ததை கீறிக்காட்டப் போகினமாம்...யாழ்பாணத்து மூனா கட்டாயம்//ஜாவா கச்சேரி தான்னோடதென்னு படம் போடும் ...மன்னார் வவுனியாவில் தமிழன் சிறுபான்மயின்னு படம் கிறுக்கும்... 
  • ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது எந்த முடிவும் மேற்கொள்ளாமலிருக்கும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,      “ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய, 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உத்தரவு பிறப்பிக்க ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று உத்தரவு பிறப்பிக்க வேண்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த பதினைந்து மாதங்களாக எந்த முடிவும் மேற்கொள்ளாமல் அரசியல் சாசன விதிகளை மீறி செயற்பட்டுள்ளதால் அவரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.        முதலமைச்சர் நியமனம் தவிர்த்து பிற விவகாரங்களில் ஆளுநர் சுதந்திரமாக செயற்பட முடியாது என அரசியல் சாசனத்தின் 356 (1)பிரிவு கூறியுள்ளது.  பா.ஜ.க. உறுப்பினராகவும், ஆர்.எஸ்.எஸ். அனுதாபியாக இருந்த ஆளுநர் பன்வாலால் புரோஹித் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் எதிர்க்கும் தமிழக மக்கள் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் கடந்த 15 மாதங்களாக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் மேற்கொள்ளாமல் இருக்கிறார்.  அமைச்சரவை தீர்மானத்தின் மீது எந்த ஒரு முடிவும் எடுக்காமல் உள்ள ஆளுநரின் செயற்பாடு நகைப்புக்குரியதாக இருக்கிறது. இவை அரசியல் சாசன முடக்கத்திற்கு சமமாகும் என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட்டு, ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்.” என கோரிக்கை விடுத்துள்ளார். விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/71037
  • பாலா அண்ணா ஒரு பத்திரிகையாளனாகவே தடம் பதித்தவர். "பிரம்மஞானி" எனப் புனைபெயரில் வலம் வந்தவர். பின்னர் விடுதலைப்பணி காலத்தில் கலை, இலக்கிய ஏடாக வெளிவந்த "வெளிச்சம்" இதழ்களிலும் பல கட்டுரைகளை வரைந்தார். அதில் அர்த்தமும் அபத்தமும் என்ற தலைப்பில் வரைந்த கட்டுரையின் சில பகுதிகள் அவர் நினைவு தாங்கி உங்களுடன்.  மனிதன் விடைதேடி அலைகிறான். தெளிவுபெற விழைகிறான் ஆனால் மனிதனால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அறிய, அறிய அறியாமை மேலோங்குகிறது. அபத்தத்தின் அலங்கோலம் தெரிகிறது. புரியப், புரிய உலகம் புதிராக மாறுகிறது. தத்துவத் தேடல்களும், விஞ்ஞான விசாரணைகளும் மனிதனுக்கு உண்மையைக் காட்டவில்லை. வாழ்வின் அர்த்தத்தை விளக்கவில்லை. பொய்மையின் சிதைவுகளாக, எங்கும், எல்லாம் அபத்தத்தின் அசிங்கங்கமான முகம் தான் தெரிகிறது. நான் தொட்டுணர்ந்து, பட்டறிந்து கொள்ளும் இந்த உலகம் எனக்குப் பரீட்சயமானது. இந்த மலையும், மரமும், கடலும் அலையும், நீலவானமும், நிலவும் நான் சதா சந்தித்துக் கொள்பவை. இந்தப் பூமி என்னை தோள் மீது சுமந்து திரிகிறது. நான் இந்த உலகத்தின் கனிகளைப் புசித்து வாழ்பவன். கணத்திற்குக் கணம் நான் விழுங்கும் இந்தக் காற்றில் எனது உயிர் தொங்கி நிற்கிறது. இந்த உலகம் தான் எனது இருப்பிற்கு ஆதாரம். நான் இருப்பாக உயிர்த்து நிற்கிறேன். வாழ்வின் தீயாக எரிந்து கொண்டு, இந்த உலகத்தின் மீது இச்சை கொண்டு நிற்கும் என்னை, இந்த உலகம் ஒதுக்கி விடுகிறது. எனக்குப் பாராமுகம் காட்டுகிறது. பற்றற்றதாக நிற்கிறது. என்னிலிருந்து அந்நியப்பட்டதாக, மௌனமாக நிற்கிறது. நான் வேர் அறுபட்டவனாக விழுந்து கிடக்கிறேன். எனது தேடுதல் பற்றியும், தடம் தெரியாது நான் எழுப்பும் அவல ஓலம் பற்றியும், இந்த உலகம் எவ்வித அக்கறை கொண்டதாகவும் தெரியவில்லை. உணர்வற்ற, இலக்கற்ற, அர்த்தமற்ற உலகமும், உணர்வுள்ள, அறிவுள்ள, அர்த்தம் தேடும் மனிதனும், இரு துருவங்களாக, உறவு முறிந்து, ஒத்திசைவு இழந்து, முரண்பட்டு நிற்கும் இந்த வாழ்வு அர்த்தமற்றது. விடிகிறது. நாளும் விடிகிறது. திங்கள், செவ்வாய், புதன், வியாழன் என்று மாறி, மாறி, தொடச்சியாக விடிகிறது. விடியலுடன், நானும் விழித்துக் கொள்கிறேன். நாளும் தூங்குவதுவம், விழிப்பதுவும், வேலைக்கு ஓடுவதாக முடிவில்லாமல் நானும் விரைகின்றேன். அதே வேலை, பழக்கப்பட்ட், வழக்கமான அதே வேலை. சலிப்புத் தட்டத்தட்ட, இயந்திரமாக இயங்கி, இயங்கி அதேவேலை. என்னோடு சேர்ந்து மற்றவனும் என்னைப் போல உழல்கிறான். அதே காலை, அதே பாதை, அதே வேலை. திரும்பத் திரும்ப பார்த்து அலுத்துப் போன அதே முகங்கள். நாட்கள் ஓடுகின்றன. நானும் ஓடுகிறேன். அர்த்தமில்லாமல், மீண்டும், மீண்டும், அதே வினையில், அதே விளைச்சலில் நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன். இயந்திர உலகில் வாழும் நவயுக் மனிதனின் அலுப்புத் தட்டும் உழைப்பும், அவசர வாழ்வும் அபத்தமானது. மனித வாழ்வு அபத்தமானது. துன்பம் நிறைந்தது. நிலையற்றது. இதுதான் இருப்பின் மெய்நிலை. இந்த இருப்பு நிலையிலிருந்து எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த வாழ்நிலையை மனிதன் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். தளர்ந்து போய்விழுந்து விடாமல் எழுந்து நின்று வாழவேண்டும். மனித வாழ்விற்கு மனிதனே அர்த்தத்தைக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தனது அறிவுக்கு எட்டிய பார்வையுடன், தனக்கு கிட்டிய வாழ்க்கையை ஏற்று அதில் திருப்தி கொண்டு, எட்டமுடியாத எதிலும் இச்சை கொள்ளாது வாழ முடியுமாயின் அந்த வாழ்வு அவனுக்கு அர்த்தமுடையதாக அமையும்.