Jump to content

ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்கிய டிஐஜி உடுகம்பொல மரணம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்கிய டிஐஜி உடுகம்பொல மரணம்

by in செய்திகள்

DIG-Premadasa-Udugampola-300x200.jpg

வடக்கிலும் தெற்கிலும், ஏராளமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகிய, சிறிலங்காவின் முன்னாள் மூத்த பிரதி காவல்துறை அதிபர் பிறேமதாச உடுகம்பொல நேற்று மரணமானார்.

யாழ்ப்பாணத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த போது, வடக்கில் விடுதலைப் புலிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த உடுகம்பொல, 1989இல், தெற்கில் ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்குவதில் முக்கிய பங்காற்றினார்.

உடுகம்பொலவின் கீழ் உருவாக்கப்பட்ட சிறப்பு காவல்துறைக் குழு ஜேவிபி உறுப்பினர்களை வேட்டையாடுவதிலும், கிளர்ச்சியை ஒடுக்குவதிலும் தீவிர பங்காற்றியிருந்தது.

இதன்போது, ஈவிரக்கமற்ற சித்திரவதைகளையும், மோசமான மனித உரிமை மீறல்களையும் புரிந்ததாக உடுகம்பொல மீதும் சிறிலங்கா காவல்துறை மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

எனினும், இவருக்கு எதிராக எந்த நீதி விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

40 ஆண்டுகாலம் சிறிலங்கா காவல்துறையில் பணியாற்றிய இவர், தனது 83 ஆவது வயதில் நேற்று மரணமானார்.

http://www.puthinappalakai.net/2019/01/02/news/35711

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழர்களை ஒன்றும் செய்யமாட்டார் என்று 
அப்ப அப்ப ஆட்கள் உறுதிமொழி தந்தாலும் 

89-90 களில் கொழும்புக்கு போனால் 
இவரின் பெயர் ஞாபகத்தில் வரும்போதெல்லாம் 
ஒரு மாதிரி அடி  வயிறு கூசும்.

இவர் செய்த கொலைகளும் சித்திரவைகளும் அப்படியானவை. 
ஒரு மிருகம்! 

Link to comment
Share on other sites

சிலகாலம் இலங்கையை விட்டு தப்பிச்சென்று அயலகத்தில் குப்பை கொட்டியவர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TIME Magazine: The man with an open license to kill in Sri Lanka

இவருக்கு லைசென்ஸ் கொடுத்த பிரேமதாச கடைசியில், வெடியினால் மாண்டார்.

659-premadasa-udugampola-deputy-inspector-general-of-kandy-sri-lanka---image-F252_SN10_DVD0090.jpg

Premadasa Udugampola Deputy Inspector General of Kandy Sri Lanka.

கையில் கைத்துப்பாக்கி, பக்கத்தில் இயந்திர துப்பாக்கி.

வடக்கில் தமிழர்கள் அனுபவித்ததைக் காட்டிலும், மிக மோசமான அனுபவத்தினை சிங்களவர்களுக்கு கொடுத்த நபர்.

தமிழர்களுக்கு, கடைசி வரை புலிகள் பாதுகாப்பு இருந்தது. அவர்களுக்கோ, சாக்குமூட்டையில் உயிருடன் கட்டி, எரியும் டயரினுள்ளும், அல்லது ஓடும் ஆறினுள்ளும் தள்ளி விடப்பட்டனர்.

https://www.csmonitor.com/1989/0811/o1lanka.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அந்த ஜேவிபி கிளர்ச்சி ஏற்பட்டது? அதன் மூலகாரணம் என்ன என்பது பற்றி விளக்கமான நூல்கள் உள்ளனவா  ?

Link to comment
Share on other sites

இவரது இரண்டு சித்திரவதைகள் பிரசித்தமானவை. ஒன்று ஒரு காதுக்குள் பென்சிலை அல்லது பேனாவை செலுத்தி அறைவது. அடுத்தது லாச்சிக்குள் ஆண் குறியை வைத்து சாத்துவது.

மோசமனான படுகொலையாளர் கூட 83 வயது வரைக்கும் உயிர் வாழ்ந்து இயற்கை மரணம் அடைந்துள்ளார்.

அறம் பலவீனமானவர்களுக்கு மட்டும் தான் கூற்றாகும்

49 minutes ago, பெருமாள் said:

ஏன் அந்த ஜேவிபி கிளர்ச்சி ஏற்பட்டது? அதன் மூலகாரணம் என்ன என்பது பற்றி விளக்கமான நூல்கள் உள்ளனவா  ?

தமிழில் விளக்கமான புத்தகம் வந்ததா என தெரியாது. சிங்களத்தில் பல நூல்கள் உள்ளன.

என் நினைவில் இருந்து ....:

முதலாவது கிளர்ச்சி: 1971 இல் ஜேவிபி ஆயுத கிளர்ச்சிக்கு தயாராகுது என்று கேள்விப்பட்டு சிறிமா அதன் தலைவரான ரோகண விஜேவீரவை கைது  செய் து யாழ்ப்பாண சிறையில் போட்டார்.  அதற்கு எதிராக ஜேவிபியினால் பல போலீஸ் நிலையங்கள் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட சிறிமா இறுதியில் இந்தியாவின் உதவியையும் நாடி முடிவுக்கு கொண்டு வந்தார்.

பின் 1987 இல் இந்திய ஒப்பந்தத்துக்கு எதிராகவும் ஜே.ஆர்.  இன் முதலாளித்துவ அரசுக்கு எதிராகவும் இரண்டாவது கிளர்ச்சி ஜேவிபியால் நிகழ்த்தப்பட்டது. முதல் மாதிரி இல்லாமல் இரண்டு வருடங்களுக்கு மேலாக இது தொடர்ந்தது. பிரேமதாசாவின் கொடூரமான அடக்கு முறைகளுக்கு சளைக்காமல் ஜேவிபியும் பல ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தனர். கடைசியில் பிரேமதாசா புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையை ஆரம்பித்து அதே காலப்பகுதியில்  இலங்கை படைகளை தெற்கில் குவித்து மோசமான முறையில் கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்

1988 இல் ஜேவிபியால் விஜய குமாரணதுங்க படுகொலை செயப்பட்டார். பின் அவரது துணைவியார்  1995 இன்  பின் ஜேவிபியின் துணியுடன் ஆட்சி செய்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, நிழலி said:

இவரது இரண்டு சித்திரவதைகள் பிரசித்தமானவை. ஒன்று ஒரு காதுக்குள் பென்சிலை அல்லது பேனாவை செலுத்தி அறைவது. அடுத்தது லாச்சிக்குள் ஆண் குறியை வைத்து சாத்துவது.

மோசமனான படுகொலையாளர் கூட 83 வயது வரைக்கும் உயிர் வாழ்ந்து இயற்கை மரணம் அடைந்துள்ளார்.

அறம் பலவீனமானவர்களுக்கு மட்டும் தான் கூற்றாகும்

தமிழில் விளக்கமான புத்தகம் வந்ததா என தெரியாது. சிங்களத்தில் பல நூல்கள் உள்ளன.

என் நினைவில் இருந்து ....:

முதலாவது கிளர்ச்சி: 1971 இல் ஜேவிபி ஆயுத கிளர்ச்சிக்கு தயாராகுது என்று கேள்விப்பட்டு சிறிமா அதன் தலைவரான ரோகண விஜேவீரவை கைது  செய் து யாழ்ப்பாண சிறையில் போட்டார்.  அதற்கு எதிராக ஜேவிபியினால் பல போலீஸ் நிலையங்கள் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட சிறிமா இறுதியில் இந்தியாவின் உதவியையும் நாடி முடிவுக்கு கொண்டு வந்தார்.

பின் 1987 இல் இந்திய ஒப்பந்தத்துக்கு எதிராகவும் ஜே.ஆர்.  இன் முதலாளித்துவ அரசுக்கு எதிராகவும் இரண்டாவது கிளர்ச்சி ஜேவிபியால் நிகழ்த்தப்பட்டது. முதல் மாதிரி இல்லாமல் இரண்டு வருடங்களுக்கு மேலாக இது தொடர்ந்தது. பிரேமதாசாவின் கொடூரமான அடக்கு முறைகளுக்கு சளைக்காமல் ஜேவிபியும் பல ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்தனர். கடைசியில் பிரேமதாசா புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையை ஆரம்பித்து அதே காலப்பகுதியில்  இலங்கை படைகளை தெற்கில் குவித்து மோசமான முறையில் கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்

1988 இல் ஜேவிபியால் விஜய குமாரணதுங்க படுகொலை செயப்பட்டார். பின் அவரது துணைவியார்  1995 இன்  பின் ஜேவிபியின் துணியுடன் ஆட்சி செய்தார்.

1971 ல் அனுராதபுரம் காட்டுப்பகுதியில் ஜேவிபி போராளிகள் மறைந்து இருப்பதாக தகவல் வர, ஒரு காமண்டரின் கீழ் பெரிய இராணுவ படையணி சுத்தி வளைக்கின்றது.

ஆயிரத்துக்கு கிட்டிய அளவில் போராளிகள் சரணடைகின்றனர்.

கொழும்புவுக்கு தகவல் போகின்றது. பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் இருந்து அவரது செயலாளர் மூலமாக தகவல் வருகிறது.

YOU ARE ASKED TO TAKE NOTE THAT NO PRISINERS SHOULD BE TAKEN.

அவ்வளவு பேரும் கொன்று எரிக்கப்பட்டனர்.

ஸ்ரீமாவின் மகன் அரசியலில் இருந்தும் வீணாய் போய், இறந்தார்.

அதே போல, பிரேமதாச காலத்தில், ஒரு படையணி, மத்திய மலைப்பகுதியில் ஒரு தேயிலை தோட்டத்தில் விஜயவீராவை தேடி செல்கிறது. போகும் வழியில் வழியினை தவற விட, கொமாண்டர் அருகில் உள்ள வீட்டில் வழி கேட்க செல்கிறார்.

அங்கே  கண்டுபிடிக்க முடியாத மாறுவேடத்தில் இருந்தவர் தான் விஜயவீர. 

ஆமி வருவதைக்  கண்டு, தன்னை கண்டுபிடித்து விட்டார்கள் என்ற பதட்டத்தில் .... என்னை சுட்டு விடாதீர்கள், சரண்டர் என்று கையை தூக்க, அட நீங்கள் தான் விஜயவீரவா என்று ஆச்சரியத்துடன் அவரை அழைத்து சென்று உடுகம்பொலவிடம் கையளிக்கிறார் அவர்.

போலீசாரின் துப்பாக்கியினை பறித்து தன்னை சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என கொழும்பு உத்தரவில் செயல்பட்ட கொலையாளிகள் பின்னர் சொன்னார்கள்.   

தனக்கு போட்டியாக  வளர்ந்து வந்த விஜய குமாரணதுங்க பிரேமதாசாவினால் தான் கொல்லப்பட்டார். ஜேவிபி கணக்கில் போடப்பட்டது. அதுபோல காமினி, லலித் அவரால் கொல்லப்பட்டனர். புலிகள் கணக்கில் சேர்க்கப்பட்டனர்.

பிரேமதாச பின்னர் கொல்லப் பட்டார். இந்த 83 வயது நபர் தனது அடுத்த பிறவியில் செய்த பாவங்களுக்கு தண்டனை அனுபவிக்கக் கூடும். 

உண்மையில் நினைத்துப் பார்க்கையில், இலங்கை ஒரு பாவ பூமி தான். சோழ படை எடுப்புகள், ஐரோப்பியர் படை எடுப்புகள், சிங்கள, தமிழ் அரசர்கள் படை ஒருவர், அடுத்தவர் மீதான படை எடுப்புகள், அண்மைய, ஜேவிபி - அரச, புலிகள் -வேறு இயக்க, புலிகள் - அரச என, இந்த தீவில் கொலைகளுக்கு குறைவில்லை.

Link to comment
Share on other sites

11 minutes ago, Nathamuni said:

தனக்கு போட்டியாக  வளர்ந்து வந்த விஜய குமாரணதுங்க பிரேமதாசாவினால் தான் கொல்லப்பட்டார். ஜேவிபி கணக்கில் போடப்பட்டது. அதுபோல காமினி, லலித் அவரால் கொல்லப்பட்டனர். புலிகள் கணக்கில் சேர்க்கப்பட்டனர்.

விஜய குமாரணத்துங்க வை படுகொலை செய்தது ஜேவிபி என சந்திரிகாவும் பல தடவை கூறியிருக்கின்றார். ஆனால் பிரேமதாசா தான் செய்தது என்றும் பலருக்கு சந்தேகம் இருக்கின்றது.

ஆனால் காமினி திசனாயக்க பிரேமதாசாவினால் கொல்லப்படவில்லை. காமினி இறந்தது 1994 இல். பிரேமதாசா இறந்தது 1993 மே முதலாம் திகதி. இருவரும் தற்கொலைப் படைத் தாக்குதலில் தான் கொல்லப்பட்டனர். காமினி கொல்லப்படும் போது அவருடன் மேடையில் இருந்த ஒசி அபேசேகர உட்பட பல ஐ.தே.க தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
94 ஆம் ஆண்டு ஐ.தே.க வின் சனாதிபதி வேட்பாளராக காமினி தெரிந்தெடுக்கப்பட்ட பின் தான் பெண் தற்கொலை படையாளி மூலம் கொல்லபட்டார். (அதன் பின் அவர் மனைவி ஐ.தே.க வேட்பாளராக நியமிக்கப்பட்டு சந்திரிகா மூலம் தோற்கடிக்கப்பட்டார்).

லலித்தை கொன்றது பிரேமதாசா தான் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. அவரை கொன்றவர் என்று கொழும்பு மகலன் வீதியில் ஒர் அப்பாவி தமிழ் இளைஞரை சுட்டு போட்டு விட்டு பிடிக்க போகும் போது சுட்டுக் கொல்லப்பட்டார் என கதை விட்டு இருந்தனர்.

39 minutes ago, Nathamuni said:

பிரேமதாச பின்னர் கொல்லப் பட்டார். இந்த 83 வயது நபர் தனது அடுத்த பிறவியில் செய்த பாவங்களுக்கு தண்டனை அனுபவிக்கக் கூடும். 

பாவம், மறுபிறப்பு,தண்டனை....  ஹிஹிஹிஹி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

விஜய குமாரணத்துங்க வை படுகொலை செய்தது ஜேவிபி என சந்திரிகாவும் பல தடவை கூறியிருக்கின்றார். ஆனால் பிரேமதாசா தான் செய்தது என்றும் பலருக்கு சந்தேகம் இருக்கின்றது.

ஆனால் காமினி திசனாயக்க பிரேமதாசாவினால் கொல்லப்படவில்லை. காமினி இறந்தது 1994 இல். பிரேமதாசா இறந்தது 1993 மே முதலாம் திகதி. இருவரும் தற்கொலைப் படைத் தாக்குதலில் தான் கொல்லப்பட்டனர். காமினி கொல்லப்படும் போது அவருடன் மேடையில் இருந்த ஒசி அபேசேகர உட்பட பல ஐ.தே.க தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
94 ஆம் ஆண்டு ஐ.தே.க வின் சனாதிபதி வேட்பாளராக காமினி தெரிந்தெடுக்கப்பட்ட பின் தான் பெண் தற்கொலை படையாளி மூலம் கொல்லபட்டார். (அதன் பின் அவர் மனைவி ஐ.தே.க வேட்பாளராக நியமிக்கப்பட்டு சந்திரிகா மூலம் தோற்கடிக்கப்பட்டார்).

லலித்தை கொன்றது பிரேமதாசா தான் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. அவரை கொன்றவர் என்று கொழும்பு மகலன் வீதியில் ஒர் அப்பாவி தமிழ் இளைஞரை சுட்டு போட்டு விட்டு பிடிக்க போகும் போது சுட்டுக் கொல்லப்பட்டார் என கதை விட்டு இருந்தனர்.

சரிதான்.... காமினியை அல்ல..

நான் சொல்ல வந்தது. ரஞ்சன் விஜேரத்ன.

இவர்தான் பிரதி பாதுகாப்பு அமைச்சராக முழு ஜேவிபி கொலைகளின் சூத்திரதாரி.

தன்னை பிறகு பிளாக்மெயில் செய்யலாம் என அவர் கதையினை புலிகள் ஸ்டைலில் முடித்தவர் பிரேமர். 

11 hours ago, நிழலி said:

பாவம், மறுபிறப்பு,தண்டனை....  ஹிஹிஹிஹி...

Kennedy, Neru, SWRD Banda  குடும்பங்களில் அவலங்களின் காரணம் பாவம் என்பேன்.... நீங்கள் இல்லை..... வேறு காரணம் என்று சொல்லக் கூடும்.

பிரேமதாச இறந்ததும் பதவிக்கு வந்தவர் விஜயதுங்க. அவரிடம் யாழ்ப்பாண ஆமி கொமாண்டர் வந்தார். ஐயா,  புலிகள் மறைந்து இருக்கும் பிரதேசம் எமக்கு தெரியும். முழுவதுமாக அழித்து துடைத்து எறிய  முடியும். ஆனாலும் 15,000 அப்பாவி மக்கள் மரணிக்கலாம். அதற்கு அனுமதிப்பீர்களா என்றார்.

நான் உண்மையான பௌத்தன். எனது உத்தரவில், ஒரு அப்பாவி கூட இறக்க அனுமதிக்க மாட்டேன், மீண்டும் இவ்வாறு கேட்டுக் கொண்டு வராதே என்றார்.

அவர் தனது கடைசி காலத்தினை அமைதியாக வாழ்ந்து மறைந்தார்.

அவர் நிராகரித்த செயலைத்தான், மகிந்த செய்து முடித்தார் என்பது வேறு கதை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் காதினுல் பென்சில் வைத்து அடிப்பதை பற்றி சிங்கள நண்பர்கள் கூறியுள்ளார்கள். இவரது முழு குடும்ப‌மும் JVP யினால் கொல்லப்பட்டார்கள் என சொல்லப்படுகின்றது, இதனாலெயே இவர் இவ்வ்வாறு மாறினார். 

இந்திய அமைதிக்காகும்படை(?) வெளியேறி சென்றதற்கு இவர்களிம் ஒர் காரணமா என தெரியவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

நான் சொல்ல வந்தது. ரஞ்சன் விஜேரத்ன.

இவர்தான் பிரதி பாதுகாப்பு அமைச்சராக முழு ஜேவிபி கொலைகளின் சூத்திரதாரி.

தன்னை பிறகு பிளாக்மெயில் செய்யலாம் என அவர் கதையினை புலிகள் ஸ்டைலில் முடித்தவர் பிரேமர்

மன்னிக்கவும் நாதம் இத்தாக்குதலில் கரும்புலி மேஜர் பிரேம் வீரச்சாவடைந்தார். இளவாலையை சேர்ந்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நந்தன் said:

மன்னிக்கவும் நாதம் இத்தாக்குதலில் கரும்புலி மேஜர் பிரேம் வீரச்சாவடைந்தார். இளவாலையை சேர்ந்தவர்.

இது கரும்புலி தாக்குதல் இல்லையே. ரிமோட் கொன்றோல் மூலம் நடந்ததே.

The Havelock Road Bombing was the detonation of a remote controlled car bomb on March 2, 1991, during rush hour in Thimbirigasyaya (also known as Havelocktown) a suburb of Colombo, Sri Lanka. According to Jane's Information Group it was carried out to assassinate Ranjan Wijeratne, the Sri Lankan Foreign Minister and Minister of State for Defense (deputy defense minister). The bomb was detonated as the Minister's armored car passed it, killing 19 people including the minister, five security personal and 13 civilian by standers. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஒரு காலத்தில் கூகிளும், வி்க்கிபீடியாவுமே எங்கள் வரலாறை எழுதி முடிக்கும். மறைமுக கரும்புலிகளின் தியாகங்கள் இப்படியே மறக்கடிக்கப்படும்.

Link to comment
Share on other sites

4 hours ago, நந்தன் said:

மன்னிக்கவும் நாதம் இத்தாக்குதலில் கரும்புலி மேஜர் பிரேம் வீரச்சாவடைந்தார். இளவாலையை சேர்ந்தவர்.

நந்தன், தகவலுக்கு நன்றி

ரஞ்சன் கொல்லப்பட்டது ஹவ்லொக் வீதியில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில். இவருடன் 6 அல்லது 7 விசேட அதிரடிப்படையினரும், 25 மேற்பட்ட பொதுமக்களும் கொல்லப்பட்டு இருந்தனர். காரில் இருந்த குண்டை ரிமோட் கொன்றோல் மூலம் வெடிக்க வைத்தமைக்கான சான்றுகளை அன்று காட்டியிருந்தனர். தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்படும் போது கிடைக்கும் தற்கொலையாளியின் உடலோ உடல் பகுதிகளோ கிடைக்கவில்லை அன்று.

குண்டு வெடிக்க முன் அப் பிரதேசங்களில் இருந்த சில முக்கியஸ்தர்களுக்கு அனாமதேய தொலைபேசி அழைப்புகள் மூலம் அவ்விடதுக்கு போக வேண்டாம் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் அப்ப செய்திகள் வந்து இருந்தன.

இவற்றுக்கு அப்பால் கொழும்பின் கசினோ விளையாட்டு மீதான தடைக்கு இவரும் காரணம் என்று ஒரு சீன கசினோ புள்ளிதான் கொலைச் சதியில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டியும் இருந்தனர். அந்த சீன பிரஜை ரஞ்சன் கொல்லப்பட்டு 10 நாட்களின் பின் நாடு கடத்தப்பட்டு இருந்தார். ரஞ்சனின் கொலைக்கு பின் பல தமிழ் இளைஞர்கள் கைது செய்ப்பட்டு இருந்தாலும் எவரும் நீண்ட காலத்துக்கு தடுத்து வைக்கப்படவும் இல்லை, விசாரிக்கப்படவும் இல்லை. அனைவரும் விடுதகை செய்யப்பட்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனுக்கு... மறதி அதிகம் என்பதை, இந்தத்  தலைப்பில் இருந்து மீண்டும் அறிந்து கொண்டேன்.
நாம் வாழ்ந்த நாட்களில் நடந்த, மிக முக்கியமான பிரதான  தலைப்பு செய்திகளை  கூட...  மறந்து விட்டோம்.
இப்போ... தலைப்பில் கருத்து எழுதியவர்களின் மூலமாக, மீண்டும் மனம் அந்தக் காலப் பகுதிக்கே சென்றது உண்மை.
இவை... எல்லாம், புத்தக வடிவில் வராவிட்டால்...  வருங்கால சந்ததிக்கு தெரியாமல் போகும் என்ற அச்சம்  உள்ளது.
இதற்காகத் தன்னும்,  இப்படியான உண்மைகளை.. தமிழ் / ஆங்கில  புத்தக வடிவில் கொண்டு வர வேண்டும்.

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

தமிழில் நீங்கள் சில வரலாற்றுப் புத்தகங்களை எழுதலாமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, போல் said:

தமிழில் நீங்கள் சில வரலாற்றுப் புத்தகங்களை எழுதலாமே!

பகிடி... விடாதீர்கள், போல்.
புத்தகம் எழுதுவது என்பது, இலேசாசன விடயம் அல்ல.
எங்களுக்கு..  அரசியலைப் பற்றி,   இரண்டு வரி.... எழுதினாலே, மூச்சு வாங்குது.
அவ்வளவிற்கு...  தற்போதையை அரசியலை, சம்பந்தன், சுமந்திரன் கும்பல் கெடுத்து  வைத்திருக்கிறார்கள்.
யாழ்.களத்தில்  உள்ள யாராவது  இந்த முயற்சியை... முன் எடுத்தால், எனது  பங்களிப்பும்... இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நந்தன் said:

ஒரு காலத்தில் கூகிளும், வி்க்கிபீடியாவுமே எங்கள் வரலாறை எழுதி முடிக்கும். மறைமுக கரும்புலிகளின் தியாகங்கள் இப்படியே மறக்கடிக்கப்படும்.

உண்மைதான்.   நானும் விக்கிபிடியா,கூகிள் தரும் தகவல்களை பல வருடங்களாக  பார்ப்பதுமில்லை.நம்புவதுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்ஸ், நிழலி எந்த கோயிலில் போய் சத்தியம் செய்தால் நம்புவீங்க,( எனக்கும் கடவுளுக்கும் ஆகாது அது வேற விசயம்.) மறைமுக கரும்புலிகளின் நிலை  அரசியல், இராணுவ அரைவேக்காட்டு கட்டுரை எழுததாளர்களையே கூகிளும் விக்கிபீடியாவும் நம்பும் நிலையிலயே இருக்கின்றது. பிறேம் குடும்பத்தை எனக்கு 90களில் இருந்தே தெரியும். முடிந்தால் கேணல் சாள்ஸ் பற்றி பொட்டம்மான் எழுதிய வரலாற்றை படியுங்கள் தெளிவு கிடைக்கும்.அத்துடன் விடுதலைப் புலிகள் பத்திரிகையில் அம்மான் எழுதிய குருதிச்சுவடுகளில் ஒரு மெல்லிய அம்மா வந்து போவார். அவர் பிறேமின் அம்மாவே

10 hours ago, நிழலி said:

நந்தன், தகவலுக்கு நன்றி

ரஞ்சன் கொல்லப்பட்டது ஹவ்லொக் வீதியில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில். இவருடன் 6 அல்லது 7 விசேட அதிரடிப்படையினரும், 25 மேற்பட்ட பொதுமக்களும் கொல்லப்பட்டு இருந்தனர். காரில் இருந்த குண்டை ரிமோட் கொன்றோல் மூலம் வெடிக்க வைத்தமைக்கான சான்றுகளை அன்று காட்டியிருந்தனர். தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்படும் போது கிடைக்கும் தற்கொலையாளியின் உடலோ உடல் பகுதிகளோ கிடைக்கவில்லை அன்று.

குண்டு வெடிக்க முன் அப் பிரதேசங்களில் இருந்த சில முக்கியஸ்தர்களுக்கு அனாமதேய தொலைபேசி அழைப்புகள் மூலம் அவ்விடதுக்கு போக வேண்டாம் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் அப்ப செய்திகள் வந்து இருந்தன.

இவற்றுக்கு அப்பால் கொழும்பின் கசினோ விளையாட்டு மீதான தடைக்கு இவரும் காரணம் என்று ஒரு சீன கசினோ புள்ளிதான் கொலைச் சதியில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டியும் இருந்தனர். அந்த சீன பிரஜை ரஞ்சன் கொல்லப்பட்டு 10 நாட்களின் பின் நாடு கடத்தப்பட்டு இருந்தார். ரஞ்சனின் கொலைக்கு பின் பல தமிழ் இளைஞர்கள் கைது செய்ப்பட்டு இருந்தாலும் எவரும் நீண்ட காலத்துக்கு தடுத்து வைக்கப்படவும் இல்லை, விசாரிக்கப்படவும் இல்லை. அனைவரும் விடுதகை செய்யப்பட்டனர்.

கொழும்பில் நடந்த முதல் கரும்புலி தாக்குதல் எப்படி ஒப்புகெகொள்வார்கள். ஊடகவியலில் அனுபவம் உள்ள உங்களிடமே தெரிவை விட்டுவிடுகிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.