Jump to content

கிறீன்லாந்து: உருகும் பனியும் காத்திருக்கும் ஆபத்தும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு அத்திலாந்திக் சமுத்திரத்தில் கனடாவின் வட மேற்குத் தீவுக் கூட்டங்களுக்கு அருகாக இருக்கும் விசாலமான தீவு கிறீன்லாந்து. ஏறத்தாழ ஐம்பதாயிரம் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட கிறீன்லாந்து உலகின் மிகப் பெரிய தீவாகும். சுயாட்சி அடிப்படையில் டென்மார்க்கினால் நிர்வகிக்கப் படும் கிறீன்லாந்து, பெரும்பாலும் பனியால் மூடப் பட்டிருக்கும் ஒரு நிலப் பரப்பு. வடக்கே இருக்கும் ஆர்க்ரிக் எனப்படும் பூமியின் வட துருவத்தோடு உறைந்த பனிப்பாறைகளால் இணைக்கப் பட்டிருப்பதால், வட துருவத்தைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முனையும், ஆனால் வட துருவத்தின் எல்லையில் அமைந்திருக்காத நாடுகளுக்கு, எப்போதும் கிறீன்லாந்து மீது ஒரு கடைக் கண் பார்வை உண்டு. வட துருவ ஆராய்ச்சி என்ற போர்வையிலும், பனிப்போர் காலத்தில் நேட்டோ ஒத்துழைப்பு என்ற நோக்கத்திலும் அமெரிக்கா 1956 இல் இருந்தே அங்கே ஒரு இராணுவத் தளத்தை வைத்திருக்கிறது. உலகின் வளங்களையும், இராணுவ மையங்களையும் கையகப் படுத்தும் ஒரு சக்தியாக உருவாகி வரும் சீனாவின் பார்வையும் இப்போது கிறீன்லாந்து மீது விழுந்திருக்கிறது. இரண்டு ஆண்டுகள் முன்பு, பயன் பாட்டில் இல்லாத, பாழடைந்த ஒரு கடல் ஆய்வு மையத்தை பெரும் விலை கொடுத்து வாங்க முற்பட்ட சீன நிறுவனம் ஒன்றின் முயற்சி, டென்மார்க்கினால் தடுக்கப் பட்டது. இப்போது, கிறீன்லாந்தில் ஈடாடிக் கொண்டிருந்த அறுதிப்பெரும்பான்மையற்ற சுயாட்சி அரசின் நிலையைப் பயன் படுத்திக் கொண்டு அங்கே ஒரு பாரிய விமான நிலையத்தை  அமைக்க சீன அரசின் சொந்தக் கட்டுமான நிறுவனம் முயற்சியை ஆரம்பித்துள்ளது. டென்மார்க்கில் இருந்து முற்றாக விடுதலை பெறும் நோக்கத்துடன் இயங்கும் உள்ளூர் இடது சாரிக் கட்சியொன்றும் இந்தச் சீன ஐடியாவை ஆதரித்து, உள்ளூர் அரசை அச்சுறுத்தி வருகிறது. 

அமெரிக்காவும், டென்மார்க்கும் இணைந்து இந்த முயற்சியை எவ்வாறாயினும் இந்தத் தடவையும் தடுத்து விடும் என்பது உறுதி. ஆனால், இரண்டு கண்டங்களும் கடந்து சீனாவை ஈர்க்க கிறீன்லாந்தில் என்ன இருக்கிறது? ஒரேயொரு விமானந்தாங்கிக் கப்பலுடன் கடற்படையை வைத்திருக்கும் சீனாவுக்கு அமெரிக்காவுக்கும், நேட்டோ நாடுகளுக்கும் நடுவே ஒரு உளவு மையம் தேவைப் படுவது ஒரு காரணம். ஆனால், சக்தி வாய்ந்த செய்மதிகளைக் கொண்டிருப்பதாக நம்பப் படும் சீனாவுக்கு உளவுக்கு கிறீன்லாந்து அவசியம் இல்லை. 

பூமியில், இன்னும் அகழப் படாமல் இருக்கும் காபன் பெற்றோலிய வளங்கள் கிறீன்லாந்திலும் வட துருவத்தை அண்டிய கடற்படுக்கையிலும் செறிந்து கிடக்கின்றன. இதுவே சீனாவின் இலக்காக இருக்கும் என நம்பப் படுகிறது. ஏற்கனவே, நோர்வே இந்த காபன் பெற்றோலிய வளங்களை கணிசமாக அகழ்ந்து தனது நாட்டின் பொருளாதாரத்தை தொடர்ந்து வளப்படுத்தி வருகிறது. ரஷ்யா, மற்ற நாடுகள் அகழ்ந்து களைத்துப் போன பிறகு தான் ஆரம்பித்து தனது செல்வாக்கை இன்னும் உயர்த்தலாம் என்ற எண்ணத்துடன் தனது வடக்குக் கரைப் பிரதேசத்தைக் கவனமாகக் காவல் காத்து வருகிறது. உயர்ந்து வரும் பூமியின் வெப்ப நிலையால், வட துருவப் பகுதியில் பனிபாறைகள் உருகி, சாதாரண கப்பல்களே பயணம் செய்யத் தகுந்த நிலைமையும் உருவாகி வருவதால், இந்தப் பிரதேசம் காபன் பெற்றோலிய அகழ்வுக் கம்பனிகளின் போட்டிக் களமாக விரைவில் மாறும் எனவும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 

இந்த நிலையில் அண்மைய புவியியல் ஆய்வொன்று கிறீன்லாந்தில் உருகி அழிந்து போகும் பனிப்போர்வையால், சூழல் வெப்பத்தை அதிகரிக்கும் மீதேன் (methane) வாயுவின் வெளியேற்றம் அதிகரிக்கக் கூடும் என எச்சரித்திருக்கிறது. மீதேன் என்பது நாம் ஊரில் பயன்படுத்தும் உயிர்வாயுவிலும் (bio-gas) மேற்கு நாடுகளில் சமையலுக்கும் வீட்டைச் சூடாக்கவும் பயன் படுத்தும் இயற்கை வாயுவிலும் (natural gas) இருக்கும் பிரதானமான வாயு. காபனீரொட்சைட் (CO2) என்பது நாம் நன்கறிந்த "பச்சை வீட்டு விளைவு" (green house effect) ஏற்படுத்தும் ஒரு வாயு- நாம் பெற்றோலிய எரிபொருளை எரிக்கும் போது  வெளியாவது. பூமியின் வளி மண்டலத்தில் உள்ள மீதேனின் அளவு, காபனீரொட்சைட்டை விட 200 மடங்கு குறைவெனினும், மீதேனின் பச்சை வீட்டு விளைவு, ஏறத்தாழ 30 மடங்கு காபனீரொட்சைட்டை விட அதிகமாகும். உலகின் சதுப்பு நிலங்கள், கால்நடைகள், லாண்ட் fபில் (landfill) எனப்படும் நகரக் குப்பை மேடுகளில் இருந்து மீதேன் வாயு கிரமமாக வெளியாகிக் கொண்டே இருக்கிறது. கிறீன்லாந்தின் உருகும் பனிப் போர்வையில் செய்யப் பட்ட ஆய்வுகளின் படி, கணிசமான அளவு மீதேன் வாயு பனிக்கீழ் (sub-glacial) நீரோட்டங்களில் கலந்திருக்கிறது. இந்த நீரோட்டங்களில் இருக்கும் நுண்ணுயிர்களான பக்ரீரியாக்கள், மீதேனை தங்கள் சக்தித் தேவைக்காகப் பயன் படுத்துவதால், இயற்கையாகவே மீதேன் வட்டம் மூலம் மீதேன் சூழலை மாசுபடுத்தாமல் பாதுகாக்கின்றன. ஆனால், பனிப்பாறைகளின் உருகலும், அதிகரிக்கும் பனிக்கீழ் நீரோட்டமும், நுண்ணுயிர்கள் மீதேனை இல்லாதொழிக்கும் முன்னரே,மீதேனை நிலத்திற்கு வெளியே தள்ளி விடுகின்றன. நாம் சேர்க்கும் குப்பை மேடுகள், அதிகரித்த கால்நடை வளர்ப்பு, இயற்கை வாயு அகழ்வில் வெளியேறும் மீதேன், இவை யாவும் சேர்ந்து உலகின் மீதேன் அளவு அதிகரித்துச் செல்லும் போது, கிறீன்லாந்து போன்ற பனி மூடிய நிலங்களின் இழப்பும் மீதேன் அளவை அதிகரித்தால் பூமியின் வெப்ப நிலை இன்னும் கூடலாம். இது, வட துருவப் பகுதியில் பெற்றோலியத் தேடல் அகழ்வுப் போட்டியை இன்னும் ஊக்குவிக்கும்.   

அடிப்படையில், ஒரு சூழலியல் புவியியல் மாற்றம், எவ்வாறு நாடுகளின் வளத் தேடலையும் ஆக்கிரமிப்புத் திட்டங்களையும் ஊக்குவிக்கிறது என்பதற்கு  கிறீன்லாந்து நாட்டின் தற்போதைய நிலை ஓர் நல்ல உதாரணம்.

நன்றி.

-ஜஸ்ரின் 

ஆதாரம்: 
1. Methane beneath Greenland’s ice sheet is being released. Nature 565, 31-32 (2019).

2. CHINA WANTS TO BUILD GREENLAND AIRPORT THAT MIGHT THREATEN U.S. MILITARY BASE, EXPERTS SAY. Newsweek, Wed, Jan 02, 2019. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

பயனுள்ள கட்டுரை. நன்றி ஜஸ்ரின். 

வாசித்தமைக்கு நன்றி!அமெரிக்கா சீனா போன்ற நாடுகள் கடைப் பிடிக்கா விட்டாலும் சாதாரண குடிமக்களான நாங்களே சின்னஞ்சிறு நடவடிக்கைகள் மூலம் மீதேன், காபனீரொட்சைட் வெளியாகும் அளவைக் குறைக்கலாம். இயலுமானளவு மீள் சுழற்சி செய்யக் கூடியவற்றைக் குப்பை கூளங்களில் இருந்து பிரித்து வீசினால் லான்ட் fபில் கள் நிரம்பி வழியாமல் தடுக்க பங்களிக்கலாம்.வாகன எஞ்சினை வீணாக ஓட விடாமல் தவிர்த்தல், டீசல் வாகனங்களைத் தவிர்த்தல், வீட்டில் சூரிய ஒளிமின்சாரம் பாவித்தல் இப்படிப் பல சிறு துளிகள் குழந்தைகளுக்கு இந்தப் பூமியை நாம் பரிசாகக் கொடுத்து நாம் விடைபெற உதவும் செயல்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமி இயற்கையாகவே அழிய முன்னர் மனிதர்கள் அழித்துவிடுவார்கள். பூமி  வெப்பமடைவதை தடுக்கமுடியாது ஆனால் சில தசாப்தங்கள் தாமதிக்கவைக்கலாம். இந்த இடைவெளியில் செவ்வாயை பூமியைப் போன்று மக்கள் வாழக்கூடியதாக மாற்றி அங்குபோனால்தான் மனிதகுலம் தப்பிப் பிழைக்கும்!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

புவி வெப்பமடைதலால் முதலாவதாகப் பாதிக்கப்படப் போகும் நாடு மாலைதீவு. 3 மீற்றர் கடல் நீர் உயர்ந்தால் 80 வீதமான நிலப்பரப்பு நீரில் மூழ்கிவிடும்.

இலங்கையும் குறிப்பாக யாழ்ப்பாணமும் இந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. இதுவரை உலகில் வெளியிடப்படும் வெப்பத்தில் பெரும் பகுதியைக் கடலும் பனி மலைகளும் உள்வாங்குகின்றன. இவை எல்லை மீறும்போது மோசமான வேறு விளைவுகள் உண்டாகும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.