சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்
Sign in to follow this  
கிருபன்

ஆஸி அணிக்கெதிரான டெஸ்ட்: புஜாராவின் சதத்தின் துணையுடன் வலுவான நிலையில் இந்தியா

Recommended Posts

ஆஸி அணிக்கெதிரான டெஸ்ட்: புஜாராவின் சதத்தின் துணையுடன் வலுவான நிலையில் இந்தியா

03mayank4-720x450.jpg

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதற்கமைய முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்போது, ஆட்டநேர முடிவில் புஜாரா 130 ஓட்டங்களுடனும், ஹனுமா விஹாரி 39 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

சிட்னி மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இந்தியா அணி, முதல் விக்கெட்டை 10 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை இழந்தது. கே.எல். ராகுல் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற அடுத்த களமிறங்கிய புஜாரா, மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான மாயங்க் அகர்வாலும் ஜோடி சேர்ந்து அணிக்காக சிறந்ததொரு இணைப்பாட்டத்தை பெற்றுக் கொடுத்தார்.

இவர்கள் இருவரும் இணைந்து, 116 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இதன்போது மாயங்க் அகர்வால் 77 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்தாக அணித்தலைவர் விராட் கோஹ்லி களம் புகுந்தார்.

சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்ட கோஹ்லி 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அதன்பிறகு களமிறங்கிய ரஹானேவும் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய விஹாரி களத்தில் நங்கூரமிட, மறுபுறம் துடுப்பெடுத்தாடிய புஜாரா ஆகிய இருவரும் இணைந்து அவுஸ்ரேலியா பந்து வீச்சாளர்களை திறம்பட சமாளித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். இதற்கமைய இவர்கள் இருவரும் இணைந்து இன்றைய ஆட்டநேர முடிவு வரை 75 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்தனர்.

பந்து வீச்சில் ஜோஸ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டாக், நாதன் லியோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இன்னமும் 6 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில் இந்தியா அணி, நாளை போட்டியின் இரண்டாவது நாளை ஆரம்பிக்கவுள்ளது.

 

http://athavannews.com/ஆஸி-அணிக்கெதிரான-டெஸ்ட்-3/

 

 

Share this post


Link to post
Share on other sites
சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்

முதல் இன்னிங்ஸுக்காக 622 ஓட்டங்களை குவித்தது இந்தியா

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 622 ஓட்டங்களை குவித்துள்ளது.

ind1.jpg

நேற்று சிட்டினியில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி, நேற்றைய முதலாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களை குவித்திருந்தது.

புஜாரா 130 ஓட்டத்துடனும், விகாரி 39 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

இந் நிலையில் 303 ஓட்டத்துடன் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி உணவு இடைவேளையின் முன்பு 5 விக்கெட் இழப்பிற்கு 389 ஓட்டங்களை குவித்ததுடன், ஓட்டட எண்ணிக்கை 622 ஆக இருந்தபோது ஜடேஜா ஆட்டமிகழக்க ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இந்திய அணி சார்பாக புஜார 193 ஓட்டங்களையும், ஜடேஜா 81 ஓட்டங்களையும், அகர்வால் 77 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றதுடன் ரிஷாத் பந்த் 159 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

ind2.jpg

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக நேதன் லியோன் 4 விக்கெட்டுக்களையும், ஜோஷ் ஹாஸ்லேவுட்  2 விக்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

aus.jpg

 

http://www.virakesari.lk/article/47475

Share this post


Link to post
Share on other sites

இந்தியா – ஆஸி டெஸ்ட்: மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு

284126-720x450.jpg

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதற்கமைய இன்றைய ஆட்டநேர முடிவில், அவுஸ்ரேலியா அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்படி, இந்தியா அணியுடன் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், அவுஸ்ரேலியா அணி 386 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

இன்றைய ஆட்டநேர முடிவில், பீட்டர் ஹேண்ட்ஸ்கொம்ப் 28 ஓட்டங்களுடனும், பெட் கம்மின்ஸ் 25 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதுவரையான முடிவுகளின் படி, அவுஸ்ரேலியா அணியின் அதிகபட்ச ஓட்டமாக மார்கஸ் ஹரிஸ் 79 ஓட்டங்களை பெற்றுள்ளார். பந்து வீச்சில் குப்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

சிட்னி மைதானத்தில் நேற்று முன் தினம் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய இந்தியா அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 622 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதில் இந்திய அணி சார்பில், அதிகபட்ச ஓட்டங்களாக ரிஷப்பந்த ஆட்டமிழக்காது 159 ஓட்டங்களையும், புஜாரா 193 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் லியோன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/இந்தியா-ஆஸி-டெஸ்ட்-இரண்/

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்