சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்
Sign in to follow this  
கிருபன்

இன குரோதமுடையவன் என தன்னை அடையாளப்படுத்திய ஒருவரை ஆளுநராக நியமித்திருப்பது ஐக்கியத்திற்கு வித்திடாது

Recommended Posts

இன குரோதமுடையவன் என தன்னை அடையாளப்படுத்திய ஒருவரை ஆளுநராக நியமித்திருப்பது ஐக்கியத்திற்கு வித்திடாது

ஆளுநரை நியமிப்பதென்பது ஜனாதிபதியின் அதிகாரம், அது அவரின் உரிமை. கிழக்கு மாகாணம் மூவின மக்களும் வாழும் ஒரு மாகாணம். இன குரோதம் உடையவர் என தன்னை அடையாளம் காட்டிய ஒருவரை ஆளுநராக நியமிப்பது இன ஐக்கியத்திற்கு வித்திடுவதாக இருக்காது. மற்றொரு விதத்தில் பார்த்தால், இன குரோதத்தை வளர்க்கும் செயற்பாடாகவே இருக்கும். ஆகவே, முஸ்லிம் ஒருவரை நியமித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தற்போது நியமிக்கப்பட்டுள்ளவரை ஐக்கியத்திற்கு வித்தான ஒருவராக பார்க்க முடியாது என வடமாகாண முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இந்த செயற்பாடு இன குரோதத்தை வளர்க்கும் செயற்படாகவே பார்க்கப்படும். எனவே, ஐக்கியத்திற்கு வித்தான ஒருவரை ஆளுநராக நியமிப்பதே சிறந்தது. அதனை ஜனாதிபதி கருத்திற்கொண்டு ஒருவரை நியமிக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த காலத்தில் சிங்கள மொழி பேசும் ஆளுநரே நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், தற்போது, தமிழ் பேசும் முஸ்லிம் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அது வரவேற்கத்தக்கது.ஆனால் மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் இன குரோதமுடையவன் என தன்னை அடையாளப்படுத்திய ஒருவரை ஆளுநராக நியமித்திருப்பது ஐக்கியத்திற்கு வித்திடாது.கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லா வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என தெரிவித்திருந்தார். இவ்வாறு கருத்துத் தெரிவித்த ஒருவரை கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்திருப்பது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சீ.வி.கே சிவஞானம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கிழக்கில் ஏற்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் பார்த்தால், வடக்கிலும் ஒரு தமிழரை நியமிப்பதும் சிறந்தது. வடக்கிலும் தமிழர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி கருத்தில் கொள்ள வேண்டும்.அதேவேளை, வட மாகாணத்திற்கென நியமிக்கும் ஆளுநரை, மாகாணத்தின் நிர்வாகம் தொடர்பாக தெரிந்து கொண்டவராகவும், தமிழ் மக்களோடும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஒத்துழைத்து செயற்படக்கூடியவராகவும் இருக்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.(15)

http://www.samakalam.com/செய்திகள்/இன-குரோதமுடையவன்-என-தன்ன/

Share this post

Link to post
Share on other sites
சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்

இரத்த ஆறு ஓடும் என்று தீர்கதரிசனமாக சொன்னவர்

Share this post

Link to post
Share on other sites

கிழக்குமாகாணத்திலுள்ள ஆலயஅறங்காவலர்களும்,தமிழர்களும் தமது காணிகள்,நிலங்கள் தொடர்பில் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும்.

தோலிருக்க சுளைவிழுங்கும்ஆசாமி இன்றுகிழக்குமாகாண ஆளுணர்.

கள்வனுக்கு ஆளுணர் பதவி.என்னவொரு ஜனநாயகம்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, colomban said:

இரத்த ஆறு ஓடும் என்று தீர்கதரிசனமாக சொன்னவர்

வடக்கும் கிழக்கும் இணைந்தால் கிஸ்புல்லா இரத்த ஆறை ஓட வைப்பார் என்பது தான்  உண்மை. இதற்கொரு தீர்க்கதரிசனம் தேவை இல்லை.

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, நந்தி said:

கிழக்குமாகாணத்திலுள்ள ஆலயஅறங்காவலர்களும்,தமிழர்களும் தமது காணிகள்,நிலங்கள் தொடர்பில் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும்.

தோலிருக்க சுளைவிழுங்கும்ஆசாமி இன்றுகிழக்குமாகாண ஆளுணர்.

கள்வனுக்கு ஆளுணர் பதவி.என்னவொரு ஜனநாயகம்.

அரசியலுக்குள் ஆட்சி கிழக்கில் பறி போனது பல இடங்கள் 

கிழக்கில் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டை வெட்டுவான், செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம், அட்டைப்பள்ளம், சவளக்கடை, திராய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை வாழைச்சேனை, பூநொச்சிமுனை, ஆரையம்பதி, செங்கலடி ஏறாவூர் வாகரை என நூற்றுக்கணக்கான தமிழ் கிராமங்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அக்கிராமங்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு விட்டது .அதேபோல அம்பாறையில் சம்மாந்துறை தமிழ்குறிச்சி, மீனோடைக்கட்டு, திராய்க்கேணி, பல கிராமங்கள் முழுமையாக பறிக்க பட்டு விட்டது. கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் மீனோடைக்கட்டு தமிழ் வித்தியாலயம் என காணப்பட்ட பாடசாலை இன்று முஸ்லீம் பாடசாலையாக காணப்படுகிறது

அதுமட்டுமல்லாது கிழக்கில் 1990களின் பின் பல சைவ ஆலயங்கள் முற்றாக அழிக்கப்பட்டு அவை பள்ளிவாசல்களாகவும் சந்தைகளாகவும் குடியிருப்புக்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.
வாழைச்சேனை காளிஅம்மன் ஆலயத்தின் காணியை சுவீகரித்து அதில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கான சந்தையும் இறைச்சிக்கடையும் அமைத்ததாகவும் அதற்கான நிதியை தானே ஓதுக்கியதாகும் என ஆளுநராக நியமிக்கப்படும் ஹிஸ்புல்லா வெளிப்படையாக சொன்னார் .மீனோடைக்கட்டு பிள்ளையார் கோவில் முற்றாக இடிக்கப்பட்டு அந்த இடத்தில் இறைச்சிக்கடையுடன் கூடிய வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஓட்டமாவடி பிள்ளையார் கோவில், கரைவாகு காளிகோவில், முற்றாக அழிக்கப்பட்டு இறைச்சிக்கடைகள் கட்டப்பட்டிருக்கிறது. சம்மாந்துறை காளிகோவில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோவில், என கிழக்கு மாகாணத்தில் இருந்த பல சைவக்கோவில்கள் இருந்த இடம்தெரியாமல் இடிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.இதன் பின்னனியில் எல்லாம் முஸ்லீம் ஜிகாத் குழுக்கள் இருந்தனர் .

இந்த கொடூரங்களை 1990 க்கு பின்னால் கிழக்கில் பலம் பெற்ற புலிகள் தடுத்து நிறுத்தினர் . சில இடங்களில் வன்முறையும் எங்கள் தமிழ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது .இதை ஏற்று கொள்ள முடியாவிட்டாலும் அந்த காலத்தில் வேறு தெரிவுகள் இருக்கவில்லை

2009 க்கு பின்னர் மீண்டும் பழைய நிலை தோற்றுவிக்க பட்டு இருக்கிறது .பல ஏக்கர் மேச்சல் தரைகள் பறி போய் இருக்கிறது . கோவில் சிலைகள் திருடப்பட்டு இருக்கிறது .விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்க பட்டு இருக்கிறது .மாடுகள் உட்பட கால்நடைகள் நாள்தோறும் திருடப்படுகிறது . சட்டத்துக்கு புறம்பாக அரச தொழில்வாய்ப்புகள் வழங்கப்படுகினறன .. இப்போது கோவில் காணியை திருடி சந்தை கட்டிய குற்றாவளியை ஆளுநராக நியமித்து இருக்கிறார்கள் . வடக்கு மக்கள் வனவள திணைக்களம், தொல்லியல் திணைக்களம் , மகாவலி அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை ராணுவம் என்கிற 4 அமைப்புகளிடம் நிலங்களை தொடர்ச்சியாக பறி கொடுத்து வருகிறார்கள் ..ஆனால் கிழக்கு மக்கள் இந்த 4 அமைப்புகள் மற்றும் முஸ்லீம் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களிடம் நித்தம் நிலங்களை இழந்து வருகிறார்கள் .

தமிழ் மக்கள் தகுதியான தலைமையை தேர்ந்து எடுக்காத வரை இந்த கொடூரங்கள் தொடரும் .

இது எங்கள் கிழக்கின் நிலை

  • Like 3
  • Thanks 2
  • Sad 2

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நெஞ்சு வெடிக்குது...

தனிக்காட்டு ராஜா! நீங்கள் எழுதிய இந்த அப்பட்டமான உண்மைத்தகவல்கள்  இங்கிருக்கும் தமிழ் கூத்தமைப்பு சொம்பு தூக்கிகளுக்கு சமர்ப்பணம்.

சிங்களமும் முஸ்லிமும் தமிழரை வாழ விடாது என்பது திட்டவட்டமாக தெரிகின்றது.
இருந்தும்....
இதை கேட்க விழைபவர்களை பயங்கரவாத புலிகள் பட்டம் கட்டி தூரத்தே வைத்துவிடுகின்றார்கள்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இவற்றை நியாயப்படுத்தவே, எம்மில் சிலரென்ன பலர் இருக்கின்றார்கள். வடக்கில் முஸ்லீம் வெளியேற்றத்துக்கு இனச்சுத்திகரிப்பு என்று சொன்ன எம் வருங்கால தலைவர், இன்றுவரை இவற்றை பற்றி ஏதேனும் ஒரு கருத்து????

எங்கே, கிழக்கில் இருந்து சிறிலங்கா பாராளுமன்றம் தெரியான எம் தலைவர்கள்? மீள் குடியேற்றம் என்றவுடம், முஸ்லீங்களின் வடக்கு விவகாரத்தை முஸ்லீம் அரசியல்வாதிகள் கையிலெடுக்கும் போது, இவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?????

Share this post

Link to post
Share on other sites

தகவல்களுக்கு நன்றி தனிக்காட்டு ராஜா .......!

Share this post

Link to post
Share on other sites

தனிக்காட்டு ராஜாவின் தகவல்கள் ஒவ்வொரு தமிழ்மகனும் அறியவேண்டிய அவசியமானவை.எங்கள் அரசியல் தலைமைகள் வாய்ச்சொல்வீரர்கள்.கையாலாகாதவர்கள்.இன்னும் 10 ஆண்டுகள் அதிகம் தமிழர் யாவும் இழந்து,காக்காவின் ஆட்சியின் கீழ் வாழும் கசப்பான உண்மைநடந்தேறும்.

Share this post

Link to post
Share on other sites

இதற்கு தான் நான் அப்பவே சொன்னேன் பிள்ளையான்,கருணா போன்றோர் மட்டுவிற்கு  வேண்டும் 
 
Share this post

Link to post
Share on other sites
4 hours ago, ரதி said:

இதற்கு தான் நான் அப்பவே சொன்னேன் பிள்ளையான்,கருணா போன்றோர் மட்டுவிற்கு  வேண்டும் 
 
கூத்தமைப்பு தொடர்ந்து குறைட்டை விட்டு நித்திரை கொண்டால்............??????

Share this post

Link to post
Share on other sites
On 1/7/2019 at 7:37 PM, தனிக்காட்டு ராஜா said:

தமிழ் மக்கள் தகுதியான தலைமையை தேர்ந்து எடுக்காத வரை இந்த கொடூரங்கள் தொடரும் .

இதை சொன்னால் இங்க பலருக்கு பொல்லாத கோபம் வரும் பாருங்கோ!!!

Share this post

Link to post
Share on other sites
23 hours ago, ரதி said:

இதற்கு தான் நான் அப்பவே சொன்னேன் பிள்ளையான்,கருணா போன்றோர் மட்டுவிற்கு  வேண்டும் 
 
ஏன் கொலை, கடத்தல், பாலியல் வல்லுறவு என்பவற்றை தொடர்வதற்கா?

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, MEERA said:

ஏன் கொலை, கடத்தல், பாலியல் வல்லுறவு என்பவற்றை தொடர்வதற்கா?

நீங்கள் இப்படியே கதைத்துக் கொண்டு இருங்கோ கிழக்கு மாகாணம் முழுசாய் பறி போகட்டும்😲...உங்களுக்கு என்ன நீங்கள் இங்கே தானே இருக்கிறீர்கள் 
 
Share this post

Link to post
Share on other sites
11 hours ago, ரதி said:

நீங்கள் இப்படியே கதைத்துக் கொண்டு இருங்கோ கிழக்கு மாகாணம் முழுசாய் பறி போகட்டும்😲...உங்களுக்கு என்ன நீங்கள் இங்கே தானே இருக்கிறீர்கள் 
 
நீங்க தான் இங்கேயே இருக்கிறீர்கள், 

Share this post

Link to post
Share on other sites
On 1/7/2019 at 11:07 PM, தனிக்காட்டு ராஜா said:

அரசியலுக்குள் ஆட்சி கிழக்கில் பறி போனது பல இடங்கள் 

கிழக்கில் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டை வெட்டுவான், செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம், அட்டைப்பள்ளம், சவளக்கடை, திராய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை வாழைச்சேனை, பூநொச்சிமுனை, ஆரையம்பதி, செங்கலடி ஏறாவூர் வாகரை என நூற்றுக்கணக்கான தமிழ் கிராமங்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அக்கிராமங்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு விட்டது .அதேபோல அம்பாறையில் சம்மாந்துறை தமிழ்குறிச்சி, மீனோடைக்கட்டு, திராய்க்கேணி, பல கிராமங்கள் முழுமையாக பறிக்க பட்டு விட்டது. கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் மீனோடைக்கட்டு தமிழ் வித்தியாலயம் என காணப்பட்ட பாடசாலை இன்று முஸ்லீம் பாடசாலையாக காணப்படுகிறது

அதுமட்டுமல்லாது கிழக்கில் 1990களின் பின் பல சைவ ஆலயங்கள் முற்றாக அழிக்கப்பட்டு அவை பள்ளிவாசல்களாகவும் சந்தைகளாகவும் குடியிருப்புக்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.
வாழைச்சேனை காளிஅம்மன் ஆலயத்தின் காணியை சுவீகரித்து அதில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கான சந்தையும் இறைச்சிக்கடையும் அமைத்ததாகவும் அதற்கான நிதியை தானே ஓதுக்கியதாகும் என ஆளுநராக நியமிக்கப்படும் ஹிஸ்புல்லா வெளிப்படையாக சொன்னார் .மீனோடைக்கட்டு பிள்ளையார் கோவில் முற்றாக இடிக்கப்பட்டு அந்த இடத்தில் இறைச்சிக்கடையுடன் கூடிய வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஓட்டமாவடி பிள்ளையார் கோவில், கரைவாகு காளிகோவில், முற்றாக அழிக்கப்பட்டு இறைச்சிக்கடைகள் கட்டப்பட்டிருக்கிறது. சம்மாந்துறை காளிகோவில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோவில், என கிழக்கு மாகாணத்தில் இருந்த பல சைவக்கோவில்கள் இருந்த இடம்தெரியாமல் இடிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.இதன் பின்னனியில் எல்லாம் முஸ்லீம் ஜிகாத் குழுக்கள் இருந்தனர் .

இந்த கொடூரங்களை 1990 க்கு பின்னால் கிழக்கில் பலம் பெற்ற புலிகள் தடுத்து நிறுத்தினர் . சில இடங்களில் வன்முறையும் எங்கள் தமிழ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது .இதை ஏற்று கொள்ள முடியாவிட்டாலும் அந்த காலத்தில் வேறு தெரிவுகள் இருக்கவில்லை

2009 க்கு பின்னர் மீண்டும் பழைய நிலை தோற்றுவிக்க பட்டு இருக்கிறது .பல ஏக்கர் மேச்சல் தரைகள் பறி போய் இருக்கிறது . கோவில் சிலைகள் திருடப்பட்டு இருக்கிறது .விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்க பட்டு இருக்கிறது .மாடுகள் உட்பட கால்நடைகள் நாள்தோறும் திருடப்படுகிறது . சட்டத்துக்கு புறம்பாக அரச தொழில்வாய்ப்புகள் வழங்கப்படுகினறன .. இப்போது கோவில் காணியை திருடி சந்தை கட்டிய குற்றாவளியை ஆளுநராக நியமித்து இருக்கிறார்கள் . வடக்கு மக்கள் வனவள திணைக்களம், தொல்லியல் திணைக்களம் , மகாவலி அபிவிருத்தி சபை மற்றும் இலங்கை ராணுவம் என்கிற 4 அமைப்புகளிடம் நிலங்களை தொடர்ச்சியாக பறி கொடுத்து வருகிறார்கள் ..ஆனால் கிழக்கு மக்கள் இந்த 4 அமைப்புகள் மற்றும் முஸ்லீம் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களிடம் நித்தம் நிலங்களை இழந்து வருகிறார்கள் .

தமிழ் மக்கள் தகுதியான தலைமையை தேர்ந்து எடுக்காத வரை இந்த கொடூரங்கள் தொடரும் .

இது எங்கள் கிழக்கின் நிலை

இவையனைத்தும் தெரிந்துகொண்டே கூத்தமைபிற்கு திரும்ப திரும்ப வாக்களித்து நீங்களும் நானும் கண்டதென்ன ....? 
நான் ஒருகட்டத்திற்கு மேல் தெளிவடைந்து விட்டேன் ஆனால் பெரும்பாலான கிழக்கர் இன்னும் கூத்தமைப்பை பிடித்து தொங்கி கோவணத்தையும் உருவிக்கொடுக்க ஆசைப்படும் போது நாம் என்ன செய்வது... விதி விட்ட வழி என்று வேடிக்கை பார்ப்பதை தவிர  

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, ரதி said:

நீங்கள் இப்படியே கதைத்துக் கொண்டு இருங்கோ கிழக்கு மாகாணம் முழுசாய் பறி போகட்டும்😲...உங்களுக்கு என்ன நீங்கள் இங்கே தானே இருக்கிறீர்கள் 

இவர்களும்  ஏமாற்றி  தாம்  முடிந்தவரை அனுபவித்து  விட்டு

அவர்களுக்கு முழுமையாக  விலை பேசி  விற்கத்தானே  போகிறார்கள்

Share this post

Link to post
Share on other sites
16 hours ago, ரதி said:

நீங்கள் இப்படியே கதைத்துக் கொண்டு இருங்கோ கிழக்கு மாகாணம் முழுசாய் பறி போகட்டும்😲...உங்களுக்கு என்ன நீங்கள் இங்கே தானே இருக்கிறீர்கள் 
 
ரதி,

இதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. கருணா பிரிந்தபொழுது ஒரு முஸ்லீம் அமைச்சரூடாகத்தான் கொழும்பிற்குச் சென்றார். அன்றிலிருந்து இன்றுவரை மகிந்தவின் கையாளாகத்தான் வேலை செய்தும் வருகிறார். அண்மையில் நடந்த மட்டக்களப்பு நகர் இரு பொலீஸ்காரர் கொலை உற்பட. ஆகவே, கருணா என்பவர் பேரினவாதத்தின் ஒரு கருவியே அன்றி கிழக்குத் தமிழருக்கான விடிவெள்ளி கிடையாது. 

நீங்கள் சொல்வதுபோல, முஸ்லீம்களுடன் அவர் முரண்பட்டு, கிழக்கைப் பாதுகாப்பார் என்பது செல்லாது ஏனென்றால், அவர் சிங்களத்துக்கு இன்னொரு பக்கத்தால் வேலை பார்ப்பார். முஸ்லீகளால் பறிக்கப்படாத தமிழ் நிலம், சிங்களவருக்குத் தாம்பாளத்தில் வைத்துக் கருணாவால் கொடுக்கப்படும். அப்போதும் கூட இழப்பது தமிழர்தான்.

கருணாவினால் சிங்களப் பேரினவாதத்தைவிட்டு வெளியே வரமுடியாது. சிங்கத்தின் வாலைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறார், விட்டால் அது அவரைக் கொன்று தின்று ஏப்பம் விட்டுவிடும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால், அவருக்கு மகிந்த எனும் இனக்கொலையாளிக்குச் செம்பு தூக்குவதைவிட வேறு வழியில்லை. 

தமிழ்க் கூட்டமைப்பிற்கு கருணா நிச்சயம் மாற்றீடாக இருக்கமுடியாது. ஏனென்றால் தமிழ்க் கூட்டமைப்பு செய்வது அரசியல், கருணா செய்வது கூலிக் கொலைகள்.

  • Like 3

Share this post

Link to post
Share on other sites
50 minutes ago, ragunathan said:

தமிழ்க் கூட்டமைப்பிற்கு கருணா நிச்சயம் மாற்றீடாக இருக்கமுடியாது. ஏனென்றால் தமிழ்க் கூட்டமைப்பு செய்வது அரசியல், கருணா செய்வது கூலிக் கொலைகள்.

சொறிலங்காவின் அரசுடன் இணைந்ததில் இருந்து கருணா செய்வது கூலிக்கு சமூகவிரோத செயல்களை செய்வது தானே!

கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் கொலை, ஜோசெப் பரராஜசிங்கம் கொலை, என பல கொலைகளை செய்தது கருணா என்று தெரியும் தானே.

கருணாவுடன் சமூகவிரோத செயல்களை செய்ய சேர்ந்த பாவத்துக்கு பலிக்கடா ஆனது பிள்ளையான். 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

இவையனைத்தும் தெரிந்துகொண்டே கூத்தமைபிற்கு திரும்ப திரும்ப வாக்களித்து நீங்களும் நானும் கண்டதென்ன ....? 
நான் ஒருகட்டத்திற்கு மேல் தெளிவடைந்து விட்டேன் ஆனால் பெரும்பாலான கிழக்கர் இன்னும் கூத்தமைப்பை பிடித்து தொங்கி கோவணத்தையும் உருவிக்கொடுக்க ஆசைப்படும் போது நாம் என்ன செய்வது... விதி விட்ட வழி என்று வேடிக்கை பார்ப்பதை தவிர  

நான் எப்போ குறிப்பிட்டு இருக்கிறன் கூத்தமைப்புக்கு வாக்களித்தேன்  என  முகநூலில் இந்த கட்சிகளுக்கு எல்லோரும் ஆப்படிக்கவே பேக் ஐடி வச்சிருக்கிறன் அதில் நீங்களும் நண்பர் அப்பு :104_point_left:

  • Confused 1

Share this post

Link to post
Share on other sites
On 1/8/2019 at 1:28 AM, குமாரசாமி said:

நெஞ்சு வெடிக்குது...

தனிக்காட்டு ராஜா! நீங்கள் எழுதிய இந்த அப்பட்டமான உண்மைத்தகவல்கள்  இங்கிருக்கும் தமிழ் கூத்தமைப்பு சொம்பு தூக்கிகளுக்கு சமர்ப்பணம்.

சிங்களமும் முஸ்லிமும் தமிழரை வாழ விடாது என்பது திட்டவட்டமாக தெரிகின்றது.
இருந்தும்....
இதை கேட்க விழைபவர்களை பயங்கரவாத புலிகள் பட்டம் கட்டி தூரத்தே வைத்துவிடுகின்றார்கள்.

என்னத்தை சொல்ல எங்களுக்கு பழகிவிட்டது இதை மொத்தமாக கேட்பவர்களுக்கு கொஞ்சம் கஸ்ரமாக இருக்கும் எங்கள் ஊர் பிரதான வீதியில் இருக்கும் காணிகளும் விற்பனையாகி விட்டது யாருக்கும் தெரியாமல் கோடி கணக்கில்  விற்றவர்கள் பெரிய இடம் அவங்களுக்கு ஒன்றும் கதைக்கமாட்டார்கள் ஆனால் ஒரு ஏழை விற்றால் அவன் குடும்பத்தையும் ஒட்டு மொத்தமாக நாறடித்து விடுவார்கள்

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, ragunathan said:

ரதி,

இதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. கருணா பிரிந்தபொழுது ஒரு முஸ்லீம் அமைச்சரூடாகத்தான் கொழும்பிற்குச் சென்றார். அன்றிலிருந்து இன்றுவரை மகிந்தவின் கையாளாகத்தான் வேலை செய்தும் வருகிறார். அண்மையில் நடந்த மட்டக்களப்பு நகர் இரு பொலீஸ்காரர் கொலை உற்பட. ஆகவே, கருணா என்பவர் பேரினவாதத்தின் ஒரு கருவியே அன்றி கிழக்குத் தமிழருக்கான விடிவெள்ளி கிடையாது. 

நீங்கள் சொல்வதுபோல, முஸ்லீம்களுடன் அவர் முரண்பட்டு, கிழக்கைப் பாதுகாப்பார் என்பது செல்லாது ஏனென்றால், அவர் சிங்களத்துக்கு இன்னொரு பக்கத்தால் வேலை பார்ப்பார். முஸ்லீகளால் பறிக்கப்படாத தமிழ் நிலம், சிங்களவருக்குத் தாம்பாளத்தில் வைத்துக் கருணாவால் கொடுக்கப்படும். அப்போதும் கூட இழப்பது தமிழர்தான்.

கருணாவினால் சிங்களப் பேரினவாதத்தைவிட்டு வெளியே வரமுடியாது. சிங்கத்தின் வாலைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறார், விட்டால் அது அவரைக் கொன்று தின்று ஏப்பம் விட்டுவிடும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால், அவருக்கு மகிந்த எனும் இனக்கொலையாளிக்குச் செம்பு தூக்குவதைவிட வேறு வழியில்லை. 

தமிழ்க் கூட்டமைப்பிற்கு கருணா நிச்சயம் மாற்றீடாக இருக்கமுடியாது. ஏனென்றால் தமிழ்க் கூட்டமைப்பு செய்வது அரசியல், கருணா செய்வது கூலிக் கொலைகள்.

கருணா பேரினவாதத்தின் கைக்கூலியாகவோ அல்லது மகிந்தவின் அடிமையாகவோ இருக்கலாம்...ஆனால் தமிழரின் நிலத்தை பறித்து சிங்களவருக்கு கொடுப்பார் என்பது ரொம்ப ஓவராய் இல்லையா?....அவர் அப்படி செய்ய நினைத்தால் மகிந்த ஆட்சியில் இருக்கும் போதே செய்து இருக்கலாம்.

கிழக்கை பொறுத்த வரைக்கும் தமிழர்களது நிலங்களை பறிப்பது முஸ்லீம்கள் தான். சிங்களவர்கள் இல்லை...முதலில் அவர்களிடம் இருந்து எங்கள் நிலங்கள் பறி போகாமல் தடுக்கும் சக்தி கருணாவுக்கும்,பிள்ளையானுக்கும் தான் உண்டு என்று நான் நினைக்கிறேன்...முதலில் முஸ்லிம்களிடமிருந்து நிலங்களை மீட்டு விட்டு பிறகு சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக போராடலாம்.

பிள்ளையானை உண்மையாகவே ஜோசப் பரராஜசிங்கத்தை கொண்டதிற்காக உள்ளே வைத்து இருக்கிறார்கள்?
எதற்கு கி.மாகாணத்திற்கு முஸ்லீம் ஆளுனர் ?

கருணாவும்,பிள்ளையானும் துரோகியாக இருக்கலாம் ,கொலைகாரர்களாக இருக்கலாம்...ஆனால் அவர்களை விட்டால் வேறு தெரிவு இல்லை...தாங்கள் சுத்தமானவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஒரு மண்ணும் கிழிக்கப் போவதில்லை

12 hours ago, MEERA said:

நீங்க தான் இங்கேயே இருக்கிறீர்கள், 

ஆமாம் நீங்கள் தான் அடிக்கடி ஊருக்குப் போய் வாறீர்கள்...என்னிலும் பார்க்க உங்களுக்கு தான் ஊர் நிலவரம் அதிகம் தெரியும்...நீங்களே சொல்லுங்கள் இப்ப அங்கு இருப்பவர்களில் யார் உங்கள் தெரிவு?
 
Edited by ரதி

Share this post

Link to post
Share on other sites

கொழும்பான் இணைக்கும் முஸ்லிம் தளங்கள் முஸ்லிம்கள்தான் சனத்தொகை ரீதியாக கிழக்கில் அதிகம் என்று  தெளிவாகச் சொல்லுகின்றன. அடுத்ததாகச் சிங்களவர்களும், மூன்றாவதாகத் தமிழர்களும் இருக்கும் நிலையில் கருணா அம்மானோ, மட்டக்களப்பை மட்டும் தெரிந்த பிரதேசவாதி சிறையிருக்கும் செம்மல் பிள்ளையானோ எதுவும் செய்யமுடியாது!

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.