தமிழர்களைத் தலைமைதாங்க விக்னேஸ்வரனே சிறந்த தலைவர்- கருத்துக்கணிப்பு தெரிவிப்பு!

By
போல்,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By goshan_che · Posted
அண்ணை, நானும் உளப்பூர்வமாகவே எழுதுகிறேன். 1. கொடி பிடிக்காமல் போனால் நாம் சொல்வதை கேட்பார்கள் என்பதில்லை, ஆனால் இதை ஒரு அமைப்பு சார்ந்ததாக அல்லாமல் ஒரு இனம் சார்ந்ததாக காட்ட முடியும் என்கிறார்கள் ஒரு சாரார். கொடிக்கு யாரும் அவமரியாதை நினைப்பதில்லை. அந்த கொடிக்காக மாண்டவர் மீது இருக்கும் அதே மரியாதை அந்த கொடியின் மீதும் இருக்கும். ஆனால் ரதி அக்கா சொல்வதை போல, தீர்வு வந்தபின் கொடியை பிடிக்கலாம், இப்போ உலக ஓப்புக்காக இதை தவிர்ப்போம் என்கிறனர் இவர்கள். (நானும் முன்பு இப்படி யோசித்தேன், எழுதினேன்). 2. இல்லை எப்படியோ நாம் சொல்வதை யாரும் கேட்கபோவதில்லை. எனவே கொடியை விடுத்து போவதில் அர்த்தமில்லை. கொடியோடு போவோம், போராடுவோம் என்கிறார்கள் மறுசாரார். இதில் ஒரு உள் அணியினர், கொடியை விடுத்து போனால் எமக்கு தீர்வு வரும் என்றால், அப்படி ஒரு தீர்வே தேவையில்லை என (வெளிநாட்டில் இருந்தபடி) சொல்பவர்களாயும் உள்ளனர். இந்த உள் அணியின் முரட்டு பிடிவாதத்தில் எனக்கு துளியும் உடன்பாடில்லை. ஆனால் எப்படியும் ஒன்றும் ஆகப்போவதில்லை, எனவே கொடியோடு போவோம் என்பதில் ஒரு குறைந்தபட்ச நியாயம் இருப்பதாகவே படுகிறது. கொடி பிடிப்பதில் ஏற்பு இல்லை எனும் நாதமுனி, ஆனால் கொடி பிடிப்பவரை பிடிக்க விடுங்கோ, பிடிக்க விரும்பாதோர் பிடிக்காமல் போங்கோ என்கிறார். இது ஒன்றும் புதிதல்ல. 2009இல் பலர் கொடி பிடிக்க விரும்பாமல் ஆனால் போராட்டத்து வந்தார்கள் என்பது போராட்டத்தில் கலந்தவர்களுக்கு தெரியும். அதுவும் ஒரு கடும் பனிக்காலம்தான். ஆனால் இப்போ? எனது அவதானத்தில் நிச்சயமாக கொடி பிடிப்பவர்கள் மட்டும்தான் போராட போகிறார்கள். ஆகவே - அவர்கள் நாங்கள் யார் சொன்னாலும் கேட்க போவதில்லை. ஆனால் எத்தனை பேர் போகிறார்கள்? படத்தை மிக கவனப்பட்டு முதல் வரி மட்டும் தெரியும்படி எடுத்துள்ளார்கள். ஏன்? ரெண்டாம், மூன்றாம் அடுக்கில் நிற்க ஆட்கள் இல்லை. சில சமயம் - கொடியை தவிர்த்தால் - இன்னும் பலர் வந்து சேரக்கூடும். வராமலும் போகலாம். இங்கே ஒரே ஒரு கேள்விதான். இன்றைய நிலையில், கொடி பிடிப்பதால் எமக்கு நன்மையா? தீமையா? இதற்கான பதில் இப்போதைக்கு மாறி மாறி கதைப்பது மட்டும்தான். அது (மட்டும்) தான் 3 பக்கமாக இங்கே நடந்துள்ளது. என்னை பொறுத்தவரை - நாம் தொண்டை தண்ணி வத்த கத்தியும் ஒரு பலனுமில்லை. பெரிய நாடுகளுக்கு நாம் தேவைபட்டால், மூன்று பேர் சேர்ந்து போராடியதையும் பெரியதாக கருதி செயல்பாட்டில் இறங்குவார்கள், அவர்களுக்கு தேவைபடாவிட்டால் - உலகின் 5வது பெரிய பொருளாதாரத்தின் பாராளுமன்றம் முன், ஆயிரகணக்கில் கூடி24/7 போராடினாலும் உச்சு கொட்டி விட்டு போய் கொண்டே இருப்பார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமது இனத்தின் சக வாழ்வுக்கான தீர்வு இந்த வீதி போராட்டங்களில் இல்லை என நான் நினைக்கிறேன். அது இலங்கையில் ஒரு காத்திரமான தமிழ் தலைமை அமைந்து, அது சர்வதேச காய்நகர்தல்களை திறம்பட கையாளுவதன் மூலமே சாத்தியம். எமக்கான அரசியல் தீர்வு திருமணம் என்றால் - பொம்பிளை மாப்பிள்ளை, இலங்கையில் இருக்கும் தமிழ் தலைமைகள். மேளகச்சேரி புலம்பெயர் போராடங்கள். பொம்பிளை மாப்பிள்ளை ரெடி என்றால் மேள கச்சேரியும் கல்யாணத்தில் ஒரு அங்கமாகலாம். அவர்கள் இல்லாமல் தனியே தவிலை மட்டும் அடித்து, கல்யாணத்தை ஒப்பேற்ற முடியாது. ஆனால் அப்படி ஒரு ஆமான தலைமை அங்கேயும் இருப்பதாக தெரியவில்லை. சுமந்திரம், சீவி போன்றோர் இப்படி ஒரு தலைமைதுவத்தை வழங்ககூடும் என்ற எதிர்பார்ப்பும் பிழைத்து போனதை காண்கிறோம். ஆகவே இப்போதைக்கு இதை பற்றி அடிபடுவதில் அதிகம் அர்த்தம் இல்லை என நினைக்கிறேன். ஆனால் அவர்களுக்கு ஒரு நாள் நாம் தேவைபட்டு, சர்வதேசம் எம்மை அழைத்து கொடியை மடக்கி விட்டு வாருங்கள் விடயத்தை செய்துதருகிறோம், என்று சொல்லும் நிலை வந்தால் ( பூகோள அரசியல் மாற்றத்தால்) அப்போதாவது, கொடியை கொஞ்ச காலம் ஒத்தி வைக்க நாம் தயாராக இருக்க வேண்டும். எந்த தனி நபர், கொள்கை, கொடி மீதான அதீத பற்றுதலும் எமது மக்களின் கெளரவமான சகவாழ்வுக்கு தடையாக வரக்கூடாது. அந்த கொடியை இறுக பற்றியபடி மாண்டோரும், இன்றைய நிலையில் இதையே சொல்லுவார்கள் என்பதே நான் நினைப்பது. கவனம்: கசப்பான யதார்த்த குளுசை 2009 க்கு பின் கொடி பிடித்தோரும், பிடிக்காதோரும் ஒன்றும் செய்யவில்லை. செய்யும் நிலையில் நீங்களும் இல்லை. நாங்களும் இல்லை. யாருமில்லை. -
By nedukkalapoovan · Posted
சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைச்சுக் கொள்ளும் வியாபாரம் நிலைக்கிறது.. -
By தமிழ் சிறி · Posted
நீங்கள்... எத்தனை, முறை... மாற்றுக் கருத்து, மாணிக்கங்களிடமிருந்து.... 2009´க்குப் பின்.. என்ன செய்தீர்கள்? என்று... இதே.... களத்தில், பலரும், பலமுறை கேட்டும்... "கழுவுகிற மீனில், நழுவுகிற மீனாக" தப்பி... ஓடி விடுகின்ற, ஆட்கள் தான்... இந்த, மாற்றுக் கருத்து, மாணிக்கங்கள். இவர்களை... ஓட்டுக் குழுக்கள் என்று, முன்பு சொல்வார்கள். உண்மையில்... அப்பவும், இப்பவும்... ஓட்டுக் குழுக்கள், வேறு வடிவங்களில் வந்து உள்ளமை.. கவனிக்கப் பட்டுள்ளது. எத்தனையோ.... வசதிகள், ஆளுமை இருந்தும், காட்டிக் கொடுப்புகளால்... தோல்வி உற்ற இனம், உலகத்திற்கே.... மூத்த, தமிழ் இனம். ஆனபடியால்... சில, விடயங்களில்... கடந்து போக வேண்டிய... காலக் கட்டாயம், கண் முன்னே.. உள்ளது. -
இன்றைய இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள் https://www.facebook.com/tamilmangaiyarmalar/videos/278613660055807
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.