Jump to content

தமிழர்களைத் தலைமைதாங்க விக்னேஸ்வரனே சிறந்த தலைவர்- கருத்துக்கணிப்பு தெரிவிப்பு!

Recommended Posts

625.200.560.350.160.300.053.800.300.160.

தாயகத்தில் தமிழ் மக்களை தலைமைதாங்கத் தகுதியான தலைவர் சி.வி. விக்னேஸ்வரனே என்று தெரிவித்துள்ளார்கள் IBC தமிழ் இணையத்தள வாசகர்கள்.

IBC தமிழ் இணையத்தளத்தில் கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்டுவந்த கருத்துக்கணிப்பிலேயே மக்கள் தமது விருப்பை இவ்வாறு வெளியிட்டுள்ளார்கள்.

தாயகத்தில் தமிழ் மக்களை தலைமைதாங்கத் தகுதியான தலைவர் யார் என்ற கேள்விக்கு:

48.09% வீதமானவர்கள் (27,720 வாக்குகள்) சி.வீ. விக்னேஸ்வரன் என்றும், 18.68% வீதமானவர்கள் (10,768 வாக்குகள்) இரா. சம்பந்தர் என்றும், 13.82% வீதமானவர்கள் (7,968 வாக்குகள்) கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் என்றும், 3.9% வீதமானவர்கள் (2,248 வாக்குகள்) டக்ளஸ் தேவானந்தா என்றும், 15.5% வீதமானவர்கள் இவர்களைத் தவிர வெறொருவர் என்றும் வாக்குப் பதிவு செய்திருக்கின்றார்கள்.

IBC தமிழ் மற்றும் லங்காசிறி இணையத் தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் இலங்கை, இந்தியா உட்பட 17 நாடுகளைச் சேர்ந்த 57,640 பேர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91

https://www.ibctamil.com/srilanka/80/112001

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இலங்கையில் இருந்து வாக்களித்தோர் எவ்வளவு வீதத்தினர் என்று தகவல் இருக்கிறதா? விக்னேஸ்வரன் அவர்கள் நல்லவர், ஆனால் நிர்வாகத்தை நடத்த இயலாதவர் என்று மாகாண சபையிலேயே பார்த்தோம்! பேசியும் எழுதியும் காலத்தை ஓட்ட நல்ல தலைவராக இருப்பார் என நினைக்கிறேன்! 

Link to comment
Share on other sites

தமிழ் மக்கள் அவரை விட சிறந்த நிர்வாகி வேறு எவரும் இல்லை என அவர்களை அனுபவத்தில் கண்டுள்ளனர்.

தமிழின படுகொலைகாரர்களுக்கு ஓடி ஓடி முண்டு கொடுக்கும் சுமந்திரனையும், நீண்ட அரசியல் அனுபவம் உடைய சம்பந்தனையும் விட பல 1000 மடங்கு வினைத்திறன் / செயற்திறன் மிக்கவர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் என்பதை வலுவற்ற மாகாணசபையை மிகத் திறமையாக நிர்வகித்து நிரூபித்துள்ளார்.

போர்குற்றவாளிகளுக்கு ஓடி ஓடி முண்டு கொடுக்கும் சுமந்திரனும், சொறிலங்காவின் அரசும், சில மோசமான மதவெறியர்களும் அவருக்கு பல்வேறு பிரச்சினைகளை பல்வேறு வடிவங்களில் கொடுத்த போதும், அவற்றையெல்லாம் தாண்டி இலட்சியத்தில் மாறாமல் செயற்பட்டு வினைத்திறன் / செயற்திறன் மிக்கவர் தான் என்பதை சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் நிரூபித்துள்ளார்.

இன்று தமிழர்களிடம் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்றால் அதற்கு மூலகாரணம் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களே.

Link to comment
Share on other sites

1 hour ago, Rajesh said:

ராஜேஷ்,

வடக்கு மாகாணசபை இலங்கையின் மாகாணசபைகளில் எந்தவிதமான வினைத்திறனும் அற்ற, உருப்படியாக எந்த ஒரு திட்டத்தினையும் செயற்படுத்தாத லஞ்சமும் ஊழலும் நிரம்பியவர்களை கொண்ட ஒரு மாகாணசபையாகவே இயங்கியது. விக்கினேஸ்வரன் வேண்டும் என்றால் நல்ல மனுசனாக இருக்கலாம், நேர்மையானவராகவும் தான் மனதில் நினைத்ததை வெளிப்படையாக சொல்லக் கூடிய தைரியம் உள்ளவராகவும் இருக்கலாம் , ஆனால் எந்த நிர்வாகத்திறனும் அற்ற ஒரு முதலமைச்சராகவே இயங்கியவர். கிழக்கு மாகாணசபையின் திட்டங்களுடனும் செயற்பாடுகளுடனும் ஒப்பிட்டால் வடக்கு மாகாணசபை செய்தது ஒன்றுமே இல்லை.

வடக்கு கிழக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதற்கு விக்கினேஸ்வரனின் வெற்று அறிக்கைகள்தான் காரணம் என்பதை நம்புவதற்கு தயார் இல்லை. மகிந்த இருதிருந்தால் இது நிகழ்ந்தே இருந்திராது என்பதற்கு அவர் பிரதமராக தற்காலிகமாக பதவியில் இருந்த மூன்று மாதங்களில் நிகழ்ந்த சம்பவங்களே நல்ல உதாரணங்கள். பல இடங்களில் மக்களால் நிகழ்த்தப்பட்ட தன்னிச்சையான போராட்டங்களும், சர்வதேச அழுத்தங்களும் முக்கியமாக ஜெனிவாவில் இடம்பெறும் /இடம்பெறப் போகும் இலங்கை தொடர்பான மனிதவுரிமை கூட்டங்கள் / பிரேரணைகளும் தான் காணி விடுவிப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.

இந்த வாக்கெடுப்பும் பெரும்பாலன புலம்பெயர் தமிழர்களை வைத்து  நடத்தப்பட்ட ஒன்று.  ஐபிசி ஒரு நேர்மையான ஊடகம் என்றால் இந்த கருத்துக்கணிப்பில் பங்கெடுத்தவர்களில் எத்தனை பேர் தாயகத்தில் இருந்து வாக்களித்தவர் என்ற எண்ணிக்கையையாவது தந்து இருக்கும். தாயகத் தமிழர்களின் தலைவிதியை தாம் மாற்றலாம் என கனவில் இன்னமும் இருக்கும் ஒரு சிறு சாரார் இப்படியான வாக்கெடுப்பிலாவது தமக்கு பிடித்த முடிவுகளை கண்டு இன்பமுறுவதை தவிர வேறு ஒன்றும் இப்படியான வாக்கெடுப்பால் நிகழப் போவது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயக தமிழர்களின் பெரும்பாலானோரின் பொருளாதார நிலை புலம்பெயர் தமிழர்களில்தான் தங்கியிருக்கிறது என்பது பலருக்கு தெரிவதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

தாயக தமிழர்களின் பெரும்பாலானோரின் பொருளாதார நிலை புலம்பெயர் தமிழர்களில்தான் தங்கியிருக்கிறது என்பது பலருக்கு தெரிவதில்லை 

தெரியும். ஆனால் அவர்களுக்கு என்ன முக்கியம் என்பதைத் தீர்மானிக்க புலம்பெயர் தமிழரின் பொருளாதார உதவி துருப்புச் சீட்டாகப் பயன்பட வேண்டுமா? இதை நாம் செய்தால், சிங்கள அரசுகள் வடக்கின் மீது காட்டிய மாற்றான் தாய் அணுகுமுறையை ஆதரிப்பது போலல்லவா முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

தெரியும். ஆனால் அவர்களுக்கு என்ன முக்கியம் என்பதைத் தீர்மானிக்க புலம்பெயர் தமிழரின் பொருளாதார உதவி துருப்புச் சீட்டாகப் பயன்பட வேண்டுமா? இதை நாம் செய்தால், சிங்கள அரசுகள் வடக்கின் மீது காட்டிய மாற்றான் தாய் அணுகுமுறையை ஆதரிப்பது போலல்லவா முடியும்?

ஒருவரின் நிர்வாகத்திறமை மற்றவர்களின் தலையீடுகள் இல்லாமல் சுயமாக முடிவெடுக்கும் உரிமை கிடைக்கும் பொழுதே வெளிப்படும். சம்பந்தர் இவ்வளவு  காலமும் இருந்து தமிழ் மக்களுக்கு என்னதான் செய்தார்? கொடுக்கப்பட்ட பெயர்களில்  விக்கி ஐயாவே எப்படியும் முதல் தெரிவு! சுமந்திரனையும் இதில் சேர்க்க சொல்கிறீர்களா? 

இதில் மாற்றான் தாய் அணுகுமுறையை எங்கே வருகிறது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு சரியான தலைமையை வழங்கக் கூடியவர்கள் இப்போது எவருமே இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது, பெரும்பான்மையான தமிழர்களின் விருப்பைப் பெற்றவர்கள். 100% தமிழர்களின் விருப்பைப் பெற்றவர்கள் எப்போதுமே இருந்ததில்லை, ஏனென்றால் எமக்கான எதிரிகள் எமக்குள்ளேயேதான் இருந்தார்கள், இருக்கிறார்கள்.

அண்மைக் காலங்களில் பெரும்பாலான தமிழர்களை ஒருங்கிணைத்தவர் என்றால், தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தான். ஆனால், அவருக்குக் கூட எதிர்ப்பென்பது, தமிழர்களுக்குள்ளேயே கணிசமான அளவு இருந்தது, இன்றும் இருக்கிறது.

தமிழ்க் கூட்டமைப்பு மீதான பெரும்பாலான தமிழ் மக்களின் விருப்போ அல்லது தெரிவோ, அவர்கள் உள்ள அபிமானத்தினாலன்றி, வேறு சரியான தெரிவுகள் இல்லாமையும், தமிழரின் வாக்குகள் சிதறிவிடுதல் சிங்களப் பேரினவாதிகள் தமிழர் தாயகத்தில் காலூன்ற வழிவகுத்துவிடும் என்பதனாலுமே பெரும்பாலும் அமைந்துவிடுகிறது. காலம் காலமாக தமிழரசுக் கட்சி அல்லது ஆனந்த சங்கரிக்கு முன்னதான தமிழர் கூட்டணிக்கான கண்மூடித்தனமான ஆதரவு ஆகியவற்றாலும் வாக்குகள் கிடைக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

திரு. விக்கினேஸ்வரன் வட மாகாண முதல்வராக இருஃந்த சமயத்தில் முறைகேடுகளைத் தடுக்கவில்லை, அல்லது சரியான திட்டங்களை வகுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்தது. தலைமைத்துவம் வழங்கக்கூடிய தகுதி அவரிடம் இல்லை என்பது அவர்மேல் வைக்கப்பட்டும் இன்னொரு குற்றச்சாட்டு. ஆனால், மாகாணசபையின் அங்கத்தவர்களாக இருந்துகொண்டே அவரின் செயற்பாட்டிற்கு தொடர்ந்தும் குந்தகம் விளைவித்துக்கொண்டிருந்தவர்கள் யார்? அவர் பதவியிலிருந்த பொழுதுகூட அவரை விமர்சித்துக்கொண்டு, அவரின் மேல் அரசினூடாக அழுத்தங்களை பிரயோகித்தவர்கள் யார்? தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து அவரை ஓரங்கட்ட தொடர்ச்சியாக வேலைபார்த்தவர்கள் யார்? இன்று அவரை கையாலாகாதவர் என்று கூறுவது யார்? இவர்கள் எல்லோருமே ஒரே ஆட்கள்தான். தமக்கு எதிராக அரசியல் செய்கிறார், வரம்புமீறிச் செல்கிறார் என்று வெளிப்படையாகவே விமர்சித்து அவரின் செயற்பாட்டை முடக்கியவர்கள் தான் இன்று அவரை கையாலாகாதவர் ஆக்கியவர்கள். அவர் சுதந்திரமாக, தன்னிச்சையாக வேலை செய்ய விடுங்கள், உங்களின் கூலிகளைக் கொண்டு அவரை முடக்குவதை நிறுத்துங்கள், ஒரே கட்சியிலிருந்துகொண்டு விமர்சிப்பதை நிறுத்துங்கள், பிறகு அவர் கையாலாகாதவரா அல்லது தலைமை தாங்க முடியாதவரா என்பதைப் பார்க்கலாம்.  அவரது மாகாணசபையை உங்களின் உறுப்பினர்களைக் கொண்டு பலவீனமாக்கிவிட்டு, தலைமை தாங்க முடியாதவர், சொல்வீரர் என்று எப்படிக் கூறுகிறீர்கள்.

இன்றுவரை, நாம் விரும்பியோ அல்லது வேறு தெரிவின்றியோ கூட்டமைப்பைத்தான் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். சர்வதேச அழுத்தங்களினால் அன்றி, சுமந்திரனாலோ அல்லது சம்மந்தராலோ இன்று சிறியளவில் நடைபெறும் காணி விடுவிப்புக்களும், கைதி விடுவிப்புக்களும் நடைபெறவில்லை. இதை அவர்களால் உரிமை கோரவும் முடியாது. ஒரு சில வருடங்கள் மட்டுமே வட மாகாண சபையை ஆட்சிசெய்த விக்கினேஸ்வரனின் தலைமைத்திறனை, அவரது செயற்திறனை கேள்விகேட்கும் நீங்கள், ஏன் இத்தனை வருடகாலம் தமிழர்களின் தலைமை என்று சொல்லிக்கொள்ளும் சம்மந்தரோ அல்லது சுமந்திரனோ என்ன செய்தார்கள் என்று கேட்கவில்லை? எங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம், சிங்களம் ஒருபோதுமே தமிழர்க்கு நீதியான தீர்வொன்றைத் தரப்போவதில்லையென்பது. புலிகள் இருந்த காலத்தில்க் கூட ஒரு நீதியான தீர்வை தரமறுத்த சிங்களம், இன்று உள்நாட்டில் எந்த அழுத்தமும் இல்லாத நிலையில், வெறும் சம்மந்தனுக்ககவும், சுமந்திரனுக்காகவும் ட்நீதியான தீர்வொன்றைத்தரும் என்று நம்புகிறீர்களா? யுத்தத்தில் முழுமையான வெற்றியைப் பெற்றுக்கொண்ட பின் அவர்கள் எதற்காகத் தமிழர்க்கு எதையுமே கொடுக்க வேண்டும்? ஆக, இன்று கிடைப்பதாகக் கூறப்படும் விடயங்களாகட்டும் (அதுகூட பிரிந்த வட கிழக்கு, ஒற்றையாட்சி, பெளத்தத்திற்கு முதலிடம், அதிகாரமற்ற காணிகள் என்று குற்றுயிராக்கப்பட்டு) அல்லது இதுவரை விடுவிக்கப்பட்ட காணிகளாகட்டும் எல்லாமுமே சர்வதேச அழுத்தங்களால் நடைபெறுகின்றன.காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாக கூட்டமைப்பு இவற்றிற்கு உரிமை கோருவது தவறு.

தாயகத்தில் விக்கினேஸ்வரனுக்கான தமிழர்களின் ஆதரவென்பது ஒருமுறை, மிகத்தெளிவாகக் காட்டப்பட்டு விட்டது. வட மாகாணத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் அவர்தான். அதுமட்டுமல்லாமல், பேரவை ஆரம்பிக்கும் நாட்களில் அவரது வீட்டிற்கு முன்பாகத் திரண்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் புலத்திலுருந்ஹ்டு போனவர்கள் கிடையாது. 

முடிந்தால், உதயன் போன்ற பத்திரிக்கை ஒன்றின் மூலமோ அல்லது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மூலமோ தமிழருக்குத் தலைமை தாங்கக் கூடியவர் யார் ந்பது தொடர்பாகக் கருத்துக் கணிப்பொன்றை நடத்திப் பார்க்கலாம். அப்போது தெரியும் மக்கள் ஆதரவு யாருக்கென்று.

Link to comment
Share on other sites

On 1/8/2019 at 3:02 AM, Justin said:

இதில் இலங்கையில் இருந்து வாக்களித்தோர் எவ்வளவு வீதத்தினர் என்று தகவல் இருக்கிறதா? விக்னேஸ்வரன் அவர்கள் நல்லவர், ஆனால் நிர்வாகத்தை நடத்த இயலாதவர் என்று மாகாண சபையிலேயே பார்த்தோம்! பேசியும் எழுதியும் காலத்தை ஓட்ட நல்ல தலைவராக இருப்பார் என நினைக்கிறேன்! 

நீங்கள் எவ்வளவு தான் உங்கள் சுமந்திரனுக்கு முட்டு கொடுத்தாலும் உண்மை என்பது வேறு , சம்பந்தன் சுமந்திரன் தமிழர்களின் சாபம் . விக்னேஸ்வரன் தான் இப்ப உள்ள ஆண்மையான தலைவர் .

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பிரபாதாசன் said:

நீங்கள் எவ்வளவு தான் உங்கள் சுமந்திரனுக்கு முட்டு கொடுத்தாலும் உண்மை என்பது வேறு , சம்பந்தன் சுமந்திரன் தமிழர்களின் சாபம் . விக்னேஸ்வரன் தான் இப்ப உள்ள ஆண்மையான தலைவர் .

இந்தத் திரியில் எங்கே சுமந்திரனைப் பற்றி நான் பேசியிருக்கிறேன் என்று காட்டுங்கள்?நானும் உங்கள் போலவே ஒருவரை அவர் என்ன செய்தாலும் தலைவராக ஏற்றுக் கொள்வேன் என்ற விம்பம் வந்து விட்டது! நான் காரணமல்ல அதற்கு! நான் பார்ப்பது செய்லபாடுகளை, ஆளையல்ல! பல தடவை சொல்லி விட்டேன்! 

Link to comment
Share on other sites

On 1/8/2019 at 10:24 PM, நிழலி said:

ராஜேஷ்,

வடக்கு மாகாணசபை இலங்கையின் மாகாணசபைகளில் எந்தவிதமான வினைத்திறனும் அற்ற, உருப்படியாக எந்த ஒரு திட்டத்தினையும் செயற்படுத்தாத லஞ்சமும் ஊழலும் நிரம்பியவர்களை கொண்ட ஒரு மாகாணசபையாகவே இயங்கியது. விக்கினேஸ்வரன் வேண்டும் என்றால் நல்ல மனுசனாக இருக்கலாம், நேர்மையானவராகவும் தான் மனதில் நினைத்ததை வெளிப்படையாக சொல்லக் கூடிய தைரியம் உள்ளவராகவும் இருக்கலாம் , ஆனால் எந்த நிர்வாகத்திறனும் அற்ற ஒரு முதலமைச்சராகவே இயங்கியவர். கிழக்கு மாகாணசபையின் திட்டங்களுடனும் செயற்பாடுகளுடனும் ஒப்பிட்டால் வடக்கு மாகாணசபை செய்தது ஒன்றுமே இல்லை.

வடக்கு கிழக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதற்கு விக்கினேஸ்வரனின் வெற்று அறிக்கைகள்தான் காரணம் என்பதை நம்புவதற்கு தயார் இல்லை. மகிந்த இருதிருந்தால் இது நிகழ்ந்தே இருந்திராது என்பதற்கு அவர் பிரதமராக தற்காலிகமாக பதவியில் இருந்த மூன்று மாதங்களில் நிகழ்ந்த சம்பவங்களே நல்ல உதாரணங்கள். பல இடங்களில் மக்களால் நிகழ்த்தப்பட்ட தன்னிச்சையான போராட்டங்களும், சர்வதேச அழுத்தங்களும் முக்கியமாக ஜெனிவாவில் இடம்பெறும் /இடம்பெறப் போகும் இலங்கை தொடர்பான மனிதவுரிமை கூட்டங்கள் / பிரேரணைகளும் தான் காணி விடுவிப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.

இந்த வாக்கெடுப்பும் பெரும்பாலன புலம்பெயர் தமிழர்களை வைத்து  நடத்தப்பட்ட ஒன்று.  ஐபிசி ஒரு நேர்மையான ஊடகம் என்றால் இந்த கருத்துக்கணிப்பில் பங்கெடுத்தவர்களில் எத்தனை பேர் தாயகத்தில் இருந்து வாக்களித்தவர் என்ற எண்ணிக்கையையாவது தந்து இருக்கும். தாயகத் தமிழர்களின் தலைவிதியை தாம் மாற்றலாம் என கனவில் இன்னமும் இருக்கும் ஒரு சிறு சாரார் இப்படியான வாக்கெடுப்பிலாவது தமக்கு பிடித்த முடிவுகளை கண்டு இன்பமுறுவதை தவிர வேறு ஒன்றும் இப்படியான வாக்கெடுப்பால் நிகழப் போவது இல்லை.

முதலில் அவரை சுதந்திரமாக வேலை பார்க்க விடடார்களா ? இந்த சுமந்திரன் தான் எல்லாத்திக்கும் பின்னணி .
முதலில் அவரை தூக்கி எறிந்தாள் தான் தமிழனுக்கு விடிவு வரும் 

3 minutes ago, Justin said:

இந்தத் திரியில் எங்கே சுமந்திரனைப் பற்றி நான் பேசியிருக்கிறேன் என்று காட்டுங்கள்?நானும் உங்கள் போலவே ஒருவரை அவர் என்ன செய்தாலும் தலைவராக ஏற்றுக் கொள்வேன் என்ற விம்பம் வந்து விட்டது! நான் காரணமல்ல அதற்கு! நான் பார்ப்பது செய்லபாடுகளை, ஆளையல்ல! பல தடவை சொல்லி விட்டேன்! 

விக்கினேஸ்வரனை சுதந்திரமாக செயல்பட விடாமல் ஏன் சுமந்திரன் குறுக்கவே  நின்றார் ? சொல்ல முடியுமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பிரபாதாசன் said:

முதலில் அவரை சுதந்திரமாக வேலை பார்க்க விடடார்களா ? இந்த சுமந்திரன் தான் எல்லாத்திக்கும் பின்னணி .
முதலில் அவரை தூக்கி எறிந்தாள் தான் தமிழனுக்கு விடிவு வரும் 

விக்கினேஸ்வரனை சுதந்திரமாக செயல்பட விடாமல் ஏன் சுமந்திரன் குறுக்கவே  நின்றார் ? சொல்ல முடியுமா

குதிரைக்கு முன்னால் வண்டில் பூட்டும் ஆட்களுடன் நேரம் விரயமாக்க நான் விரும்பவில்லை! ஒருவர் மீது காழ்ப்புணர்வு வைத்துக் கொண்டு பிறகு காரணங்கள் தேடும் வேலையை செய்யாதீர்கள்: உங்களுக்கு ஹோம் வேர்க் ஒன்று: முதல் அமைச்சரின் எந்த அபிவிருந்தி நடவடிக்கையில் யார் குறுக்கே நின்றார்கள் என்ற பட்டியலுடன் வாருங்கள் முதலில்! அது வந்தவுடன் பேசலாம்! நீங்களே இன்னொரு திரியில் எழுதியதோ அல்லது ஐ.பி.சி போன்ற "அபிப்பிராயத்தை செய்தியாக்கும்" ஊடகத்தின் செய்தியோ ஆதாரமாகக் காட்ட முடியாது! அது வரை என் பதிலை ஒத்தி வைக்கிறேன்!  

Link to comment
Share on other sites

Just now, Justin said:

கண்ட கண்ட தமிழின விரோதிகளை ஆதரிக்கும் உங்களை போன்றவர் அல்ல நான் . ஒரு பெரும் தலைவனை அன்பால் ஆராதிப்பவன் ... கஞ்சா விக்குகின்ற  பொறுக்கிகளை ஆதரிப்பவன் அல்ல

Link to comment
Share on other sites

28 minutes ago, ragunathan said:

திரு. விக்கினேஸ்வரன் வட மாகாண முதல்வராக இருஃந்த சமயத்தில் முறைகேடுகளைத் தடுக்கவில்லை, அல்லது சரியான திட்டங்களை வகுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்தது. தலைமைத்துவம் வழங்கக்கூடிய தகுதி அவரிடம் இல்லை என்பது அவர்மேல் வைக்கப்பட்டும் இன்னொரு குற்றச்சாட்டு. ஆனால், மாகாணசபையின் அங்கத்தவர்களாக இருந்துகொண்டே அவரின் செயற்பாட்டிற்கு தொடர்ந்தும் குந்தகம் விளைவித்துக்கொண்டிருந்தவர்கள் யார்? அவர் பதவியிலிருந்த பொழுதுகூட அவரை விமர்சித்துக்கொண்டு, அவரின் மேல் அரசினூடாக அழுத்தங்களை பிரயோகித்தவர்கள் யார்? தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து அவரை ஓரங்கட்ட தொடர்ச்சியாக வேலைபார்த்தவர்கள் யார்? இன்று அவரை கையாலாகாதவர் என்று கூறுவது யார்? இவர்கள் எல்லோருமே ஒரே ஆட்கள்தான். தமக்கு எதிராக அரசியல் செய்கிறார், வரம்புமீறிச் செல்கிறார் என்று வெளிப்படையாகவே விமர்சித்து அவரின் செயற்பாட்டை முடக்கியவர்கள் தான் இன்று அவரை கையாலாகாதவர் ஆக்கியவர்கள். அவர் சுதந்திரமாக, தன்னிச்சையாக வேலை செய்ய விடுங்கள், உங்களின் கூலிகளைக் கொண்டு அவரை முடக்குவதை நிறுத்துங்கள், ஒரே கட்சியிலிருந்துகொண்டு விமர்சிப்பதை நிறுத்துங்கள், பிறகு அவர் கையாலாகாதவரா அல்லது தலைமை தாங்க முடியாதவரா என்பதைப் பார்க்கலாம்.  அவரது மாகாணசபையை உங்களின் உறுப்பினர்களைக் கொண்டு பலவீனமாக்கிவிட்டு, தலைமை தாங்க முடியாதவர், சொல்வீரர் என்று எப்படிக் கூறுகிறீர்கள்.

என்ன சொல்ல வருகின்றிர்கள் ரகு?

விக்கி அவர்கள் மாகாணசபையை நடத்த மாகாண சபைக்குள்ளேயே எதிர்ப்பு இருந்தமையால் அவரால் சரியாக இயங்க முடியவில்லை என்றா? அல்லது தன் கட்சிக்குள்ளும் தன் மாகாணசபைக்குள்ளும் எதிர்ப்புகள் வந்ததால் அவரது நிர்வாக திறமை மழுங்கடிக்கப்பட்டு விட்டது என்றா?
தன் கட்சிக்குள்ளும், மாகாணசபைக்குள்ளும் வந்த எதிர்ப்பைக் கூட சமாளிக்க முடியாமல் எந்த வினத்திறனும் இன்றி அவர் ஆட்சி செய்தமையால் தான் அவரை ஒரு கையாலாகத / தலைமைத்துவ பண்பு எதுவுமற்ற ஒருவர் என்று கூறுகின்றம். தன் கட்சிக்குள்ளும் மாகாசபைக்குள்ளும் வரும் எதிர்ப்பையே சமாளிக்க முடியாத ஒருவர் எப்படி பெளத்த பேரினவாத அரசின் எதிர்ப்பை சமாளித்து தமிழ் மக்களுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்க முடியும்? அவ்வாறு முடியாதமையால் தான் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது மோசமான விளைவை கொடுக்கும் என்று நம்புகின்றோம்.

அத்துடன் விக்கியர் தான் முதன் முதலில் தான் இருக்கும் கட்சியின் முடிவுகளுக்கு எதிராக விமர்சித்து தான் தோன்றித்தனமாக செயற்பட்டவர். மகிந்தவை வீட்டுக்க அனுப்புவதற்காக 2015 இல் தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவெடுத்து மகிந்தவை எதிர்க்கும் போது, தேர்தலுக்கு முதல் நாள் தான் தோன்றித்தனமாக மகிந்தவுக்கும் கஜேந்திரகுமார் அணிக்கும் சார்பான அறிக்கை ஒன்றை விட்டவர்.  இதே யாழில் விக்கியரின் இந்த செயல்பாட்டை நான் விமர்சிக்கும் போது கிருபன் கூட 'நிழலி தமிழ் தேசிய கூட்டமைப்பை நேரடியாக ஆதரிப்பதால் யாழ் இணையமும் அவர்களை ஆதரிக்கின்றதா' என கேட்டு இருந்தார்.

இன்றுவரைக்கும் விக்கியரை நான் மகிந்த ஆதரவு ஆளாகவே பார்க்கின்றேன். இதற்கு  பலர் சொல்லியும் கேட்காமல் அவர் மகிந்தவுக்கு முன் சத்தியப்பிரமாணம் செய்ததில் இருந்து மகிந்த இருக்கும் வரைக்கும் வடக்கு கிழக்கு இணைப்பு/ அதிகாரம் என்பன பற்றி வாயே திறக்காமல் இருந்தது வரைக்கும் நான் அவதானித்த விடயங்கள்.

Quote

தாயகத்தில் விக்கினேஸ்வரனுக்கான தமிழர்களின் ஆதரவென்பது ஒருமுறை, மிகத்தெளிவாகக் காட்டப்பட்டு விட்டது. வட மாகாணத்தில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் அவர்தான். அதுமட்டுமல்லாமல், பேரவை ஆரம்பிக்கும் நாட்களில் அவரது வீட்டிற்கு முன்பாகத் திரண்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் புலத்திலுருந்ஹ்டு போனவர்கள் கிடையாது. 

தான் தனித்து ஒரு கட்சியை ஆரம்பித்து கடைசியில் பேரவைக்கும் ஆப்பு வைத்ததும் விக்கியர் தான்

26 minutes ago, பிரபாதாசன் said:

முதலில் அவரை சுதந்திரமாக வேலை பார்க்க விடடார்களா ? இந்த சுமந்திரன் தான் எல்லாத்திக்கும் பின்னணி .
முதலில் அவரை தூக்கி எறிந்தாள் தான் தமிழனுக்கு விடிவு வரும் 

விக்கினேஸ்வரனை சுதந்திரமாக செயல்பட விடாமல் ஏன் சுமந்திரன் குறுக்கவே  நின்றார் ? சொல்ல முடியுமா

பிரபாதாசன், நான் ரகுவுக்கு சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும். நீங்கள் சொல்லும் சுமந்திரனை கூட சமாளிக்க முடியாமல் மாகாசபையை வினைத்திறன் அறவே அற்ற ஒன்றாக நிர்வகித்த விக்கியர் எப்படி பெளத்த பேரினவாத சிங்கள அரசுகளுக்கு எதிராக தமிழர்களுக்கு தலைமை தாங்க முடியும்? சுமந்திரனை சமாளிக்க முடியாமைதான் அவரின் மோசமான வினைத்திறன் அற்ற மாகாசபை ஆட்சிக்கு காரணம் என்று சொல்வதன் மூலம் நீங்களும் அவருக்கு தலைமைத்துவ பண்பும் நிர்வாகத் திறமையும் இல்லாத ஒருவர் என்பதை உறுதி செய்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

14 minutes ago, நிழலி said:

என்ன சொல்ல வருகின்றிர்கள் ரகு?

விக்கி அவர்கள் மாகாணசபையை நடத்த மாகாண சபைக்குள்ளேயே எதிர்ப்பு இருந்தமையால் அவரால் சரியாக இயங்க முடியவில்லை என்றா? அல்லது தன் கட்சிக்குள்ளும் தன் மாகாணசபைக்குள்ளும் எதிர்ப்புகள் வந்ததால் அவரது நிர்வாக திறமை மழுங்கடிக்கப்பட்டு விட்டது என்றா?
தன் கட்சிக்குள்ளும், மாகாணசபைக்குள்ளும் வந்த எதிர்ப்பைக் கூட சமாளிக்க முடியாமல் எந்த வினத்திறனும் இன்றி அவர் ஆட்சி செய்தமையால் தான் அவரை ஒரு கையாலாகத / தலைமைத்துவ பண்பு எதுவுமற்ற ஒருவர் என்று கூறுகின்றம். தன் கட்சிக்குள்ளும் மாகாசபைக்குள்ளும் வரும் எதிர்ப்பையே சமாளிக்க முடியாத ஒருவர் எப்படி பெளத்த பேரினவாத அரசின் எதிர்ப்பை சமாளித்து தமிழ் மக்களுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்க முடியும்? அவ்வாறு முடியாதமையால் தான் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது மோசமான விளைவை கொடுக்கும் என்று நம்புகின்றோம்.

அத்துடன் விக்கியர் தான் முதன் முதலில் தான் இருக்கும் கட்சியின் முடிவுகளுக்கு எதிராக விமர்சித்து தான் தோன்றித்தனமாக செயற்பட்டவர். மகிந்தவை வீட்டுக்க அனுப்புவதற்காக 2015 இல் தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவெடுத்து மகிந்தவை எதிர்க்கும் போது, தேர்தலுக்கு முதல் நாள் தான் தோன்றித்தனமாக மகிந்தவுக்கும் கஜேந்திரகுமார் அணிக்கும் சார்பான அறிக்கை ஒன்றை விட்டவர்.  இதே யாழில் விக்கியரின் இந்த செயல்பாட்டை நான் விமர்சிக்கும் போது கிருபன் கூட 'நிழலி தமிழ் தேசிய கூட்டமைப்பை நேரடியாக ஆதரிப்பதால் யாழ் இணையமும் அவர்களை ஆதரிக்கின்றதா' என கேட்டு இருந்தார்.

இன்றுவரைக்கும் விக்கியரை நான் மகிந்த ஆதரவு ஆளாகவே பார்க்கின்றேன். இதற்கு  பலர் சொல்லியும் கேட்காமல் அவர் மகிந்தவுக்கு முன் சத்தியப்பிரமாணம் செய்ததில் இருந்து மகிந்த இருக்கும் வரைக்கும் வடக்கு கிழக்கு இணைப்பு/ அதிகாரம் என்பன பற்றி வாயே திறக்காமல் இருந்தது வரைக்கும் நான் அவதானித்த விடயங்கள்.

தான் தனித்து ஒரு கட்சியை ஆரம்பித்து கடைசியில் பேரவைக்கும் ஆப்பு வைத்ததும் விக்கியர் தான்

பிரபாதாசன், நான் ரகுவுக்கு சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும். நீங்கள் சொல்லும் சுமந்திரனை கூட சமாளிக்க முடியாமல் மாகாசபையை வினைத்திறன் அறவே அற்ற ஒன்றாக நிர்வகித்த விக்கியர் எப்படி பெளத்த பேரினவாத சிங்கள அரசுகளுக்கு எதிராக தமிழர்களுக்கு தலைமை தாங்க முடியும்? சுமந்திரனை சமாளிக்க முடியாமைதான் அவரின் மோசமான வினைத்திறன் அற்ற மாகாசபை ஆட்சிக்கு காரணம் என்று சொல்வதன் மூலம் நீங்களும் அவருக்கு தலைமைத்துவ பண்பும் நிர்வாகத் திறமையும் இல்லாத ஒருவர் என்பதை உறுதி செய்கின்றீர்கள்.

இப்ப உள்ள கூட்டமைப்பினை காட்டிலும் விக்னேஸ்வரன் சில விடயங்களை வெளிப்படையாக மக்களுக்கு சொன்னார் அதாவது மாகாணசபையில் உள்ள குறைபாடுகளையும் அதனால் எங்களுக்கு சிங்களம் போட்ட சிக்கல்களையும் தெளிவாக சொன்னார். வடக்கு கிழக்கு இணைப்பை வேண்டி அதில் உறுதியான கருத்துடன் இப்பவும் உள்ளார். 

அவரை இயங்க விடாமல் ரவுடிகள் மாதிரி தினமும் தடை போட்ட  சுமந்திரனை என்ன சொல்வது . இவர் ரணிலின் கையாளாக இருந்து மாகாணசபையை இயங்க முடியாதவாறு இருந்தார் .

சுமந்திரன் தனி ஆளாக வந்திருந்தாள் இவரை சுலபமாக வெட்டி இருக்கலாம் அனால் அவர் ஒரு பெரிய நரியின் கையாளாக இருப்பதே சிக்கலாக அமைந்தது .

Link to comment
Share on other sites

8 minutes ago, பிரபாதாசன் said:

இப்ப உள்ள கூட்டமைப்பினை காட்டிலும் விக்னேஸ்வரன் சில விடயங்களை வெளிப்படையாக மக்களுக்கு சொன்னார் அதாவது மாகாணசபையில் உள்ள குறைபாடுகளையும் அதனால் எங்களுக்கு சிங்களம் போட்ட சிக்கல்களையும் தெளிவாக சொன்னார். வடக்கு கிழக்கு இணைப்பை வேண்டி அதில் உறுதியான கருத்துடன் இப்பவும் உள்ளார். 

அவர் எல்லாவற்றையும் சொல்வதிலும் அறிக்கை விடுவதிலும் ஒன்றுக்குமே உதவாத பிரேரணைகளை  சபையில் நிறைவேற்றுவதிலுமே வல்லவராக இருந்தார். இவற்றுக்கு அப்பால் ஒரு அடியைத்தானும் அவர் எடுத்து வைக்கவில்லை. போரால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட, பேரினவாதத்தால் வஞ்சிக்கப்பட்ட ஒரு இனத்துக்கு வெறும் அறிக்கைகளும் பிரேரணைகளும் போதுமானவை அல்ல.

Quote

சுமந்திரன் தனி ஆளாக வந்திருந்தாள் இவரை சுலபமாக வெட்டி இருக்கலாம் அனால் அவர் ஒரு பெரிய நரியின் கையாளாக இருப்பதே சிக்கலாக அமைந்தது .

நரியின் கையாளையே  சமாளிக்க முடியாதவர் நரியையும் நரியுடன் இருக்கும் பெரும் பேரினவாத கூட்டத்தையும் எப்படி சமாளித்து அவர் அறிக்கைகளில்  கூறும் வடக்கு கிழக்கு இணைப்பு போன்ற கடுமையான விடயங்களை சாதிக்கப் போகின்றார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றப் பதவியையும், அரசின் மறைமுக ஆதரவினையும் கொண்டே கூட்டமைப்பு தலைமையினால் விக்கினேஸ்வரன் ஓரம்கட்டப்பட்டார் என்பது எனது வாதம். தனது மாகாணசபையில் உறுப்பினர்களின் தயவு இல்லாதபொழுது, அவரால் எவ்வாறு செயற்பட முடிந்திருக்கும்? அவரின் தலைமையை ஏற்பதில்லை என்று உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சியின் ஆதவுடன் கூச்சலிடும்பொழுது அவர் தலைமை தாங்குவது எப்படி?  மகிந்தவின் முன்னால் அவர் பதவிப்பிரமானம் செய்துகொண்டார் என்பதால் அவரை மகிந்தவின் ஆள் என்று நீங்கள் நினைப்பது சரியா என்று தெரியவில்லை. அவரது பதவியேற்பு நிகழ்வுகூட மிகவும் இறுக்கமான சூழ்நிலையில்தான் நடந்ததாக எனக்கு நினைவு.  இப்படிப் பார்த்தால் விக்கி மட்டுமல்லாமல், இன்று பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரித்துக்கொண்டிருக்கும் அனைத்துத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றில் மகிந்தவினதோ, மைத்திரியினதோ  அல்லது ரணிலினதோ ஆட்களாகத்தான் இருக்கவேண்டும். என்னைப்பொறுத்தவரை மகிந்தவுக்கும், மைத்திரியிக்கும் ரணிலுக்குமிடையே அதிக வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. 

சிங்கக்கொடியசைத்து மகிழ்ந்த சம்பந்தர் ஐயாவை விடவா விக்கியர் தவறானவர்? 

கஜேந்திரக்குமாரை விக்கியர் ஆதரிப்பது ஏன் தவறென்கிறீர்கள்? கஜேந்திரக்குமார் கூட்டமைப்பிற்கு எதிராக அரசியல் செய்தார் என்பதை விட அவரில் என்ன தவறு கண்டீர்கள்? அவர் எப்படி மகிந்தவிற்கு வேலை பார்க்கிறார் என்று சொல்கிறீர்கள்? இன்று விக்கியருக்கு நடந்ததுதானே அன்று கஜேந்திரக்குமார், அனந்தி, பத்மினி, கஜேந்திரன் ஆகியோருக்கு நடந்தது? 

விக்கியர் மகிந்தவுக்கு ஆதரவாக விட்ட அறிக்கையினை இங்கே இணைக்க முடியுமா? அதை மீண்டும் ஒருமுறை படிக்க விரும்புகிறேன். 

மகிந்த அதிகாரத்திலிருக்கும்பொழுது, ராணுவத்தளபதியாகவிருந்த சரத் பொன்சேக்காவை ஆதரிப்பதென்று கூட்டமைப்பு எடுத்த முடிவும், மகிந்த சனாதிபதியாக இருந்தபோது, உதவி சனாதிபதியாகவும், உதவி பாதுகாப்பமைச்சராகவும் இருந்த மைத்திரியை ஆதரிப்பதென்று கூட்டமைப்பு எடுத்த முடிவும் எமக்குச் சரியாகப் படுமாக இருந்தால், மகிந்தவின் முன்னால், அரசின் தலைவர் என்கிற ரீதிய்ல் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டதையும் சரியென்றுதானே கொள்ளவேண்டும்? 

மகிந்த அதிகாரத்திலிருக்கும்போதும், எதிர்க்கட்சியிலிருக்கும்போதும் விக்கியர் தருணத்திற்கேற்றவாறு பேசுவதாக நான் நினைக்கவில்லை. நடந்த போர்க்குற்றங்கள் பற்றித் தொடர்ந்தும் அவர் பேசிவருகிறார். இது மைந்த ஆட்சியிலிருந்தாலென்ன, இல்லாவிட்டலென்ன மகிந்தவைப் பாதிக்கத்தான் செய்யும். 

இறுதியாக, "சுமந்திரனைக் கூடச் சமாளிக்க முடியாத விக்கியர்" என்ற உங்களின் கருத்திலிருந்தே யார் பிரச்சினைக்குக் காரணம் என்பது தெளிவாகிறது நண்பரே ! 

Link to comment
Share on other sites

52 minutes ago, ragunathan said:

விக்கியர் தவறானவர் என்று எங்கும் சொல்லவில்லை. என் முதல் பதிலிலேயே நேர்மையானவராகவும், மனதில் உள்ளதை அப்படியே சொல்லும் தைரியமான்வர் என்று குறிப்பிட்டும் உள்ளேன். அதே நேரத்தில் அவர் தலைமைத்துவ பண்பு அறவே அற்ற ஒருவர். அத்துடன் நிர்வாகத் திறனும் கொஞ்சம் கூட இல்லாதவர் என்பது தான் என்  அவர் பற்றிய அவதானம். அத்துடன் அவர் மகிந்தவின் அனுதாபியாக காட்டக் கூடிய விதமாகவே 2015 தேர்தல் வரைக்கும் தன்னை வெளிப்படுத்தி இருந்தார் (இதற்கு வாசுவின் சம்பந்தியாக அவர் இருப்பது காரணம் ஆக இருக்காது என நம்புகின்றேன்)

மகிந்தவை ஆதரியுங்கள் என்று அவர் நேரிடையாக அறிக்கையில் கேட்கவில்லை. ஆனால் 2015 தேர்தலில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் எதிராக ,தேர்தலுக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஒரு அறிக்கை விட்டு இருந்தார். கூகிளில் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. யாழ் இணையத்திலும் அது உள்ளது. நேரம் கிடைக்கும் போது கண்ணில் பட்டால் இணைக்கின்றேன்

கஜேந்திரகுமாரை ஆதரிப்பது தவறு என்று என் பதிலில் நான் குறிப்பிடவும் இல்லை. கஜேந்திர குமாரின் பெயரினைக் கூட நான் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நீங்கள் இதை எழுதியதற்காக குறிப்பிட விரும்பும் விடயம்: விக்கியர் கஜேந்திரகுமாரை ஆதரிப்பதாக இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி ஆதரித்து இருக்கலாம். அவர் இன்று விலகியது போன்று அன்றே விலகி ஆதரித்து இருக்கலாம். த.தே.கூ வில் இருந்து கொண்டே இன்னொரு கட்சிக்கு ஆதரித்தது சரியான நேர்மையான விடயமா ரகு? சரி, அப்படி விலகின பிறகு கூட அவர் கஜேந்திரகுமாருடன் இணையாமல் தனித்து கட்சி அமைத்தது ஏனென்றும் புரியவில்லை.

விக்கியர், போர்க் குற்றம்,வடக்கு கிழக்கு இணைப்பு போன்றவற்றை மகிந்த இருக்கும் வரைக்கும் பேசவில்லை. அவர் தமிழக தலைவர்களை  விமர்சித்து கொண்டு இருந்த காலம் அது. ரணில் ஆட்சியமைத்த பின் தான் அவர் இவை பற்றி பேச தொடங்கியிருந்தார்.

நீங்கள் சொன்னவாறு மகிந்த / ரணில் / மைத்திரி மற்றும் இனி வரக்கூடிய சஜித் / கரு / நவீன் திசனாயக்கா போன்றோரில் எவர் வந்தால் என்ன. சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழ் மக்களை அடக்கி தன் மேலாதிக்கத்தை நிறுவத்தான் போகின்றது என்பதை நானும் அறிவேன். அத்துடன் அதைப் பற்றி என் பதில்களில் குறிப்பிட்டும் வருகின்றேன். ஆனால் இந்த திரி, விக்கியரின் தலைமைத்துவம் பற்றிய திரி. அதை ஒட்டித்தான் என் கருத்துகள்.

Quote

இறுதியாக, "சுமந்திரனைக் கூடச் சமாளிக்க முடியாத விக்கியர்" என்ற உங்களின் கருத்திலிருந்தே யார் பிரச்சினைக்குக் காரணம் என்பது தெளிவாகிறது நண்பரே ! 

என்ன சொல்ல வருகின்றீர்கள் என புரியவில்லை நண்பரே.

-----------------------------------------

இறுதியாக உங்களிடம் ஒரு கேள்வியுடன் நிறுத்திக் கொள்கின்றேன்.

விக்கியரை தமிழர்களுக்கு தலைமை தாங்குவதற்கான தலைமைத்துவப் பண்பும், நிர்வாகத் திறனும், தன் கட்சி உறுப்பினர்களையும், தன்னுடன் இயங்க கூடிய ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களையும் அரவணைத்து செல்லக் கூடிய, பெளத்த பேரினவாதத்தினை எதிர்த்து ஆக்கபூர்வமாக செயற்படக் கூடிய ஒரு 'தலைவர்' ஆக ஏற்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இறுதியாகக் கூறியது இதைத்தான்.

"சுமந்திரனையே சமாளிக்க முடியாத விக்கியர், எப்படிச் சிங்களவரைச் சமாளிக்கப் போகிறார்" எனும் உங்களின் கேள்வியைத்தான்.

இந்தக் கேள்வியில் நீங்கள் யாரைத் தவறானவர் என்று குறிப்பிடுகிறீர்கள்? விக்கியருக்குத் தலையிடியைக் கொடுக்கும் சுமந்திரனையா அல்லது அவரைச் சமாளிக்கத் திணறும் விக்கியையா? 

நீங்கள் சுமந்திரனைத்தான் தவறானவர் என்று குறிப்பிடுகிறீர்கள் என்று நான் எடுத்துக்கொள்ளலாமா? 

இப்போது புரிகிறதா உங்களுக்கு ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக்கேட்டால்

மேலே தேர்வுக்காக  தெரிவு  செய்யப்பட்ட  எவருமில்லை (வேண்டுமானால்  ஆலோசகர்களாக  இருக்கலாம்)

புதியவர்

எந்த  அமைப்பு கட்சியிலும் இல்லாதவர்

அடி  மட்டத்திலிருந்து

மக்களுக்காக  சேவை  செய்து

அவர்களால் தெரிவு  செய்யப்பட்ட

ஒரு அடுத்த  தலைமுறையை  சேர்ந்தவர்  வரணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுபற்றி எனக்குத் தெரியவில்லை,

ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் தெரியும். எத்தனையோ பேருக்கு எத்தனையோ முறை நாம் சந்தர்ப்பம் கொடுத்துக்கொண்டுதானே இருக்கிறோம். விக்கியருக்கும் ஒருமுறை கொடுத்துப் பார்க்கலாம், என்ன குறைந்துவிடப்போகிறது.

Link to comment
Share on other sites

23 minutes ago, ragunathan said:

நான் இறுதியாகக் கூறியது இதைத்தான்.

"சுமந்திரனையே சமாளிக்க முடியாத விக்கியர், எப்படிச் சிங்களவரைச் சமாளிக்கப் போகிறார்" எனும் உங்களின் கேள்வியைத்தான்.

இந்தக் கேள்வியில் நீங்கள் யாரைத் தவறானவர் என்று குறிப்பிடுகிறீர்கள்? விக்கியருக்குத் தலையிடியைக் கொடுக்கும் சுமந்திரனையா அல்லது அவரைச் சமாளிக்கத் திணறும் விக்கியையா? 

நீங்கள் சுமந்திரனைத்தான் தவறானவர் என்று குறிப்பிடுகிறீர்கள் என்று நான் எடுத்துக்கொள்ளலாமா? 

இப்போது புரிகிறதா உங்களுக்கு ? 

அது பிரபாதாசனுக்கு சுமந்திரன் விக்கியரை தடுக்கின்றார் என்று சொன்னதுக்கு போட்ட பதில்.

சுமந்திரனை பற்றி என்னைக் கேட்டால்; சுமந்திரனின் சில நடவடிக்கைகள் எனக்கு பிடிக்கின்றது (அரசியல் தீர்வு திட்டம் தயாரிக்க கொஞ்சமாவது முனைப்பு காட்டுவது, மனதில் பட்டவற்றை தேர்தல் வாக்குகள் பற்றி எண்ணாமல் கதைப்பது போன்றவை )

ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் சக கட்சிகளை கூட எதிரியாக்கி ஒற்றுமையை குலைத்த ஒருவர். உட் கட்சி சனனாயகத்தை கூட நிராகரிக்கும் ஒருவர் தமிழ் அரசியலில் முதன்மை பெறும் சூழ்நிலை உருவாகியதை வெறுக்கின்றேன். முற்றிலும் சிங்கள அரசுகளை நம்பி தோற்றுப் போகப் போகும் தமிழர்களில் இறுதியாக தோற்கப் போகின்றவர் சுமந்திரன்.

-----

என்னைப் பொறுத்தவரைக்கும் விக்கியர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வெடுத்து தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்பில் தொடர்ந்து மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும். மக்களை அணி திரட்டி முன் செல்லக் கூடியவர்களை இனம் கண்டு அவர்களை மக்கள் முன் நிறுத்தும் அமைப்பு ஒன்றில் அவரது பங்களிப்பு இருக்குமானால் அதுவே அவர் தமிழ் மக்களுக்கு ஆற்றும் சிறந்த பணி ஆக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ragunathan said:

அதுபற்றி எனக்குத் தெரியவில்லை,

ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் தெரியும். எத்தனையோ பேருக்கு எத்தனையோ முறை நாம் சந்தர்ப்பம் கொடுத்துக்கொண்டுதானே இருக்கிறோம். விக்கியருக்கும் ஒருமுறை கொடுத்துப் பார்க்கலாம், என்ன குறைந்துவிடப்போகிறது.

விக்கியருக்கான சந்தர்ப்பம் முடிந்து விட்டது ரகு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

விக்கியருக்கான சந்தர்ப்பம் முடிந்து விட்டது ரகு...

சரி, விடுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ragunathan said:

சரி, விடுங்கள்

நான்

மாவையா  விக்கியரா என்ற  நிலை  வந்தபோது

விக்கியரையே  விரும்பினேன்

அவரிடம்  எதிர்பார்த்தது

வடகிழக்கு  அபிவிருத்தி

தாயகம்  புலத்துக்கிடையிலான ஒன்றிணைந்த பலத்தை கட்டியெழுப்புதல்

சிறீலங்காவுடன் மோதல் தவிர்ப்பு..

இதைத்தவிர மாவீரருக்கான அஞ்சலியைக்கூட நான்  அவரிடம்  எதிர்பார்க்கவில்லை

ஆனால் .......????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.