சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்
Sign in to follow this  
Nathamuni

இறுகும் சுறுக்கு, இறுகுமா இன்னும்?

Recommended Posts

இறுகும் சுறுக்கு, இறுகுமா இன்னும்?

2007ம் ஆண்டு, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, சண்டே லீடர் பத்திரிகையில், 'மிக் டீல்' என பின்னாளில் அழைக்கப்பட்ட, ஒரு மோசடி மிக்க  ஆயுத கொள்வனவு குறித்த விபரங்களை வெளியிட்டார். உக்ரைன் நாட்டில், இயக்கமில்லாத நிலையில், வைக்கப் பட்டிருந்த மிக்  விமானங்களை வாங்கிய வகையில், அப்போதைய பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஸேவின் தொடர்புகள் குறித்து பல விபரங்களை, வெளியிட்டிருந்த  இந்த கட்டுரையினை தொடர்ந்து,  சண்டே லீடர் பத்திரிகை மீது, மான  நஷ்ட வழக்கு ஒன்றினை ஆரம்பித்திருந்தார் அப்போதைய பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஸே .

லசந்தவின் நண்பர்களும், உறவினர்களும், இந்த கட்டுரைகளும்,வழக்கும், அவரது உயிரினை காவு கொண்டது என நம்புகின்றனர்.

பல வருடங்களுக்கு பின்னர் இப்போது, FCID (Financial Crime Investigation Division) நடாத்தும் இது தொடர்பான விசாரணைகள், அந்த பயமறியா ஊடகவியலாளர் நாட்டின் மிகவும் சக்தி மிக்க நபர் ஒருவர் தொடர்பில் வெளிப்படுத்திய ஒவ்வொரு விடயமும், உண்மையைத்தவிர வேறு ஒன்றுமே இல்லை என உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. 

Image result for sri lanka FCID

2000ம் ஆண்டில், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா அரசு, இரு டெண்டர்கள் மூலம் 6 மிக் -27 போர் விமானங்களை சிங்கப்பூர் ஆயூத தரகு நிறுவனமான DS Alliance க்கு வழங்கி இருந்தது. இந்த நிறுவனத்தின் நிருவாக இயக்குனர்  ‘T.S. Lee’ என்பவரே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

ஒப்பந்தப்படி, உக்கிரேனின் அரச நிறுவனமான உகிரின்மஸ் இடமிருந்து, ஒவ்வொன்றும் US $ 1.2 மில்லியன் விலையில் இலங்கை விமானப்படைக்கு, DS Alliance வாங்கி தரும் என இணங்கி இருந்தனர்.

இந்த விமானங்களில் மூன்று துர் அதிஸ்டம் கொண்டனவாக இருந்தன. 2007 ஆகஸ்ட் மாதமளவில், ஒரு விமானமானது, கட்டுநாயக்கா விமான தளத்தில் வீழ்ந்து நொறுங்கி, அதில் இருந்த உக்கிரயன் நாட்டு விமான ஓட்டியும் பலியானார். இரண்டாவது விமானம் பழுதாகி ஒருபோதுமே பாவிக்க கூடியதாக இருக்க வில்லை. மூன்றாவது அதே விமானதளத்தில், 2001 புலிகள் தாக்குதலால் அழிந்தது.

ஜனவரி 2006ல் அப்போதைய விமான படைத்தளபதி, டொனால்ட் பெரேரா மிக்-27 விமானங்கள் பாவனையில் இருந்து நீக்கி, அமெரிக்க, இஸ்ரேலிய விமானங்கள் உட்பட வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் பெறப்பட்டு, விமானப்படை நவீன மயப் படுத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதே தளபதி, அடுத்த மாதமே, பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்த பின்னர், தனது முடிவில் யு டர்ன் அடித்து மாறுபாடான கருத்தினை தெரிவித்து இருந்தார். பெப்ரவரி 6ம் திகதி, பாதுகாப்பு அமைச்சு செயலகத்தில், நால்வருக்கு இடையே சந்திப்பு நிகழ்ந்தது. மூன்றாம், நாலாம் நபர்கள், கோத்தபாயாவின் உறவினர் உதயங்க வீரதுங்கவும், அவரது வியாபார கூட்டாளியான உக்கிரேயின் நாட்டுக் காரரான Dmytro Peregudov (பெருகுடோவ்)ஆவர்.

Image result for udayangaImage result for kothapaya

மச்சான் உதயங்க வீரதுங்க, லசந்த, கோத்தா 

சிங்கப்பூர் நிறுவனம் DS Alliance முன்னர் விநியோகம் செய்த விமானங்கள் தந்த கசப்பான அனுபவங்களை சொல்லிய தளபதி, அதன் காரணமாகவே தான் மிக்-27 விமானங்களை வெறுப்பதாக சொன்னார். வீரதுங்க இம்முறை, DS Alliance இந்த விவகாரத்தில் சம்பந்தப் பட மாட்டாது என்றும், நேரடியாக உக்கிரேன்  அரசுடன், இலங்கை அரசு ஒப்பந்தத்தை நடத்தும் என உறுதி அளித்து, கோத்தபாயாவின் அழுத்தத்தில், வீரதுங்கா - பெருகுடோவ் தந்த வியாபார முனைவை ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டார்.

டெண்டர் கோராமல், அரசு கொள்வனவு செய்ய முடியாது என்பன போன்ற பல விதிகளை, அதிகாரத்தில் இருந்த ராஜபக்சேக்கள், உதாசீனம் செய்து, அரசுடன் - அரசு என்பதால் அது தேவை இல்லை என்பதாக ('?') ஒரு ஒப்பந்தத்தை ஜூன் 2006ல் Ukrinmash நிறுவனத்துக்கும், இலங்கை விமான படைத்துறைக்கும் இடையே கையெழுதியிட்டு முடித்தனர். 

ஆனால், இந்த ஒப்பந்தத்துக்கான  தொகை US $15 மில்லியன் பணமானது, முன்பே தெரிவிக்கப்பட்டவாறு அரசுக்கும், அரசுக்கும் அல்லாது,  ‘Bellimissa Holdings Limited’ என்ற லண்டன் முகவரியும், போன் இலக்கமும் மட்டுமே கொண்டிருந்த ஒரு மர்மமான கம்பெனிக்கு அனுப்பப் பட்டு இருந்தது.

டிசம்பர் 2006ல் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையானது,  2000ல் சந்திரிகா அரசினால் US $1.2 மில்லியனுக்கு வாங்கப் பட்ட அதே ரக விமானத்தினை, ராஜபக்சே அரசு, US $2.4 மில்லியனுக்கு ‘Bellimissa Holdings’ நிறுவத்தினூடாக 2006ல் இரட்டிப்பு விலைக்கு  வாங்கியதை அம்பலப்படுத்தியது.

(இதை எழுதிய இக்பால் அத்தாஸ் , பயமுறுத்தல் காரணமாக நாட்டினை விட்டு ஓட்டம் பிடித்தது வேறு கதை)

ஜூலை 2007ல் லசந்த விக்கிரமதுங்கவும், அவரது சண்டே லீடர் பத்திரிகையும் இந்த விடயத்தை கையில் எடுத்து, மேலும் பல விடயங்களை வெளிச்சமாகியது. US $15 மில்லியன் பெற்றுக்  கொண்ட ‘Bellimissa Holdings Limited’ பிரித்தானியாவில் அலுவலகம் எதனையும் கொண்டிராத, மாதம் $10 கட்டணத்துக்கு,  தமது முகவரியினையும், fax இலக்கத்தினையும் வழங்கக் கூடிய  virtual office, எனப்படும் வசதியினை பயன்படுத்திய ஒரு அமைப்பு என்றும், பணத்தினை பெற்றுக்  கொண்டதும், அந்த, முகவரிக்கும், Bellimissa Holdings Limited கும் எதுவித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தது. அதாவது இது, ஒரு வசதிக்காக உருவாக்கப் பட்ட கம்பெனி, தேவை முடிந்ததும் கலைக்கப்பட்டு விட்டது என வெளிச்சமாகியது. 

வெகுண்ட கோத்தபாய, இந்த ஒப்பந்தத்தில், மூன்றாவது பார்ட்டியே  இல்லை என்றார். இந்த விமானங்கள் 2000 ஆண்டு வாங்கியவை போலல்லாது, சிறப்பானவை, அதனாலே தான் கூடுதல் விலை கொடுக்கப் பட்டது  என கதை  விட்டார். 

உண்மைகள் ஒவொன்றாக வருவதை கண்ட அவர், மிக்-27 விமானங்கள் வாங்கியதில், தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை, தான் எந்த வித பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என முழுப் பூசணிக் காயினை கோப்பை பால் சோறில் மறைக்க முயன்றார்.

இந்நிலையில் மறுபடியும், செப்டெம்பர் 2007ல் லசந்த விக்கிரமதுங்க தனது பேனா தாக்குதலை தொடர்ந்தார். இம்முறை மிக் டீலில் எஞ்சி இருந்த இடைவெளிகளை வெளிச்சமாக்கி இருந்தார்.

பெப்ரவரி 2006ல் கோத்தபாய ராஜபக்சே தலைமையில் நால்வருக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்தும், அப்போது, ராஜபக்சே அரசால், ரஷ்யா மற்றும் உக்கிரேன் தூதரக நியமிக்கப்பட்டிருந்த உதயங்க வீரதுங்காவின் ஈடுபாடு குறித்தும் விலாவாரியாக எழுதி, கோத்தபாயவின் பொய்களை வெளிப்படுத்தி இருந்தார்.

கோத்தபாய 100 கோடி கேட்டு மான நஷட வழக்கு தொடர்ந்தார். எனினும் அந்த வழக்கு விசாரணைக்கு வரமுன்னரே லசந்த விக்கிரமதுங்க 8 ஜனவரி 2008ல்  கொல்லப் பட் டார்.

(இன்று வரை அவருக்கு நீதி கிடைக்கவில்லை. இன்று அவர் கொல்லப் பட்ட 11வது ஆண்டு நினைவு நாள்.)

2015 முதல் அரச அமைப்பான FCID விசாரணைகளை நடாத்தி, ‘Bellimissa Holdings’ என்பது, British Virgin Islands இல் இருக்கும், சிங்கப்பூர் DS Alliance cabal கம்பெனியின் உரிமையாளர் ‘T.S. Lee’ சொந்தமானது என கண்டறிந்துள்ளது. (அட பாவிகளா!)

அவர் தான் அதே  சந்திரிகா காலத்து ஆயுத வியாபாரி. இவரை மீண்டும் பயன் படுத்த மாட்டோம் என பொய் உறுதி மொழியினை விமான படைத் தளபதிக்கு வழங்கி இணங்க வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

US $15மில்லியன் பணம் செலுத்தப்பட்ட வங்கிகளினூடாக விசாரணைகளை நடாத்திய FCID, அந்த பணமானது DS Alliance வங்கி கணக்கினையே போய் சேர்ந்திருந்தது எனவும் கண்டு கொண்டது.

அதே வேளை உக்கிரேனிய அரசினால் நடாத்தப்பட் ட விசாரணைகளின் படி, உக்கிரேனியன் அரசு இந்த ஒப்பந்தத்தில் சம்பந்தப் படவே இல்லை என தெரிய வந்துள்ளது. 

உகிரின்மஸ் நிறுவனம் DS Alliance நிறுவனத்துக்கு, ஒரு விமானத்தினை US $1மில்லியனுக்கு விற்பனை செய்துள்ளது. அதே விமானத்தினை, கமிசன் US $1.4 மில்லியன் வைத்து, மொத்தமாக ஒரு விமானம் US $2.4 மில்லியனுக்கு இலங்கை விமானப் படைக்கு கட்டி அடிக்கப் பட்டு  உள்ளது.

FCID யினால் விசாரிக்கப் பட்ட பல விமானப் படை உத்தியோகத்தர்கள், எவ்வளவு தான் மறுத்தாலும், கோத்தபாயவும், அவரது உறவினர் உதயங்க வீரதுங்கா சம்பந்தப் படாமல், மிக் டீல் என்பதே நடந்து இருக்க முடியாது என தெரிவித்து இருந்தனர்.

பல வெளிநாட்டு, அரச அமைப்புகள், இலங்கை CID  யினர், இன்டர்போல் உதவிகளுடன் துபாய் நகரத்துக்கு வெளியே ரகசியமா வாழ்ந்து வந்த உதயங்க வீரதுங்கா கைதாகி, இலங்கை திருப்பி அனுப்பப் படும் நடவடிக்கைகளை எதிர் நோக்கி உள்ளார்.

முன்னாள் தூதுவர் ஒருவர், நாடு கடத்தப் படுவதை எதிர்நோக்கிய நிலையில், FCID வலை இறுகும் நிலையில், இந்த மிக்  டீலினால் பயன் அடைந்தவர்கள் யார், யார் என்பதை நாட்டு மக்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்.

FCID  யினரின் திறமையான வேலைகள், பாராட்டப் பட வேண்டிய அதேவேளை, இந்த மிக்  டீல் குறித்து எழுதி கொலையான  லசந்தா  விக்கிரமதுங்க கண்டறிந்து சொல்லிய அனைத்தும் சரியானது என உறுதிப் படுத்தப் பட்டிருக்கின்றன.  

Source: Sunday Observer, Colombo.

Translation for Yarl: Myself.

https://en.wikipedia.org/wiki/Financial_Crimes_Investigation_Division

ராஜபக்சக்கள்  அவசரமாக பதவிக்கு வர முயன்ற காரணம் தெரிந்தா ?

 

Edited by Nathamuni
  • Like 2
  • Thanks 3

Share this post


Link to post
Share on other sites
சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்

நாதம் மிகவும் ஆச்சரியமான விடயம்.மொழிபெயர்ப்புக்கும் இணைப்புக்கும் நன்றி.

Share this post


Link to post
Share on other sites

Anti Money Laundering என்பது மிக கடுமையாக மேலை நாடுகளில் பார்க்கப் படுகினறது. அதுவும், ஆயுத கொளவனவுக்காக இது செய்யப்பட்டது மிக, மிக கடுமையாக பார்க்கப் பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் நின்று, கயமைத்தனமாக வென்று, இந்த விசாரணைகளை தடுக்க முடியும் என கோத்தபாய நம்பினார்.

எனினும், அமெரிக்கா அரசு தனது பிரஜை என்ற வகையிலும், பிரித்தானிய அரசு தனது மண்ணில் நடந்தது என்ற வகையிலும், இவர்களது அழுத்தத்தில், அமீரக, சிங்கப்பூர் அரசும் இலங்கை அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கின்றன.

இலங்கை அரசுக்கும், ராஜபக்ஸே தரப்புக்கும், நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கு நாடுகளினால் பல செய்திகள் சொல்லப் பட்டுள்ளன.

புலிகள் ஒடுக்கப் பட்ட மைக்கு முக்கிய காரணம் அவர்களது விமானப் படை. அதேபோல் இந்த விசாரணைகளுக்கு காரணம் அதே விமானப் படை விவகாரம்.

இந்த வகையில், அரசுகளின் பெயர்களில், விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, நாசகார நடவடிக்கைகளுக்காக, பயங்கர வாதிகளிடம் செல்ல முடியும் என்பதே மேற்கு நாடுகளினால் கவலை. அதனால் தான் இந்த விசாரணைகளில் பாரிய ஒத்துழைப்பு வழங்கப் படுகின்றது.

 

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

இதை அப்படியே தருகிறேன். மொழி பெயர்க்க இப்போது நேரம் இல்லை.

 

http://www.dailymirror.lk/article/-th-Death-Anniversary-of-Lasantha-Wickrematunge-WHAT-THEY-DID-TO-MY-FATHER-AND-WHY-160794.html

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, Nathamuni said:

இலங்கை அரசுக்கும், ராஜபக்ஸே தரப்புக்கும், நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கு நாடுகளினால் பல செய்திகள் சொல்லப் பட்டுள்ளன.

ராஜபக்சக்களை அரியணை ஏற விடக்கூடாது என்பதே அந்த செய்யின் சாரமாக இருக்கும்.

அப்படி நடந்தால், சொறி லங்கா அரசு இனப்படுகொலை சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ளும். மற்றும் பொருளாதார தடைகளை எதிர் கொள்ளும். 

வேறு எதை அவர்களால் சொல்லமுடியும்.

மேற்கு நாடுகள் தாம் சொல்வதை நிறைவேற்றக்கூடிய நிலையில் இருக்குமா என்பதை கேள்விக்குறியே.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்