சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்
Sign in to follow this  
colomban

மன்னாரில் “சிவ சேனை” பெயரில் சுவரொட்டிகள்

Recommended Posts

50059409_2058482517571403_4768667000081743872_n.jpg?_nc_cat=110&efg=eyJpIjoidCJ9&_nc_ht=scontent.fcmb1-1.fna&oh=11b1c3446961ff4918c23b611e2f899e&oe=5CCB1C2D

மன்னார் நகர மத்திய பகுதியில் அதிகம் மக்கள் நடமாடும் பகுதிகளில் இனம் தெரியாத
சிலரால் மத நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் வகையில் சிவசேனை என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

மும்மதத்தை சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழும் நகரங்களில் மன்னார் மாவட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
 இவ் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையில் நேற்று நள்ளிரவு மன்னார் நகரின் மத்திய பகுதிகளில் மன்னார் பொது விளையாட்டரங்கு என சில பகுதிகளில் "சிவ பூமி மதம் மாற்றிகள் நுழையாதீர்கள்" என மத ரீதியான அடையாளப்படுத்தப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சுவரொட்டிகள் தொடர்பாகவோ ஒட்டியவர்கள் தொடர்பாகவோ இதுவரை எந்த தகவல்கலும் கிடைக்கவில்லை.
ஆனாலும் மன்னார் மாவட்டம் அனைத்து மதத்தினருக்கும் உரிய பூமி எனவும் எந்த தனி நபர்களும் எங்கள் மத ஒற்றுமையை இவ்வாறான சுவரொட்டிகள் மூலம் சீர்குழைக்க முடியாது என பொது மக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவ்வாறான மத வாத செயற்பாடுகளை உடன் நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Share this post

Link to post
Share on other sites
சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்

இந்த சிவ சேனை குரூப்பை விரட்டுவது நல்லம், இவர்களது குறிக்கோள் எப்படியாவது சைவ மக்களுக்கும் கத்தொலிக்க மக்களுக்கும் பகையை மூட்டுவது தான்.

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, colomban said:

மதம் மாற்றிகள் நுழையாதீர்கள்

இதில் தவறில்லை!

மதம் மாற்றுவார்கள் தான் மத நல்லிணக்கத்துக்கு குந்தகமாக உள்ளனர்.

இன்னொருவரை மதம் மாற்றும் உரிமை எவருக்கும் இல்லை.

சட்டத்தின் படியும் அது ஒரு குற்றம்.

தமது மதத்தவரை பாதுகாக்கும் உரிமை சிவசேனைக்கு உண்டு!

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, Rajesh said:

இதில் தவறில்லை!

மதம் மாற்றுவார்கள் தான் மத நல்லிணக்கத்துக்கு குந்தகமாக உள்ளனர்.

இன்னொருவரை மதம் மாற்றும் உரிமை எவருக்கும் இல்லை.

சட்டத்தின் படியும் அது ஒரு குற்றம்.

தமது மதத்தவரை பாதுகாக்கும் உரிமை சிவசேனைக்கு உண்டு!

உண்மையாகவா? ஒருவன் நிஜமாக மற்றக் கடவுளை நம்பி மாறினானா அல்லது நம்பாமல் மாறினானா என்று எப்படி கண்டு பிடிப்பீர்கள்? மூளையை CAT scan செய்வீர்களோ? அவன் பணத்திற்கோ, கட்டிய துணைக்காகவோ, ஏன் சும்மா fun க்கோ கூட மாறினாலும் கேட்க அடுத்தனுக்கு என்ன உரிமை இருக்கிறது? அடுத்தது என்ன சட்டம்? நாளைக்கு நான் மத்தியானம் என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்கும் "உணவு மாற்றத் தடைச் சட்டமா"?

எனக்குப் புரியாத விடயம் இது தான்: நீங்களெல்லாம் சுதந்திரம் சுதந்திரம் என்று பிளக்கும் பெரிய கொடி தாங்கிய தேசிய வாதிகள்! அதெப்படி இன்னொருவர் பிற்பற்றும் அல்லது பின்பற்றாத மத நம்பிக்கை சுதந்திரமாக உங்களுக்குத் தெரியவில்லை? விளக்குங்கள் முடிந்தால்?

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, Rajesh said:

இதில் தவறில்லை!

மதம் மாற்றுவார்கள் தான் மத நல்லிணக்கத்துக்கு குந்தகமாக உள்ளனர்.

இன்னொருவரை மதம் மாற்றும் உரிமை எவருக்கும் இல்லை.

சட்டத்தின் படியும் அது ஒரு குற்றம்.

தமது மதத்தவரை பாதுகாக்கும் உரிமை சிவசேனைக்கு உண்டு!

இன்னொருவரை வலிந்து மதம் மாற்ற நினைப்பது கொடிய மனநோய்! 

இவர்களுக்கு உரிய முறையில் "வைத்தியம்" பார்க்க வேண்டும். 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, Justin said:

உண்மையாகவா? ஒருவன் நிஜமாக மற்றக் கடவுளை நம்பி மாறினானா அல்லது நம்பாமல் மாறினானா என்று எப்படி கண்டு பிடிப்பீர்கள்? மூளையை CAT scan செய்வீர்களோ? அவன் பணத்திற்கோ, கட்டிய துணைக்காகவோ, ஏன் சும்மா fun க்கோ கூட மாறினாலும் கேட்க அடுத்தனுக்கு என்ன உரிமை இருக்கிறது? அடுத்தது என்ன சட்டம்? நாளைக்கு நான் மத்தியானம் என்ன சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்கும் "உணவு மாற்றத் தடைச் சட்டமா"?

எனக்குப் புரியாத விடயம் இது தான்: நீங்களெல்லாம் சுதந்திரம் சுதந்திரம் என்று பிளக்கும் பெரிய கொடி தாங்கிய தேசிய வாதிகள்! அதெப்படி இன்னொருவர் பிற்பற்றும் அல்லது பின்பற்றாத மத நம்பிக்கை சுதந்திரமாக உங்களுக்குத் தெரியவில்லை? விளக்குங்கள் முடிந்தால்?

கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்.

அன்னியர்களின் படையெடுப்புகளால் எம்மவர்கள் மதரீதீயாக துன்புறுத்தப்பட்டனர், நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆசைவார்த்தைக்கு இரையாக்கப்பட்டனர். இவையெல்லாம் வரலாறுகளாக உள்ளன. பாடசாலை புத்தகங்களிலும் இருந்தது.

 இலங்கையில் சைவர்கள் கோவிலுக்கு போகவிட்டால் ஐயர் வீடு தேடி வரமாட்டார். ஞாயிற்றுக்கிழமை பூஜைக்கு அவர் இவர் வரவில்லையெனில் பாதர் வீடுதேடி வருவார். என் கண்ணால் பார்த்தது. 

வெள்ளிக்கிழமைகளில் அநேக கிறிஸ்தவர்கள் மீன் சாப்பிடுவார்கள் ஏன் டாக்டர்?

மத சுதந்திரம் வேறு. மத மாற்ற தூண்டுதல் வேறு. படித்துவிட்டு வாருங்கள். சுதந்திரத்தை  பற்றி அலசி ஆராய்வோம்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, Justin said:

சுயமாக  மதம் மாறுவதற்கும்  இயலாமையை பயன்படுத்தி இலவச உதவிகளை காட்டி மதம் மாற்றுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதில் மதம்  மாற்றிகள் இரண்டாவது ரகம். இவர்கள் எமது தாயகத்தில் இருந்து மிக முக்கியமாக அகற்றப்பட வேண்டியவர்களே!

முடிந்தால்  இந்த உலகிலிருந்தே..

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, Justin said:

ஜஸ்டின்,

ஒருவர் ஒரு மதத்தில் இருந்து, இன்னொரு மதம் பற்றி நன்றாக அறிந்துகொண்டு, தனது மததைக் காட்டிலும் புதிய மதம் சிறந்தது என்கின்ற தெளிவுடன், எந்த அழுத்தமும் இல்லாமல் புதிய மதத்திற்கு மாறுவது அவரது சுதந்திரம். இதில் மற்றையவர்கள் தலையீடு செய்ய முடியாது.

ஆனால், இன்று மத்திய கிழக்கிலும், ஆசிய நாடுகளிலும் நடைபெறும் மதமாற்றம் என்பது இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் அழுத்தத்தினால் மட்டுமே நடக்கிறது. ஈராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாம் அல்லாத சிறுபான்மை மதங்கள் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருகின்றன. யஸீடீக்கள் மற்றும் அசிரியர்கள் இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். அல்லது கட்டாய இஸ்லாமிய மதத்திற்குள் உள்வாங்கப்படுகின்றனர். இவ்வாறான விடயங்கள் பாக்கிஸ்த்தானிலும் நடக்கின்றன. சிறுபான்மை கிறீஸ்த்தவர்களும், இந்துக்களும் இலக்குவைக்கப்படுக் கொல்லப்படுவதுடன், கட்டாய மதமாற்றமும் நடக்கிறது. இந்தியாவில், வறுமைப்பட்ட இந்துக்கள் முஸ்லீம்களின் சலுகைகளாலும், அவ்வாறே வறுமைப்பட்ட முஸ்லீம்கள், இந்துக்களின் அழுத்தத்தினாலும் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இதில், எவருமே இன்னொரு மதத்தை தாமாகவே தேர்ந்தெடுத்து, தெளிவாக உணர்ந்துகொண்டு சேராமல், ஏதோ ஒரு வகையில் அழுத்தங்களுக்கு உற்பட்டே மாற்றப்பட்டிருக்கின்றனர் அல்லது மாறியிருக்கின்றனர். இதை எப்படி அவர்களது சுதந்திரம் என்றோ, மற்றையவர்களுக்கு இதில் என்ன வேலை என்றோ சொல்ல முடியும்?

அண்மையில், மட்டக்களப்பில் 15 வயது தமிழ்ச் சிறுமியை ஆசை வார்த்தைகள் காட்டி இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற இரு இஸ்லாம் ஆசிரியர்கள் ஊக்குவித்திருக்கிறார்கள். 15 - 16 வயதுச் சிறுமிக்கு ஒரு மதம் பற்றிய தெளிவு எவ்வளவு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இம்மாற்றத்தை அவள் சுதந்திரமாக, எதுவித அழுத்தமும் இன்றி செய்திருப்பாள் என்று உண்மையாகவே நீங்கள் நம்புகிறீர்களா?

அழுத்தங்களும், சலுகைகளும், பண உதவிகளும் ஒருவரின் மதமாற்றத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாறும்பொழுது, அவரது சுதந்திரம் என்பது அடிப்பட்டுப் போய்விடுகிறது. 

தனது மதமும், கலாசாரமும் பாதுக்காக்கப்பட வேண்டும் என்று ஒருவர் விரும்புவது தவறாகாது. ஆனால், சிவசேனை இந்தியாவில் நடப்பது போன்று முஸ்லீம்களாக மதமாற்றம் செய்யப்பட்ட இந்துக்களை மீண்டும் வலுக்கட்டாயமாக இந்துமதத்திற்கு மாற்ற நினைத்தால், அதுவும் கட்டாய மதமாற்றமே. 

மனிதன் தான் தனக்குத் தேவையான மதத்தைத் தெரிவு செய்ய வேண்டும், மதம் அதனைத் தீர்மானிக்க முடியாது.

  • Like 1
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

இஸ்லாம் வாளின் முனையினால் பரப்பப்பட்ட ஓர் மதம்.
வழுக்கட்டாயமாகவே பலர் மதம் மாற்ற‌ப்பட்டார்கள்

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, குமாரசாமி said:

கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்.

அன்னியர்களின் படையெடுப்புகளால் எம்மவர்கள் மதரீதீயாக துன்புறுத்தப்பட்டனர், நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆசைவார்த்தைக்கு இரையாக்கப்பட்டனர். இவையெல்லாம் வரலாறுகளாக உள்ளன. பாடசாலை புத்தகங்களிலும் இருந்தது.

 இலங்கையில் சைவர்கள் கோவிலுக்கு போகவிட்டால் ஐயர் வீடு தேடி வரமாட்டார். ஞாயிற்றுக்கிழமை பூஜைக்கு அவர் இவர் வரவில்லையெனில் பாதர் வீடுதேடி வருவார். என் கண்ணால் பார்த்தது. 

வெள்ளிக்கிழமைகளில் அநேக கிறிஸ்தவர்கள் மீன் சாப்பிடுவார்கள் ஏன் டாக்டர்?

மத சுதந்திரம் வேறு. மத மாற்ற தூண்டுதல் வேறு. படித்துவிட்டு வாருங்கள். சுதந்திரத்தை  பற்றி அலசி ஆராய்வோம்.

கு.சா, எனக்கு நீங்கள் படிப்பிக்க அதிகம் இல்லை! மதம் என்பது நான் ஒரு காரணத்திற்காக மாறினாலும் ஒரு காரணமும் இல்லாமல் மாறினாலும் கேட்க அதிகாரம் யாருக்கும் இல்லை! என் சாப்பாடு, உடை, யாருடன் நான் உறவு வைத்துக் கொள்வேன் என்பது போன்றே இதுவும்! வன் முறை தவறு! மைனரை மாற்றுவது தவறும், குற்றமும்! தங்கள் மதத்தின் இயல்புகளைப் பற்றி எழுத, பேச யாருக்கும் உரிமை உண்டு! மற்றவர் விரும்பினால் ஏற்றுக் கொள்ளலாம்! விரும்பா விட்டால் தாண்டிப் போகலாம்!

இதில் அடக்கி வாசிக்க எதுவும் இல்லை! நினைப்பதைச் சொல்லவே யாழ் களம்!

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ragunathan said:

ஜஸ்டின்,

ஒருவர் ஒரு மதத்தில் இருந்து, இன்னொரு மதம் பற்றி நன்றாக அறிந்துகொண்டு, தனது மததைக் காட்டிலும் புதிய மதம் சிறந்தது என்கின்ற தெளிவுடன், எந்த அழுத்தமும் இல்லாமல் புதிய மதத்திற்கு மாறுவது அவரது சுதந்திரம். இதில் மற்றையவர்கள் தலையீடு செய்ய முடியாது.

ஆனால், இன்று மத்திய கிழக்கிலும், ஆசிய நாடுகளிலும் நடைபெறும் மதமாற்றம் என்பது இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் அழுத்தத்தினால் மட்டுமே நடக்கிறது. ஈராக்கிலும், சிரியாவிலும் இஸ்லாம் அல்லாத சிறுபான்மை மதங்கள் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருகின்றன. யஸீடீக்கள் மற்றும் அசிரியர்கள் இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். அல்லது கட்டாய இஸ்லாமிய மதத்திற்குள் உள்வாங்கப்படுகின்றனர். இவ்வாறான விடயங்கள் பாக்கிஸ்த்தானிலும் நடக்கின்றன. சிறுபான்மை கிறீஸ்த்தவர்களும், இந்துக்களும் இலக்குவைக்கப்படுக் கொல்லப்படுவதுடன், கட்டாய மதமாற்றமும் நடக்கிறது. இந்தியாவில், வறுமைப்பட்ட இந்துக்கள் முஸ்லீம்களின் சலுகைகளாலும், அவ்வாறே வறுமைப்பட்ட முஸ்லீம்கள், இந்துக்களின் அழுத்தத்தினாலும் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இதில், எவருமே இன்னொரு மதத்தை தாமாகவே தேர்ந்தெடுத்து, தெளிவாக உணர்ந்துகொண்டு சேராமல், ஏதோ ஒரு வகையில் அழுத்தங்களுக்கு உற்பட்டே மாற்றப்பட்டிருக்கின்றனர் அல்லது மாறியிருக்கின்றனர். இதை எப்படி அவர்களது சுதந்திரம் என்றோ, மற்றையவர்களுக்கு இதில் என்ன வேலை என்றோ சொல்ல முடியும்?

அண்மையில், மட்டக்களப்பில் 15 வயது தமிழ்ச் சிறுமியை ஆசை வார்த்தைகள் காட்டி இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற இரு இஸ்லாம் ஆசிரியர்கள் ஊக்குவித்திருக்கிறார்கள். 15 - 16 வயதுச் சிறுமிக்கு ஒரு மதம் பற்றிய தெளிவு எவ்வளவு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இம்மாற்றத்தை அவள் சுதந்திரமாக, எதுவித அழுத்தமும் இன்றி செய்திருப்பாள் என்று உண்மையாகவே நீங்கள் நம்புகிறீர்களா?

அழுத்தங்களும், சலுகைகளும், பண உதவிகளும் ஒருவரின் மதமாற்றத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாறும்பொழுது, அவரது சுதந்திரம் என்பது அடிப்பட்டுப் போய்விடுகிறது. 

தனது மதமும், கலாசாரமும் பாதுக்காக்கப்பட வேண்டும் என்று ஒருவர் விரும்புவது தவறாகாது. ஆனால், சிவசேனை இந்தியாவில் நடப்பது போன்று முஸ்லீம்களாக மதமாற்றம் செய்யப்பட்ட இந்துக்களை மீண்டும் வலுக்கட்டாயமாக இந்துமதத்திற்கு மாற்ற நினைத்தால், அதுவும் கட்டாய மதமாற்றமே. 

மனிதன் தான் தனக்குத் தேவையான மதத்தைத் தெரிவு செய்ய வேண்டும், மதம் அதனைத் தீர்மானிக்க முடியாது.

நான் மேலே சொன்ன பதிலே இங்கும் பொருந்தும் ரகு! வாள் முனை, துவக்கு முனையில் மாற்றுவது குற்றம்! மேலே 15- 16 வயதுப் பிள்ளையை மாற்றியதை சிறுவர் கடத்தல் என்று தான் கையாள வேண்டும்- குற்றமே! ஆனால், ஒரு மதத்தை ஒருவர் வீதியில் நின்று போதிப்பது தவறு என்பதும், அதன் பால் ஈர்க்கப் பட்டோ அல்லது தாம் இருக்கிற மதத்தினால் தமக்குக் கிடைக்காத உரிமைகளுக்காகவும் மாறுவது தவறு என்பதும், ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல! ஒருவன் வாழும் கொஞ்ச நாட்களில் அவனை அவனுக்காக வாழ விடுங்கள், ஒரு மதத்தைக் காக்க, கலாச்சாரத்தைக் காக்க என்று மற்றவனை எடை போடும் வேலை விடுதலைக்கு உழைப்பதாகச் சொல்லும் ஆட்களுக்கு உகந்த வேலையல்ல!

3 hours ago, Eppothum Thamizhan said:

சுயமாக  மதம் மாறுவதற்கும்  இயலாமையை பயன்படுத்தி இலவச உதவிகளை காட்டி மதம் மாற்றுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதில் மதம்  மாற்றிகள் இரண்டாவது ரகம். இவர்கள் எமது தாயகத்தில் இருந்து மிக முக்கியமாக அகற்றப்பட வேண்டியவர்களே!

முடிந்தால்  இந்த உலகிலிருந்தே..

என்ன வித்தியாசம்? என் கேள்வியே சட்டம் இருக்கிறது என்றீர்கள், எப்படி சட்டம் மீறப்பட்டதை நிரூபிப்பீர்கள்? என்பது தான். அமல் படுத்த முடியாத சட்டம் துஷ்பிரயோகமாகவே மாறும்!

Share this post

Link to post
Share on other sites

ஒருவர் தானாக விரும்பி ஒரு மதத்தைத் தெரிவு செய்வதில் மற்றையவர்கள் தலையீடு செய்ய முடியாது. இதில் வேறு கருத்தில்லை. 

ஆனால், இன்று வீதியில் நின்று போதிப்பதாலோ அல்லது பிரசங்கம் செய்வதாலோதான் மதமாற்றம் நிகழ்கிறது என்கிறீர்களா? இல்லையே? வீடுவீடாகச் சென்று சலுகைகள் அழுத்தங்கள் என்று கொடுக்கப்படுகின்றனவே? உங்களின் மதம் தவறானது, மோட்சத்திற்குப் போகமாட்டீர்கள், எங்களின் மதத்திற்கு வாருங்கள் என்று பயங்காட்டல் நடக்கின்றதே? 

நான் இருக்கும் மதத்தில் எனக்கு உரிமைகள் இல்லையென்றால், நான் மதம் மாறுவதுதான் தீர்வா? இந்துக்களாக இருந்த பலர் முன்னர் கிறீஸ்த்தவர்களாக மதம் மாறினார்கள். இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? சாதிக்கொடுமை ஒரு காரணம் என்று கொள்ளலாமா? ஆனால், கிறீஸ்த்தவத்திலும் இந்துக்களிடமிருந்த அதே சாதிக்கொடுமை, பிரதேசவாதம், பணவாதம் என்று எல்லாம் இருக்கிறதே? இந்துக்களாக இருந்தபொழுது கிடைக்காத, ஆனால் கிறீஸ்த்தவர்களாக அவர்கள் மாறியபோது அவர்களுக்குக் கிடைத்த உரிமைகள் தான் என்ன? அப்படி எதுவுமே இருப்பதாக நான் அறியவில்லை.

ஒருவன் தனது இனத்திற்காக, மொழிக்காக, மதத்திற்காக, கலாசாரத்திற்காக போராடுவதென்பது அவை காக்கப்படவேண்டும் என்று விரும்புவதோ பிழையென்றால், நாம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும். இல்லாதொழிக்கப்படும் உரிமைகளை மீண்டும் கேட்கக் கூடாது, எமது அடையாளங்களை இழந்து சிங்கள் மொழியுடனும், பெளத்த மதத்துடனும் கலந்து ஐக்கியப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நாம் அவற்றைச் செய்யவில்லை, மாறாக அவற்றைக் காக்க வேண்டுமென்று போராடுகிறோம். இனம் அழிக்கப்படக் கூடாதென்று போராடுவதற்கும் மதம் அழிக்கப்படக் கூடாதென்று போராடுவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?   

இன்று சுதந்திரமாக, பிறர் அழுத்தமின்றி மதம் மாறுவோர் என்று எவருமில்லை. திருமணத்திற்காக, பணத்திற்காக, தமது இருப்பிற்காத்தான் இது நடக்கிறது. மதம் மாறாவிட்டால் பெண்வீட்டாரோ அல்லது மாப்பிள்ளை வீட்டாரோ தம்மை திருமணம் முடிக்க விடமாட்டார்கள் என்கிற அழுத்தம், மதம் மாறாவிட்டால் எமக்கு வசதிகள் வாய்ப்புகள் கிடைக்காதென்கிற அழுத்தம், பணமில்லாவிட்டால் வாழ முடியாதென்கிற அழுத்தம் என்பனவே மதத்தை மாறப்பண்ணுகின்றன. வெளித்தூண்டல் இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை, மதம் உற்பட. 

மனிதன் வாழப்போவது கொஞ்சக்காலம்தான், அதற்குள்ளும் பலர் அவனை மதம் மாற்றப் பார்க்கிறார்கள்.

Edited by ragunathan
  • Like 3

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, ragunathan said:

ஆனால், கிறீஸ்த்தவத்திலும் இந்துக்களிடமிருந்த அதே சாதிக்கொடுமை, பிரதேசவாதம், பணவாதம் என்று எல்லாம் இருக்கிறதே? இந்துக்களாக இருந்தபொழுது கிடைக்காத, ஆனால் கிறீஸ்த்தவர்களாக அவர்கள் மாறியபோது அவர்களுக்குக் கிடைத்த உரிமைகள் தான் என்ன? அப்படி எதுவுமே இருப்பதாக நான் அறியவில்லை.

எனக்கு தெரிந்து ஊர்/கிராம தேவாலயங்களில் பின் வரிசை சாதி குறைந்தவர்களுக்குத்தான். அவர்கள் அறிவார்ந்த, நாகரீக மத கிறிஸ்தவர்களாக இருந்தும் இன்றுவரை சாதி மாறி மணம் முடித்ததாக சரித்திரம் இல்லை. இது புலம் பெயர்ந்தும் தொடர்கின்றது.
எனது கிறிஸ்தவ நண்பர்கள் மன்னிக்கவும்.

Share this post

Link to post
Share on other sites

மனிதன் வாழ்வதற்கு மதம் என்பது தேவையற்றது. மனிதனின்  பலவீனமே மதத்தை உருவாக்கியது. உலகின் முதலில்  உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியே மதம் ஆகும். எல்லா  மதங்களுமே முட்டாளத்தனத்தை தான் மக்களுக்கு போதிக்கின்றன. ஒரு முட்டாள்த்தனத்தில்  இருந்து விலகி மற்றய முட்டாள்தனத்தை ஏற்றுக்கொள்வது தான்  மத மாற்றம். 

ஒன்றிணைந்த யூகோஸலாவிய குடியரசின் முன்னாள் அதிபர் மார்ஷல் டிட்டோவின் மதம் தொடரபான கொள்கை சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.

எந்த மதத்தையும் பின்பற்றும் வணங்கும் உரிமை எலோருக்கும் உண்டு. அது மக்களுடைய தனிப்பட்ட உரிமை.  ஆனால் அதை உங்கள் வீட்டுக்குள் அல்லது மத ஸ்தாபனங்களுக்குள்ளே வைத்துக்கொள்ளுங்கள் . வெளியே பொது இடத்திற்கு வந்தால் மதம் பற்றிய பேச்சோ மத சின்னங்களோ இருக்கக் கூடாது. பொது இடங்களில்( பாடசாலைகள், வேலைத்தலங்கள் உட்பட)  மனிதர்களாக நாட்டின் பிரஜைகளாக  உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்”. 

இதை பற்றி யாழ்கள உறுப்பினர்கள்என்னநினைக்கிறார்கள் என்று அறிய ஆவலாயுள்ளேன். 

  • Like 3
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, குமாரசாமி said:

எனக்கு தெரிந்து ஊர்/கிராம தேவாலயங்களில் பின் வரிசை சாதி குறைந்தவர்களுக்குத்தான். அவர்கள் அறிவார்ந்த, நாகரீக மத கிறிஸ்தவர்களாக இருந்தும் இன்றுவரை சாதி மாறி மணம் முடித்ததாக சரித்திரம் இல்லை. இது புலம் பெயர்ந்தும் தொடர்கின்றது.
எனது கிறிஸ்தவ நண்பர்கள் மன்னிக்கவும்.

வருணாசிரம்ம் என்னும் மனிதரை தரவரிசைப் படுத்தும் சாதி  அடுக்கு பிரிவினை இந்து மதத்தினாலேயே உருவாக்கப்பட்டது. அதை கிருஷனரே பகவத்கீதையில் கூறுகிறார்  இந்து மதம் இல்லாத நாடுகளில் சாதி அடுக்கு இல்லை.(மத இனப் பிரிவுகள் இருக்கலாம் அது ஒன்றின் கீழ் மற்றொன்று என்ற சாதி அடுக்கு அல்ல)

ஒன்றின் கீழ் மற்றொன்று என்ற மனிதரை தரவரிசைப்படுத்தும் சாதி அடுக்கு என்பது இந்து மதத்தினால் அது உள்ள  மற்றைய மத மக்களுக்கு வழங்கப்பட்ட நோய் ஆகும். அந்த நோயின் மூலக்கூறு உள்ள இந்து மதத்தில் இருந்து அது அகற்றப்பட்டால் மற்றைய சிறு பகுதி மக்களிடம் இருந்தும் அது மறைந்துவிடும். 

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, குமாரசாமி said:

எனக்கு தெரிந்து ஊர்/கிராம தேவாலயங்களில் பின் வரிசை சாதி குறைந்தவர்களுக்குத்தான். அவர்கள் அறிவார்ந்த, நாகரீக மத கிறிஸ்தவர்களாக இருந்தும் இன்றுவரை சாதி மாறி மணம் முடித்ததாக சரித்திரம் இல்லை. இது புலம் பெயர்ந்தும் தொடர்கின்றது.
எனது கிறிஸ்தவ நண்பர்கள் மன்னிக்கவும்.

2 minutes ago, tulpen said:

வருணாசிரம்ம் என்னும் மனிதரை தரவரிசைப் படுத்தும் சாதி  அடுக்கு பிரிவினை இந்து மதத்தினாலேயே உருவாக்கப்பட்டது. அதை கிருஷனரே பகவத்கீதையில் கூறுகிறார்  இந்து மதம் இல்லாத நாடுகளில் சாதி அடுக்கு இல்லை.(மத இனப் பிரிவுகள் இருக்கலாம் அது ஒன்றின் கீழ் மற்றொன்று என்ற சாதி அடுக்கு அல்ல)

ஒன்றின் கீழ் மற்றொன்று என்ற மனிதரை தரவரிசைப்படுத்தும் சாதி அடுக்கு என்பது இந்து மதத்தினால் அது உள்ள  மற்றைய மத மக்களுக்கு வழங்கப்பட்ட நோய் ஆகும். அந்த நோயின் மூலக்கூறு உள்ள இந்து மதத்தில் இருந்து அது அகற்றப்பட்டால் மற்றைய சிறு பகுதி மக்களிடம் இருந்தும் அது மறைந்துவிடும். 

ஆக இதற்கும் சைவ/இந்துமதங்கள் தான் காரணம். மற்றவர்களில் குற்றம் சொல்லி தப்பித்துக்கொள்வது மனித இயல்புகளில் ஒன்றுதானே.

இந்து மத வாசனையே இல்லாத ஆபிரிக்க நாடுகளில் கொடுமையான சாதிப்பிரச்சனைகள் இருக்கின்றன. நீங்கள் அறியவில்லையென நினைக்கின்றேன்.

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, குமாரசாமி said:

ஆக இதற்கும் சைவ/இந்துமதங்கள் தான் காரணம். மற்றவர்களில் குற்றம் சொல்லி தப்பித்துக்கொள்வது மனித இயல்புகளில் ஒன்றுதானே.

இந்து மத வாசனையே இல்லாத ஆபிரிக்க நாடுகளில் கொடுமையான சாதிப்பிரச்சனைகள் இருக்கின்றன. நீங்கள் அறியவில்லையென நினைக்கின்றேன்.

ஆம் சரிதான் இந்து மதம் போல் அயோக்கியத்தனமாக  மக்களைப் பிரிக்கும்  கொடுமை நீங்கள் கூறியதைப் போல் ஆபிரிக்க நாடுகளில் உள்ளது என்றால் அதுவும் களையப்பவேண்டியது என்று அர்த்தமே தவிர இந்து மதத்தில் அந்தக் கொடுமை இல்லை என்று ஆகிவிடாது. எம்மைபப் போலவே கேவலமாய் மற்றயவனும் இருக்கிறான் என்று சுட்டிக்காட்டுவதன் மூலம் எமது கேவலத்தை மறைக்க முடியாது. 

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, tulpen said:

ஊரில் இருக்கும் கிறிஸ்தவர்களும் சாதி விடயத்தில் திருந்தவில்லை என்று குறிப்பிட்டதற்கு....அதற்கும் இந்துக்கள் தான் காரணம் என்று குறிப்பிட்ட உங்களுடன் கருத்தெழுதுவது வீண். 

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, குமாரசாமி said:

ஊரில் இருக்கும் கிறிஸ்தவர்களும் சாதி விடயத்தில் திருந்தவில்லை என்று குறிப்பிட்டதற்கு....அதற்கும் இந்துக்கள் தான் காரணம் என்று குறிப்பிட்ட உங்களுடன் கருத்தெழுதுவது வீண். 

ஊரில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு எமது இத்து மதத்தில் இருந்து தான் சாதி போனது என்பது யதார்ததமானது. 100 வீத உண்மையும் கூட. நீங்கள் இருக்கும் ஜேர்மனியில் வாழும் கிறிஸ்தவர்களிடம் சாதி இருந்திருந்தால் அது  ஜெரூசலத்தில் இருந்து அல்லது பைபிளில் இருந்து போனது எனலாம். ஆனால் இங்கு இல்லையே!  நீங்கள் கூறியது போல  ஊரில் தானே இருக்கிறது. அப்படியானால் அது எம்மில் இருந்து தானே போயிருக்க வேண்டும்.  மதம் மாறிய கிறிஸ்தவர்கள் எப்படித் திருந்துவார்கள் அவர்கள் ஒரு முட்டாள்த்தனத்தில் இருந்து விலகி மற்றைய முட்டாள்த்தனத்தை ஏற்றுக்கொண்டவர்களாச்சே. 😀

Edited by tulpen
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, ragunathan said:

ஒருவர் தானாக விரும்பி ஒரு மதத்தைத் தெரிவு செய்வதில் மற்றையவர்கள் தலையீடு செய்ய முடியாது. இதில் வேறு கருத்தில்லை. 

ஆனால், இன்று வீதியில் நின்று போதிப்பதாலோ அல்லது பிரசங்கம் செய்வதாலோதான் மதமாற்றம் நிகழ்கிறது என்கிறீர்களா? இல்லையே? வீடுவீடாகச் சென்று சலுகைகள் அழுத்தங்கள் என்று கொடுக்கப்படுகின்றனவே? உங்களின் மதம் தவறானது, மோட்சத்திற்குப் போகமாட்டீர்கள், எங்களின் மதத்திற்கு வாருங்கள் என்று பயங்காட்டல் நடக்கின்றதே? 

நான் இருக்கும் மதத்தில் எனக்கு உரிமைகள் இல்லையென்றால், நான் மதம் மாறுவதுதான் தீர்வா? இந்துக்களாக இருந்த பலர் முன்னர் கிறீஸ்த்தவர்களாக மதம் மாறினார்கள். இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? சாதிக்கொடுமை ஒரு காரணம் என்று கொள்ளலாமா? ஆனால், கிறீஸ்த்தவத்திலும் இந்துக்களிடமிருந்த அதே சாதிக்கொடுமை, பிரதேசவாதம், பணவாதம் என்று எல்லாம் இருக்கிறதே? இந்துக்களாக இருந்தபொழுது கிடைக்காத, ஆனால் கிறீஸ்த்தவர்களாக அவர்கள் மாறியபோது அவர்களுக்குக் கிடைத்த உரிமைகள் தான் என்ன? அப்படி எதுவுமே இருப்பதாக நான் அறியவில்லை.

ஒருவன் தனது இனத்திற்காக, மொழிக்காக, மதத்திற்காக, கலாசாரத்திற்காக போராடுவதென்பது அவை காக்கப்படவேண்டும் என்று விரும்புவதோ பிழையென்றால், நாம் இன்று சிங்கள ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும். இல்லாதொழிக்கப்படும் உரிமைகளை மீண்டும் கேட்கக் கூடாது, எமது அடையாளங்களை இழந்து சிங்கள் மொழியுடனும், பெளத்த மதத்துடனும் கலந்து ஐக்கியப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நாம் அவற்றைச் செய்யவில்லை, மாறாக அவற்றைக் காக்க வேண்டுமென்று போராடுகிறோம். இனம் அழிக்கப்படக் கூடாதென்று போராடுவதற்கும் மதம் அழிக்கப்படக் கூடாதென்று போராடுவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?   

இன்று சுதந்திரமாக, பிறர் அழுத்தமின்றி மதம் மாறுவோர் என்று எவருமில்லை. திருமணத்திற்காக, பணத்திற்காக, தமது இருப்பிற்காத்தான் இது நடக்கிறது. மதம் மாறாவிட்டால் பெண்வீட்டாரோ அல்லது மாப்பிள்ளை வீட்டாரோ தம்மை திருமணம் முடிக்க விடமாட்டார்கள் என்கிற அழுத்தம், மதம் மாறாவிட்டால் எமக்கு வசதிகள் வாய்ப்புகள் கிடைக்காதென்கிற அழுத்தம், பணமில்லாவிட்டால் வாழ முடியாதென்கிற அழுத்தம் என்பனவே மதத்தை மாறப்பண்ணுகின்றன. வெளித்தூண்டல் இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை, மதம் உற்பட. 

மனிதன் வாழப்போவது கொஞ்சக்காலம்தான், அதற்குள்ளும் பலர் அவனை மதம் மாற்றப் பார்க்கிறார்கள்.

நான் கேட்பதெல்லாம், ஒருவன் தன் துன்பங்களுக்குத் தீர்வு மதம் மாறுவதால் கிடைக்கும் என்று நினைத்தால், அதைக் கேட்க நீங்கள் யார் என்பதே! நீங்கள் சவூதி, ஈரான் மலேசியாவில் இருப்பது போன்ற கலாச்சார/மத காப்புப் படையா? வன்முறை மாற்றம் பற்றி நான் எதிர்ப்பை ஏற்கனவே சொல்லி விட்டேன். மறு கருத்தில்லாமல் அது தவறு. ஆனால், மென்முறையில் ஒருவன் மாற்றப் பட்டால், அவன் பொருளுக்காக மாறினால் என்ன, ஒன்றுமில்லாததற்காக மாறினால் என்ன? அவன் வாழ்வு, அவன் விருப்பம்! இந்த மாதிரியான ஒரு சுதந்திரத்திற்காக அல்லவா நாம் புலம் பெயர்ந்து தனி மனித சுதந்திரத்தை மதிக்கும் மேற்கு நாடுகளுக்கு வந்தோம்? நாம் ஏன் இந்தியாவிலோ, மதத்தை அனுமதிக்காத வடகொரியாவிலோ, அல்லது மத்திய கிழக்கிலோ தங்க முனையவில்லை?

என்னுடைய கருத்து பிரபலமாக இல்லாதிருக்கலாம், ஆனால் அது என்னுடைய சுதந்திரத்திற்கான என் ஸ்ராண்டர்ட்! சாதியைப் பற்றி நான் இங்கு பேசவேயில்லை. அது யாருக்காவது சுட்டு அவர்கள் அதை இழுத்தால் அது அவர்கள் பிரச்சினை!

1 hour ago, tulpen said:

மனிதன் வாழ்வதற்கு மதம் என்பது தேவையற்றது. மனிதனின்  பலவீனமே மதத்தை உருவாக்கியது. உலகின் முதலில்  உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியே மதம் ஆகும். எல்லா  மதங்களுமே முட்டாளத்தனத்தை தான் மக்களுக்கு போதிக்கின்றன. ஒரு முட்டாள்த்தனத்தில்  இருந்து விலகி மற்றய முட்டாள்தனத்தை ஏற்றுக்கொள்வது தான்  மத மாற்றம். 

ஒன்றிணைந்த யூகோஸலாவிய குடியரசின் முன்னாள் அதிபர் மார்ஷல் டிட்டோவின் மதம் தொடரபான கொள்கை சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.

எந்த மதத்தையும் பின்பற்றும் வணங்கும் உரிமை எலோருக்கும் உண்டு. அது மக்களுடைய தனிப்பட்ட உரிமை.  ஆனால் அதை உங்கள் வீட்டுக்குள் அல்லது மத ஸ்தாபனங்களுக்குள்ளே வைத்துக்கொள்ளுங்கள் . வெளியே பொது இடத்திற்கு வந்தால் மதம் பற்றிய பேச்சோ மத சின்னங்களோ இருக்கக் கூடாது. பொது இடங்களில்( பாடசாலைகள், வேலைத்தலங்கள் உட்பட)  மனிதர்களாக நாட்டின் பிரஜைகளாக  உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்”. 

இதை பற்றி யாழ்கள உறுப்பினர்கள்என்னநினைக்கிறார்கள் என்று அறிய ஆவலாயுள்ளேன். 

நூறு வீதம்! மதத்தை வீட்டிலேயே விட்டு வந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை!

Share this post

Link to post
Share on other sites
37 minutes ago, tulpen said:

ஊரில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு எமது இத்து மதத்தில் இருந்து தான் சாதி போனது என்பது யதார்ததமானது. 100 வீத உண்மையும் கூட. நீங்கள் இருக்கும் ஜேர்மனியில் வாழும் கிறிஸ்தவர்களிடம் சாதி இருந்திருந்தால் அது  ஜெரூசலத்தில் இருந்து அல்லது பைபிளில் இருந்து போனது எனலாம். ஆனால் இங்கு இல்லையே!  நீங்கள் கூறியது போல  ஊரில் தானே இருக்கிறது. அப்படியானால் அது எம்மில் இருந்து தானே போயிருக்க வேண்டும்.  மதம் மாறிய கிறிஸ்தவர்கள் எப்படித் திருந்துவார்கள் அவர்கள் ஒரு முட்டாள்த்தனத்தில் இருந்து விலகி மற்றைய முட்டாள்த்தனத்தை ஏற்றுக்கொண்டவர்களாச்சே. 😀

ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தை பாதிரியார் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர். அவர் வத்திக்கான் வந்து பரிசுத்தம் பெற்ற பின்னரே பாதிரியாராக ஊரில் சேவகம் செய்கின்றார். எல்லாம் தெரிந்த அந்த ஃபாதர் ஏன் எல்லோரையும் அப்பம் வாங்குவதற்கு சரி சமமாக அழைக்கவில்லை.

ஜேர்மனியிலும் சாதி தவிர்த்து ஆனால் அதே போல் பல பிரச்சனைகள் மக்களிடையே இருக்கின்றது. வேறு எங்கேயவது அதைப்பற்றி கதைக்கலாம்.

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, குமாரசாமி said:

கு.சா, எங்கே போய் எதைப் பார்த்து விட்டுப் பேசுகிறீர்கள் என்று விளங்கவில்லை! அப்பம் வாங்க வரிசையில் தான் இப்போது போகிறார்கள்! இது தான் தாயகத்திலும். இங்கே இரு அங்கே இரு என்று யாரையும் யாரும் ஒதுக்கி வைத்ததாக நான் இலங்கையில் வடக்கிலும் மத்தியிலும் மேற்கிலும் சென்ற எந்த ஆலயத்திலும் காணவில்லை!இது 2002 வரையில் தெரிந்தது. ஒருவர் ஆலயத்தில் எங்கிருக்கிறாரோ அதன் படி தான் அவர் அப்பம் வைன் வாங்க வரிசையில் இடம் எடுப்பார்! இதென்ன புதுக் கதை? இந்த சாதி மேட்டரில் எனக்கு ஆர்வம் இல்லை! ஆனால் எந்த இடம் எந்தக் கோவில் என்றாவது சொல்லுங்கள்?

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, tulpen said:

ஒன்றிணைந்த யூகோஸலாவிய குடியரசின் முன்னாள் அதிபர் மார்ஷல் டிட்டோவின் மதம் தொடரபான கொள்கை சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.

எந்த மதத்தையும் பின்பற்றும் வணங்கும் உரிமை எலோருக்கும் உண்டு. அது மக்களுடைய தனிப்பட்ட உரிமை.  ஆனால் அதை உங்கள் வீட்டுக்குள் அல்லது மத ஸ்தாபனங்களுக்குள்ளே வைத்துக்கொள்ளுங்கள் . வெளியே பொது இடத்திற்கு வந்தால் மதம் பற்றிய பேச்சோ மத சின்னங்களோ இருக்கக் கூடாது. பொது இடங்களில்( பாடசாலைகள், வேலைத்தலங்கள் உட்பட)  மனிதர்களாக நாட்டின் பிரஜைகளாக  உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்”. 

இதை பற்றி யாழ்கள உறுப்பினர்கள்என்னநினைக்கிறார்கள் என்று அறிய ஆவலாயுள்ளேன். 

ஒன்றிணைந்த அந்த யூகோஸ்லாவியா பல மகாணங்களாக பிரிந்து போக காரணம் மதமும் இனமுமே. தங்களை தாங்களே ஆள வேண்டும் என்ற வைராக்கியமும்.

5 minutes ago, Justin said:

ஒருவர் ஆலயத்தில் எங்கிருக்கிறாரோ அதன் படி தான் அவர் அப்பம் வைன் வாங்க வரிசையில் இடம் எடுப்பார்!

அவர்கள் இருப்பது பின் வரிசை அல்லவா! 
இத்துடன் இந்த திரிக்கு வரமாட்டேன். நன்றி.

8 minutes ago, Justin said:

கு.சா, எங்கே போய் எதைப் பார்த்து விட்டுப் பேசுகிறீர்கள் என்று விளங்கவில்லை! அப்பம் வாங்க வரிசையில் தான் இப்போது போகிறார்கள்! இது தான் தாயகத்திலும். இங்கே இரு அங்கே இரு என்று யாரையும் யாரும் ஒதுக்கி வைத்ததாக நான் இலங்கையில் வடக்கிலும் மத்தியிலும் மேற்கிலும் சென்ற எந்த ஆலயத்திலும் காணவில்லை!இது 2002 வரையில் தெரிந்தது. ஒருவர் ஆலயத்தில் எங்கிருக்கிறாரோ அதன் படி தான் அவர் அப்பம் வைன் வாங்க வரிசையில் இடம் எடுப்பார்! இதென்ன புதுக் கதை? இந்த சாதி மேட்டரில் எனக்கு ஆர்வம் இல்லை! ஆனால் எந்த இடம் எந்தக் கோவில் என்றாவது சொல்லுங்கள்?

அவர்கள் இருப்பது பின் வரிசை அல்லவா! 
இத்துடன் இந்த திரிக்கு வரமாட்டேன். நன்றி.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தை பாதிரியார் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர். அவர் வத்திக்கான் வந்து பரிசுத்தம் பெற்ற பின்னரே பாதிரியாராக ஊரில் சேவகம் செய்கின்றார். எல்லாம் தெரிந்த அந்த ஃபாதர் ஏன் எல்லோரையும் அப்பம் வாங்குவதற்கு சரி சமமாக அழைக்கவில்லை.

ஜேர்மனியிலும் சாதி தவிர்த்து ஆனால் அதே போல் பல பிரச்சனைகள் மக்களிடையே இருக்கின்றது. வேறு எங்கேயவது அதைப்பற்றி கதைக்கலாம்.

அப்படி அவர் செய்திருந்தால் அது தவறு. கண்டிக்கப்பட வேண்டியது. ஆனால அந்த சாதி நோய் அவருக்கு வந்தது அவரது தாய் மதமான எமது இந்துமதத துல் இருந்து தான். அது மறுக்கவோ மறைக கவோ முடியாத உண்மை. 

59 minutes ago, குமாரசாமி said:

ஒன்றிணைந்த அந்த யூகோஸ்லாவியா பல மகாணங்களாக பிரிந்து போக காரணம் மதமும் இனமுமே. தங்களை தாங்களே ஆள வேண்டும் என்ற வைராக்கியமும்.

அவர்கள் பிரிந்து போக காரணம் அந்  நாடுகள் சுயநிர்ணய உரமை  உள்ள தேசங்களாஎ ஏற்கனவே யூகோஸ்லாவிய குடியரசில்  இணைந்திருந்ததே. தங்களை தாமே ஆளவேண்டும் என்ற வைராக்கியம் தவறானதல்ல. நாமும் அதையே விரும்பினோம்.  யூகோஸிலாவிய குடியரசு உடைந்து  மத அடிப்படையில் எந்த நாடு உருவாகியது  என்பதை அறிய ஆவலாய் உள்ளேன். தயவு செய்து அதை மட்டும் கூறிவிட்டு திரியில் இருந்து விடை பெறவும். 

Edited by tulpen

Share this post

Link to post
Share on other sites

யூகொஸ்லாவியா பிரிந்தபோது உருவாகிய செர்பியா, குரோஷியா மற்றும் பொஸ்னியா ஹெர்ஸகோவினா ஆகிய நாடுகளில் பொஸ்னியா பெரும்பான்மை முஸ்லீம்களைக் கொண்டது. குரோஷியா கத்தோலிக்கர்களையும், சேர்பியா பழமைவாத கிறீஸ்த்தவர்களையும் கொண்டது. 

பார்க்கபோனால், ஓரளவிற்கு மத அடிப்படையில்த்தான் பிரிந்து இவை உருவாகின என்று நான் நினைக்கிறேன்.

20 ஆம் நூற்றாண்டில், யூதர்களுக்குப் பின்னர் இனவழிப்பிற்குள் அகப்பட்ட இனம் என்றால்  அது பொஸ்னிய முஸ்லீம்களாகத்தான் இருக்கும்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.