• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

“கருத்துக்களால் களமாடுவோம் “ - அரசியல் கருத்தரங்கு

Recommended Posts

“கருத்துக்களால் களமாடுவோம் “

January 8, 2019

3867.jpg?zoom=3&resize=335%2C371

தமிழ் தேசிய பிரச்சனைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாக தீர்வும். தமிழ் தலைமைகளின் வகிபாகமும் எனும் தொனிப்பொருளில் “கருத்துக்களால் களமாடுவோம் ” எனும் அரசியல் கருத்தரங்கு யாழில் நடைபெறவுள்ளது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை மாலை 03 மணியளவில் குறித்த கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இக் கருத்தரங்கில் வல்வெட்டித்துறை சிவன் கோவில் பிரதம குரு பிரம்மஸ்ரீ ப.மனோகரக்குருக்கள் , தென்னிந்திய திருச்சபை பேராயர் டானியல் தியாகராஜா , யாழ்.பல்கலைகழக பொருளியல் பீட பேராசிரியர் கலாநிதி சு.சிவகுமார் , யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி , மூத்த ஊடகவியலாளர் ந. வித்தியாதரன் ஆகியோர் கருத்துரை வழங்கவுள்ளனர். அதற்கு பதிலுரையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் வழங்கவுள்ளார்.

http://globaltamilnews.net/2019/109295/

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இப்படி இவர்கள் தொடர்ந்து தமிழ் கட்சிகளின் குடுமிச் சண்டை அரசியலுக்குள் தம்மை நுழைத்துக் கொண்டே இருந்தால் சாதாரண மக்கள் கொடுக்கும் தார்மீக ஆதரவைக் கூட இழக்க போகின்றனர். செய்வதற்கு கடினமான ஒரு விடயத்தை செய்ய எத்தனிக்கும் போது அதற்கு ஒற்றுமையும், எல்லாரையும் பகைத்துக் கொண்டு போகாத சாணக்கியமும் பொறுமையும் தேவை.
  • இதெல்லாம் வெளிப்பார்வைக்கு. கோது இருக்க பழம் சாப்பிடும் ஆக்கள்தான் இந்த பாய் பெஸ்டீஸ்😂
  • சிங்கள மக்கள் எதிர்க்கின்ற ஒரு தீர்வை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக எம்மிடம் என்ன பலம் / சாதகமான அம்சங்கள் இருக்கின்றன? 1. இராணுவ பலம்? 2. பொருளாதார பலம்? 3. சர்வதேச ஆதரவு? 4. இயற்கை வளங்கள்? ?
  • மட்டக்களப்பில் பிரசித்தி பெற்றதும் முக்கியம் வாய்ந்ததுமான முறக்கட்டான்சேனை விஷ்ணு ஆலயம் மற்றும் இராம கிருஸ்ண மிசன் வித்தியாலயம் என்பவற்றிற்கு சமீபமாக நீண்ட காலமாக ஏற்படும் பாரிய மண்ணரிப்பு பாதிப்பை தடுப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆழுனர் திருமதி அனுராதா ஜயம்பத் மாவட்ட அரசாங்க அதிபரை பணித்துள்ளார். ஸ்ரீ ரமண மகரிசி அறப் பணி நிலையத்தின் இலங்கை கிளை தலைவர் மாரிமுத்து செல்லத்துரை இந்த மண்ணரிப்பு பாதிப்பு பற்றி கிழக்கு மாகாண ஆளுனரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து மாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைய ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்த்தன இந்த பணிப்புரையை அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ளார். இந்த பணிப்புரைக்கு அமைய மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட செயலக காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூப ரஞ்சினி முகுந்தன் குறித்த மண்ணரிப்பைத் தடுக்க முன்னுரிமை அடிப்படையில் குறித்த மண்ணரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரளைப்பற்று தெற்கு பிரதேச சபை செயலாளர் ஆர். ராஜ்பாபுவிற்கு அறிவுறுத்தல் செய்துள்ளார். குறித்த மண்ணரிப்பு பாதிப்பினால் இயற்கை வளம் கொண்ட மருதமர நீர் ஊற்றுக்கு ஆபத்து ஏற்பட்டு வருவதாகவும் ஸ்ரீ விஷ்ணு ஆலய கட்டடங்கள் முறக்கட்டான்சேனை இராமகிருஷ்ண வித்தியாலயத்தின் கட்டிடங்களுக்கும் சேதம் ஏற்படவும் இதனால் இப்பாடசாலையின் கல்வி கற்றலுக்கும் ஆலயத்தின் சமய வழிபாட்டு நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் ஸ்ரீ ரமண மகரிசி அறப்பணிமன்றத் மாரிமுத்து செல்லத்துரை தமது வேண்டுகோளில் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இப்பிரதேச மாணவர்களின் கல்விக்கு பங்கம் ஏற்படாது இருக்கவும் ஆலயங்களுக்கு பாதிப்பு ஏற்படாது இருக்கவும் தலைவர் செல்லத்துரை தமது வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மகிந்தராஜபக்ஷவின் பொதுச் சேவைகளை பாராட்டி பிரதமரின் சேவைகள் எதிர்காலத்தில் தழைத்து ஓங்கவும் வேண்டி பிரதமருக்கு வாழ்த்து செய்தியை அனுப்பிய ஸ்ரீ ரமண மகரிசி அறப்பணி நிலயத்தின் இலங்கை கிளைத் தலைவர் மாரிமுத்து செல்லத்துரைக்கு பிரதமர் மகிந்தராஜபக்ஷ நன்றி பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளார். இந்த நன்றி பாராட்டுதல் கடிதத்தில் தங்களின் வாழ்த்துச் செய்திக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிப்பதாகவும் எதிர் காலத்தில் மட்டக்களப்பு பிரதேச இந்து மக்களுக்கு தங்களால் முன் வைக்கப்படும் சமய அறப்பணிகளுக்கு அரசாங்க உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மகிந்தராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதாக பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைய பிரதம அமைச்சரின் அலுவலக உதவிப் பணிப்பாளர் ஷனிகா எகநாயக அறிவித்துள்ளார். இதேவேளை அறப்பணிமன்ற நிலயத்தின் இலங்கை கிழைத்தலைவர் செல்லத்துரை பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் இழைப்பாறிய மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் நல்ல கடமையை பாராட்டி அவரது நியமனத்திற்கு அனுப்பிய வாழ்த்து செய்திக்கு பாதுகாப்பு செயலாளர் நன்றி பாராட்டி அவருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். மேலும் இக்கடிதத்தில் தமது சேவையில் Nலும் இந்து மக்களின் நன்மை கருதி முன்வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகளுக்கு தான் கவனம் செலுத்த தயாராக இருப்பதாகவும் தமது பாராட்டு கடிதத்தில் தெரிவித்துள்ளார். https://newuthayan.com/ஆலய-மண்ணரிப்பைத்-தடுக்க/
  • அமெரிக்க மாகாணமான யூட்டாவின் மாநில செனட் சபை, ஒரே ஆண் பல பெண்களுடனோ, ஒரே பெண் பல ஆண்களுடனோ, ஒரே சமயத்தில் திருமண உறவில் இருப்பதை பெரிய குற்றமில்லை என்று அறிவிக்கும் சட்டத்துக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதைய சட்டத்தின்படி, பலருடன் திருமண உறவு கொண்டுள்ளவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். புதிய சட்ட வரைவின்படி, இரண்டு நபர்களுடன் ஒரே சமயத்தில் திருமண உறவில் இருந்தால் அது போக்குவரத்து விதிமீறல் போன்ற சிறு குற்றமாகவே கருதப்படும். எனினும், இந்த உறவில் தொடர்புடைய அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே இது குற்றமாக கருதப்படாது. தமது கணவர் அல்லது மனைவிக்கு தெரியாமல், வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்வது தொடர்ந்து பெரும் குற்றமாக நீடிக்கும். அந்த மாகாணத்தின் பிரதிநிதிகள் சபை இந்த சட்டத்துக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அந்த சபையின் ஒப்புதலுக்கு பின்னரே இச்சட்டம் அமலுக்கு வரும். https://www.bbc.com/tamil/global-51568465