Jump to content

ட்ரம்ப் – கிம் இரண்டாம் கட்ட பேச்சு நடக்கவுள்ள இடம் குறித்த அறிவிப்பு வெளியானது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

trump-kim-1.jpg

ட்ரம்ப் – கிம் இரண்டாம் கட்ட பேச்சு நடக்கவுள்ள இடம் குறித்த அறிவிப்பு வெளியானது?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான இரண்டாவது உயர்மட்ட சந்திப்பு வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் கொரிய நாளேடான Munhwa Ilbo இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.

குறித்த உயர்மட்ட சந்திப்பு தொடர்பில் அமெரிக்க, வடகொரிய வெளியுறவு அமைச்சுகளின் அதிகாரிகள், ஹனோயில் பல முறை சந்தித்துப் பேசியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் இதுதொடர்பில் கருத்து தெரிவிக்க அமெரிக்க வெளியுறவு அமைச்சும், வெள்ளை மாளிகையும் மறுப்பு தெரிவித்துள்ளன.

இதேவேளை, நான்கு நாள் அரச சுற்றுப்பயணம் மேற்கொண்டு வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் இன்று(செவ்வாய்கிழமை) சீனாவிற்கு சென்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ட்ரம்ப்-கிம்-இரண்டாம்-கட/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.