Jump to content

பொங்கல் பரிசுக்கு பொங்கல் வைத்த நீதிமன்றம்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் பரிசுக்கு பொங்கல் வைத்த நீதிமன்றம் ;1000 ரூபாய்க்கு ஆப்பு..!!

1547019673-4857.jpg

பொங்கல் பரிசாக எல்லா குடும்பங்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அறிவித்திருந்த நிலையில், நீதிமன்றம் அந்த உத்தரவிற்கு தடைவிதித்துள்ளது.

தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழர்கள் அனைவரும் தயாராக இருக்கும் நிலையில் சமீபத்தில் சட்டப்பேரவையில் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ரூ.1000 ரொக்க பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை வழங்கப்படும் என கூறியிருந்தார்.

அதன்படி இந்த பொங்கல் பரிசை வாங்க பொதுமக்கள் ரேசன் கடைகளின் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இன்று பொங்கல் பரிசு வாங்கச் சென்றவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் அனைத்து மக்களுக்கும் 1000 ரூபாய் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் 1000 ரூபாய் வழங்கவேண்டும் எனவும் மக்களின் வரிப்பணத்தை இப்படி வீண்டிக்கக்கூடாது எனவும் கருத்து தெரிவித்தது.

ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு ஆகியவற்றை அனைத்து மக்களும் பெற்றுகொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

NPHH மற்றும் NPHH-S ஆகிய கார்டுகளுக்கு 1000 ரூபாய் வழங்க தடைவிதித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசை நீதிமன்றம் காட்டமாக விமர்சித்தது

https://m-tamil.webdunia.com/article/regional-tamil-news/court-bans-pongal-price-for-people-119010900034_1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணக்காரர்களுக்கு எதற்கு 1000 ரூபாய்? - தமிழக அரசை சாடிய நீதிமன்றம்

  •  
எல்லோருக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கத் தடை

பொங்கல் திருநாளை ஒட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்த 1000 ரூபாய் பொங்கல் பரிசை எல்லோருக்கும் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே அதனை அளிக்க வேண்டுமெனக் கூறியுள்ளது.

தமிழக அரசு பொங்கல் திருநாளை ஒட்டி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொங்கல் பரிசை அறிவித்தது. அதன்படி, அரிசி, கரும்பு, வெல்லம், முந்திரி அடங்கிய பரிசுப் பொதியுடன், ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 1000 ரூபாய் பணமும் வழங்கப்படுமென மாநில அரசு அறிவித்தது. ஜனவரி 7ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இந்தத் தொகையும் பரிசுப் பொதியும் வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்பிற்காக 258 கோடி ரூபாயும் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக 1980 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான டேனியல் ஏசுதாஸ் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், இவ்வாறு நேரடியாக பணம் வழங்குவதால் மாநில அரசுக்கு 2,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகிறது. ஆகவே இதனை வழங்கத் தடை விதிக்க வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுபோல பணம் வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள், என்ன நோக்கத்திற்காக இந்தப் பணம் வழங்கப்படுகிறது, இதன் மூலம் அரசு என்ன சாதிக்க விரும்புகிறது எனக் கேள்வியெழுப்பினர். இது ஒரு அரசியல் கட்சியின் பணமல்ல என்றும் அரசின் பணமென்றும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதனை வைத்து மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம். அப்படியிருக்கும்போது இதனை எப்படி அரசின் கொள்கை என்று சொல்லமுடியுமென கேள்வியெழுப்பினர்.

தமிழகத்தில் எல்லாத் தரப்பினரும் பொங்கலைக் கொண்டாடுகிறார்களா எனக் கேள்வியெழுப்பிய நீதிபதிகள், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு பணம் வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், பணக்காரர்களுக்கும் இந்தப் பணத்தை ஏன் அளிக்கிறீர்கள், இதன் நோக்கம் என்ன என்று கேட்டனர்.

இதனால், வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கு பணம் கொடுப்பதற்குத் தடை விதிப்பதாகவும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டும் பணம் வழங்கலாம் என்றும் உடனடியாக இதனை அமல்படுத்த வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழ்நாட்டில் 1.98 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகள் அனைத்திற்கும் பொங்கல் பரிசு வழங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

https://www.bbc.com/tamil/india-46808007

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.