சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்
nunavilan

புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கை – நாளை நாடாளுமன்றில்

Recommended Posts

புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கை – நாளை நாடாளுமன்றில்

sri-lankan-parliament-300x199.jpgபுதிய அரசியலமைப்பு வரைவுக்கான யோசனைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் அறிக்கை நாளை அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை காலை 10.30 மணியளவில் அரசியலமைப்பு சபையாக கூடவுள்ளது.

புதிய அரசியலமைப்பு வரைவுக்கான யோசனைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதன்போது சபையில் சமர்ப்பிப்பார்.

அரசியல் கட்சிகளின் கருத்துக்களை உள்ளடக்கிய இந்த அறிக்கை மூன்று மொழிகளிலும் இடம்பெற்றிருக்கும்.

சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளிநாடு சென்றுள்ளதால், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில், அரசியலமைப்புச் சபையின் கூட்டம் இடம்பெறும்.

நாளை பிற்பகல் 12.30 மணிவரை அரசியலமைப்பு சபையின் கூட்டம் இடம்பெறும்.

இதன்போது, நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக, கட்சித் தலைவர்கள் தமது கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

பேராசிரியர் சூரி ரத்னபால தலைமையிலான 10 பேர் கொண்ட நிபுணர் குழு இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

பேராசிரியர் ஒஸ்ரின் புள்ளே, பேராசிரியர் நவரத்ன பண்டார, கலாநிதி என்.செல்வக்குமரன், பேராசிரியர் கமீன குணரத்ன, பேராசிரியர் கபில பெரேரா, சுரேன் பெர்னான்டோ, நிரன் அங்கெரெல், அசோக குணவர்த்தன, சமிந்ரி சமரமடு ஆகியோர் இந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

http://www.puthinappalakai.net/2019/01/10/news/35806

Share this post

Link to post
Share on other sites
சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்
5 hours ago, nunavilan said:

பேராசிரியர் ஒஸ்ரின் புள்ளே, பேராசிரியர் நவரத்ன பண்டார, கலாநிதி என்.செல்வக்குமரன், பேராசிரியர் கமீன குணரத்ன, பேராசிரியர் கபில பெரேரா, சுரேன் பெர்னான்டோ, நிரன் அங்கெரெல், அசோக குணவர்த்தன, சமிந்ரி சமரமடு ஆகியோர் இந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இதில உருப்படியான தமிழர் ஒருத்தரையும் காணேல! .செல்வக்குமரன் ஒராள் காணாது!

நிபுணர் குழுவின் அறிக்கை என்டு காலத்தை கடத்த போகினம்.

இதைத் சுமந்திரன் அரசியல் தீர்வு என்டு சொல்லி மக்களை ஏமாற்ற நினைச்சாரோ?

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Rajesh said:

இதில உருப்படியான தமிழர் ஒருத்தரையும் காணேல! .செல்வக்குமரன் ஒராள் காணாது!

நிபுணர் குழுவின் அறிக்கை என்டு காலத்தை கடத்த போகினம்.

இதைத் சுமந்திரன் அரசியல் தீர்வு என்டு சொல்லி மக்களை ஏமாற்ற நினைச்சாரோ?

தடல்புடலாக  ஒரு ஆணைக்குழுவை உருவாக்கி அதில் எல்லோரையும் சாட்சியம் அளிக்க வைத்து  கடைசியில் புஸ்வாணம் ஆனது   நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

Share this post

Link to post
Share on other sites

நாளை கூடுகின்றது அரசமைப்புப் பேரவை

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அரசியலமைப்புச் சபை நாளை காலை 10.00 மணிக்கு பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடவுள்ளது. 

parliment.jpg

இதன்போது புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவில் விவாதிக்கப்பட்ட - தீர்வுக்கான சகல ஆவணங்களும் இரண்டு தொகுதிகளாக அரசமைப்புப் பேரவை உறுப்பினர்களான சகல எம்.பிக்களுக்கும் நாளைய தினம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.virakesari.lk/article/47894

நாளை வேண்டாம் என்றது எதிரணி : நாளை கட்டாயம் கூடும் என திட்டவட்டமாக அறிவித்தார் பிரதி சபாநாயகர் 

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அரசியலமைப்பு  சபையை நாளைய தினம் கூட்டுவதற்கு பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்திய போதிலும் அதனை நிராகரித்த பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரஸ்ரீ, ஏற்கனவே அறிவித்தபடி அரசியலமைப்பு சபை நாளை வெள்ளிக்கிழமை கூடுமென்பதை உறுதிப்படுத்தினார்.

parliment.jpg

பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரஸ்ரீ தலைமையில் கூடியது. இதனையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பின் போது அரசிலமைப்பு சபை நாளை   வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு  கூடுமென பிரதி சபாநாயகர் அறிவித்தார். 

கட்சி தலைவர் கூட்டத்தில் ஏற்படுத்திக்கொண்ட  பொது இணக்கப்பாடு அடிப்படையில் நாளை காலை  அரசியல் அமைப்பு சபை கூடும் என குறிப்பிட்டார். 

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்ச்சி உறுப்பினர் விமல் வீரவன்ச எம்.பி:- அரசியல் அமைப்பு சபை கூடுவது என்றால் மூன்று நாட்களுக்கு முன்னர் அறிவிக்க வேண்டும். 

ஆனால் மூன்று நாட்களுக்கு முன்னர் அறிவிக்காது இன்று  கூறுகின்றீர்கள் நாளை அரசியல் அமைப்பு சபை கூடுமென. ஆகவே இது பாராளுமன்ற நிலையியல் கட்டளைக்கு முற்றிலும் முரணான ஒன்றாகும் எனவே இன்று கூறி நாளை  அரசியலமைப்பு சபையை கூடட முடியாது என்றார்.

இதற்கு பதிலளித்த பிரதி சபாநாயகர்,நேற்று  கூடிய கட்சி தலைவர் கூட்டத்தின் பொது இணக்கப்பாடு அடிப்படையில் நாளை  அரசியல் அமைப்பு சபை கூடும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனையே நான் கூறுகிறேன் என்றார். 

http://www.virakesari.lk/article/47887

Share this post

Link to post
Share on other sites

9 hours ago, nunavilan said:

புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழு அறிக்கை – நாளை நாடாளுமன்றில்

பேராசிரியர் ஒஸ்ரின் புள்ளே, பேராசிரியர் நவரத்ன பண்டார, கலாநிதி என்.செல்வக்குமரன், பேராசிரியர் கமீன குணரத்ன, பேராசிரியர் கபில பெரேரா, சுரேன் பெர்னான்டோ, நிரன் அங்கெரெல், அசோக குணவர்த்தன, சமிந்ரி சமரமடு ஆகியோர் இந்த நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

பிள்ளைக்கு நிலாவைக் காட்டி சோறுட்டுவதுபோல் தமிழருக்கு இந்த தமிழ் நிபுணரைக் காட்டி சிங்களம் தனக்குச் சார்பான புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்ளும்.  

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 1/10/2019 at 9:10 PM, nunavilan said:

தடல்புடலாக  ஒரு ஆணைக்குழுவை உருவாக்கி அதில் எல்லோரையும் சாட்சியம் அளிக்க வைத்து  கடைசியில் புஸ்வாணம் ஆனது   நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

அதே கதி தான் இதுக்கும்!
வாலறுந்த நரிக் கதை மாதிரி.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 1/10/2019 at 4:52 PM, Paanch said:

பிள்ளைக்கு நிலாவைக் காட்டி சோறுட்டுவதுபோல் தமிழருக்கு இந்த தமிழ் நிபுணரைக் காட்டி சிங்களம் தனக்குச் சார்பான புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்ளும்.  

தமிழ் நிபுணர்கள் ஒருபோதும், இலங்கை அரசின் புதிய அரசிலமைப்பை உதாசீனம் செய்யமாட்டார்கள்.

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, thulasie said:

தமிழ் நிபுணர்கள் ஒருபோதும், இலங்கை அரசின் புதிய அரசிலமைப்பை உதாசீனம் செய்யமாட்டார்கள்.

ஒரு தாய், தான் பெற்றெடுத்த அனைத்துக் குழந்தைகளிடமும், எந்த வேறுபாடுமின்றி அன்பைப் பொழிந்து வாழவைப்பாள். தன்துன்பம் நோக்கமாட்டாள்.

தமிழ் நிபுணர்களையும் தாய்க்கு ஒப்பிடலாம்போல் தெரிகிறது! அவர்களின் தாய் தமிழல்லவா. 

தமிழ்! மொழிகளுக்கெல்லாம் தாய்.!! 

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, Paanch said:

ஒரு தாய், தான் பெற்றெடுத்த அனைத்துக் குழந்தைகளிடமும், எந்த வேறுபாடுமின்றி அன்பைப் பொழிந்து வாழவைப்பாள். தன்துன்பம் நோக்கமாட்டாள்.

தமிழ் நிபுணர்களையும் தாய்க்கு ஒப்பிடலாம்போல் தெரிகிறது! அவர்களின் தாய் தமிழல்லவா. 

தமிழ்! மொழிகளுக்கெல்லாம் தாய்.!! 

தமிழ் நிபுணர்களின் தாய் தமிழ்.

தமிழ் நிபுணர்களின் தாய் நாடு, சிங்கள இலங்கை.

சிங்கள இலங்கையின் புதிய அரசியலமைப்பை, தமிழ் நிபுணர்களின் தாய் மனங்கள் ஒருபோதும் நிராகரிக்காது.

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, thulasie said:

தமிழ் நிபுணர்களின் தாய் தமிழ்.

தமிழ் நிபுணர்களின் தாய் நாடு, சிங்கள இலங்கை.

சிங்கள இலங்கையின் புதிய அரசியலமைப்பை, தமிழ் நிபுணர்களின் தாய் மனங்கள் ஒருபோதும் நிராகரிக்காது.

இலங்கைத் தமிழர்களின் தாய்நாடு இலங்கைதான். பெரும்பான்மை என்ற பொறிக்குள் சிக்கி தமிழர்கள் உரிமையின்றி இருப்பதால் தமிழர்களின் தாய்நாடு சிறீ லங்கா என்று ஆகிவிடாது. 

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, Paanch said:

இலங்கைத் தமிழர்களின் தாய்நாடு இலங்கைதான். பெரும்பான்மை என்ற பொறிக்குள் சிக்கி தமிழர்கள் உரிமையின்றி இருப்பதால் தமிழர்களின் தாய்நாடு சிறீ லங்கா என்று ஆகிவிடாது. 

அதனால்தான்,   தற்போது, 'ஒருமித்த நாடு' என்று சொல்லுகிறார்கள்.

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, thulasie said:

அதனால்தான்,   தற்போது, 'ஒருமித்த நாடு' என்று சொல்லுகிறார்கள்.

எங்களின்ற சுத்துமாத்து கொம்பனியும் சொல்லுது ஒரு நாடு  தான் என்று :grin:

Share this post

Link to post
Share on other sites
Just now, தனிக்காட்டு ராஜா said:

எங்களின்ற சுத்துமாத்து கொம்பனியும் சொல்லுது ஒரு நாடு  தான் என்று :grin:

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், அவர்தான் இப்போதைக்கு தமிழர்களின் தலைவிதியை நிர்ணயிப்பவர்.

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, thulasie said:

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், அவர்தான் இப்போதைக்கு தமிழர்களின் தலைவிதியை நிர்ணயிப்பவர்.

கொஞ்சம் பொறுங்கோ தலையை அறுக்கிறன் வலியை பொறுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுவதைப்போல என்ன அப்படித்தானே :27_sunglasses:

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, thulasie said:

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், அவர்தான் இப்போதைக்கு தமிழர்களின் தலைவிதியை நிர்ணயிப்பவர்.

இதுவும் கடந்துபோகும். மாற்றம் ஒன்றே மாறாதது. :rolleyes:

Share this post

Link to post
Share on other sites
13 minutes ago, Paanch said:

இதுவும் கடந்துபோகும். மாற்றம் ஒன்றே மாறாதது. :rolleyes: 

மாற்றமும் நிலைப்பதில்லை.

அதுவும் கடந்து போகும்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

சில புதுப்பித்தல்களுக்காக இன்று ஐரோப்பிய நேரம் 21:00 ல் இருந்து சுமார் அரை மணிநேரத்திற்கு யாழ் தளத்தில் தடங்கல் ஏற்படும்