Sign in to follow this  
பிழம்பு

பிள்­ளை­யா­னு­டன் இணைந்தே பர­ரா­ஜ­சிங்­கத்தை கொன்­றோம்

Recommended Posts

தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தை பிள்­ளை­யான் உள்­ளிட்ட 6 பேர் இணைந்தே படு­கொலை செய்­தோம் என முத­லா­வது மற்­றும் இரண்­டா­வது எதி­ரி­கள் வழங்­கிய குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்தை மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்­றம் நேற்று ஏற்­றுக் கொண்­டது.

வழக்­கின் எதி­ரி­க­ளில் ஒரு­வ­ரான பிள்­ளை­யான் (சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்­தன்) ஜோசெப் பர­ரா­ஜ­சிங்­கம் கொலை­யு­டன் தொடர்­பு­டை­ய­வர் என்று எதி­ரி­க­ளின் குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தில் குறிப்­பிட்­டுள்­ள­னர். அத்­து­டன், பிள்­ளை­யான் உள்­ளிட்ட 6 எதி­ரி­க­ளுக்­கும் எதி­ரான வழக்கை மேற்­கொண்டு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­துக்கு அனு­ம­தி­ய­ளித்த மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி எம்.வை.எம்.இஸர்­தீன், வழக்கை பெப்­ர­வரி 21, 22ஆம் திக­தி­க­ளுக்கு ஒத்­தி­வைத்­தார்.
முன்­னாள் கிழக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரான பிர­தீப் மாஸ்­டர் என அழைக்­கப்­ப­டும் எட்­வின் சில்வா கிருஸ்­ணா­னந்­த­ராஜா, கஜன் மாமா என அழைக்­கப்­ப­டும் ரெங்­க­சாமி கன­க­நா­ய­கம், பிள்­ளை­யான் என அழைக்­கப்­ப­டும் சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்­தன், இரா­ணுவ புல­னாய்­வில் பணி­யாற்­றிய மீரா­லெப்பை கலீல் உள்­ளிட்ட ஆறு பேர் மீது 11 குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்­கப்­பட்டு வழக்கு முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. இந்த வழக்கு மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி எம்.வை.எம்.இஸர்­தீன் முன்­னி­லை­யில் நேற்­றுப் புதன்­கி­ழமை விசா­ர­ணைக்கு வந்­தது.

எதி­ரி­கள் ஆறு பேரும் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். முத­லா­வது மற்­றும் இரண்­டா­வது எதி­ரி­க­ளால் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ருக்கு வழங்­கப்­பட்ட குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தில், பிள்­ளை­யான் உள்­ளிட்ட ஏனைய நால்­வ­ரு­டன் இணைந்தே நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோசெப் பர­ரா­ஜ­சிங்­கத்தை கொலை செய்­தோம் என்று தெரி­வித்­துள்­ள­னர். அந்­தக் குற்ற ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம் எதி­ரி­க­ளால் சுய­மாக வழங்­கப்­பட்­டது என ஏற்­றுக்­கொண்ட மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்­றம், 6 எதி­ரி­க­ளுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் மேல­திக விளக்­கத்தை முன்­னெ­டுக்­கு­மாறு வழக்­குத் தொடு­ன­ரான சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­துக்கு பணித்­தது.

வழக்­குத் தொடு­னர் சார்­பில், மூத்த அரச தரப்பு சட்­டத்­த­ரணி மாதவ தென்­னக்­கோன், அரச சட்­டத்­த­ரணி நாக­ரட்­ணம் நிசாந்த் ஆகி­யோர் முன்­னி­லை­யா­கி­னர். எதி­ரி­கள் 6 பேர் சார்­பி­லும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அணில் சில்வா முன்­னி­லை­யா­னார்.

மட்­டக்­க­ளப்பு புனித மரி­யாள் பேரா­ல­யத்­தில் 2005ஆம் ஆண்டு நத்­தார் தின நள்­ளி­ரவு ஆரா­த­னை­யின்­போது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோசெப் பர­ரா­ஜ­சிங்­கம் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் 2015ஆம் ஆண்டு கிழக்கு மாகாண முன்­னாள் முத­ல­மைச்­ச­ரும் தமிழ் மக்­கள் விடு­த­லைப்­பு­லி­கள் கட்­சி­யின் தலை­வ­ரு­மான சிவ­நே­சத்­துரை சந்­தி­ர­காந்­தன் மற்­றும் முன்­னாள் கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் பிர­தீப் மாஸ்­டர் என்­ற­ழைக்­கப்­ப­டும் எட்­வின் சில்வா கிருஸ்­ணா­னந்­த­ராஜா உள்­பட 6 பேர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

https://newuthayan.com/story/10/பிள்­ளை­யா­னு­டன்-இணைந்தே-பர­ரா­ஜ­சிங்­கத்தை-கொன்­றோம்.html

Share this post


Link to post
Share on other sites

இந்த இடத்தில் ரதியை காணவில்லை.......

Share this post


Link to post
Share on other sites
24 minutes ago, MEERA said:

இந்த இடத்தில் ரதியை காணவில்லை.......

தீர்ப்பு கொடுத்திருக்க வேண்டும் ஆனால் தள்ளிப்போடப்பட்டது அரசியல் விளையாட்டு அந்த இடத்தில் பிள்ளையானும் இருக்க வில்லை ஆனால்   சுட்டுக்கொன்றவர் யார் என்பது இப்பவரைக்கும் மர்மமே சாட்சிகளும் விசாரணையில் அடித்து துன்புறுத்தியதால்தான் சொன்னதாக சொன்னார்கள் ஆனால் எங்கோ பிள்ளையான் விடுதலையாகினால் கிழக்கில் அவர் கட்சி வளர்ந்துவிடும் என்ற எண்ணத்தில் மறைந்து சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள் 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this