Jump to content

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு


Recommended Posts

கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

_18313_1547114638_6E870425-F982-411D-9175-6A803224AEAD.jpeg

_18313_1547114638_D00EC60B-F226-48BD-BED3-6C0D2734FB3D.jpeg

_18313_1547114638_A94F6BB5-4F02-4987-8488-A02F9BFC4B34.jpeg

_18313_1547114638_381DA437-D721-4977-BABC-E1A21CF71C9C.jpeg

http://battinaatham.net/description.php?art=18313

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் பலம் இல்லாததன் வெளிப்பாடு இந்த ஹர்த்தால்  இதை வைத்தவன் இதில் லாபம் பார்க்கிறவனாத்தான்  இருப்பான்  நாளைக்கு கடை அடைத்தால் தினம் கூலிக்கு சந்திகளில் வேலைகேட்டு நிற்கும் நம்ம தமிழர்களின் நிலை என்ற கண்ணில் தெரிகிறது காத்தான்குடி , கல்முனை , மருதமுனை , அட்டாளைச்சேனைகளில் .

எப்போது வாக்குசீட்டை சாராயத்தும் , காசுக்கும் அடகு வைத்தானுகளோ அன்றிலிருந்து ஆரம்பமாகிவிட்டது  போங்கடா போய் உங்களை திருத்துங்கள் முதலில் 

Link to comment
Share on other sites

உண்மை! 

... எமக்குள்ள அரசியல் பலம் எல்லோருக்கும் தெரியும்! எம் அரசியல் தலைவர்கள் என்ன செய்வார்கள் என்பதும் எமக்கல்ல, முஸ்லீங்களுக்கும் தெரியும்! 

.... அதற்கு மேல் புலம்பெயர் தமிழர்கள் நாம்... செய்தி இணையத்தளங்களிலும், சமூகவலைத்தளங்களிலும்  ... எம் வீரங்களை காட்டுவோம்!

... விடுங்கள், அங்குள்ள மக்கள் தம் எதிர்ப்பை காண்பிப்பதற்கு ... 

 

https://www.youtube.com/watch?v=BvlSIOAkQ-w&feature=youtu.be

Link to comment
Share on other sites

ஹர்த்தால் போன்றவை முடிந்தளவு தவிர்க்கப்பட வேண்டும்!

ஆனால் இங்கு மிகமிக மோசமான சமூக விரோதியும் மிகமிக மோசமான மதவெறியருமான ஒராள் ஆளுநராக தமிழினப் படுகொலைகார சிங்கள-பௌத்த அரசினால் நியமிக்கப்பட்டுள்ளதை மக்கள் எதிர்ப்பதை, எதிர்ப்பதன் அவசியத்தை விளங்கிக்கொள்வதில் சிரமமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் மக்களின் உறுப்பினர்களாக தானே சேர்ந்துதானே, ரணிலுக்கு ஆதரவு கொடுத்தீர்கள்.

இப்ப, மைத்திரி, மகிந்த வைக்கிற ஆப்பினை பார்த்தீர்களா?

இதுதான் இனவாத சிங்களத்தின் சதி.

அடிபடுங்கோ..... நன்னா அடிபடுங்கோ. 

காதிலை  பஞ்சை வைத்து தூக்கம் போடுவார்கள், மைத்திரி தரப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் ஹர்த்தால் : தனியார் கடைகள் பூட்டு

மட்டக்களப்பில் கிழக்கு மக்கள் ஒன்றியம் எனும் பெயரில் துண்டுப் பிரசுரம் மூலம் ஹர்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மட்டக்களப்பு நகரில் பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டிருந்ததுடன் அரச, தனியார் போக்குவரத்து சேவை வழமைபோன்று நடைபெற்றதனை காணமுடிந்தது.

இதேவேளை மட்டக்களப்பு சந்தை, வைத்தியசாலைகள் வழமைபோன்று இயங்கியதுடன் மக்கள் மிகக் குறைவாகவே அவ்விடங்களில் காணப்பட்டனர்.

மற்றும் இங்குள்ள பாடசாலைக்கு ஒர்சில மாணவர்கள் மாத்திரம் சென்றதுடன் அவர்களும் பின்னர் வீடு திரும்பிவிட்டதனை காணமுடிந்தது.

இன்றையதினம் காலை மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்கள் சில முற்பகல் 10.30மணிக்குப் பின்னர் திறந்து, தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கெண்டதனை காணமுடிந்தது.

கிழக்கு மாகாண ஆளுனராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்  நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜனாதிபதியின் கவனததிற்கு கொண்டுசெல்லும் முகமாக கிழக்கு மக்கள் ஒன்றியம் எனும் அமைப்பினர் மேற்படி கடையடைப்பு, ஹர்தாலுக்கு அமைப்பு விடுத்திருந்தனர்.

http://www.virakesari.lk/article/47915

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள்.
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?     
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
    • வடை போய் தங்கம் வந்தது  டும் டும் டும்☺️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.