Jump to content

இராசதுறை ஜெகன் – நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டன….

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இராசதுறை ஜெகன் – நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டன….

January 10, 2019

LTTE-NEW.png?resize=800%2C480

பாதுகாப்புப் படையின் 37 பேரை ஏவுகணை செலுத்தி கொலை செய்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தால் 185 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோதே பிரதிவாதிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுறை ஜெகன் மற்றும் நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கே சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

185 வருட கடூழிய சிறைத்தண்டனையை ஒரே தடவையில் 5 வருடங்கள் கழிக்கும் வகையில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பலாலி விமான நிலையத்திலிருந்து இரத்மலானை நோக்கி பயணித்த அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தி தாக்கியதுடன், அதில் பயணித்த பாதுகாப்பு படையின் 37 பேர் கொல்லப்பட்டனர். இவை உள்ளிட்ட 37 குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டிருந்தன. கடந்த இரண்டாயிரமாம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/2019/109546/

Link to comment
Share on other sites

35 minutes ago, கிருபன் said:

185 வருட கடூழிய சிறைத்தண்டனையை ஒரே தடவையில் 5 வருடங்கள் கழிக்கும் வகையில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதன் அர்த்தம் இவர்கள் 5 வருடங்களில் விடுவிக்கப்படுவர் என்பதா? அவ்வாறெனில் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

இதன் அர்த்தம் இவர்கள் 5 வருடங்களில் விடுவிக்கப்படுவர் என்பதா? அவ்வாறெனில் சந்தோசம்.

இந்த மொழிபெயர்ப்புகளை எல்லாம் நம்பாதீங்கோ தல ...

யாரோ ஒருவர் தனது அமைச்சு விபரங்களை ஆராய (அமைச்சர்) சந்திரிகா முல்லைத்தீவு வந்தார் என்று சொன்னாரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து வருடத்திற்கு மேல் தண்டனை இருக்காது. ஆனால் 2012 இல் கைது செய்யப்பட்டமையால் ஐந்து வருடங்கள் தாண்டியிருக்குமே. அதனால் இப்போதே வெளியில் விட்டால் என்ன?🤔

The Attorney General had indicted the two suspects each separately on 37 counts and the suspects pled guilty to all 37 charges today.

The Judge ordered five years of rigorous imprisonment for each count, a total of 185 years for each suspect to be served in five years. 

The two LTTE suspects arrested in 2012 in Kilinochchi had revealed that the rebels had fired missiles towards the aircraft from Wilpattu jungles. The Police had recovered parts of the missiles used in the attack.

http://www.colombopage.com/archive_19A/Jan10_1547138342CH.php

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருவருக்கு 185 வருட கடூழியச் சிறை

Editorial / 2019 ஜனவரி 11 வெள்ளிக்கிழமை, மு.ப. 09:23

பாதுகாப்புத் தரப்பினர் பயணித்த அன்டனோவ் 32 ரக பயணிகள் விமானம் மீது, ஏவுகணைத் தாக்குதல் நடத்தி, அதில் பயணித்த 32 படையினரைக் கொலை செய்தார்கள் என்ற குற்றத்துக்காக, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஏவுகணைப் பிரிவு முக்கியஸ்தர்கள் இருவருக்கு, ஐந்து வருடங்கள் அனுபவிக்கும் வகையில், 185 வருடகால கடூழியச் சிறைத் தண்டனை விதித்து, அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஹேஸ் வீரமன், நேற்று (10) தீர்ப்பு வழங்கினார்.   

கடந்த 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற இந்தத் தாக்குதலானது, பலாலி விமான நிலையத்திலிருந்து இரத்மலானையிலுள்ள விமானப் படைக்குச் சொந்தமான விமான நிலையத்தை நோக்கி, படையினரை ஏற்றிக்கொண்டுப் பயணித்த விமானம் மீதே, வில்பத்து சரணாலயப் பகுதியில் வைத்து, இந்த ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.   

இது தொடர்பில், மேற்படி இருவரும், கடந்த 2010ஆம் ஆண்டில், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்டெல்லா ரக ஏவுகணைத் தாக்கி மற்றும் அதற்குப் பொருத்தப்படும் ஸ்டெல்லா ரக ஏவுகணைகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், மேற்படி இருவரும், தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நேற்றைய தினம், தீர்ப்பு வழங்கப்பட்டது.   

மேற்படி குற்றவாளிகள் இருவரும், சுமார் 8 வருடகாலம், தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் காலப்பகுதியையும் கருத்திற்கொண்டே, அவர்கள் இருவருக்கும், ஐந்து வருடங்கள் மாத்திரமே அனுபவிக்கக்கூடிய வகையில், 185 வருடகால கடூழியச் சிறைத் தண்டனையை விதிப்பதாக, நீதிபதி தீர்ப்பளித்தார்.    

http://www.tamilmirror.lk/செய்திகள்/புலிகள்-இருவருக்கு-185-வருட-கடூழியச்-சிறை/175-227848

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு 185வருடங்களை 37 உயிர்கள் ஆல் வகுத்தால் 5 வருடங்கள். ஆகவே 185 வருடங்கலுக்குறிய‌ கடுமையான உழியங்களை 5 வருடத்தில் செய்து முடித்து விட்டு வராலாமா?

ஆனாலும் ஒரு உயிர்க்கு 5 வருடமா?

Link to comment
Share on other sites

8 hours ago, colomban said:

இங்கு 185வருடங்களை 37 உயிர்கள் ஆல் வகுத்தால் 5 வருடங்கள். ஆகவே 185 வருடங்கலுக்குறிய‌ கடுமையான உழியங்களை 5 வருடத்தில் செய்து முடித்து விட்டு வராலாமா?

ஆனாலும் ஒரு உயிர்க்கு 5 வருடமா?

Quote

அதில் பயணித்த பாதுகாப்பு படையின் 37 பேர் கொல்லப்பட்டனர். 

பாதுகாப்பு படையினர் எத்தனை கிளஸ்ரர் குண்டுகளை போட்டு எத்தனை தமிழ் மக்களை கொன்றார்கள் என்ற கணக்கும் உள்ளதே. அதற்கென்ன பதில் உங்களிடமுண்டு??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, colomban said:

இங்கு 185வருடங்களை 37 உயிர்கள் ஆல் வகுத்தால் 5 வருடங்கள். ஆகவே 185 வருடங்கலுக்குறிய‌ கடுமையான உழியங்களை 5 வருடத்தில் செய்து முடித்து விட்டு வராலாமா?

ஆனாலும் ஒரு உயிர்க்கு 5 வருடமா?

1 hour ago, nunavilan said:

பாதுகாப்பு படையினர் எத்தனை கிளஸ்ரர் குண்டுகளை போட்டு எத்தனை தமிழ் மக்களை கொன்றார்கள் என்ற கணக்கும் உள்ளதே. அதற்கென்ன பதில் உங்களிடமுண்டு??

கொழும்பான்...  கேட் ட  கேள்விக்கு,  நுணாவிலானிடமிருந்து... வந்த பதில் அருமை.
அவருக்கு... இராணுவத்திடமிருந்த  அக்கறையை... 
அப்பாவி தமிழ் மக்கள் மீது, காட்டத்  தோன்றவில்லை, என்பது கவலையான விடயம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

கொழும்பான்...  கேட் ட  கேள்விக்கு,  நுணாவிலானிடமிருந்து... வந்த பதில் அருமை.
அவருக்கு... இராணுவத்திடமிருந்த  அக்கறையை... 
அப்பாவி தமிழ் மக்கள் மீது, காட்டத்  தோன்றவில்லை, என்பது கவலையான விடயம்.  

தமிழர்களை இந்த நாட்டு பிரஜையாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லையே அப்படீருக்க எப்படி கவலை வரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

தமிழர்களை இந்த நாட்டு பிரஜையாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லையே அப்படீருக்க எப்படி கவலை வரும் 

தமிழர்களை.... சிங்கள நாட்டு பிரஜைகளாக   என்றுமே..   ஏற்றுக் கொள்ள மாட் டார்கள்,
என்று தெரிந்துதானே...  பல வடிவ, போராட்டங்களை  தமிழர்கள் நடத்தினார்கள்.
அது கூட... அவருக்கு,  மறந்து விட்டதா?  

இராணுவம்  செத்தது என்றது தான்... பலருக்கு, இப்ப கவலையாக இருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இருவரும் இராணுவம் பயணித்த விமானத்தைச் சுட்டது உண்மையானால் அது யுத்த காலத்தில் நடந்தது என்று புனர்வாழ்வோடு விடுதலை செய்திருக்கவேண்டும்.

சரணடைந்தவர்களை படுகொலை செய்த சிங்கள இராணுவத்தினரும், உத்தரவு கொடுத்தவர்களும்  தேசியவீரர்களாக இருக்கும் நாட்டில் ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க தமிழ் அரசியல்தலைமைகள் உதவாமல் இருப்பதும் இழிவானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

பாதுகாப்பு படையினர் எத்தனை கிளஸ்ரர் குண்டுகளை போட்டு எத்தனை தமிழ் மக்களை கொன்றார்கள் என்ற கணக்கும் உள்ளதே. அதற்கென்ன பதில் உங்களிடமுண்டு??

நான் ஒர் உதாரணத்துக்கு எழுதியதை தூக்கிப்பிடித்து கொண்டு இரணுவத்திற்கு இறந்ததிற்கு கவலப்ப்டுகின்றேன் என எழுதியுள்ளீர்கள்.

இருபக்க அடிபாடுகளில் இறந்த்து அப்பாவி மக்களே அதை முதலில் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். 

Link to comment
Share on other sites

மேற்கூறிய தாக்குதலில் இறந்தவர்கள்  விமானப்படையினர் மட்டுமே. விமானப்படையின் தாக்குதலில் இறந்தவர்கள் மக்கள் மட்டுமே. தூக்கிப்பிடிக்க என்ன உள்ளது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2019 at 9:32 PM, கிருபன் said:

இராசதுறை ஜெகன் – நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டன….

12 hours ago, colomban said:

இங்கு 185வருடங்களை 37 உயிர்கள் ஆல் வகுத்தால் 5 வருடங்கள். ஆகவே 185 வருடங்கலுக்குறிய‌ கடுமையான உழியங்களை 5 வருடத்தில் செய்து முடித்து விட்டு வராலாமா?

ஆனாலும் ஒரு உயிர்க்கு 5 வருடமா?

21 minutes ago, colomban said:

நான் ஒர் உதாரணத்துக்கு எழுதியதை தூக்கிப்பிடித்து கொண்டு இரணுவத்திற்கு இறந்ததிற்கு கவலப்ப்டுகின்றேன் என எழுதியுள்ளீர்கள்.

இருபக்க அடிபாடுகளில் இறந்த்து அப்பாவி மக்களே அதை முதலில் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். 

கொழும்பான்.... தயவு செய்து  மீண்டும் ஒரு முறை தலைப்பு செய்தியை... பார்த்து விட்டு,
நீங்கள் எழுதிய கருத்தை... வாசித்துப் பாருங்கள்.
அதனை... வாசிக்கும், எல்லோருக்கும்... நீங்கள் இராணுவத்துக்கு, வக்காலத்து... வாங்கும் தொனியே... மேலோங்கி நிற்பதை உணர்வீர்கள்.

நீங்கள்... சொல்ல வந்த விடயத்தை, உங்கள் எழுத்தில்... கொண்டு வர முடியவில்லை என்று நினைக்கின்றேன்.

ஏனென்றால்....  உங்கள் இரண்டாவது பதிவிலும்,
//இருபக்க அடிபாடுகளில் இறந்தது அப்பாவி மக்களே//.....    என்று நீங்கள்  எழுதும் போது....
ஈழ விடுதலைப்  போரில்....  அதிகம்  கொல்லப் பட்ட அப்பாவி மக்கள், யார் என்பதை... உங்கள் எழுத்தில் வாசிக்க, ஆவலாக உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருபக்க அடிபாடுகள் என்று தமிழ்-முஸ்லிம் அடிபாடுகளை கொழும்பான் குறிப்பிடுகின்றார் போலுள்ளது. இடையில் விமானத்தில் பயணித்த அப்பாவி படையினர் கொல்லப்பட்டுள்ளதால் விமானத்தைச் சுட்டுவிழுத்திய இருவரும் தலா 185 வருடங்கள் சிறையிலடைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று சொல்லவந்தாரோ தெரியவில்லை🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கொழும்பான் இறந்த விமானப்படை வீரர்கள் மேல் கவலைப்பட்டு எழுதியதாகத் தெரியவில்லை. மாறாக, 185 வருடங்களை இறந்த 37 படையினரால் பிரித்து 5 ஆண்டுகளா என்று கேட்டதாகவே படுகிறது. அநியாயத்திற்கு கொழும்பானைச்  சாட வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ragunathan said:

எனக்கு கொழும்பான் இறந்த விமானப்படை வீரர்கள் மேல் கவலைப்பட்டு எழுதியதாகத் தெரியவில்லை. மாறாக, 185 வருடங்களை இறந்த 37 படையினரால் பிரித்து 5 ஆண்டுகளா என்று கேட்டதாகவே படுகிறது. அநியாயத்திற்கு கொழும்பானைச்  சாட வேண்டாம்.

நன்றி கடவுளே....  நன்றி..இதைத்தானே சொல்லவந்தேன்.
கையெடுத்து கும்புடுகிறேன் நீங்களாவது என்னை புரிந்து கொண்டதற்கு. ஆங்கிலத்தில் each count என்று இருக்கு.  எனவே இது 5ஆ அல்லது 185 ஆ என தெளிவுவாகவே விளங்கிகொள்ளவே இப்படி எழுதினேன்.

தானே எதோ நினத்து சிங்கள ஆமிக்கு கவலப்படுகின்றேன் என கேட்கின்றீர்கள்?. 

10 hours ago, கிருபன் said:

விமானத்தைச் சுட்டுவிழுத்திய இருவரும் தலா 185 வருடங்கள் சிறையிலடைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று சொல்லவந்தாரோ தெரியவில்லை🤔

இதைத்தானே சொல்லவந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, colomban said:

நன்றி கடவுளே....  நன்றி..இதைத்தானே சொல்லவந்தேன்.
கையெடுத்து கும்புடுகிறேன் நீங்களாவது என்னை புரிந்து கொண்டதற்கு. ஆங்கிலத்தில் each count என்று இருக்கு.  எனவே இது 5ஆ அல்லது 185 ஆ என தெளிவுவாகவே விளங்கிகொள்ளவே இப்படி எழுதினேன்.

தானே எதோ நினத்து சிங்கள ஆமிக்கு கவலப்படுகின்றேன் என கேட்கின்றீர்கள்?. 

185 வருடம் சிறைத்தண்டனை கொடுப்பது சரியென்று நினைத்தால் இராணுவத்திற்காக கவலைப்படுவதாகத்தானே அர்த்தம்.

யுத்தம் முடிந்து 10 வருடங்கள் ஆகிவிட்டமையால் அவர்கள் ஏற்கனவே சிறையிருந்த காலத்தைக் கணக்கில் வைத்து உடனடியாக விடுதலை செய்யப்பட்டிருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நடந்தது யுத்தத்தில்.

அந்த தனி நபர்கள் திட்டமிட்டது அல்ல.

சொறி சிங்களத்தின் வழமையான அநீதி.

Link to comment
Share on other sites

இவர்களை மனிதாபிமான அடிப்படையில், வெளியில் விடுவதுதான் நல்லது.

இவர்களைவிட, கருணா இலங்கை இராணுவத்திற்கு மோசமான உயிர் அழிவுகளை ஏற்படுத்தினார்.

கருணா எல்லாம் உல்லாசமாகத் திரிய, இவர்கள் மட்டும் உள்ளே சிறைவாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

கர்ணாவும் அரசாங்கத்தின் காய்தான் நேரம் கிடைக்கும் போது உள்ளே வைத்திடும்  

22 hours ago, தமிழ் சிறி said:

இராணுவம்  செத்தது என்றது தான்... பலருக்கு, இப்ப கவலையாக இருக்கு. 

ம்ம் என்ன செய்வது இன்னும் நாள் ம்ம்ம் இல்லை இனி புலிகள் குற்றவாளிகள் என்று குற்றம் சொல்ல வெளிக்கிட்டார்கள் 

Link to comment
Share on other sites

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம் என்ன செய்வது இன்னும் நாள் ம்ம்ம் இல்லை இனி புலிகள் குற்றவாளிகள் என்று குற்றம் சொல்ல வெளிக்கிட்டார்கள் 

இராணுவம் மட்டுமல்ல, புலிகளும் குற்றவாளிகள் என்று ஐ.நாவே சொல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, thulasie said:

இராணுவம் மட்டுமல்ல, புலிகளும் குற்றவாளிகள் என்று ஐ.நாவே சொல்கிறது.

சுமந்திரனும் மாவை அப்பும் சொல்கிறார்கள் குற்றம் புலிகள் குற்ற வாளிகள் என

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சுமந்திரனும் மாவை அப்பும் சொல்கிறார்கள் குற்றம் புலிகள் குற்ற வாளிகள் என

சுமந்திரன் சொன்னால், ஐ.நா சொன்னது போலத்தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.