Sign in to follow this  
poet

பாராட்டுகள் சுமந்திரன். - வ.ஐ.ச.ஜெயபாலன்

Recommended Posts

WELL DONE SUMANTHIRAN 
பாராட்டுகள் சுமந்திரன்.

- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
குற்றம் செய்த தரப்பு விசாரிக்கமுடியாது சர்வதேச விசாரணை அவசியமென 
சுமந்திரன் 10.1.2019 அன்று நாடாளுமன்ற உரையை ராஜதந்திர அவசியங்களை உணந்து வரவேற்கிறேன்.
.
இன்று இலங்கை அரசின்மீது அழுத்தங்களை உருவாக்கி தாயக தமிழ்பேசும் மக்களைக் பாதுகாக்க மேற்குலகையும் இந்தியாவையும் அனுசரித்து கருமமாற்றுவதைத்தவிர வேறு மார்கங்கள் இல்லாத நிலைமை உள்ளது. இந்தவகையில் சுமந்திரனின் 10.1.2019 நாடாளுமன்றப் பேச்சு விமர்சனங்களுடன் இராஜதந்திர அடிப்படையில் வரவேற்கப்பட வேண்டியதாகும். 
.
இலங்கையில் நிகழ்ந்த மனுக்குலத்துக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணையும், போர்குற்றங்கள் தொடர்பான விசாரணையும் செர்பிய போர்குற்ற விசாரணை மற்றும் தென்னாபிரிக்க உண்மை அறியும் ஆணைக்குழுவினது செயல்பாடுகளின் அனுபவங்களின் ஒளியில் முனெடுத்துச் செல்லபடவேண்டியவையாகும். 
.
குற்றம் செய்த தரப்பு விசாரிக்கமுடியாது சர்வதேச விசாரணை அவசியமென போதிய ஆதாரங்களோடு சுமந்திரன் வலியுறுத்திப் பேசியது ராஜதந்திர நெழிவு சுழிவுகளுடன் வரலாற்று முக்கியத்துவமுள்ள பேச்சாகும். 

.

இன்று பாரம்பரியத் தாய்மண்ணில் வாழும் மக்களின் சமூக பொருளாதார அரசியல் உரிமைகள் தொடர்பாக மேற்குலகினதும் இந்தியாவதும் அழுத்தங்களை உச்சப்படுத்த வேண்டிய அவசரக் கடமை தமிழர் கூட்டமைப்புக்கு உள்ளது. அதற்கான இராஜதந்திர நகர்வுகளை தமிழ் மக்கள் புரிந்துகொள்ளுவது அவசியம். இந்த பின்னணியிலேயே சுமந்திரனது பேச்சை நான் புரிந்துகொள்கிறேன்.
.
எனது ஆலோசனை சொற்பிரயோகம் பற்றியது மட்டுமே. இறுதி யுத்தத்தை மேற்குலகம் இனக்கொலையெனஏற்றுக்கொள்ளாவிட்டாலும் மனுக்குலத்துக்கு எதிரான குற்றச் செயல் என்பதை மறுக்கவில்லை. மேற்குலகு புலிகள் மீது போர்குற்றம் தொடர்பாக குற்றம் சாட்டியுள்ளது. இராஜதந்திர ரீதியாக படைகள் புலிகள் மீதான குற்றச்சாட்டை சமன்படுத்தாமல் வேறுபடுத்துவதற்க்கு மனுக்குலத்துக்கு எதிரான குற்றச்செயல் போர்குற்றங்கள் போன்ற சொற்களை தெரிந்து பயன்படுத்துவது அவசியம் என சுமந்திரனிடம் கேட்டுக்கொள்கிறேன். அவருடைய பேச்சு இராஜததிர ரீதியாக இன்றைய நிலையில் விமர்சனங்களுடன் வரவேற்க்க வேண்டியது பாராட்டுகள் சுமந்திரன்

Edited by poet

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this