Sign in to follow this  
விசுகு

காலத்தின் தேவை கருதி France வாழ் புங்குடுதீவு மக்களுக்கு France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் விடுத்த அழைப்பு

Recommended Posts

அன்பான France வாழ் புங்குடுதீவு மக்களே

வணக்கம்

அண்மையில் France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்
காலத்தின் தேவை கருதி ஒரு அவசர வேண்டுகோளை France வாழ் புங்குடுதீவு மக்களை நோக்கி விடுத்திருந்தது.

அவ்வேண்டுகோள் France வாழ் புங்குடுதீவு மக்களை சென்றடைய அவர்கள் சார்ந்த விழாக்கள் கொண்டாட்டங்கள் மற்றும் விளம்பரப்படுத்துதல் ஊடாக முயற்ச்சித்தது. அதனைத்தொடர்ந்து எம்மிடம் பதிவிலுள்ள 300 க்கு மேற்பட்ட அங்கத்தவர்களின் விலாசங்கள் மீண்டும் தொலைபேசி அழைப்பினுடாக சரி பார்க்கப்பட்டு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 27-01-2019 இல் ஒரு விசேச கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டு அதன் நிகழ்சி நிரலும் இதனுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் நோக்கம் France வாழ் புங்குடுதீவு மக்கள் அனைவரையும் உள்வாங்குவதும் அவர்களின் ஆலோசனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளையும் சேர்த்து ஊரின் தேவைகளை பூர்த்தி செய்வதும் ஒன்றியத்தை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவதுமாகும்.

இந்த கூட்டத்துக்கு France வாழ் புங்குடுதீவு மக்கள் அனைவரும் கலந்து கொள்ளமுடியும் கருத்துக்களை தரமுடியும். எனவே நிர்வாகம் உறுப்பினர்கள் வர்த்தகர்கள் சந்தாக்காரர்கள் என்றில்லாமல் அனைவரையும் அழைக்கின்றோம். கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். அத்துடன் ஊரிலிருந்து தமது கருத்துக்களை சொல்ல முயல்வோரும் தமது உறவுகளை இக்கூட்டத்துக்கு அனுப்பி கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வைப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம். இதுவரை வெளியில் நின்று எம்மை விமர்சித்தோர்களுக்கும் இக்கூட்டம் நேரத்தை ஒதுக்கி காத்திருக்கிறது

உலகெங்கும் புங்குடுதீவு மக்கள் பரவி கல்வி வர்த்தகம் பொருளாதாரம் கலை பண்பாடுகள் ஒற்றுமை ஒன்றியங்களின் வளர்ச்சி அதனூடாக தாயகத்துக்கான உதவிகள் என மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்கின்ற போதும் நாம் புங்குடுதீவைச்சேர்ந்தவர்கள் என பெருமை பேசும் அதேநேரம் எமது ஊரை சென்று பார்க்கின்ற போது அது முற்றுமுழுதாக இவற்றை மறுதலித்து தாய் நிலத்தை கைவிட்டவர்கள் எனும் பழியையே எம் கண் முன் காட்டி நிற்கிறது. இதனால் ஊர் சென்று திரும்புகின்ற எமது ஏனைய கிராமத்து மக்கள் கூட எம்மை ஒரு மண்ணை மறந்த நன்றி கெட்டவர்களாக பார்ப்பதும் அதனூடாக எம்மை கேலிக்குள்ளாக்குவதும் தான் தொடர்கிறது. இதை ஒவ்வொரு புங்குடுதீவு மக்களும் ஏற்றுக்கொண்டாலும் அமைப்புக்களில் வந்து ஒரு சில மணித்துளிகளைக்கூட ஒதுக்க விரும்பாதவர்களாக இருப்பதையும் அதை தொடர்வதையும் நாம் பராமுகமாக கடந்து செல்லமுடியாது. அவ்வாறு கடந்து செல்வது ஊருக்கு மீளமுடியாத பெரும் அழிவையும் தவறான முன்னுதாரணத்தையும் எமக்கு மட்டுமல்ல அடுத்த சந்ததிக்கும் விதைத்த பழியைத்தரும்.

எனவே எம்மண்ணை காக்க வளம் படுத்த
எம்மிடமுள்ள பலத்தை சரியாகப்பயன்படுத்தி இந்த சந்ததி முன்னுதாரணமாக செய்வதனூடகத்தான் அடுத்த சந்ததியையும் ஓட்டத்தை தொடர வழி அமைக்க முடியும். எனவே எமது பொறுப்பை உணர்ந்து இந்த அவசர வேண்டுகோளை மிகவும் கரிசனையோடு பரிசீலித்து கூட்டத்தில் கலந்து கொள்வீர்கள் என்ற அவாவுடன் உங்களது வருகைக்காக காத்திருக்கின்றோம்.

நன்றி
நிர்வாகம்
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - France

Edited by விசுகு

Share this post

Link to post
Share on other sites

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் 27-01-2019 அன்று நடாத்தப்பட்ட அவசரப்பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும்

France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் அவசர அழைப்பை ஏற்று கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகளையும் அரவணைப்பையும் நல்கிய அனைத்து உறவுகளுக்கும் France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது. வழமை போலவே எமக்கு தொடர்ந்து தோள் தரும் குறிக்கப்பட்ட உறவுகளே கலந்து கொண்ட போதும் எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டியதும் வராதவர்களுக்கும் எமது திட்டங்களில் சந்தர்ப்பங்கள் வழங்கப்படணும் என்பதும் பிரதானமாக பேசப்பட்டது

அந்தவகையிலே கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்படி பிரதான நிர்வாகிகளின் சிற்றுரைகளை அடுத்து ஊருக்கு சென்று நிலைமைகளை அவதானித்து வந்த அனைவரதும் கருத்துக்கள் கேட்கப்பட்டு அவற்றினடிப்படையில்
புங்குடுதீவிலுள்ள 12 வட்டாரங்களிலுமுள்ள பாவிக்கப்படாது மூடுண்டு போயிருக்கும் அத்தனை ஒழுங்கைகளையும் பயமின்றி மக்கள் சென்றுவரக்கூடிய வகையில் துப்பரவு செய்வதென்றும் அதனூடு கிடைக்கும் இலை குழை குப்பை மரங்களின் வெட்டப்பட்ட பகுதிகளை எமது பசளை உற்பத்தி தொழிற்சாலைக்கு பாவிப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான பெருமளவு தேவைப்படும் நிதிக்காக வெளிநாடுகளிலுள்ள அனைத்து ஒன்றியங்களையும் நாடுவதென்றும் அவர்களிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டாலும் கூட திட்டத்தை France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் தனியே செய்ய வேண்டும் என்றும் அதற்கான நிதியை நாடி France வாழ் புங்குடுதீவு மக்களை நாடி செல்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

அத்துடன் இரண்டாவதாக 30 பேருக்கு வேலை வாய்ப்பை வளங்கும் நோக்கோடு அரிசிமா ஒடியல்மா மிளகாயத்தூள் மற்றும் அது போன்ற மக்கள் அன்றாடம் பாவிக்கும் பொருட்களை அரைத்து பைக்கற் செய்து விற்பதற்காகவும் அத்துடன் சேர்த்து ஆட்டுப்பண்ணை ஒன்றையும் கோழிப்பண்ணை ஒன்றையும் இணைத்து செய்யும் 30 லட்சம் ரூபா (3 மில்லியன்) திட்டம் ஒன்று ஊரிலுள்ள மக்களால் ஊருக்கு சென்று வந்தவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஒன்றியத்திடம் கோரப்பட்டபோது அதை அங்கு வருகை தந்திருந்த ஆசிரியர் தம்பிராசா சங்கரராசா அவர்களும் மற்றும் தர்மலிங்கம் பாஸ்கரன் அவர்களும் சேர்ந்து அத்திட்டத்தை முழுமையாக பொறுப்பெடுத்துக்கொண்டனர்.

இவற்றை நடைமுறைப்படுத்தும் குழுவும் தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது
1- திரு. சதாசிவம் வைகுந்தராசன் அவர்கள்
2- திரு. இராசலிங்கம் தமிழ்மாறன் அவர்கள்
3- ஆசிரியர் தம்பிராசா சங்கரராசா அவர்கள்

அடுத்ததாக தனிப்பட்ட வர்த்தகர்கள் ஊரில் தொழில் வாய்ப்புக்களை வளங்கவேண்டும் எமது மண்ணிலே தமது முதலீடுகளை செய்ய முன் வரவேண்டும் என்ற ஒன்றியத்தின் கோரிக்கைக்கமைய கபே பாரத் ஏகாம்பரம் மதிவதனன் அவர்களால் பெருங்காட்டிலிருந்து இறுப்பிட்டிக்கும் குறிகாட்டுவானுக்கும் வீதிகள் பிரியும் சந்தியில் தான் கேட்கும் இடத்தை எவராவது தருமிடத்து ஐரோப்பிய தரத்தில் ஒரு உணவகமொன்றை 2020 - 2021 காலப்பகுதியில் ஆரம்பித்து அங்குள்ளவர்களுக்கு பயிற்சியும் வேலை வாய்ப்பும் தர சம்மதித்தார்.

இவ்வாறாக ஒன்றியத்தின் நிர்வாகிகளின் பல எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்தபடி அதே நேரம் வரமுடியாதவர்களையும் நோக்கி அடுத்த அடுத்த திட்டங்களை நகர்த்துவது என்ற முடிவோடு கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
வரம்புயர வாழ்வுயரும்.

நன்றி
நிர்வாகம்
புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் - France

L’image contient peut-être : 13 personnes, personnes souriantes, personnes debout
L’image contient peut-être : 22 personnes, dont Sasi Waran, Sritharan Aerembu, Nagula Nathan et Jeya Kana, personnes souriantes
 
1

Share this post

Link to post
Share on other sites

புங்குடுதீவு சுடுகாடாய் கிடக்கிறது. புங்குடுதீவு நுழைவாயிலில்.. புத்தரும்... கடற்படையும் நிற்கின்றனர்.  புங்குடுதீவு - நயினாதீவு பாதை இரு மருங்கிலும்.. பொலித்தீன் குப்பைகள் குவித்து வருகின்றன. இதனால்.. கடலும் சுற்றுச் சூழலும் மாசாகிறது. தினமும் நூற்றுக்கணக்கான சிங்களச் சுற்றுலாப் பயணிகளும்.. வெளிநாட்டு பயணிகளும்.. இந்தப் பாதையால்.. நயினாதீவு நோக்கி போவது தான் இதன் முக்கிய தாக்கம். இவர்கள் பல கிலோ கணக்கான குப்பைகளை தெருநீட்டுக்கு சகட்டு மேனிக்கி..கொட்டி விட்டுவிடுகின்றனர். 

அங்கு வாழும் மக்களில் பலர் இன்னும் வறுமைக் கோட்டில் உள்ளனர்.  தெரு ஓரத்தில் பனங்கிழங்கு அவித்து விற்றுப் பிழைக்கிறார்கள். ஆலய முகப்பொன்று மட்டும்.. புதுப்பொலிவோடு.. தெரு முகப்பில் உள்ளது. 

பல வீடுகள் உடைந்தும்.. பெரு மரங்கள் நடு வீட்டுக்குள் விருட்சமாகி நிற்கும் காட்சிகளை காணலாம், 

இடையில்.. இரணைதீவில் இருந்து நயினாதீவுக்கு நன்னீர் கொண்டு வரும் திட்டமாம் என்று.. பெரும் குழாய்கள் பொருத்தும் வேலை கடலை அண்டி நடக்கிறது. 

இந்த நிலையில்.. புலம்பெயர் புங்குடுதீவு வாழ் மக்கள்.. தங்களின் நன்கொடைகளுக்கு முகவரி இடும் வேலைகளை தான் செய்கின்றனரே தவிர.. நீண்ட கால ஒழுங்கில்.. அங்கு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு என்ன செய்யப்படுகிறது அவர்களின் வாழ்க்கை முன்னேற என்று தெரியவில்லை.

மேலும்.. புங்குடுதீவு வாழ் புலம்பெயர் சமூகம்.. முகப்பில் புத்தர் வந்து குந்தி இருப்பதை இட்டு மூச்சும் விடுவதில்லை. சகித்துப் போவதைத் தெரிந்து கொண்டிருப்பார்கள் போலும். 

மிக விரைவில்.. புங்குடுதீவு.. நயினாதீவு.. நாகதீப ஆனது போல.. புங்குடுதீப ஆகி நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 🙄

Edited by nedukkalapoovan
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, nedukkalapoovan said:

நன்றி தம்பி

ஈழத்தில்  அழிந்து போன தீவுகளின்  கிராமங்களின்   எண்ணிக்கை  கணக்கிலடங்காது

பொருளாதாரத்தை  ஓடி  ஓடும்

நகர  வாழ்வை  மையப்படுத்தி  வாழும்  வாழ்வை  தேடும்

இன்றைய  உலக  சூழலில்

ஒரு  தீவை  காத்தல்  என்பது  அவ்வளவு  இலகுவானதல்ல

அத்துடன் ஈழத்துக்கொரு  இந்தியா போல

எங்களுக்கொரு  நயினாதீவு

எங்களால்  முடிந்தவரை போராடுகின்றோம்

உயர  பாடுபடுகின்றோம்

அதுவும் புங்குடுதீவு  மக்களால் மட்டுமே இந்தளவாவது  முடிகிறது

பார்க்கலாம்

நன்றி  சென்று  பார்த்து கரிசனையுடன்  கருத்திட்டமைக்கு

Share this post

Link to post
Share on other sites
12 minutes ago, விசுகு said:

புரிதலுக்கு நன்றி விசுகு அண்ணா.

எங்கள் மக்கள் பனங்கிழக்கை அவித்துவிட்டு சில நூறு ரூபாய்களுக்காக.. வீதியில் காய்ந்து கிடக்க.. சிங்களக் கடற்படை திட்டுமிட்ட மீன் பிடியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது. சீருடை அணிந்த நிலையில்.. கடலில் கரை வலை போடுவதைக் காண முடிகிறது. 

இதில் வேடிக்கை என்னவென்றால்..  சுற்றுலா வரும் எம்மவர்கள்.. இறங்குதுறைகளில் கூலிங் கிளாஸோடு நின்று எம் மக்களை மேற்ப்பார்வை செய்யும் சிங்களக் கடற்படையை சிரிக்க வைப்பதில்.. அதிக கவனம் எடுப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இதில் சரி தவறுக்கு அப்பால்.. ஏழ்மையோடு வாழும் எம் மக்களின் முகத்தில் சிரிப்பை வரவழைக்க.. ஏன் இவ்வளவு பிரயத்தனம் எடுக்கவில்லை என்பது தான் ஆதங்கம். 

Edited by nedukkalapoovan
  • Like 1

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, nedukkalapoovan said:

புரிதலுக்கு நன்றி விசுகு அண்ணா.

எங்கள் மக்கள் பனங்கிழக்கை அவித்துவிட்டு சில நூறு ரூபாய்களுக்காக.. வீதியில் காய்ந்து கிடக்க.. சிங்களக் கடற்படை திட்டுமிட்ட மீன் பிடியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது. சீருடை அணிந்த நிலையில்.. கடலில் கரை வலை போடுவதைக் காண முடிகிறது. 

இதில் வேடிக்கை என்னவென்றால்..  சுற்றுலா வரும் எம்மவர்கள்.. இறங்குதுறைகளில் கூலிங் கிளாஸோடு நின்று எம் மக்களை மேற்ப்பார்வை செய்யும் சிங்களக் கடற்படையை சிரிக்க வைப்பதில்.. அதிக கவனம் எடுப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இதில் தவறு சரிக்கு அப்பால்.. ஏழ்மையோடு வாழும் எம் மக்களின் முகத்தில் சிரிப்பை வரவழைக்க.. ஏன் இவ்வளவு பிரயத்தனம் எடுக்கவில்லை என்பது தான் ஆதங்கம். 

உங்களுக்கு  சொல்லணுமா?

எமது இனத்தின்  சாபக்கேடு

ஒரு வீதமே உணர்வோடு

மற்றதெல்லாம் அங்கயும் இங்கேயும்

செய்பவனை  தட்டி  விடுவதில் மட்டுமே ஒற்றுமை

பிரான்சில்  மட்டும் 5 ஆயிரத்துக்கு அதிகமான  எமது  ஊரவர்  உள்ளனர்

அவசர கூவலுக்கு  கூட 50 பேர் தான் வந்தார்கள்

ஊரின்  நிலை  எல்லோருக்கும் தெரியும்

ஊரை விடுத்து  தனித்தனியாக  தம்மை  மட.டுமே உயர்த்த  முனைபவர்களே ஏராளம்  ஏராளம்...

முகநூலில் மட்டும்  ஈழம் பிடிப்பது  மட்டுமல்ல

ஊர் பிடிப்பதும்  நடக்கிறது

பார்க்கலாம் 

எம்மால்  எந்தளவுக்கு தூக்க முடியுமோ  அதுவரை.......??

Share this post

Link to post
Share on other sites
On 2/1/2019 at 4:50 AM, விசுகு said:

வரப்புயர நீர் உயரும் , நீர் உயர நெல் உயரும்  ,நெல் உயர குடி உயரும் , குடி உயர கோ உயரும்

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this