Jump to content

சவேந்திர சில்வா நியமனத்தின் மூலம் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை தெரிவிப்பது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
அனந்தி சசிதரன்

இறுதி போரில் வெள்ளை கொடியுடன் சரணடைந்த நடேசன் உட்பட ஏனைய போராளிகள் தொடர்பாக சவேந்திர சில்வாவே பொறுப்புக்கூற வேண்டுமென தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவியும், ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலளார் நாயகமுமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், போர்க்குற்றவாளியாக முன்னிறுத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வாவிற்கு உயர்பதவி வழங்கியிருப்பது தமிழ் மக்களுக்கு வேதனை அளிக்கின்றது.

முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கும் நூற்றுக்கணக்கானோர் சரணடைந்து, கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமைக்கு காரணமாக இருந்த போர்க்குற்றவாளியை முப்படைகளின் பிரதானியாக ஜனாதிபதி நியமித்திருப்பது என்பது நாட்டில் போர்க் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலை ஒட்டுமொத்தமாக கேள்விக்குறியாக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

எனினும் இவை அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகள் என்றும் இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ராணுவ நீதிமன்றம் உள்ளது என்றும் இவற்றை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது.

சவேந்திர சில்வாவேவுக்கு ராணுவத்தில் உயர் பதவி

அண்மையில் இந்த நாட்டில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பாக நீதிமன்றங்கள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தியுள்ளதாக தெரிவித்து போர்க் குற்றங்களுக்கும் உள்ளக விசாரணை போதும் என்ற நிலைப்பாட்டை அரசு ஏற்படுத்துகின்றது.

இருப்பினும், தமிழர்கள் போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணையை கேட்கிறார்கள். இந்த நிலையில் சவேந்திர சில்வாவினுடைய நியமனம் தமிழ் மக்களுக்கு போர்க்குற்றம் உட்பட வேறு எந்த ஒரு நீதியும் கிடைக்காது என்பதையே காட்டி நிற்கின்றது.

கடந்த காலங்களில் வெளிநாடுகளிற்குச் செல்லும்போது எந்த சந்தர்ப்பத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்தபோது இன்று அவரை முப்படைகளின் பிரதானியாக நியமித்திருப்பது என்பது இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காத தன்மையினையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவியும், ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலளார் நாயகமுமான அனந்தி சசிதரன்

நல்லாட்சி, நல்லிணக்கம் என்று அரசாங்கம் பேசிக்கொண்டிருந்தாலும், ஈடு செய்ய முடியாத போர் இழப்புக்களை சந்தித்த தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாத நிலையிலேயே இலங்கை அரசாங்கம் உள்ளது.

போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறும் வரையில் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல சிங்கள பேரினவாத அரசாங்கத்தினால் ஒருபோதும் இயலாது. சவேந்திர சில்வாவினுடைய நியமனம் என்பது ஒட்டுமொத்த தமிழர்களும் நிராகரிக்கின்ற, வெறுக்கின்ற செயற்பாடாகவே இருக்கின்றது.

எனவே, சர்வதேசம் சவேந்திர சில்வாவினுடைய நியமனம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற குழப்பத்திற்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நீதியானது என்பதை பேசும் சர்வதேச ராஜதந்திரிகள் சவேந்திர சில்வாவினுடைய நியமனத்தில் உள்ள உள்ளார்ந்த பொருளை பார்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

என்னுடைய கணவரான எழிலன் உட்பட ஏராளமானவர்கள் காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்குகூட போர்க்காலத்தில் 58ஆவது படைப்பிரிவின் தளபதியாக இருந்த இதே சவேந்திர சில்வாவிற்கு எதிராகத்தான் தொடர்ந்துள்ளோம்.

இறுதி போரின்போது பசியோடு உணவிற்காக வரிசையில் காத்திருந்த அந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மீது மல்ரிபெரல் செல் தாக்குதல் நடத்தி சிறுவர்களை கொன்ற குற்றவாளியும், இறுதி போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கும் காரணமாக இருந்தவர் சவேந்திர சில்வாவே என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், இறுதி போரில் வெள்ளை கொடியுடன் சரணடைந்த நடேசன் உட்பட ஏனைய போராளிகளின் தொடர்பிலும் இவர்தான் பொறுப்புக்கூற வேண்டியவராக உள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவியும், ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலளார் நாயகமுமான அனந்தி சசிதரன்

சவேந்திர சில்வா தொடர்பானபோர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இன்று நேற்று வெளியிடப்பட்டவை இல்லை. இவை சர்வதேசத்திற்கே தெரிந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள்.

இவை அனைத்தையும் தெரிந்திருந்தும் இந்த அரசாங்கம் சவேந்திர சில்வாவை முப்படைகளின் பிரதானியாக நியமித்திருப்பது என்பது கவலை தருகின்றது.

தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது, போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலில் இருந்து நழுவிச் செல்லும் இலங்கை அரசாங்கத்தின் தந்திரச் செயல் சவேந்திர சில்வாவினுடைய நியமனம் மட்டுமல்ல.

மற்றுமொரு போர்க்குற்றவாளியாக சரத் பொன்சேகாவிற்கு ஃபில்ட் மார்ஷல் பதவியினை வழங்கியதும் அரசின் தந்திர செயற்பாடுகளில் ஒன்றாகும். இவை அனைத்தும் தமிழர்கள் ஒருபோதும் இராணுவத் தரப்பை போர்க்குற்றவாளியாக்க முடியாது என்பதை அரசாங்கம் நேரடியாக செல்லுகின்ற விடயமாகும்.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் மனங்களை உண்மையில் வெல்ல வேண்டுமாக இருந்தால் போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வாவிற்கு வழங்கப்பட்ட பதவி தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுனில் அத்தபத்துவிடம் பிபிசி தமிழ் தொடர்புகொண்டு கேட்டது.

இதற்கு விளக்கமளித்த இராணுவப் பேச்சாளர், இவை அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் எனவும், இவற்றுக்கு ராணுவத் தரப்பில் பதிலளிக்கத் தேவையில்லை என்றும் அவற்றை முற்றாக நிராகரிப்பதாகவும் கூறினார். இலங்கை ராணுவத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் இருக்குமாயின் அவற்றை விசாரிக்க ராணுவ நீதிமன்றம் இருப்பதாகவும், எனினும், அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்களை பொருட்படுத்துவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-46837473

Link to comment
Share on other sites

தமிழ் மக்களுக்கு ஆத்திரமூட்டவே இவருக்கு மைத்திரியால் இப்பதவி வழங்கப்பட்டது. மைத்திரி நல்லவர் என்று  அவர் ரனிலோடு சேர்ந்து பதவி ஏற்ற போது சொன்னவர்களும் இங்கு உள்ளனர்.

Link to comment
Share on other sites

36 minutes ago, nunavilan said:

தமிழ் மக்களுக்கு ஆத்திரமூட்டவே இவருக்கு மைத்திரியால் இப்பதவி வழங்கப்பட்டது. மைத்திரி நல்லவர் என்று  அவர் ரனிலோடு சேர்ந்து பதவி ஏற்ற போது சொன்னவர்களும் இங்கு உள்ளனர்.

இது ஒரு நல்ல விடயம்.

எவ்வளவு தான் சிங்களம் தன்னை நல்லவனாக காட்டிக் கொள்ள முற்பட்டாலும் வடிவேலுவின் கொண்டை போல ஏதாவது ஒன்று உலகுக்கு அவர்களின் முகத்தை காட்டிக் கொடுத்து விடும்.  மார்ச்சில் இடம்பெறப் போகும்  இலங்க்கை தொடர்பான மனிதவுரிமை கூட்டத்திற்கு முன்பாக இவரை பிரதானியாக நியமித்தமை இதுவரைக்கும் தம்மை நல்லவராக காட்ட இலங்கை எடுத்த பிரயத்தனங்களை பின் தள்ளி விடுகின்றது.

அண்மையில் அமெரிக்காவின் தூதுவராக இருந்த Jaliya Wickramasuriya  பண மோசடி செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு போய்க் கொண்டு இருக்கு. மகிந்த காலத்தில் செய்யப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் தகவல்களை வழங்கினால் இவரை விடுவிக்க முடியும் என்று அமெரிக்க அரசு பேரம் பேசுவதாக செய்திகள் வந்து இருக்கு. (ஜாலிய மகிந்தவின் உறவினர்).

இப்படியான நேரத்தில் இந்த நியமனம் இலங்கை அரசுக்கு பாதமாக தான் அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவேந்திர சில்வா நியமனத்தின் மூலம் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை தெரிவிப்பது என்ன?

இலங்கை இராணுவத்தின் பிரதானியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்மை குறித்து  உலக தமிழர் பேரவை கவலை வெளியிட்டுள்ளது.

சவேந்திரசில்வாவின் நியமனம் உலக தமிழர்களிற்கும்  இலங்கையில் மனித உரிமை மற்றும் பதிலளிக்கும் கடப்பாடு குறித்து அக்கறை கொண்டுள்ளவர்களிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

2019 மார்ச் மாதம் ஜெனீவாவில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராயப்படவுள்ள நிலையில் இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளதன் மூலம்  மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமல் விடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து கவலையடைப்போவதில்லை என்ற தெளிவான செய்தியை  சர்வதேச சமூகத்திற்கு இலங்கை தெரிவித்துள்ளது என ஜிடிஎவ் தெரிவித்துள்ளது

யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள இலங்கையின் இராணுவ அதிகாரிகளில் சவேந்திர சில்வாவே நன்கறியப்பட்டவர் எனவும் குறிப்பிட்டுள்ள உலக தமிழர் பேரவை,இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களின் குறியீடாக சவேந்திர சில்வா விளங்கினார் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தின் பிரதானியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்மை குறித்து  உலக தமிழர் பேரவை கவலை வெளியிட்டுள்ளது.

சவேந்திரசில்வாவின் நியமனம் உலக தமிழர்களிற்கும்  இலங்கையில் மனித உரிமை மற்றும் பதிலளிக்கும் கடப்பாடு குறித்து அக்கறை கொண்டுள்ளவர்களிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

2019 மார்ச் மாதம் ஜெனீவாவில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து ஆராயப்படவுள்ள நிலையில் இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளதன் மூலம்  மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமல் விடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து கவலையடைப்போவதில்லை என்ற தெளிவான செய்தியை  சர்வதேச சமூகத்திற்கு இலங்கை தெரிவித்துள்ளது என ஜிடிஎவ் தெரிவித்துள்ளது

யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள இலங்கையின் இராணுவ அதிகாரிகளில் சவேந்திர சில்வாவே நன்கறியப்பட்டவர் எனவும் குறிப்பிட்டுள்ள உலக தமிழர் பேரவை,இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களின் குறியீடாக சவேந்திர சில்வா விளங்கினார் எனவும் தெரிவித்துள்ளது

இலங்கை நேர்மையான விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல்களில் இருந்து தனது இராணுவ அதிகாரிகளை எவ்வளவு தூரம் பாதுகாப்பதற்கும் மறைப்பதற்கும் தயாராகவுள்ளது என்பதையும் இந்த நியமனம் வெளிப்படுத்தியுள்ளது எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது

shavendraaa.jpg

இலங்கை நேர்மையான விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல்களில் இருந்து தனது இராணுவ அதிகாரிகளை எவ்வளவு தூரம் பாதுகாப்பதற்கும் மறைப்பதற்கும் தயாராகவுள்ளது என்பதையும் இந்த நியமனம் வெளிப்படுத்தியுள்ளது எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது

http://www.virakesari.lk/article/47943

Link to comment
Share on other sites

5 hours ago, கிருபன் said:

சவேந்திர சில்வா நியமனத்தின் மூலம் சர்வதேச சமூகத்திற்கு இலங்கை தெரிவிப்பது என்ன?

சிங்கள-பௌத்த அரசுகள் என்பது என்றென்றைக்கும் தமிழின அழிப்புக்கு / இனப்படுகொலைகளுக்கு முதலிடம் கொடுக்கும் மிலேச்ச பயங்கரவாதக் கும்பல்கள் என்பதை சர்வதேச சமூகத்துக்கு தெளிவாக சொல்லி நிற்கின்றன.

அத்துடன் சுயநல அரசியல்வாதிகளான சம்மந்தன், சுமந்திரன், மாவை போன்ற பேர்வழிகள் எமது தமிழின அழிப்பு / இனப்படுகொலைகள் / போர்க்குற்றங்கள் போன்றவற்றை மறைக்க முண்டு கொடுக்கும்வரை சர்வதேசத்தால் எம்மை ஒன்றும் செய்யமுடியாது என்ற மமதையும் சர்வதேச சமூகத்துக்கு தெளிவாக சொல்கின்றது.

மேலும் நாம் வழங்கும் மது, மாது, .... போதைகளையும், வீசும் எலும்புத் துண்டுகளையும் கவ்வி எமக்கு வாலாட்டித் திரியும் டக்ளஸ்,  கருணா, ஆனந்தசங்கரி, கதிர்காமர், .... ஆறுமுகம் தொண்டமான், முத்துசிவலிங்கம்,.... போன்றவர்கள் உதவியுடன் தமிழின அழிப்பு / இனப்படுகொலைகள் / போர்க்குற்றங்கள் போன்ற உண்மைகளை பொய்களாக்கவும், நாம் அவிழ்த்துவிடும் பொய்களை உண்மைகளாக்கவும் உதவும் வரை யாராலும் எம்மை ஒன்றும் செய்யமுடியாது என்ற ஆணவத்தையும் சர்வதேச சமூகத்துக்கு தெளிவாக சொல்கின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவீந்திர சில்வாவின் நியமனத்தின் மூலம் சிங்களம் சர்வதேசத்திற்குச் சொல்லும் செய்தி என்னவென்றால், தாம் ஒருபோதும் தமதுராணுவத்தைக் காட்டிக் கொடுக்கப்போவதில்லை என்பதுதான்.

அதுமட்டுமில்லாமல்,  எந்த மனிதவுரிமை மீறல்களுக்காக இவன் ஐ. நா வில் பேசப்பட்டானோ அதே மனிதவுரிமைகளுக்குப் பொறுப்பான, அவற்றைக் கண்காணிக்கும் ஒருவனாகவும் இவனை சிங்களம் இன்றுவரை அழகு பார்த்து வந்தது. அதுகூட ஐ நா வுக்குச் சிங்களம் கொடுத்த செருப்படிதான்.

Link to comment
Share on other sites

6 hours ago, கிருபன் said:

இலங்கை நேர்மையான விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல்களில் இருந்து தனது இராணுவ அதிகாரிகளை எவ்வளவு தூரம் பாதுகாப்பதற்கும் மறைப்பதற்கும் தயாராகவுள்ளது என்பதையும் இந்த நியமனம் வெளிப்படுத்தியுள்ளது எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது

நீங்கள் சுத்த மடையர்கள் என்பதை நீங்களே சொல்லிவைக்கிறீர்கள். அல்லது வெறுமனே அவர்கள் செய்யும் செயல்களை முதுகுக்கு பின்னால் வரவேற்றுக்கொண்டு மக்களை மருட்ட அறிக்கை விடுகிறீர்கள். காலம் கடந்து உங்களுக்கு பிறந்துள்ள இந்த ஞானம் இனி நீங்கள் செய்யும் காரியங்களில் இருந்து தான் தெரியவரும். சிங்களவர்கள் மூடர்கள் என்ன சொல்லி வாழ்த்த காலம் பொய் இனி நீங்கள் மூடர்களாக வாழும் காலம் ஆரம்பித்துவிட்டது. 

ஜெனிவாவில் உள்ளக பொறிமுறை பலனை தராது குறைந்தது கலப்பு நீதிபொறிமுறையை (hybrid mechanisms to suit South Asian context) ஆதரிக்கும்படி கேட்டவர்களை தீவிரப்போக்குடன் நடப்பவர்கள் என வருணித்து, வரலாற்றை மறுத்தும்/மறந்தும் நடந்த உங்களுக்கும் பாதிரியார் அவர்களுக்கும் தமிழ் அரசியல் வாதிகளுக்கும் அவர்தம் ஆதரவாளர்களுக்கும்  சிங்கள அரசு மீண்டும் நல்ல பாடத்தை புகட்டியுளார்கள். 

நீதியை விரைந்து வழங்குவது தான் நீதியை வேண்டி நிட்கும் மக்களுக்கு நாம் செய்ய வேண்டிய தார்மீக கடமை, மனித மரபு என்பதை மறுத்து நீங்கள் கம்போடியா (Cambodia) போலெ நீண்ட காலம் எடுக்கும். அப்பா இப்ப ஏன் குத்தி முறிவான் எண்டு கதை விட்டது  இப்பவும் எங்களுக்கு எரிகிறது. நவீன உலக பொறிமுறைகளை புறம் தள்ளி பழைய கம்போடியா கதையை வைத்து நீங்கள் மக்களை ஏமாற்றியுளீர்கள். நீண்டகாலமாக பாதிக்கப்படட எம் போன்றவர்களின் முதுகில் குத்தினீர்கள். உங்கள் போன்றவர்களால் தான் நாங்கள் இந்த கபடநாடகங்களில் இருந்து ஒதுங்கினோம். மனிதநேயம், மனிதஉரிமை என்பன உங்களுக்கு ஒரு வியாபாரப்பொருள் என்பதை நீங்களும் உங்கள் சார்ந்தவர்களும் பலமுறை நிரூபித்துக்காட்டியுளீர்கள்.

நீங்கள்  "உலக தமிழர்" என்பதை தயவு செய்து நீக்கிவிடுங்கள். ஒரு  சிலர் மாத்திரம் ஒரு அறைக்குள் இருந்து கொண்டு தீர்மானங்களை எடுத்து கொண்டு உலக தமிழரை பிரதிநித்துவம் செய்வதாக கூறுவது தவறு

இறுதியாக, டார்வின் சொன்னது போல பல சவால்களை எதிர்கொண்டு சிங்கள இனம் தமிழர்களை ஒடுக்கி வெற்றிகொள்ளுமாயின் அவர்கள் அந்த வெற்றிக்கு உரித்துடையவர்கள். எமது மடமையையும், அரசியல்/சமூக குறைபாடுகளையும் அவர்கள் தங்களுக்கு சாதகமாக பாவிப்பதை நாம் தவறு என்று சொல்ல முடியாது. அவர்கள் தங்களது சமூக நலனை முன்னிறுத்தி செயல்படுவதை பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்கள் தமக்குள் கடிபட்டாலும்  தமது புலமையை ஒருங்கிணைத்து தமது காரியத்தை முன்னகத்துகிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ragunathan said:

சவீந்திர சில்வாவின் நியமனத்தின் மூலம் சிங்களம் சர்வதேசத்திற்குச் சொல்லும் செய்தி என்னவென்றால், தாம் ஒருபோதும் தமதுராணுவத்தைக் காட்டிக் கொடுக்கப்போவதில்லை என்பதுதான்.

அதுமட்டுமில்லாமல்,  எந்த மனிதவுரிமை மீறல்களுக்காக இவன் ஐ. நா வில் பேசப்பட்டானோ அதே மனிதவுரிமைகளுக்குப் பொறுப்பான, அவற்றைக் கண்காணிக்கும் ஒருவனாகவும் இவனை சிங்களம் இன்றுவரை அழகு பார்த்து வந்தது. அதுகூட ஐ நா வுக்குச் சிங்களம் கொடுத்த செருப்படிதான்.

இப்ப...    இதை, எதிர்த்துக் கேட்க... சம்பந்தனும்  இல்லை.  😛
முந்தி...  கனக்க,   குறட்டை .. விட்ட  ஆள். 🤑
இப்ப... நடு ரோட்டில, நிக்குது. :grin:

Link to comment
Share on other sites

  • 7 months later...
On 1/12/2019 at 5:55 AM, போல் said:

சிங்கள-பௌத்த அரசுகள் என்பது என்றென்றைக்கும் தமிழின அழிப்புக்கு / இனப்படுகொலைகளுக்கு முதலிடம் கொடுக்கும் மிலேச்ச பயங்கரவாதக் கும்பல்கள் என்பதை சர்வதேச சமூகத்துக்கு தெளிவாக சொல்லி நிற்கின்றன.

அத்துடன் சுயநல அரசியல்வாதிகளான சம்மந்தன், சுமந்திரன், மாவை போன்ற பேர்வழிகள் எமது தமிழின அழிப்பு / இனப்படுகொலைகள் / போர்க்குற்றங்கள் போன்றவற்றை மறைக்க முண்டு கொடுக்கும்வரை சர்வதேசத்தால் எம்மை ஒன்றும் செய்யமுடியாது என்ற மமதையும் சர்வதேச சமூகத்துக்கு தெளிவாக சொல்கின்றது.

மேலும் நாம் வழங்கும் மது, மாது, .... போதைகளையும், வீசும் எலும்புத் துண்டுகளையும் கவ்வி எமக்கு வாலாட்டித் திரியும் டக்ளஸ்,  கருணா, ஆனந்தசங்கரி, கதிர்காமர், .... ஆறுமுகம் தொண்டமான், முத்துசிவலிங்கம்,.... போன்றவர்கள் உதவியுடன் தமிழின அழிப்பு / இனப்படுகொலைகள் / போர்க்குற்றங்கள் போன்ற உண்மைகளை பொய்களாக்கவும், நாம் அவிழ்த்துவிடும் பொய்களை உண்மைகளாக்கவும் உதவும் வரை யாராலும் எம்மை ஒன்றும் செய்யமுடியாது என்ற ஆணவத்தையும் சர்வதேச சமூகத்துக்கு தெளிவாக சொல்கின்றது.

அன்றும் இன்றும் பொருந்தும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.