Sign in to follow this  
கிருபன்

சவூதி அரேபிய பெண் ரஹாப் மொஹம்மத் அல்-குனனுக்கு கனடா தஞ்சமளித்தது…

Recommended Posts

சவூதி அரேபிய பெண் ரஹாப் மொஹம்மத் அல்-குனனுக்கு கனடா தஞ்சமளித்தது…

January 12, 2019

Rahaf-al-Qunun.jpg?resize=800%2C452

தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி சென்று பாங்கொக் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சவூதி அரேபிய பெண்ணான 18 வயதான ரஹாப் மொஹம்மத் அல்-குனனுக்கு கனடா தஞ்சமளித்துள்ளது. கடந்த வாரயிறுதியில், தாய்லாந்தின் பாங்கொக்கை சென்றடைந்த றஹாப் தனது குடும்பத்தினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது எனத் தெரிவித்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்று, அங்கு அகதி அந்தஸ்துக் கோரத் திட்டமிட்ட போது தாய்லாந்து அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், றஹாபின் அகதி அந்தஸ்துக் கோரிக்கையை ஏற்க வேண்டுமென்ற அழுத்தங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு கனடா தஞ்சமளித்துள்ளது.

உலக அளவில் மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக நிலைப்பாடு எடுப்பதில் கனடா உறுதியாக உள்ளது எனவும் அந்தவகையில்  ரஹாப் மொஹம்மத் அல்-குனனுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தங்களிடம் கேட்டுக்கொண்டதற்கமைய தாங்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

குவைத்துக்குச் சென்றிருந்த போது, தனது குடும்பத்திடமிருந்து தப்பியோடிய இப்பெண் தனது குடும்பத்திடமிருந்து உடல், உள சித்திரவதைகளை எதிர்நோக்குவதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2019/109718/

 

Share this post


Link to post
Share on other sites

கனடாவிற்கும், சவூதிக்கும் இப்ப ஆகாதாம்

Share this post


Link to post
Share on other sites

கனடாவின் அமைச்சர்  ரஹாப்பை விமான நிலையத்தில் வரவேற்கும் அளவுக்கு சவூதிக்கு கனடா கடுப்பேற்றி உள்ளது.

Share this post


Link to post
Share on other sites

கனடா ஏற்பதாக காட்டி, பிரிட்டன், அமெரிக்கா அல்லது அவுஸ்திரேலியாவில் குடியமரலாம் என்கிறது ஒரு தகவல். காரணம் கொலைப்பயம்.

Share this post


Link to post
Share on other sites

வகாபிக்கள் விடவா போகிறார்கள்? புனிய யுத்தம் என அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! 

Share this post


Link to post
Share on other sites
Photo Credit: Global News
 

சவூதி அகதியும் கனடிய அரச வரவேற்பும் – ஒரு பார்வை

 
Photo Credit: Global News
Photo Credit: Global News

தாய்லாந்தில் தற்காலிக புகலிடம் கொண்டிருந்த சவூதி அரேபியாவைச் சேர்ந்த இளம் பெண் றஹாப் மொகாமட் அல்-கியூனன் இன்று காலை ரொறோண்டோ விமான நிலையத்தில் வந்திறங்கியிருக்கிறார். அவரை விமான நிலையத்தில் சென்று பூங்கொத்துடன் வரவேற்றிருக்கிறார் கனடாவின் வெளி விவகார மந்திரி. “நீண்ட பயணத்தால் அவள் களைத்துப் போயிருக்கிறாள், இப்போதைக்கு எதுவும் பேச முடியாது” என மந்திரி மிகவும் அன்போடு அரவணைத்து அழைத்துப் போவதைப் பார்க்கப் பரவசமாகவிருந்தது. (நாவுறு தீவில் தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்ட குழந்தை அகதிகள் இக் கண் கொள்ளாக் காட்சியைப் பார்த்துப் பரவசப்பட வசதிகளுண்டோ தெரியவில்லை, அது வேறு விடயம்). “தான் சுகமாகவும் மிக, மிக மகிழ்ச்சியாகவும் தனது புதிய வாழ்விடத்தில் இருக்கிறாள் என்பதைக் கனடியர்களுக்குத் தெரிவிப்பதாக” மந்திரி ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவித்தார்.

றஹாப் கனடாவில் தஞ்சம் கோருவதையோ அல்லது கனடா அவருக்குப் புகலிடம் அளிப்பதையோ நான் மறுக்கவில்லை. ஒரு தமிழனாகவோ அல்லது கனடியனாகவோ அம் மறுப்பு ஒரு தார்மீக நிலைப்பாடெனக் கொள்ளவும் முடியாது. ஆனால் இவ்வளவு ‘படம் காட்டலுடன்’ செய்யப்பட்டிருக்க வேண்டிய ஒரு விடயமல்ல இது.

லிபரல் கட்சி அரசு உலக அரங்கில் பல சமூக மாற்றங்களைத் துணிச்சலுடன் முன்னெடுத்து வருவது வரவேற்கப்படவேண்டியதொன்று. சிரிய அகதிகளைக் கொண்டு வந்ததிலும் சரி, ட்ரம்ப் பின் அகதிகளை வரவேற்றதிலும் சரி, ஆபிரிக்காவில் பெண்கள் கருத்தடை செய்ய அனுமதிக்க வேண்டுமென்ற முன்னெடுப்பிற்காக பல மில்லியன் டொலர்களைச் செலவு செய்வதிலும் சரி, கனடிய சுதேசிகளிடம் குடியேறி மூதாதையர் சார்பில் மன்னிப்புக் கேட்டதிலும் சரி, இருபாற் சமநிலை குறித்த நிலைப்பாடுகளிலும் சரி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கத்தில் எனக்கு மிக்க மதிப்புண்டு. ஆனாலும் ஏறத்தாழ இவ்வெல்லா நிலைப்பாடுகளிலும் அவர் நிறவேற்றிய நடவடிக்கைகள் முன்னுரிமை (priority) பெறும் தகமை கொண்டவை அல்ல என்பது எனது வாதம். றஹாப் விடயமும் அப்படித்தான்.

லெபனானிலும், ஜோர்தானிலும் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த சிரிய அகதிகளை விசேட விமானங்களில் ஏற்றி வரும்போது, அவர்களை ‘வழியனுப்பிய’ பல ஆபிரிக்க அகதிகள் “நாங்களும் அகதிகள் தான்” என்ற பதாகைகளுடன் எலும்பும் தோலுகளுமாக ஏக்கப் பார்வைகளுடன் நின்ற அவர்கள் இன்னும் அங்கேயே, அப்படியே தான் நிற்கின்றார்கள். ராஜபக்ச குடும்பத்தினால் பலவந்தமாக அனுப்பப்பட்டு ஆழ் கடல்களில் இறந்தது பாதி இழந்தது மீதியென்று நாவுறு தீவு, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, இன்னும் பெயர் தெரியாத் தீவுகளில் எல்லாம் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் அகதிகளின் பின்னணியில் றஹாப் விடயம் முன்னுரிமை பெற முடியாது.

சவூதி அரேபியாவின் கொடுங்கோலாட்சி பற்றிப் புதிய வகுப்புகள் இங்கே தேவையில்லை. ஊடகவியலாளர் ஜமால் கஷ்ஹோகியின் கொலை நமக்கெல்லாம் ஒரு பாடம். றஹாப் விடயம் சவூதி அரசுடனானது இல்லை. அது ஒரு குடும்ப விவகாரம். கனடிய அரசுதான் அதை இப்போது அரச விவகாரமாக்கியிருக்கிறது. அவுஸ்திரேலிய அரசும் இப் பெண்ணுக்குப் புகலிடம் தருவதற்கு ஆயத்தம் செய்திருந்தது. அதற்கு முன்னர் உரிய விசாரணைகள் முற்றுப்பெற வேண்டுமென்று அது கோரியிருந்தது என்கிறார்கள். “A Saudi teen who was granted asylum in Canada after fleeing from her allegedly abusive family has arrived in Toronto” என்று தான் ஊடகங்கள் சொல்கின்றன. இருந்தும் றஹாப் அல்-க்யூனனை ஒரு அகதியாக கனடா ஏற்றுக்கொள்ளும் என்பதைப் பிரதமர் உறுதி செய்து விட்டார்.

தனது தந்தையார் தன்னைத் துஷ்பிரயோகம் செய்தவர்; கட்டாயப் படுத்திக் கல்யாணம் செய்து வைக்க முற்பட்டவர் என்ற குற்றச்சாட்டுகளுடன் – குவைத் நாட்டுக்கு விஜயம் செய்திருந்தபோது அப்படியே பாங்கொக் நகருக்குச் சென்று தன்னைத் தானே ஹோட்டல் அறையொன்றினுள் பூட்டிக் கொண்டு சமூக வலைத் தளங்களின் மூலம் செய்தி அனுப்பியதோடு – ஆரம்பித்தது றஹாப்பின் கதை.  (இதைவிட மோசமான கதைகளுடன் கொட்டில்களுக்குள்கூடத் தம்மைப் பூட்டிக்கொள்ள முடியாது நிறையச் சிறுமிகள் அவதிப்படுவது எல்லாம் சமூக வலைகளில் அகப்படுவதில்லை). இப்போது கனடிய அரச வரவேற்புடன் முதலாவது அத்தியாயம் நிறைவு பெற்றிருக்கிறது.

“That is something that we are pleased to do because Canada is a country that understands how important it is to stand up for human rights, to stand up for women’s rights around the world,” என்கிறார் எமது பிரதமர்.  Around the world, not in Canada, உண்மைதான்.

கதையின் இனி வரும் அத்தியாயாங்கள் எப்படி இருக்கப் போகிறதோ தெரியாது. ஏற்கெனவே கனடிய – சவூதி அரேபிய உறவுகள் நல்லாக இல்லை. இப்படியான ஒரு நாட்டுடன் எந்த உறவுமே அவசியமில்லை. ஆனால் நமது பிரதமருக்கு வெனிசுவேலா போன்ற பஞ்சப் பிராணிகள் தாம் பிரதம எதிரிகள்.

றஹாப் தனது மதத்தையும் துறந்திருக்கிறாராம். இதைக் கனடிய இஸ்லாமிய சமூகம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது அடுத்த விடயம். இந்த ‘honour killing’ விடயங்கள் கனடிய மண்ணிலேயே நடைபெற்ற வரலாறுகள் உண்டு. றஹாப்பின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியதும் கனடாவின் கடமை.

பொதுத் தேர்தல் வரவிருக்கும் இந்த நேரத்தில் இத்தனை ‘தாரை தப்பட்டைகளுடன்’ செங்கம்பளம் விரிக்காத குறையாக ஒரு அகதியை வரவேற்குமளவுக்கு நமது பிரதமரும், வெளிவிவகார மந்திரியும் இருக்கிறார்கள் என்றால் நமது தென்நாட்டில் ஏன் இவர்கள் அவமானப்படுகிறார்கள் என்று….

இன்னும் நிறைய றஹாப்புகள் தாய்லாந்தை நோக்கிப் படையெடுக்கும் போது (இரண்டாவது அத்தியாயத்தில்)  தொடரும்.

http://marumoli.com/சவூதி-அகதியும்-கனடிய-அரச/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this