பிழம்பு

இரவு நேரத்தில் இளம்பெண் ஊர் சுற்றினால் தவறா?

Recommended Posts

ஐஸ்வர்யா ரவிசங்கர் பிபிசி தமிழ்
 
  •  
     
இரவு நேரத்தில் இளம்பெண் ஊர் சுற்றினால் தவறா?படத்தின் காப்புரிமை Getty Images

இரவு நேரத்தில் வெளியே செல்வதை பெண்கள் விரும்புகிறீர்களா? அப்படி விரும்புபவர்கள், என்னென்ன காரணங்களுக்காக விரும்புகிறார்கள்? இது பற்றிய அவர்களது குடும்பத்தினரின் கருத்து என்ன? இந்த சமூகம் அதை எப்படி பார்க்கிறது? போன்ற கேள்விகளுக்கு விடையறிய இரவு நேரத்தில் வெளியே செல்ல விரும்பும் பெண் ஒருவரிடம் பிபிசி பேசியது. அந்த பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது.

இரவு நேரம் எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா? சில்லென்ற காற்று, சிலிர்ப்பூட்டும் பறவைகளின் ஒலி, எங்கும் நிசப்தம், ஆள்நடமாட்டமே இல்லாத சாலைகள், அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் வீதியோர கடைகள், நிலவின் ஒளி, கண்களுக்கு இதமூட்டும் நட்சத்திரங்களின் நடமாட்டம்; சுட்டெரிக்கும் வெயில் இல்லை, எரிச்சலூட்டும் போக்குவரத்து நெரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். யாருக்குதான் பிடிக்காது இப்படிப்பட்ட இரவு நேரத்தின் அழகை ரசிப்பதற்கு?

இரவு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக இரவு நேரத்தில் அதிக நேரம் விழித்திருப்பவர்களை 'நைட் பேர்ட்ஸ்' என்று சொல்லுவார்கள். நானும் அப்படிப்பட்டவள்தான்.

சிறு வயதிலிருந்தே நான் இரவு நேரத்தில்தான் அதிக நேரம் விழித்திருந்து படிப்பேன். பள்ளி பருவத்தில், 'இரவு நேரத்தில் அதிகமா கண்முழிச்சு படிக்காத, காலங்காத்தால படிச்சாதான் மனசுல நிக்கும்' என்று சொன்ன என் பெற்றோர், கல்லூரியில் சேர்ந்த பிறகு, 'இருட்டுறதுக்குள்ள வீட்டுக்கு வந்துடனும்' என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

இரவு நேரத்தில் இளம்பெண் ஊர் சுற்றினால் தவறா?படத்தின் காப்புரிமை Getty Images

நான் ஒரு கல்லூரி மாணவி என்பதால், ஏராளமான சுமைகள், எந்த நேரமும் மன அழுத்தம். எப்போது பார்த்தாலும் ப்ராஜெக்ட், செமினார், பேப்பர் பிரசன்டேசன், இண்டஸ்ட்ரியல் விசிட், குரூப் டிஸ்கஷன், இன்டெர்ன்ஷிப், தேர்வுகள் என்று ஒரு சிறிய உலகத்துக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருந்தேன். இதற்கிடையில் குடும்ப பிரச்சனைகள் வேறு.

 

என்னால் மன அழுத்தத்திலிருந்து மீள முடியவில்லை. என்னுடன் கல்லூரியில் படிக்கும் பெரும்பாலான நண்பர்கள், கார் வைத்திருந்தார்கள். ஆனால், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த என்னிடம் ஒரு ஸ்கூட்டர் மட்டுமே இருந்தது.

ஒரு நாள், கார் வைத்திருந்த என் தோழி ஒருத்தி, 'நீ ஏன் இரவில் என்னுடன் லாங் டிரைவ் வரக்கூடாது? அது எவ்வளவு புத்துணர்ச்சி கொடுக்கும் தெரியுமா?' என்று என்னிடம் கூறியது எனக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.

மனம் பாரமாக இருக்கும்போதெல்லாம் அவளுடன் சேர்ந்து இரவில் சுற்ற ஆரம்பித்தேன். க்ரூப் ஸ்டடீஸ் என்று வீட்டில் பொய் சொல்லிவிட்டு, அவளது காரில் நீண்ட தூரம் பயணித்தேன். சிறிது நேரம் அவள் காரை ஓட்ட, நான் மெல்லிசை பாடல்கள் கேட்டபடி, இரவு நேர அழகை ரசித்துக்கொண்டே வருவேன்.

அவள் சோர்வடைந்தவுடன் நான் காரை ஓட்டுவேன். இரண்டு பேரும் சோர்வடைந்துவிட்டால், அண்ணன் கடை சாயா தான்! காரை ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் கதை பேசிக்கொண்டே டீ குடிப்போம்.

இதைவிட புத்துணர்ச்சி வேறு என்ன இருக்க முடியும்? ஆணாதிக்கம் நிறைந்த இந்த சமூகத்தில் உங்களுக்கு நிகராக நாங்களும் ராத்திரியில் வெளியில் சுற்றுவோம் என்று எங்களின் தோள்களை நாங்களே தட்டிக்கொள்வதுபோல் இருக்கும்.

எல்லா நேரத்திலும் அவளையே எதிர்பார்க்க முடியாது என்பதால் சில நேரங்களில் நான் தனியாகவும் சில நேரங்களில் வேறு நண்பர்களுடனும் இரவில் ஸ்கூட்டரில் வெளியே சுற்றினேன்.

இதை செய்யாதே, அதை செய்யாதே என்று நம்மை கட்டுப்படுத்தும்போதுதான், அதை செய்துபார்த்தால் என்ன, அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற எண்ணம் வரும்.

இரவு நேரத்தில் இளம்பெண் ஊர் சுற்றினால் தவறா?படத்தின் காப்புரிமை Getty Images

என் மன அழுத்தத்தை போக்கும் என்று நான் நினைத்த இந்த விடயத்திலும்கூட பல பிரச்சனைகள் நிறைந்திருந்தன. 'ராத்திரி நேரத்துல ஒரு பொண்ணுக்கு என்ன வேணும்ன்னா நடக்கலாம்; ஊர் சுற்ற உனக்கு வேறு நேரமே கிடைக்கலையா?' என்பது என் பெற்றோரின் கருத்து.

'பைக்கை ஒப்பிடும்போது காரில் செல்வது கொஞ்சம் பாதுகாப்பானதுதான்; ஆனா எங்க போனாலும் ராத்திரி எட்டு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடு' என்பது என் உறவினர்களின் கருத்து.

இவர்கள் கூட பரவாயில்லை. பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி என்று சொல்வதைப்போல நான் இரவில் வெளியே சென்றால், எதிரில் குடும்பத்தோடு வரும் பெண்கள்கூட, 'இந்த நேரத்தில் உனக்கு இங்கு என்னம்மா வேலை? ஒழுங்கா வீடு போய் சேரு' என்று கேட்பதை என்னவென்று சொல்வது?

ஒரு நாள் இரவு என் தோழி ஒருத்தியின் பர்த்டே பார்ட்டிக்கு சென்றுவிட்டு என் வீட்டருகே குடியிருக்கும் தோழன் ஒருவனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது நள்ளிரவு ஒரு மணி இருக்கும்.

'யார் நீங்க? இந்த இடத்துல ரெண்டு பேரும் என்ன பண்றீங்க? உங்க அம்மா அப்பா ஃபோன் நம்பர் குடுங்க' என்றெல்லாம் கேட்டார் ஒரு போலீஸ்காரர்.

ஓர் ஆணும் பெண்ணும் இரவு நேரத்தில் ஒன்றாக வந்தாலே அது தவறான உறவா? இருவரின் வீடும் அருகருகே இருப்பதால் ஒன்றாக வந்தோம், அவ்வளவுதான். உண்மை தெரியாமல் கடினமான சொற்களை பயன்படுத்தி என் மனதை காயப்படுத்திய பலரில் இந்த போலீஸ்காரரும் ஒருவராகிவிட்டார்.

இரவு நேரத்தில் ஒரு பெண் தனியாக சென்றால் அவள் குணமற்றவள்; பெற்றோர் சரியாக வளர்க்கவில்லை, கயிற்றை அவிழ்த்துவிட்ட குதிரைபோல் விட்டுவிட்டார்கள் என்றெல்லாம் கூறுவார்கள். நண்பர்களுடன் குழுவாக சென்றால், கொஞ்சமும் பொறுப்பற்றவள்; நடத்தை சரியில்லை என்பார்கள்.

அதிலும் ஒர் ஆணோடு தனியாக சென்றுவிட்டால் அவ்வளவுதான், தவறான உறவு, கொஞ்சம்கூட பயமே இல்லை என்று இல்லாத பேச்சையெல்லாம் பேசுவார்கள்.

இரவில் சென்றால் பாதுகாப்பில்லை என்கிறார்களே, பகலில் சென்றால் மட்டும் ஒரு பெண் நூறு சதவிகிதம் பாதுகாப்போடு வீடு திரும்ப முடிகிறதா? எப்பொழுதுமே இரவில்தான் ஊர் சுற்ற வேண்டும் என்பது என் எண்ணமல்ல.

ஆனால் என் மன அமைதிக்காக, புத்துணர்ச்சிக்காக, இரவு நேர உலகை ரசிப்பதற்காக நான் நினைக்கும்போது செல்ல விரும்புகிறேன். என் சுதந்திரம் என்னிடம்தான் உள்ளது. எனக்கான எல்லை எது என்பதை வகுக்கவும், என்னை தற்காத்துக்கொள்ளவும் எனக்கு தெரியும்.

இரவு நேரத்தில் இளம்பெண் ஊர் சுற்றினால் தவறா?படத்தின் காப்புரிமை Getty Images

என்னைப் போன்ற எண்ணம் கொண்ட பெண்களின் சார்பில் நான் இந்த சமூகத்திடம் சில வேண்டுகோளை முன்வைக்க ஆசைப்படுகிறேன்.

'ஒரு பெண் என்றைக்கு எந்த பிரச்சனையுமின்றி தனியாக இரவு நேரத்தில் சாலையில் செல்கிறாளோ அன்றுதான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்' என்று காந்தி சொன்னதாக படித்திருக்கிறேன்.

ஆனால், என்றைக்கு இந்த சமூகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதோ, என்றைக்கு ஆண்கள் பெண்களைப் பார்க்கும் விதமும், என்றைக்கு பொதுமக்கள் சுதந்திரமாக வாழ நினைக்கும் பெண்களை பார்க்கும் பார்வையும் மாறுகின்றதோ, அன்றுதான் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியும் என்று நான் நினைக்கிறேன்.

பெண்கள் தாங்கள் தாங்களாகவே வாழ்வதைக்காட்டிலும் சிறந்த வாழ்க்கை எதுவுமில்லை. அவரவர்களுக்கென ஆசைகள் இருக்கின்றன. நான் நானாகத்தான் வாழப்போகிறேன், நாளை இல்லாவிட்டாலும் ஒரு நாள் இந்த சமூகம் மாறும் என்ற நம்பிக்கையோடு!

https://www.bbc.com/tamil/india-46770271

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

மகாத்மா காந்தி கூறியதைப் போல் ஒரு பெண் தனியாக இரவில் சாலையில் எந்தப் பிரச்னையுமின்றி நடந்து செல்லக்கூடிய நாள் வரவேண்டும். அதுவரை,சகோதரி, தக்க பாதுகாப்புடனேயே செல்லுங்கள். இயற்கை ஆணைக் காட்டிலும் பெண்ணை உடலளவில் சற்று பலவீனமாகவே படைத்துத் தொலைத்துள்ளது. ஏனைய விடயங்களில் மானிட சமூகம் முன்னேறும் வேளையில், பெண்ணின் நிலை பின்னடைவதாகத்தான் உலக நிகழ்வுகள் சுட்டுகின்றன. கல்வி நிலையிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய நாடுகளும் விதிவிலக்கில்லை. எனவே நாம் எதிர்பார்க்கும் நாள் வெகுதூரத்தில்தான் இருக்கிறது. நல்லோர் முயற்சியால் காலம் ஒரு நாள் மாறும். நம்பிக்கைதானே வாழ்க்கை!

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 1/12/2019 at 9:59 AM, பிழம்பு said:

இரவு நேரத்தில் வெளியே செல்வதை பெண்கள் விரும்புகிறீர்களா? அப்படி விரும்புபவர்கள், என்னென்ன காரணங்களுக்காக விரும்புகிறார்கள்? இது பற்றிய அவர்களது குடும்பத்தினரின் கருத்து என்ன? இந்த சமூகம் அதை எப்படி பார்க்கிறது? போன்ற கேள்விகளுக்கு விடையறிய இரவு நேரத்தில் வெளியே செல்ல விரும்பும் பெண் ஒருவரிடம் பிபிசி பேசியது. அந்த பெண்ணின் அடையாளம் அவரது வேண்டுகோளின்படி பெயர் அறியப்படாமல் வைக்கப்பட்டுள்ளது.

இதுக்கெல்லாம் தலைவர் பிரபாகரன் மாதிரி தலைவர்கள் இருக்க வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

உண்மையில் அப்படி ஒரு நிலை ஈழத்தில் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் இருந்தது என்று தான் சொல்லவேண்டும். "மகாத்மா" காந்தியின் வார்த்தைகளை போலல்லாது செயல் வடிவில் நிறைய விடயங்களை செய்து காட்டியவர்கள் அவர்கள்.
தியாகம் உங்களுக்கு "வார்த்தை" .... அவர்களுக்கு அது "வாழ்க்கை" 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • வடக்கு ஆப்பிரிக்காவில் 14 வயது சிறுவன், பாலியல் இன்பத்திற்காக துணி தைக்கும் ஊசியை பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துனிசியா நாட்டின் துனிஸ் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனொருவன், மூன்று தினங்களாக சிறுநீர் கழிக்க முடியாமல் பெரும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அப்போது முதலில் காரணம் என்ன என்று தெரியாமலிருந்த வைத்தியர்கள் அதன் பின் ஸ்கேன் செய்து பார்த்த போது, அவருடைய மர்ம உறுப்பில், துணி தைக்கும் ஊசி இருப்பதைக் கண்டு வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், அதனை அகற்றம் நோக்கில் நடத்தப்பட்ட சிகிச்சையில், மர்ம உறுப்பில் இருந்து 9 செ.மீற்றர் நீளமுள்ள ஊசியை நீக்கியுள்ளனர். இது குறித்து, அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், சிறுவன் பாலியல் இன்பத்திற்காக ஊசியை பயன்படுத்தியுள்ளான், அதுவே இறுதியில் விபரீதத்தில் முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி சிகிச்சைக்கு பின் சிறுவனை மனநல வைத்தியர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளான். அப்போது அவனை பரிசோதித்த வைத்தியர்கள் சிறுவன் நல்ல நிலையில் இருக்கிறான், அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார், இதையடுத்து சிகிச்சை முடிந்த அடுத்த நாளே சிறுவன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் வைத்தியர்கள் கூறுகையில், இது போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. என்ன தான் பாலியல் பொம்மைகள் விற்கப்பட்டாலும், பாலியல் இன்பத்திற்காக சிலர் வயர், நாடாக்கள்,  ஸ்டரா, சிறிய வகை மின்குமிழ்கள் போன்றவை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இது பெரிய உயிர் ஆபத்தை ஏற்படுத்தவல்லதென்றும் குறிப்பிட்டுள்ளனர்.  https://www.virakesari.lk/article/62915
    • உகண்டாவில் தெருவை சுத்தம் செய்யும் ஏழை குடும்பத்தில் பிறந்த சிறுவனை பிரித்தானியாவின் வேல்ஸ் நாட்டை சேர்ந்த தன்னார்வலர்கள் பலரும் இணைந்த பண உதவி செய்து படிக்க வைத்துள்ளனர். பிரித்தானியாவை சேர்ந்த கிறிஸ்டினா ராம்சே என்கிற சிறுமி தன்னுடைய 18 வயதில் உகாண்டா நாட்டிற்கு பள்ளியிருந்து சுற்றுலாச் சென்றுள்ளார். அங்கு தெருவின் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த ஜூலியஸ் முயோம்பியா என்கிற 18 வயது சிறுவனை சந்தித்துள்ளார்.  ஒரு அறை மட்டுமே கொண்ட அவனுடைய வீட்டில் 6 பேர் ஒன்றாக உறங்கி வந்துள்ளனர். மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் அவர்களுடைய வீட்டில் இருந்திருக்கவில்லை. அந்த சிறுவனுக்கு சிறிதளவு மட்டுமே ஆங்கிலம் பேச முடியும். அவனை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என நினைத்த கிறிஸ்டினா வேல்ஸ் நாட்டில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுவனின் குடும்ப புகைப்படத்தை அனுப்பி அவன் படிக்க விரும்புவதாக கடிதம் எழுதினார். அதேசமயம் சிறுவனுக்கு குடும்பத்திற்கு புதிதாக ஒரு வீடு கட்டிக்கொடுத்துள்ளார். இதனை பார்த்த அந்த ஆசிரியர்கள் மற்றும் நகரத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் பலரும் தங்களால் முடிந்த பணத்தை அனுப்பி சிறுவனை வேல்ஸ் நாட்டிற்கு வரவழைத்தனர். அங்கு அவன் தங்குவது மற்றும் மேல்படிப்புச் என செலவுகள் அனைத்தையும் வேல்ஸ் நாட்டில் இருந்த மக்கள் பலரும் ஏற்றுக்கொண்டனர்.   குடும்பக் கஷ்டத்தை நினைத்து பலமுறை அழுதாலும் கடினமான படித்து தற்போது வேல்ஸில் உள்ள பாங்கூர் பல்கலைக்கழகத்தில் வணிக மற்றும் சட்டப் பிரிவில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றுள்ளார்.   இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஜூலியஸ், தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பி குடிசையில் வாழும் மக்களுக்கு உதவ விரும்புவதாக கூறியுள்ளார். மேலும், தீவிர வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான லட்சியத்துடன் உகண்டாவில் அரசியல் வாழ்க்கையைத் தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.  https://www.virakesari.lk/article/62945
    • ஐயா பெருமாளு உங்களையே தமிழ் மக்களால் மறக்கவோ மன்னிக்கவோ முடியலை. அப்புறம் எப்படி கோத்தாவை? அதுசரி வடகிழக்கில் உங்க நாட்டு புலனாய்வு வைத்தது தானே சட்டம். அவங்க தான் இப்படி சொல்லச் சொன்னாங்களோ?
    • முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீதான போர்க் குற்றச் சாட்டுக்களை தமிழ் மக்கள் மன்னித்து மறக்க வேண்டும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீதான போர்க் குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக தமிழ் மக்கள் இனி அக்கறை செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில் போர்க் குற்றத்தில் கோத்தபாய மட்டும் ஈடுபடவில்லை.போர் நடைபெற்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க் குற்றத்தில் ஈடுபட்டனர் என சர்வதேசம் கூறி வருகின்றது. ஆனால் எதோ கோத்தபாய மட்டும் தான் போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக மாயை உருவாக்கப்பட்டுள்ளது.இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியான குற்றச் சட்டே.எனவே தமிழ் மக்கள் இவற்றை மறந்து மன்னித்து அபிவிருத்தி நோக்கி பயணிக்க வேண்டும். நாம் தமிழ்த் தேசியம் தனி நாடு என்ற விடுதலை கோரிய காலம் போய்விட்டது.இப்போது ஒரு நாட்டில் சகல இன மக்களும் ஒன்றுபட்டு வாழ வேண்டிய காலமாகும்.அதனை உணர்ந்து நாம் செயற்பட வேண்டும்.இங்குள்ள சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேசியத்தை காத்தவர் என்றும் கோத்தபாய அதனை அழித்தவர் என்ற கருத்தை பரப்பி வருகின்றனர்.கடந்த காலங்களில் இதே ஐக்கிய தேசியக் கட்சியினர் எவ்வளவு கொலைகளை செய்தவர்கள் என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. நாட்டில் அடுத்த ஜனாதிபதியாக வரப்போறவர் தனி சிங்கள வாக்குகளினால் மட்டும் வந்தால் அது தமிழ் மக்களை பாதிக்கும்.எனவே தான் நாம் ஆதரவு கூடவுள்ள தரப்புக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம்.தமிழ் மக்களின் ஆதரவு கோத்தபாயவுக்கு கிடைக்க வேண்டும்.என்றார். https://www.virakesari.lk/article/62944
    • இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா  - அமெரிக்கா கவலை  (நா.தனுஜா) இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமையானது மிகுந்த கவலையளிக்கிறது. சவேந்திர சில்வாவிற்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்ற நிலையில், அவரது இந்நியமனம் இலங்கை மீதான சர்வதேசத்தின் நன்மதிப்பையும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக்குகிறது என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. இராணுவத்தின் அலுவலகப் பிரதானியாகக் கடமையாற்றிய லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை இராணுவத் தளபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார்.  இந்நிலையில் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.    அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் அமெரிக்க மிகுந்த கவலையடைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினாலும், ஏனைய அமைப்புக்களாலும் சவேந்திர சில்வாவிற்கு எதிராக ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் பாராதூரமானதும், நம்பகத்தன்மை வாய்ந்தவையும் ஆகும். குறிப்பாக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையின் தேவை மிகவும் இன்றியமையாத ஒன்றாகக் காணப்படும் இத்தருணத்தில், சவேந்திர சில்வாவின் நியமனமானது இலங்கையின் சர்வதேச நன்மதிப்பைப் பாதிக்கும் அதேவேளை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாடுகளையும் வலுவற்றதாக்கும் வகையில் அமைந்துள்ளது. https://www.virakesari.lk/article/62946