சித்தாந்தம் எனும் உபாதை – நவீன் குமார் January 13, 2019 நம் சமூகத்தில் பெரும்பாலான விவாதங்கள் தெளிவான பாதையில் செல்ல முடியாமல் பல நேரங்களில் கீழ் மட்டத்திலேயே தேங்கிவிடுவதை அடிக்கடி காண முடிகிறது. சமூகத்தின் ஒரு முக்கியப் பிரச்னையை விவாதிக்கும்போது, அதற்கான தீர்வை நோக்கி நகர முடியாமல் பல நேரங்களில் பிரச்சனையின் ஆரம்பப் புள்ளியிலேயே நின்று விவாதிக்கிறோம். இணையம், இலக்கியச் சூழல், தொலைகாட்சி விவாதம் என எல்லாவற்றிலும் இது தான் நிலை. இதனைக் கொஞ்சம் உற்று கவனித்தால் அவற்றில் நடப்பவை எல்