Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அவர்களின் மகன் பட்டப் படிப்பில் வைத்தியருக்கான பட்டம்பெற்றுத் தற்போது வைத்தியராகச் சேவையாற்றத் தொடங்கியுள்ளார். அவரது மகள் வாகன உற்பத்தி தொழிற்சாலையில் (Mercedes Benz) பொறியியலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். அங்கு தேர்ந்து எடுப்பதற்கு நடாத்தப்பட்ட பரீட்சையில் அவர் அனைவரையும் விடக் கூடுதலான புள்ளிகளையும் பெற்று முதலாவதாக வந்து சிறப்புப் பாராட்டையும் பெற்றுள்ளார்.

இவர்கள் மேலும் உயர்வடைந்து எங்கள் மண்ணின் பெருமையையும் உயர்வடையச் செய்யவேண்டுமென வாழ்த்துகிறேன்.!!   

  • Like 16
  • Thanks 4
Link to post
Share on other sites
  • Replies 50
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி அவர்களின் மகன் பட்டப் படிப்பில் வைத்தியருக்கான பட்டம்பெற்றுத் தற்போது வைத்தியராகச் சேவையாற்றத் தொடங்கியுள்ளார். அவரது மகள் வாகன உற்பத்தி தொழிற்சாலையில் (Mercedes Benz) பொறியியலாளராகத் தேர்ந

பாஞ்ச்  அண்ணா...  இப்படி ஒரு, வாழ்த்துத் திரியை ஆரம்பிப்பார் என்று நான் எதிர் பார்க்கவில்லை. 👈 ஆனால்.. அவருக்கு, அந்த உரிமை உள்ளது. ஜேர்மனியில்..  எனக்கும்  அவருக்குமான நட்பு,  முப்பத்தி நான்கு வர

அப்ப... தாய்  தகப்பன்... தக்காளி தொக்கா.. சுவி.    மிக்க, நன்றி... நுணாவிலான். 😊   வெள்ளிக்கிழமை,   சும்மா...படுத்துக்  கிடந்த  சிங்கத்தை,  சீண்டி  விட்டமைக்காக.. சுவிய

  • கருத்துக்கள உறவுகள்

 பொறுப்பாக தமது கடமையை உணர்ந்த பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்.......!  😁

  • Like 3
Link to post
Share on other sites

பிள்ளைகளின் கடும் உழைப்புக்கு கிடைத்த பரிசை அவர்கள் பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்த பெற்றோரை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்??

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

பிள்ளைகளின் கடும் உழைப்புக்கு கிடைத்த பரிசை அவர்கள் பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்த பெற்றோரை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்??

 சும்மா சும்மா  தொடர்ந்து  தொடர்ந்து பெற்றோரை பாராட்டினால் பிறகு தமீழ் சிறி இங்கு   தத்துவம் சொல்லக் கிளம்பிடுவார். உங்களால் தாங்க முடியுமா......!  😁

  • Like 1
  • Haha 1
Link to post
Share on other sites
2 minutes ago, suvy said:

 சும்மா சும்மா  தொடர்ந்து  தொடர்ந்து பெற்றோரை பாராட்டினால் பிறகு தமீழ் சிறி இங்கு   தத்துவம் சொல்லக் கிளம்பிடுவார். உங்களால் தாங்க முடியுமா......!  😁

அவருக்கும் கொஞ்சம் கிறடிற்(credit) கொடுக்கத் தானே வேணும்.தத்துவம் வெள்ளிகளில் சொல்லா விட்டால் சரி.:grin:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

அவருக்கும் கொஞ்சம் கிறடிற்(credit) கொடுக்கத் தானே வேணும்.தத்துவம் வெள்ளிகளில் சொல்லா விட்டால் சரி.:grin:

Résultat de recherche d'images pour "lizard on the wall moving gif"

அது பாவம் தன்பாட்டில் வேலில போகுது. விடுங்கள்...... நாங்கள் வேட்டி  வேற கட்டியிருக்கிறம்......!   😊

எதுக்கும் கெதியா இடத்தை காலி பண்ணுவம்....!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்பாக தமது கடமையை உணர்ந்த பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்.......!

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தாய் தந்தையருக்கும் பிள்ளைகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ் சிறி

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்புடன் படித்து சிறப்புடன் தொழில் பெற்றிருக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல அவர்களை நற்பிரசைகளாக வளர்த்து வாழக் கற்றுக்கொடுத்த தமிழ்சிறி தம்பதிகளுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள். 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி குடும்பத்துக்கு வாழ்த்துக்கள்...!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்பையுணர்வுடன்  படித்து சித்தியடைந்த  பிள்ளைகளுக்கு பாராட்டுக்கள்  

பெற்றோருக்கு வாழ்த்துக்கள். 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தமிழ்சிறி குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள் 💐

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் தமிழ்சிறி!

ஆமா, இதற்கு எத்தனை பெல்ட்டுகள் தேவைப்பட்டன? பழைய, புதிய, அறுந்த, அறாத எல்லா Belt பட்டிகளுடனும் நின்று (உங்கள் தோளில் இருபக்கமும் மாலையாக போடலாம்) படம் ஒன்று எடுத்து போடுங்கள் தமிழ்சிறி பார்ப்போம்.

  • Like 1
  • Haha 4
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகள் சிறியண்ணைக்கும் அவரது பிள்ளைகளுக்கும் 
புலம்பெயர்  இளம் தலைமுறை இப்படித்தான் கல்விகற்று சிறந்து அவர்கள்தம் நாடுகளில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக வளரவேண்டும் 
ஒருகாலத்தில் இலங்கையின் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் காரணியாக இவர்கள் மாறும் காலம் தூரத்திலில்லை ....  

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணாவின் பிள்ளைகளுக்கும் பிள்ளைகளின் கல்விச் சாதனைக்கு உறுதுணையாக நின்ற பெற்றோருக்கும் பாராட்டுக்கள்👍🏾

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழ்சிறி!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ஸ்ரீ  அண்ணாவின் மகன் மற்றும் மக்களுக்கு வாழ்த்துக்கள். அவர்கள் இந்த நல்ல நிலைக்கு வர முழு ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்ஸ்ரீ அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் பிள்ளைகளே.

 

இலையான் கில்லரையும் துணைவியாரையும் இவ்விடத்தில் வாழ்த்துவது சிறப்பானது. பிள்ளைகளின் வளர்ப்பு என்பது புலம்பெயர்ந்த நாடுகளில் மிகக் கடினமானது. அதிலும் சாதாரண கல்வித்தகைமைகளோடு இருக்கும் பெற்றோருக்கு பிள்ளைகளில் கல்வி என்பது பெரும் சவாலே.... பிற மொழியில் போதிக்கப்படும் கல்விக்கு அடிப்படை உதவியையே செய்ய முடியாத சாதாரண பெற்றோருக்கு பிள்ளைகளின் உயர்கல்வி என்பது பெரும் திணறலுக்குரிய விடயமே. பிள்ளைகளின் முயற்சியும் பெற்றோரின் உற்சாகமும் இணையும்போதுதான் சாதிக்கமுடியும். இந்த வகையில் இலையான் கில்லருக்கும் துணைவியாருக்கும் பிள்ளைகள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்

  • Like 3
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  நண்பர்  குடும்பத்தினருக்கு....

 

இவர்களை  சந்தித்த போதே

விளையும்  பயிர்களை  தெரிந்தது

படிப்பில்  மட்டுமல்ல  பண்பிலும்

பெரியவர்களுடன்  பழகும்  மாண்பிலும் 

சிறியரின் வழியமைப்பு  தெரிந்தது

சான்றோன்  எனக்கேட்ட பெற்றவரின் மனநிலையில் நான்

 

வாழ்த்துக்கள்  குடும்பத்தார் அனைவருக்கும்...

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ் சிறி

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்!!பொறுப்புடன் படித்து நல்ல நிலைக்கு வந்துள்ள பிள்ளைகளையும்  அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்பளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்திய இழுவைப் படகுப் பிரச்சினை - ii இலங்கை, இந்திய மீனவர்களிடையே, பாக்கு நீரிணை கடற்பரப்பில் மீன்பிடி தொடர்பாக, நீண்டகாலமாக இருந்துவந்த மோதலை, இலங்கையில் மூன்று தசாப்தகால யுத்தத்தின் முடிவு, புதிய பரிமாணத்துக்கு இட்டுச் சென்றுள்ளது.    போர் முடிந்து ஒரு தசாப்தகாலம் முடிவடைந்துவிட்ட நிலையிலும், வடபுலத்து மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்கின்றன. இலங்கைக் கடற்பரப்பில், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய பிரவேசமும் மீனையும் பிற வளங்களையும் சூறையாடுவதும் அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவும் தமிழ் அரசியல் தலைமைகளது மௌனமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை என்ற கொடிய உண்மையைச் சொல்லியாக வேண்டியுள்ளது.    கடந்த வாரம், இந்திய இழுவைப் படகுகளால் வடபுலத்து மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அதன் வரலாற்றுப் பின்புலத்தையும் அரசியல் காரணிகளையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, இந்திய இழுவைப் படகுகள் ஏற்படுத்தியுள்ள சூழலியல் பிரச்சினைகளையும் பிராந்திய அரசியலையும் நோக்குவோம்.    இலங்கைக் கடற்பரப்பில், இந்திய இழுவைப் படகுகள் பல சூழலியல் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளன. மீன்களின் பெருக்கமும் வளர்ச்சியும் ஆழ்கடலுக்கும் பரவைக் கடலுக்கும் இடைப்பட்ட கடலடித்தளமேடைப் பகுதியிலேயே நடக்கின்றன. இலங்கையின் கடலடித்தள மேடையின் பெரும்பகுதி, மன்னாருக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட 480 கிலோமீற்றர் நீளமும் 22 முதல் 60 கிலோமீற்றர்அகலமும் கொண்ட பிரதேசமாகும். இப்பகுதியில், இழுவைப் படகு மீன்பிடி மிகக் கேடானது.  இழுவைப் படகுமீன்பிடி என்பது, கடலின் அடிவரை உள்ள அனைத்தையும் வாரிஅள்ளி எடுப்பதாகும். இதை, அடியோடு அள்ளுதல் (Bottom trawling) என்று அழைப்பர். இம் மீன்பிடி முறையில், ஆறு முக்கிய அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன.   1. வலையை வீசி, கடலின் அடி வரையுள்ள அனைத்தையும் அள்ளுவதால், மீன்களின் வகை, வளர்ச்சி போன்ற எவையும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.     2. கடலின் அடியோடு அள்ளும்போது, மீன்களுக்கான உணவாகவும் கடலடி உயிரியல் சமநிலையைப் பேண முக்கியமாகவும் உள்ள கடலடித் தாவரங்கள் அழிகின்றன. அவற்றின் அழிவு, கடலடி உயிரியல் சமநிலையைப் பாதிக்கிறது.    3. கடலின் அடியோடு அள்ளும் போது, மீன்களும் தாவரங்களும் மட்டுமன்றிப்பிற கடல்வாழ் உயிரினங்களும் சிக்குகின்றன. அவை மனிதப் பாவனைக்கு உதவாத,கடலடித்தள உயிரியல் நிலைப்புக்கு வேண்டிய நுண்ணுயிரிகளும் உயிரினங்களுமாகும். அவை பயனின்றி அழிகின்றன.    4. இழுவைப் படகு மீன்பிடியால் கடலடி பவளப்பாறைகளும் முருகைக் கற்களும் அழிகின்றன. முருகைக் கற்களின் அளவுக்கு மீறிய அழிவு, வடபகுதியில் மண்ணரிப்பு அதிகரிக்கவும் கடல் நீர் குடாநாட்டுக்குள் புகவும் வழிவகுக்கும்.    5. கடலின் அடியோடு அள்ளும் போது, மீன்களின் முட்டைகளும் குஞ்சுகளும் சிக்குகின்றன. இது, மீன்களின் இனப்பெருக்கத்தையும் விருத்தியையும் தடுக்கிறது. இச்செயற்பாடு, நீண்டகாலத்தில் அப்பகுதியை மீன்களற்ற பிரதேசமாக்கும்.    6. தேவையற்று வாரியள்ளப்படும்  கடல் தாவரங்களும் இறந்த உயிரினங்களும் மீண்டும் கடலில் கொட்டப்படுகின்றன. இவையும் பாரிய சூழலியல் பாதிப்புக்குக் காரணமாகின்றன.    இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், மீன் என்பது இயற்கை வளமாகும். அது இல்லாமல்போகக் கூடியது. கடலையும் இயற்கையையும் பாதுகாப்பதன் மூலமே, மீனை என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் வளமாகப் பேணலாம். மீன்வளத்தின் உருவாக்கம், கடலின் ஆழம்,கடலடித் தாவரவியல், கடலின் புவிசார் அமைப்பு, கடல் நீரோட்டம்,கடலின் வெப்ப தட்ப நிலை போன்ற பல காரணிகளில் தங்கியுள்ளது.  கடல்வள ஆய்வுகளைப் பொறுத்தவரையில், கடலில் பிடிக்கக்கூடிய மொத்த மீன்களில் 75% மட்டுமே பிடிக்கலாம். எஞ்சியதில் 75% முட்டையிட்டு இனப்பெருக்கத்தைப் பேணக்கூடிய பெண் மீன்களாக இருத்தல் வேண்டும். இச்சமநிலையைப் பேணின் மட்டுமே, மீன்வளம் தொடர்ச்சியாகக் கிடைக்கும் வளமாக இருக்கும். மீன்பிடியின் அளவை, சந்தை நிலைமைகள் தீர்மானிக்க முடியாது. கிடைக்கக்கூடிய மீன்களின் அளவே, சந்தையைத் தீர்மானிக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நிகழ்வது அரிது.    இந்திய மத்திய அரசாங்கமும் தமிழ்நாட்டு மாநில அரசாங்கமும் இந்திய, இலங்கை மீனவர் முரண்பாட்டின் முக்கிய குற்றவாளிகளாக உள்ளனர். ஒரு நாட்டின் கப்பல்கள், இன்னொரு நாட்டின் ஆட்புல எல்லைக்குள் மீன்பிடித்தால், அதைத் தடுப்பது அந்நாட்டின் அடிப்படைப் பொறுப்பாகும்.  ஆனால், இந்திய மத்திய அரசாங்கம் வருடத்துக்கு 65 நாள்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தைக் கோருகிறது. வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையோ, இழுவைப் படகுகளால் அவர்கள் அச்சுறுத்தப்படுவதையோ கவனிக்க, இந்தியா தயாராக இல்லை.  மாறாக, இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடைமுறை ஒழுங்கு தேவை எனவும் அவ்வாறான ஒழுங்கின் மூலம், இரு தரப்பினரும் அரசியல் விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டும் எனவும் இரு தரப்பினரும் மீன் பிடிக்கும் உரிமையுடன் கூடிய மீன் வளங்களைக் கூட்டு முகாமைத்துவத்தின் கீழ்ப் பகிர வேண்டும் எனவும் இந்தியத் தரப்பினர் சொல்லி வருகிறார்கள்.    சில ஆண்டுகளுக்கு முன், பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகுகளையும் மீனவர்களையும் இலங்கை மீனவர்கள் கைது செய்தனர். மறுநாள், மாதகல் மீனவர்களும் இதேவகையில், இந்திய இழுவைப் படகுகளையும் மீனவர்களையும் கைது செய்தனர். மறுநாள், உயர்மட்ட இந்திய இராஜதந்திர அழுத்தத்தின் மூலம் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாதென இலங்கை அதிகாரிகள், இந்திய மீனவர்களை எச்சரித்தனர்.    இலங்கை, இந்தியா ஆகிய இரண்டு அரசாங்கங்களும் இவ்விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதை, இச் சம்பவங்கள் விளக்குகின்றன. இலங்கை மீனவர்களுக்குப் பாதுகாப்பை வழங்க வேண்டிய கடற்படையினர், எதுவும் செய்யவியலாது தவிக்கின்றனர். அவர்கள், “எங்கள் கைகள், அதிகார மய்யத்தின் உயர்பீடத்தால் கட்டப்பட்டுள்ளன”  என்கிறார்கள்.  இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள சாதாரண கூலித் தொழிலாளர்களே ஆவர். அவர்களை வேலைக்கமர்த்தி வேலைவாங்கும் முதலாளிகளில், இந்திய நாடாளுமன்றத்தைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களும் அடங்குவர். கடல் எல்லையைத்தாண்டி மீன்வளத்தைக் வாரிஅள்ளிக் கொண்டுவருமாறு, சாதாரண மீனவர்கள், முதலாளிகளால் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.  அத்துமீறி மீன்பிடிப்போரைப் பற்றிப் பேசும்போது, அதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களையும் அவர்களுக்குப் பின்னால் உள்ள தமிழகத்தின் பெருமுதலாளிகளையும் வெவ்வேறாகக் கவனிக்க வேண்டும். அதைச் செய்யாமையாலேயே பிரச்சினை தீராதுள்ளது.    பல வருடங்களாக, இலங்கை அதிகாரிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலும் இரு தரப்பு மீனவர்களுக்கு இடையிலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துள்ளன. ஆனால், இந்திய அரசாங்கத்தினதும் இந்தியப் பெருமுதலாளிகளினதும் கடும் போக்கு, தீர்வை எட்டத் தடையாகிறது.  மறுபுறம், தமிழ் மக்களையும் அவர்களில் பகுதியினரான வடபகுதி மீனவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் இவ்விடயத்தில் மௌனம் காக்கின்றன. பலவற்றைப் பற்றியும் தீர்மானம் நிறைவேற்றிய வடமாகாண சபை, மீனவர் பிரச்சினை பற்றி, எதுவும் பேசவில்லை.  அதேவேளை, இலங்கை, இந்திய அரசாங்கங்கள், இருதரப்பு மீனவர்களினது பிரச்சினைகளையும் மோதல்களையும் அத்துமீறல்களையும் வைத்து, தத்தமது அரசியல் இலாபங்களைப் பெறுகின்றன. தமிழ்நாட்டுக் கட்சிகள் சில, இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையில் குளிர்காய்ந்து கொண்டு, மீன் முதலாளிகளின் பக்கம் நிற்பதுடன், தமது வாக்கு வங்கிகளுக்கு ஏற்றவாறும் நடந்து கொள்கின்றனர்.   இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையில் இந்தியாவின் பிராந்திய நலன், இந்தியப் பெருமுதலாளிகளின் நலன், இலங்கை அரசாங்கத்தின் இயலாமை என்பன பின்னிப்பிணைந்துள்ளன. மொத்தத்தில், இந்திய, இலங்கை அரசாங்கங்கள் கடல்வளத்தைப் பாதுகாப்பது பற்றி எவ்வித அக்கறையையும் காட்டவில்லை.   இவ்விடயத்தில்  இந்தியா, பிராந்திய அதிகாரத்தை நிறுவ முனைகிறது.  இலங்கைக்கோ, தேர்தலில் பாதிப்பைச் செலுத்தக்கூடிய விடயமல்ல; சில மீனவர்கள் பாதிக்கப்படுவதற்காக இந்தியாவைப் பகைப்பது சரியல்ல என்பதே, அதன் நிலைப்பாடாகும். பிரச்சினைப்படுவதும் மோதுவதும் இரு புறத்திலும் தமிழ் மீனவர்கள் என்பதால், இலங்கை அரசாங்கம் இம் மீனவர் பிரச்சினையில் அதிக ஆர்வம் காட்டாதிருப்பதும் அவதானிக்கக் கூடியதாகும்.   தமிழக மீனவத் தொழிலாளர்களும் வடபகுதி மீனவத் தொழிலாளர்களும் தமிழர்கள் என்பதற்கு அப்பால், வர்க்க ரீதியில் உழைக்கும் மக்களாவர். அவர்களைப் பகடைக்காய்களாக்கும் போக்கு, இரு புறமும் உள்ளதையிட்டு அவதானமாக இருத்தல் வேண்டும். அதேவேளை, இந்திய மேலாதிக்கத்தின் கரங்கள், எம்மீது படிவதை அனுமதியாது, அவற்றுக்கு எதிராகவும் அணிதிரள வேண்டும். இப்பிரச்சினையை இரண்டு அரசாங்கங்களோ தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளோ தீர்க்கக்கூடியதல்ல என்பதை உணர்ந்திருக்கிறோம். ஏனெனில், இவர்களில் எவருக்கும் இப்பிரச்சினைக்குத் தீர்வு தேடும் அக்கறையில்லை.  வடபகுதி மீனவர்கள் முதலில் குழுவாதங்களைத் தவிர்த்து, ஒன்றுதிரளல் தவிர்க்க இயலாதது. “இந்தியா தீர்வைப் பெற்றுத்தரும்” என்று சொல்பவர்கள், முதலில் வடபுலத்து மீனவர்களின் பிரச்சினையில் இந்தியாவின் நடத்தையை நோக்க வேண்டும். “இந்தியாவை நம்பவேண்டும்”  என்று கதை சொல்பவர்களின் நிலை யாதெனில், ‘பேச்சுப் பல்லக்கு, தம்பி கால்நடை’.      http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்திய-இழுவைப்-படகுப்-பிரச்சினை-ii/91-255912
    • LIVE🔴 கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் யாழில் தொடங்கியது உண்ணாவிரத போராட்டம்!
    • யார் கண் பட்டதோ? அம்மா..! நீங்கள் சாப்பிடுங்கள் நான் உறங்கப் போகிறேன்” என, தனது ஹோட்டலில் இருந்து கொண்டுவந்த உணவை,  மனைவியைப் பெற்றவளிடம் கொடுத்துவிட்டு,  தனது மனைவியுடனும் குழந்தையுடனும் நித்திரைக்குச் சென்ற ஷமிலவுக்கும் அவரது அன்பான குடும்பத்துக்கும் மாத்திரம், மறுநாள் பொழுது புலராமலே சென்றுவிட்டது. இம்மாதம் 20ஆம் திகதி, கண்டியில் இடம்பெற்ற இந்தத் துயரச் சம்பவம், மனிதம் நிறைந்த அனைத்து உள்ளங்களையும் ஒரு கணம் உலுக்கியது. தனது மகளைப் பறிகொடுத்த 59 வயதுடைய ஜயந்தி குமாரி, இவ்வாறு தெரிவிக்கின்றார். “ வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த நாங்கள், விவசாயிகள். இரண்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில்  மூத்தவளாக அச்சலா பிறந்தாள். அவள், படிப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் கெட்டிக்காரி. 5ஆம் தரம் வரை வெலிமடை பிரதேச பாடசாலையிலும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பண்டாரவளை பிரதேச பாடசாலைக்கும் சென்றாள். சாதாரண தரத்தில் சிறப்புச் சித்தி பெற்று உயர்தரத்தில் கணிதப் பிரிவில் ஒரு வருடம் கற்றார். பின்னர், கலைப்பிரிவில் தனது கல்வியைத் தொடர்ந்து, உயர்தரத்தில் 2 ஏ, 1 பி சித்திகளைப் பெற்று, பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானாள்.பின்னர், நுவரெலியா நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணியாகவும் பொல்கொல்ல திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் கடமையாற்றி வந்தார். இந்தநிலையிலேயே, கடந்த வருடம் நவம்பர் மாதம், சமிலவுடன் திருமணம் நடைபெற்று, இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தனது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனது மகளின் மகிழ்ச்சியும் எங்களது மகிழ்ச்சியும் கடவுளுக்கே பொறுக்கவில்லை” எனக்கூறி, துக்கத்தால் வார்த்தைகளை வௌிப்படுத்த முடியாது விம்மித் தவித்தார். உண்மைதான்! அண்மைய சில நாள்களாக, மலையகம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழையுடனான வானிலை நிலவி வந்தாலும், மழையின் தாக்கம், மணிசரிவு, குடியிருப்புகள் சேதமடைதல் உள்ளிட்ட அனர்த்தங்களுக்கு மலையகத்தில் குறைவிருக்கவில்லை. இத்தகைய வானிலை நிலவிய ஒரு நாளிலேயே, யாரும் எதிர்பாராத விதமாய், 5 மாடி கட்டடமானது, கீழிருந்த வீடொன்றின் மீது விழுந்து, மூன்று உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. விலை மதிப்பற்ற மூன்று உயிர்கள் கண் மூடித் திறப்பதற்குள் மண்ணுக்குள் புதையுண்டதற்கு யார் காரணம்? நிச்சயம், அந்த 5 மாடி வீட்டுச் சொந்தக்காரனை நோக்கி மாத்திரமே, எல்லோரும் விரல் நீட்டுகிறார்கள். “அவர்தான் காரணம்; அவர் மட்டுமே காரணம்” என, ஆவேசிக்கின்றார்கள். ஆனால், குறித்த ஒருவரை நோக்கி விரல் நீட்டும் ‘நாம் அனைவரும்’, ஏதோ ஒரு விதத்தில் இவ்வாறான அனர்த்தங்களுக்கு காரணமாகின்றோம் என்பதை உணர்வதில்லை. ‘நாம் அனைவரும்’ என்ற சொற்களுக்குள் முக்கியமாக இடம்பிடிப்பது அரச நிறுவனங்கள், அதிகாரிகளுமேயாவர். இவர்களின் பேராசையும் பணத்திமிரும் இவ்வாறான அனர்த்தங்களுக்குக் காரணமாக அமைகின்றது. கண்டி- பூவெலிகட பிரதேசம் எதுவெனவும் அதன் தரைத்தோற்ற அமைப்பு எப்படி இருக்கும் என்பதும் தெரிந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும்; ஆனால், பூவெலிகட பிரதேசம் எங்குள்ளது, அதன் நிலத் தோற்றம் என்ன என்பது குறித்து, 20ஆம் திகதிக்குப் பின்னரே, முழு நாடும் தேடதொடங்கியது. அதற்கு, இங்கு இடம்பெற்ற அகோர அனர்த்தமே, காரணமாகியது. ஆம்! கண்டி- பூவெலிகட சங்கமித்த  மாவத்தையில் முன்னாள் பஸ்நாயக்க நிலமே ஒருவருக்குச் சொந்தமாக, 5 மாடிக் கட்டடமொன்று காணப்பட்டது. அந்தக் கட்டடத்துக்கு கீழ் பகுதியில், இரண்டு  வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இவற்றின் மீதே, 20ஆம் திகதி அதிகாலை, ஐந்து மாடிக் கட்டடம் உடைந்து விழுந்ததன் காரணமாக, ஒன்றரை மாத குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர். 35 வயதுடைய சமில பிரசாத், 32 வயதுடைய அச்சலா ஏக்கநாயக்க, இவர்களின் ஒன்றரை மாத குழந்தை ஆகியோரே உயிரிழந்தனர். அச்சலா ஏக்கநாயக்க சட்டத்தரணி என்பதுடன், திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் கடமையாற்றி வந்தார். இவரின் கணவரான சமில, தனது வீட்டுடன் ஹோட்டலொன்றை நடத்தி வந்துள்ளார் என்றும் தெரியவருகிறது. சம்பவம் இடம்பெற்று சில மணிநேரத்துக்குள் மூவர், மீட்கப்பட்டு, கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது,  ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்திருந்தது. ஏனைய இருவரில், அச்சலாவின் தாயாரும் உள்ளடங்குகிறார். இவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இடிபாடுகளில் சிக்கியிருந்த தம்பதியினரை மீட்பதற்காக பொலிஸாரும்  அனர்த்த முகாமைத்துவ மீட்பு பிரிவினரும் இராணுவத்தினரும் இணைந்து மீட்புப் பணிகளில் முழுமூச்சாகச் செயற்பட்ட போதிலும், பிற்பகல் 2 மணியளவிலேயே இடிபாடுகளில் சிக்கிய தம்பதியினரைச் சடலங்களாக மீட்க முடிந்தது. சம்பவத்தை நேரில் கண்டவர் இந்தச் சம்பவம் தொடர்பில், உடைந்த கட்டடத்துக்குள் இருந்து மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் தாயாரான 59  வயதுடைய ஜயந்தி குமாரி, சம்பவம் தொடர்பில் இவ்வாறு கூறியிருந்தார். “நான், இந்த ஹோட்டலில் வேலைசெய்யும் பெண்ணுடன் அறையில் தூங்கிக்கொண்டிருந்தேன். மறுபக்க அறையில் மகளும் அவரது கணவரும் குழந்தையும் உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 5 மணிக்கு, பூமி வெடிப்பது போல் பாரிய சத்தமொன்று கேட்டது. என்ன நடந்தது என்று தெரியவில்லை. சுவரொன்று இடிந்து எமது கட்டிலுக்கு அருகில் கிடந்தது. இருட்டில் ஒன்றுமே தெரியவில்லை. அங்கே இங்கே கையைவிட்டு தேடிய போது, அலைபேசி கையில் கிடைத்தது. அதில் நான் 119 க்கு அழைத்து கட்டடம் உடைந்து விட்டதாகக் கூறினேன். சிறிது நேரத்தில் பொலிஸார் வந்தனர். அங்கிருந்தவர்கள் கயிற்றின் மூலம் எம்மை வெளியே எடுத்தனர். அப்போது எனது மகள், மருமகன் நித்திரை செய்த அறை, முழுமையாகக் காணாமல் போயிருந்தது.சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று அதிகாலை மூன்று மணியளவில், அந்தக் கட்டடத்தில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் கட்டடம் உடைந்து விழும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொண்ட கட்டடத்தின் உரிமையாளரான பஸ்நாயக்க நிலமே, தனது மனைவியையும்  இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, வீட்டிலிருந்த பணம், நகைகளை எடுத்துக்கொண்டு பிரதேசத்திலிருந்து ஓடிவிட்டார்” என, கண்களில் வழிந்தோடிய கண்ணீரைத்  துடைத்தவாறே அந்தத் தாய் கூறினார். இந்த நிலையில், இந்த அனர்த்தம் இடம்பெறுவதை அறிந்திருந்தும் எவருக்கும் தகவல் வழங்காமல் தப்பியோடிய கட்டடத்தின் உரிமையாளரைக் கைதுசெய்வதற்கான விசாரணைகளைக் கண்டி பொலிஸார் ஆரம்பித்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட நபரே, அனர்த்தம் இடம்பெற்ற அன்று ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார். “எனது மகள் இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதால், அவர் சம்பவ தினத்துக்கு முதல் நாள் அதிகாலை ஒரு மணி வரை படித்தார். அவர் நித்திரைக்குச் சென்ற பின்னர் தான் நாங்களும் நித்திரைக்குச் சென்றோம். 4.30 தொடக்கம் 5 மணிக்கிடையில் ஏதோ வெடிப்பது போல் சத்தம் கேட்டது. அப்போது நானும் மனைவியும் ‘பல்கனி’க்கு வந்து பார்த்த போது, அயல் வீட்டு நபர், டோர்ச்சை எம் வீட்டுப் பக்கம் அடித்தவாறு, ‘மிஸ்டர் லெவகே! உங்கள் வீட்டின் கொன்கிறீட் தூண்கள் உடைகின்றன; சீக்கிரம் வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள்’ என்றவுடன், நாம் வீட்டிலிருந்து வெளியேறினோம்.அத்துடன், சகல நிறுவனங்களினதும் அனுமதியைப் பெற்றே கட்டத்தை  கட்டினோம்” என்றார். இதன்போது குறிக்கிட்டு, ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவரது மகன், “அன்று எமது வீட்டில் வித்தியாசமான சத்தங்கள் கேட்டவாறு இருந்தன. எமது நாயும் வித்தியாசமாகக் குரைத்தது. உடனே நான், படுக்கையில் இருந்தவாறே அம்மாவுக்கு அலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, ‘அம்மா வீட்டுக்குள் திருடர்கள் வந்து விட்டார்களா, நாய் குரைக்கின்றது’ என்றேன். உடனே அம்மா சொன்னார், ‘வீடு வெடிக்கின்றது; வீட்டிலிருந்து செல்வோம்’ என்றார். உடனடியாக நான், பெற்றோர், சகோதரியை அழைத்துக் கொண்டு வாகனத்தில் ஏறி, சிறிது தூரம் வந்த போது எமது வீடு இடிந்து விழுந்ததை உணர்ந்தோம். ஆனால், வாகனத்தில் போகும் போதே, கண்டி பொலிஸாருக்குத் தகவல் சொல்வதற்காக அழைப்பை ஏற்படுத்திக் கொண்டே சென்றோம்.எங்களுக்குக் கீழ் வீட்டில் இருப்பவர்களுக்குச் சொல்லும் அளவுக்கு நேரமிருக்கவில்லை” என்றார். வீட்டு உரிமையாளரின் மனைவி, “உண்மையில், எமது வீடு உடைந்ததை விட, எமது அயல்வீட்டுக் குடும்பம் ஒன்று இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தமை கவலையளிக்கிறது. முறையாக அனுமதி பெற வேண்டியவர்களிடம் அனுமதி பெற்றே இந்த வீட்டை நிர்மாணித்தோம். உரிய தரத்துடனேயே இக்கட்டடத்தை அமைத்தோம். தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றிடம் இந்தக் கட்டடத்தை அமைக்கும் பொறுப்ைபை வழங்கினோம். இது சட்டரீதியாக அமைக்கப்பட்ட கட்டடம்” என்றும் தெரிவித்தார். சம்பவத்தின் பின்னரான விசாரணைகள் கட்டடம் உடைந்து விழுந்துள்ள பிரதேசத்தின் நிலப்பரப்பிலும் வீடுகளிலும் வெடிப்புகள் காணப்படுவதால், இந்தப் பிரதேசத்துக்கு அநாவசியமாகச் செல்வதையும் ஒன்று கூடுவதையும் தவிர்க்குமாறு, பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாசிங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். உடைந்து விழுந்துள்ள வீட்டின் கீழ் பகுதியில் நீர் செல்வதால், அங்கு மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் முடிந்தளவு அந்தப் பிரதேசத்திலிருந்து விலகியிருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். விழுந்த ஐந்து மாடிக் கட்டடத்தை அமைப்பதற்கு, அனுமதி வழங்கி விநியோகிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய, இந்தக் கட்டட அனுமதியை வழங்கிய கண்டி மாநகர சபை, தேசிய கட்டட அமைப்பு மற்றும் கட்டுமானத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பொறியியலாளர்கள் வழங்கிய ஆவணங்கள் உள்ளிட்டவையைப் பரிசோதனை செய்யவும் கண்டி பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்ததாகவும் அறிவித்தது. இந்தக் கட்டடத்தை அமைப்பதற்காக விசேட அனுமதிப்பத்திரம் மற்றும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிறுவனங்களில், இது தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டதா? என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்க ப்படவுள்ளதாகவும் கண்டி பொலிஸார் தெரிவித்திருந்தனர். சம்பவம் தொடர்பில், புவியியல் ரீதியான ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மண்சரிவால் இந்தக் கட்டடம் உடைந்திருக்கலாம் என வெளிவரும் தகவல்களில் உண்மையில்லை எனவும் கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளே அனர்த்தத்துக்குக் காரணமெனவும் கண்டி மாவட்டத்துக்குப் பொறுப்பான புவியியலாளர் சமந்த போகஹபிட்டிய தெரிவித்திருந்தார். குறித்த கட்டடமானது, உரிய தரத்துடன் நிர்மாணிக்கப்படவில்லை என்பது, கட்டடம் இடிந்து விழுந்ததன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதென்றும் நிலையற்ற புவியியல் காரணிகளைக் கொண்ட பிரதேசத்தில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளதென ஆய்வுகளை முன்னெடுத்த புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும், கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார, சம்பவம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்று, உயிரிழந்தவர்களின் உறவினர்களைச் சந்தித்ததுடன், “சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கினால், பெறுமதியான உயிர்களே இழக்கப்படும். எனவே, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு என்ற ரீதியில் மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட ஏனைய அரச நிறுவனங்களைத் தொடர்படுத்தி மலைப்பாங்கான பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள  சட்டத்துக்கு புறம்பான கட்டடங்கள் குறித்து, தீவிரமாகச் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார். குழுக்கள் நியமனம் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க, ஐந்து பேரடங்கிய  பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கண்டி நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆபத்தான நிலையிலுள்ள கட்டடங்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு, 10 பேர் கொண்ட குழுவொன்றை, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ. கமகே  நியமித்ததுடன், அக்குழு, நேற்றுமுன்தினம்  (23) முதற்றடவையாகக் கூடியது. இதன்போது கண்டி நகரில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத மற்றும் சர்ச்சைக்குரிய 256  கட்டடங்கள் தொடர்பில் உடனடி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதன் உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.  ஆனால், எத்தனை குழுக்கள் நியமித்தும் என்ன பயன்? வாழ்க்கை என்னும் சோலைக்குள் நுழைந்து, முழுதாக ஒரு வருடம் கடக்கும் முன்னரே, அநியாயமாக காவுகொள்ளப்பட்ட உயிர்கள்  மீள வரப்போவதில்லை. ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீருக்கு மத்தியில், நேற்று முன்தினம் (23) இந்த அழகான சிறிய குடும்பத்தின் பூதவுடல்கள் மஹியாவ பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டன. “இது விபத்தால் ஏற்பட்ட மரணம் அல்ல; கொலைக்கு ஒப்பான செயல்” எனத் தனது மகளையும் மருமகனையும் பேரக்குழந்தையையும் பறிகொடுத்த அச்சலாவின் தந்தையின் அழுகுரல், அனைவருக்கும் கண்ணீரை வரவழைத்தது. “கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டினாலும் மாண்டவர்கள் மீளப்போவதில்லை. எனவே, இதற்காக எங்களுக்கு எவ்வித நட்டஈடும் வேண்டாம். மேலும் பல உயிர்கள், இவ்வாறு காவு கொள்ளப்படுவதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும்” என்பதே, அந்தத் தந்தையின் வேண்டுகோளாக அமைந்திருந்தது. எனினும், இந்தச் தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்படவில்லை என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றஞ்சுமத்துவதுடன் பாதுகாப்பு கமெரா காணொளிகள் கூட இன்னும் பொலிஸாரால் பரிசோதிக்கப்படவில்லை என்றும் குற்றம் சுமத்துகின்றனர்.  மொத்தத்தில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளின் அசமந்த போக்கு இவ்வாறான அனர்த்தங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. எனவே இந்த 3 உயிர்களுடன் இவ்வாறான அனர்த்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அதிகாரிகள் மட்டுமல்ல நம் அனைவரது கடமை என்பதை உணர்வோமாக. (பட உதவி: சேஹ்ன் செனவிரத்ன)   http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/யார்-கண்-பட்ட-தோ/91-255928
    • SPB 50வருட கால நண்பன்... பாரதிராஜா உருக்கம்  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.