யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
பிழம்பு

பாலியல் உறவு : நீங்கள் கன்னித்தன்மையை இழக்க சரியான வயது என்ன?

Recommended Posts

 
படத்தில் உள்ளவர்கள் மாடல்களேபடத்தின் காப்புரிமை Getty Images

சீக்கிரமாகவே கன்னித்தன்மையை இழந்துவிடுவது பிரிட்டிஷின் இளம் வயதினரின் மத்தியில் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் மக்களின் பாலியல் நடத்தை குறித்த ஒரு ஆய்வு கூறியுள்ளது.

பதின் பருவ வயதில் உள்ள பெண்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கும் அதிகமானோரும், ஆண்களில் நான்கில் ஒரு பங்கினரும், 20 வயதுகளில் துவக்கத்தில் இருப்பவர்களும் தாங்கள் பாலியல் உறவில் ஈடுபட்ட காலகட்டம் 'சரியான காலமல்ல' என ஒப்புக்கொண்டுள்ளனர்.

பிரிட்டனில் பாலியல் உறவில் ஈடுபட ஒருவர் பதினாறு வயதை தாண்டியிருக்க வேண்டும்.

ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள பாலியல் அணுகுமுறை மற்றும் வாழ்வியல் முறை குறித்த தேசிய ஆராய்ச்சி, மக்களில் பலர் 16 வயதை தாண்டிவிட்டாலும் பாலியல் உறவுக்கு தயாராகாமல் போகலாம் எனத் தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் ஒவ்வொரு தசாப்த காலகட்டத்திலும் பாலியல் நடத்தை எப்படி இருக்கிறது என்பது குறித்து விளக்கமாக சொல்வது இந்த அறிக்கைதான்.

பி எம் ஜே பாலியல் மற்றும் இனப்பெருக்க நல இதழில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் மற்றும் ட்ராபிக்கல் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் இளம் வயதினரில் உள்ள 3000 பேரிடம் ஒரு ஆய்வு நடத்தியுள்ளது.

ஆய்வு முடிவு என்ன சொல்கிறது?

இளம் பெண்களில் 40 சதவீதத்தினரும், இளம் ஆண்களில் 26 சதவீதத்தினரும் தங்களது முதல் பாலியல் அனுபவம் சரியான நேரத்தில் நடக்கவில்லை என நினைக்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.

சற்று ஆழமாக அவர்களிடம் பேசிய போது, பலர் கன்னித்தன்மையை இழக்க இன்னும் சற்று காலம் காத்திருக்க விரும்பியதாகவும், சிலர் இன்னும் விரைவிலேயே கன்னித்தன்மையை இழக்க விரும்பியதாகவும் தெரியவந்ததாக ஆய்வு கூறுகிறது.

பெரும்பாலானவர்கள் 18 வயதில் பாலியல் உறவு அனுபவத்தை பெற்றிருக்கிறார்கள். பாதி பேர் 17 வயதில் முதல் முறையாக பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்கள். மூன்றில் ஒருவர் பதினாறு வயதுக்கும் முன்னதாகவே பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.

படத்தில் உள்ளவர்கள் மாடல்களேபடத்தின் காப்புரிமை UniversalImagesGroup

''இருவருக்கும் சம்மதமா?''

பாலியல் உறவில் ஈடுபட தனது இணையுடன் சம்மதம் பெற்று ஈடுபட்டார்களா என்பதையும் இந்த ஆய்வு ஆராய்ந்தது. அதாவது முதன் முறையாக பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு முன்னதாக, தனது இணையிடம் பாலியல் உறவில் ஈடுபட இருவரும் குடி போதையில் இல்லாத நிலையில் பரஸ்பரம் சம்மதம் பெற்றுக்கொண்டார்களா அல்லது போதையின் உச்சத்தில் பாலியல் உறவுக்கு இணங்கினார்களா என்பதையும் இந்த ஆய்வு ஆராய்ந்தது.

பெண்களில் பாதி பேர் இந்த ஆய்வில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். பத்தில் நான்கு ஆண்களுக்கும் இதில் தோல்வி கிடைத்துள்ளது.

ஐந்தில் ஒரு பெண் மற்றும் பத்தில் ஒரு இளைஞர் முதன் முறையாக பாலியல் உறவில் ஈடுபடும்போது இருவருக்கும் ஒரே நேரத்தில் விருப்பம் வரவில்லை என்கின்றனர், சிலர் பாலியல் உறவில் ஈடுபட அழுத்தங்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியின் நிறுவனர் பேராசிரியர் கேய் வெல்லிங்ஸ், பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு வயதை மட்டும் வைத்து ஒருவர் பாலியல் உறவில் ஆர்வமாக ஈடுபட தயாராவார் எனச் சொல்ல முடியாது என்கிறார்.

''ஒவ்வொரு இளைஞர், இளம் பெண்ணும் வித்தியாசமானவர்கள். சிலர் 15 வயதிலேயே பாலியல் உறவுக்கு தயாராகலாம். சிலர் 18 வயதிலும் பாலியல் உறவுக்கு தயாராகாமல் போகலாம்'' என்கிறார்.

சக ஆராய்ச்சியாளரான மருத்துவர் மெல்லிசா பால்மர் கூறுகையில், ''இளைஞர்களை விட இளம் பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடுமாறு தங்களது இணையிடம் இருந்து அழுத்தங்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர் என்பது எங்களது ஆய்வில் தெரியவந்துள்ளது'' என்றார்.

''ஆராய்ச்சி முடிவுகளில் சில சாதகமான முடிவுகளும் கிடைத்துள்ளன. இளம் வயதினரில் பத்தில் ஒருவர் முதல் பாலியல் உறவில் கருத்தடை செய்வதற்கான நம்பகமான வழிகளை கையாள்வதாக தெரிவித்துள்ளனர். பாதுகாப்பாகவும், இணையின் சம்மதம் பெற்று எப்படி முதல் பாலியல் உறவில் நல்லபடியாக ஈடுபடுவது என்பதை இளம் வயதினர் அறிய பள்ளிகளில் பாலியல் கல்வி குறித்து முறையாக கற்றுக்கொடுக்க வேண்டும்'' என்கிறார் மெல்லிசா.

படத்தில் உள்ளவர்கள் மாடல்களேபடத்தின் காப்புரிமை ullstein bild

சரி பாலியல் உறவில் ஈடுபட சரியான கால கட்டம் எது?

உங்களுக்கு பாலியல் உறவில் ஈடுபட வேண்டுமென தோன்றினால் முதல் உங்களிடம் சில கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்.

 • இது சரியான சமயம் என உணர்கிறீர்களா?
 • உண்மையில் நான் எனது இணையை நேசிக்கிறேனா?
 • இணையும் உங்களை அதே அளவுக்கு நேசிக்கிறாரா?
 • கரு உருவாகாமல் தடுப்பதற்காகவும், எச் ஐ வி போன்ற தொற்றுகளில் இருந்து பாதுகாக்கவும் ஆணுறை பயன்படுத்துவது குறித்து எனது இணையுடன் நான் பேசினேனா? அப்படி பேசிய நிகழ்வு சரியாக இருந்ததா?
 • கர்ப்பத்தை தடுக்க என்ன கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது என்பது குறித்து பேசினோமா? அதனை கைவசம் வைத்திருக்கிறோமா?
 • பாலியல் உறவில் ஈடுபட முதலில் ஒப்புக்கொண்டு பின்னர் ஒருவேளை ஏதோவொரு புள்ளியில் மனம் மாறினால், பாலியல் உறவுக்கு 'நோ'சொல்ல என்னால் முடியுமா? அப்படியொரு நிலையை இருவராலும் சகஜமாக எதிர்கொள்ள முடியுமா?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் உங்களால் 'ஆம்' என விடை கூட முடிந்தால். நீங்கள் பாலியல் உறவில் ஈடுபட சரியான சமயம் வந்திருக்கலாம். ஆனால் கீழ்கண்ட ஏதாவதொரு கேள்விக்கு உங்கள் பதில் 'ஆம்' எனில் சரியான நேரமாக அது இல்லாமலிக்கலாம்.

 • நான் யாரிடமிருந்தாவது பாலியல் உறவில் ஈடுபட அழுத்தங்களை சந்திக்கிறேனா? குறிப்பாக எனது இணையிடம் இருந்து அல்லது நண்பர்களிடமிருந்து.
 • பாலியல் உறவில் ஈடுப்பட்ட பின்னர் நான் ஏதாவது வருத்தம் கொள்வேனா?
 • எனது நண்பர்களை ஈர்க்கவோ அல்லது அவர்களை தக்கவைக்க பாலியல் உறவில் ஈடுபடுவது குறித்து சிந்திக்கிறேனா?
 • எனது இணையை என்னுடன் தக்க வைக்கவே பாலியல் உறவு குறித்து யோசிக்கிறேனா?

ஆதாரம் - பிரிட்டனின் நேஷனல் ஹெல்த் சர்வீஸ்

https://www.bbc.com/tamil/science-46883227

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • போற போக்கை பாத்தால் மனிசரை விட சாமியளுக்குத்தான் பாதுகாப்பு கனக்க வேணும் போலை கிடக்கு......
  • உலகெங்கிலும் உள்ள இலங்கை மக்களை உலுக்கிய ஈஸ்டர் கொலைவெறி தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசு பகீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் பயங்கரவாத தடுப்பு பணியகம் வெளியிட்டுள்ள அந்த எச்சரிக்கை அறிக்கையில், பயணிகள் எவரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம் எனவும், இலங்கைக்கு மிக மிக கடுமையான அச்சுறுத்தல் தற்போதும் அமுலில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி இலங்கையில் தற்போதுவரை தங்கியிருக்கும் வெளிநாட்டு பயணிகள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தற்போதைய சூழல் கட்டுக்குள் வரும்வரை எவரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம் எனவும் வலியுறித்தியுள்ளது. இந்த எச்சரிக்கையானது, இஸ்ரேல் அரசின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகளுடன் கலந்தாலோசனைகளுக்கு பின்னர் பயங்கரவாத தடுப்பு பணியகம் வெளியிட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பாக வல்லரசு நாடுகள் வெளியிடும் எச்சரிக்கைகளை பல நிலைகளில் தரம் பிரிக்கின்றனர். இதில் இலங்கை தொடர்பான எச்சரிக்கையை நிலை ஒன்று என வகைப்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்பது உத்தியோகப்பூர்வமற்ற உத்தரவாகும். ஈஸ்டர் தின கொலைவெறித் தாக்குதலில் பெரும்பாலும் உள்ளூர் மக்களே என்றாலும், பிரிட்டிஷ், அமெரிக்க, அவுஸ்திரேலிய, துருக்கிய, இந்திய, சீன, டேனிஷ், டச்சு மற்றும் போர்த்துகீசிய நாட்டவர்கள் உள்ளிட்ட 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/118662?ref=home-imp-flag
  • நீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம் சிறீலங்கா அரச பயங்கரவாத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக வளர்க்கப்பட்ட இஸ்லாமிய அடிப்டைவாதம் என்ற பயங்கரவாதம் தனது கோரப்பற்களை மீண்டும் தமிழ் மக்கள் மீதும் வெளிநாட்டவர்கள் மீதும் பதித்துள்ளது.   சிறீலங்காவில் புனித ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 369 பேர் கொல்லப்பட்டதுடன், 600 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.   தமக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களை சிறீலங்கா அரசு உதாசீனப்படுத்திய அதேசமயம், சிறீலங்கா அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட உள்நாட்டு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்கள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். ஐ.எஸ் என்ற அமைப்புடன் இணைந்தே இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளன.   இந்த தாக்குதலில் பங்குபற்றிய தற்கொலையாளிகளும், அதனை திட்டமிட்டவர்களும் சிறீலங்காவைச் சேர்ந்தவர்களே அது மட்டுமல்லாது அவர்கள் ஒன்றைக் கவனமாக கையாண்டுள்ளார்கள் அதாவது தமிழர்களையும் வெளிநாட்டவர்களையுமே தமது பிரதான இலக்காக தெரிவுசெய்துள்ளனர். கண்டியில் உள்ள தேவாலயத்தையோ அல்லது இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் பௌத்த தீவிரவாதிகளின் ஆலயத்தையோ அவர்கள் தமது இலக்காக தெரிவுசெய்யவில்லை.   அதற்கான காரணம் சிங்களவர்கள் அதிகம் கொல்லப்பட்டால் அது ஒரு இனக்கலவரமாக மாற்றம் பெற்று பெருமளவில் இஸ்லாம் மக்கள் கொல்லப்படுவார்கள் என்ற உள்ளுர் அரசியல் பாடம் தாக்குதலாளிகளுக்கு நன்கு தெரிந்துள்ளது. எனவே தாக்குதலுக்கான திட்டம் முழுக்க முழுக்க சிறீலங்கா அரசியலில் உள்ள முக்கிய நபர்களினதும், அவர்களால் உருவக்கப்பட்ட அமைப்புக்களினதும் மூளையில் இருந்து உதித்தவை.   வெறும் உரிமை கோரலுக்கு மட்டுமே ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அழிந்து போன அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் தமிழ் மக்கள் அதிக இழப்புக்களை சந்தித்த அதேவேளை சிறீலங்கா அரசு மிகப்பெரும் அரசியல் அனுகூலங்களைப் பெற்றுள்ளது. அனைத்துலகத்தின் அனுதாபம் சிறீலங்காவை நோக்கி திரும்பியுள்ளது. ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் கூட அணைக்கப்பட்டுள்ளது.   சிறீலங்காவை பலப்படுத்தி சிறீலங்கா அரசுடன் நாம் கைகோர்ப்பதற்கு சுற்றுலாப்பயணிகள் தொடர்ந்து சிறீலங்காவுக்கு செல்ல வேண்டும் அது தான் பயங்கரவாதிகளுக்கு நாம் கொடுக்கும் தோல்வி என பிரித்தானியா நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற பிரதிநிதி ஒருவர் முழங்குகின்றார்.   அதாவது சிறீலங்கா தான் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் என்ற பாவங்களை புனித ஞாயிறு அன்று மீண்டும் தமிழ் மக்களை பலிகொடுத்து கழுவத்துணிந்துள்ளது. அதில் வெற்றியும் கண்டுள்ளது.   இந்த நிலையில் சிறீலங்காவில் இறந்தவர்களுக்கு அஞ்சலிகளை செலுத்துகின்றோம் என ஏராளமான புலம்பெயர் அமைப்புக்கள் கிளம்பியுள்ளன, அவர்களுக்கு ஆதரவாக புலம்பெயர் தேசங்களில் உள்ள ஆலயங்களும் தமது வியாபாரத்தை ஆரம்பித்துள்ளன.   ஆனால் நாம் ஒன்றை மட்டும் மறந்துவிடுகின்றோம், இந்த அஞ்சலிகளை எதிர்காலத்தில் இடம்பெறும் அனர்த்தங்களை தடுப்பதற்கான கருவியாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதை. வழமைபோல அஞ்சலிகளை செலுத்திவிட்டு அடுத்த படுகொலைகள் நடக்கும்வரை மீண்டும் காத்திருக்கும் வழக்கத்தை கைவிடுங்கள்.   அதாவது நாம் செலுத்தும் அஞ்சலிகள் மூலம் சிறீலங்கா அரசு பயனடைந்து விடாது பார்த்துக்கொள்வதே தற்போதைய எமது நுண்அரசியலாகும்.   இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் தவறில்லை, ஆனால் எந்த ஒரு அரசியல் நோக்கத்திற்காக தனக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல்களைக்கூட கருத்தில் எடுக்காது 369 உயிர்களை சிறீலங்கா அரசு படுகொலை செய்ததோ அதனை நாம் எமது அஞ்சலியின் போது தெளிவுபடுத்த வேண்டும்.   ஆம் புனித ஞாயிறு அன்று படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களை ஒருபுறமும், சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் நவாலி சென் பீற்றேஸ் தேவாலயம் உட்பட பல ஆலயங்களில் படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களை மறுபுறமும், சிறீலங்கா அரசின் கிழக்கு மாகாண ஆளுநர் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட அமைப்புடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்னொருபுறமும் வைத்துவிட்டு நடுவில் நின்று கதறியழுங்கள் நடுநிலைவாதிகளே.   சிறீலங்காவில் காணப்படும் இனமுரன்பாடுகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை, பௌத்த சிங்கள தீவிரவாதம் நாட்டில் முற்றாக அழிக்கப்படும்வரை சுற்றுலாப்பயணிகள் அங்கு செல்வதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்று கூறி உங்கள் தேசங்களில் உள்ள வேற்று இனத்தவர்களுக்கு சிறீலங்கா அரசியலை தெளிவுபடுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். அவர்களினதும் அவர்களின் குழந்தைகளினதும் உயிர்களை காப்பாற்றுங்கள்.   சிறீலங்கா அமைதிப் பூங்கா ஆகிவிட்டது என்ற சிறீலங்கா அரசின் பிரச்சாரத்திற்கு சாவு மணியடிப்பதற்குரிய ஆரம்பப்புள்ளியாக இந்த அஞ்சலிக் கூட்டங்களை ஆரம்பியுங்கள் ஆனால் தொடர்ந்து கனவயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு சிறீலங்கா அரசின் இனவிரோத அரசியலை ஒரு கொதிநிலையில் வைத்திருங்கள்.   அது தான் புனித ஞாயிறு அன்று சிறீலங்கா அரசின் அரசியல் நன்மைக்காக ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பெயரில் கொல்லப்பட்ட ஆத்மாக்களுக்கு நீங்கள் செய்யும் அஞ்சலியாகும். http://www.eelamenews.com/?p=122599&fbclid=IwAR0ExwS192CJj8troFlxYmKOouRDZg5ODQOXUMeZaSgutONkK_grmQRX_iU
  • உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசிமின் உரைகள் அடங்கிய காணொளிகளை அடையாளப்படுத்தி இந்தியாவில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.. கடும்போக்கு வாதக் கருத்துக்கள் அடங்கிய உரைகளை அவர் காணொளிகளாக தரவேற்றியதுடன், அவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதேவேளை, இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ மற்றும் தேசிய புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் இரண்டு அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று இலங்கைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவின் உயர்மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அவர்கள் இந்த தாக்குதல் குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ஏற்கனவே எப்.பீ.ஐ. மற்றும் பிரித்தானியாவின் ஸ்கொட்லன்யாட் பொலிஸாரும் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதுடன் இஸ்ரேல் நாட்டின் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. https://www.ibctamil.com/srilanka/80/118679
  • விடுதலைப்புலிகள் அரசாங்கத்துடனும் அரச படைகளுடன் மட்டுமே மோதினர்! விடுதலைப்புலிகள் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தியதில்லை என அரச புலனாய்வு சேவையின் ஆராய்ச்சி பிரிவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரும், புலனாய்வு ஆலோசகருமான கலாநிதி அஜித் ரோஹன கொலோன்னே தெரிவித்துள்ளார். தனியார் சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணாலில் அவர் இதனை கூறியுள்ளார். விடுதலைப்புலிகளுக்கு ஐரோப்பா மற்றும் மேற்குலக நாடுகளில் எந்த எதிர்ப்புகளும் இருக்கவில்லை. அவர்கள் வெளிநாட்டவர்களை குறித்து தற்கொலை தாக்குதல்களை நடத்தியதில்லை. அந்த விடயத்தில் அவர்கள் கவனமாக இருந்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய போது, வெளிநாட்டு விமான சேவைகளின் விமானங்கள் புறப்பட்டுச் செல்லும் வரையில் ஓடுதளப் பகுதிகளில் பதுங்கி இருந்து ஸ்ரீலங்கன் விமானங்கள் மீது மாத்திரமே தாக்குதல் நடத்தினர். அத்துடன் விடுதலைப் புலிகள் அரசாங்கத்துடனும் அரச படைகளுடன் மட்டுமே மோதினர். ஆனால், தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களில் வெளிநாட்டவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளை அவர்கள் இலக்கு வைத்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மக்களுக்கு பெரிய உயிர் அழிவை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கலாம். வெளிநாட்டவர்களுக்கு கூடுதலான சேதத்தை ஏற்படுத்துவதும், சுற்றுலாத்துறையை மழுங்கடிக்கச் செய்வதும் இத்தாக்குதலின் பிரதான நோக்கமாக இருக்கலாம். இதேபோன்ற தாக்குதல்கள் வெளிநாடுகளிலும் நடந்திருக்கின்றன. குறிப்பாக பிரான்ஸ் போன்ற நாடுகள் இதுபோன்ற தாக்கதல்களை எதிர்நோக்கியிருக்கின்றன. இலங்கையில் தற்போது இடம்பெற்ற தாக்குதல்களினால் இலங்கை ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டிருக்கின்றன. இதனைத் தவிர கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது குறி வைக்கப்பட்டுள்ளதால், தாக்குதல் நடத்தியவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான தாக்குதல் நடத்தினார்களா என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என கலாநிதி அஜித் ரோஹன கொலோன்னே குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, விடுதலைப் புலிகள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/118660?ref=home-imp-flag