-
Tell a friend
-
Topics
-
Posts
-
இதை திரும்பத்திரும்ப சொல்லியும் எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. செய்யும் செயலுக்கு என்ன விளைவு என்று பார்த்துத் செய்பவர்கள் ஈழத்தமிழர் மத்தியில் குறைவாக இருப்பதால்தான் இவர்கள் (கவனிக்க - நாங்கள் என்று சொல்லவில்லை) பிழைக்கத்தக்க இனம் அல்ல என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். இவர்கள் வெறும் உணர்வாளர்கள். ஏற்றிவிட்டால் துள்ளிக்குதிப்பார்கள், அடித்துச்சரித்தால் ஒப்பாரி வைப்பார்கள். அதைத்தவிர வேறு எதுவும் செய்யும் ஆற்றல் இவர்களுக்கு இல்லை - இல்லவே இல்லை. தூங்கிக்கொண்டுருந்த தமிழனை தட்டெயழுப்பியவன் யார்?
-
ஒரிசா பாலு சுத்தவில்லை என்றால் அதை அவர் தான் நிரூபிக்க வேண்டும், மேலே கோசான் (நான் நினைக்கிறேன் ஆறு மாதங்களில் இரண்டாவது தடவையாக!) எழுதியிருப்பது போல! ஆனால், எப்படி நிரூபிப்பது? உதாரணமாக: முதல் தோன்றிய மொழியை எப்படி வரையறுப்பது என்பதே இன்னும் தெளிவில்லை! தானிய வரவு செலவைக் கணக்கு வைப்பதற்காக கோடுகளும் ,புள்ளிகளும் போட்ட போது தான் மொழி முதன் முதலில் எழுதப் பட்டதாக (வரி வடிவம்) மானிடவியலாளர் யுவால் நோவா ஹரிரி சொல்கிறார். வரிகளும் கோடுகளும் எந்த மொழிக்குச் சொந்தமானவை என்று எப்படி நிறுவுவது? சரி, பேச்சு மொழியில் எது முதலில் தோன்றியது என்றால் , வரிவடிவம் வந்த போது தான் என்ன பேசினார்கள் என்றே பதிவு உருவானது. எனவே முதல் பேசப் பட்ட மொழி எதுவென்று ஆயிரம் ஆண்டுகள் கடந்த பதிவை வைத்து எப்படித் தீர்மானிப்பது? 2009 இல் நடந்த நிகழ்வுகளே 2020 இல் தவறுகளுடன் பதியப் படும் போது ஆயிரம் ஆண்டுகளில் எவ்வளவு திரிபுகள் உருவாகியிருக்கும்? எனவே இந்த முதன் முதல் தோன்றியது எந்த மொழி , எதில் இருந்து சொற்கள் எங்கு சென்றன என்பதெல்லாம் ஒலியை (phonetics) வைத்துக் கொண்டு ஆராய முடியாது. இதனால் தான் etymology நிபுணர்களே இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை! ஒரிசா பாலுவுக்கு இருக்கும் சௌகரியம் அவர் etymologist அல்ல! சொல்லும் எதையும் ஒரு ஆய்வுச் சஞ்சிகையில் பிரசுரித்து அங்கீகாரம் தேட வேண்டிய அழுத்தம் அவருக்கில்லை! எனவே, இப்படி தமிழர்களிடையே மட்டும் பேசிக் கைதட்டல் வாங்கி விட்டு நகர்ந்து விடுவார்! இதனால் நன்மை ஒன்றும் இல்லை! தீமை: வந்த வெள்ளம் கிணற்று நீரைப் பாழாக்கி விடுவது போல தமிழின் நிரூபிக்கப் பட்ட தொன்மையும் செம்மையும் கூட கேள்விக்குள்ளாகும்! இதனால் தான் ஒரிசா பாலு போன்றோர் ஊக்குவிக்கப் படக் கூடது என்கிறேன்!
-
ஒரே பைபிள் இல் (அத்தனை அமெரிக்க தலைவர்களும் பொய் சத்தியம் செய்து செய்து) அது பழுதாகி விட்டது 😀
-
நினைச்சன் இரண்டு கதநாயகர்கள் நடிக்கிறான்கள் கதை இருக்கும் என்று நினைத்தேன் இதனால்த்தான் தியேட்டர் சென்று படம் பார்க்கிறதையே நிறுத்தி கனகாலம் ஆகிவிட்டது . AI செயற்கை நுண்ணறிவு கதை எழுதி ஒரு குறும்படம் யூடியூப்பிலும் வெளியிட்டு விட்டார்கள் இன்னும் பழிவாங்கும் கதையிலேயே நிக்கினம் தமிழ் சினிமா கூட்டம் . https://www.digitaltrends.com/features/solicitors-gpt3-future-of-filmmaking/
-
உதாரணம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை! ஆனால், மீண்டும் முயற்சிக்கிறேன்: செய்யும் செயலுக்கு என்ன விளைவு என்று பார்த்துத் தான் தனிமனித வாழ்வே அன்றாடம் நடக்கும் போது, ஒரு மக்கள் கூட்டத்தின் பாதுகாப்பைப் பொறுப்பெடுத்ததாக கூறிய அமைப்பு "செயல்படுவதற்காகவே மட்டுமே செயல்பட்டார்கள்" என்பதை சிலாகிக்க முடியவில்லை! அதை சிலாகிப்போரிடம் இதை மீள மீளச் சொல்ல வேண்டியிருப்பது துரதிர்ஷ்டம்! அதை நண்டு சொன்னாலும் நரி சொன்னாலும் அடிக்கருத்து ஒன்று தான்!
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.