Jump to content

நிலவில் முளைத்தது... பருத்தி விதை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

sssssssssssssss.jpg

நிலவில் முளைத்தது... பருத்தி விதை.

நிலவின் மறுபக்கத்திற்கு சீனா அனுப்பிய விண்கலத்திலிருந்த பருத்தி விதை முளைக்கத் தொடங்கியுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிலவின் பின் பகுதியை எவராலும் பார்க்க முடிவதில்லை. இதுவரை பல்வேறு ஆராய்ச்சிகளை உலக நாடுகள் செய்து வந்தாலும், நிலவின் பின்பகுதியை ஆய்வு செய்ய முதலில் சீனாவே ஆரம்பித்திருந்தது.

இதற்காக கடந்த மாதம் 8 ஆம் திகதி Chang’e 4 என்ற விண்கலத்தை சீனா நிலவுக்கு அனுப்பியது. அந்த விண்கலம் இந்த மாதம் 3 ஆம் திகதி நிலவின் இருண்ட பகுதி என்று கூறப்படும் யாரும் பார்த்திராத பகுதியில் இறங்கியது.

நிலவின் மறுபக்கத்தில் யாரும் இதுவரை கண்டிராத ஒளிப்படங்களை சீன விண்வெளி மையத்திற்கு அனுப்பியது. நிலவில் பூமியைப் போல் இல்லாமல் சற்று மாறுபட்டே கால சூழல் அமைகிறது.

மேலும், விண்கலம் பழுதடையாமல் இருக்க அதிலுள்ள வெப்பமூட்டிகள் தொடர்ந்து இயக்கப்படும் எனவும், அந்த கருவிகள் உருவாக்கும் மின்சக்திகளைப் பெற்று நிலவின் குளிர் நிலையை துல்லியமாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் விண்வெளி ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், அங்கு உயிர் வாழ்வதற்கான சூழ்நிலை இருக்கின்றதா என்றும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றது. இதற்காக தனது விண்கலத்தை வித்தியாசமான முறையில் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது சீனா.

நிலவின் மறுபக்கத்தில் உள்ள பெருங்குழியில் ஆய்வு நடைபெறுவதாகவும், இந்த ஆய்வில், நிலாவின் தரையில் என்னென்ன கனிமங்கள் உள்ளன, அங்கு கதிர் வீச்சு எப்படி உள்ளது, சூழல் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் ஆராய்ந்து வருவதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆய்வு செய்து வரும் பணிகளைத் தனது விண்கலன்கள் மூலம் நேரலையில் சீன விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். இது விண்வெளி ஆய்வில் வித்தியாசமான முயற்சியாகவும் இருந்து வருகின்றது.

நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக உருளைக்கிழங்கு, பருத்தி விதைகள் மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள் என்பன ஒரு கொள்கலனில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்தநிலையில் சீனா Chang’e 4 மூலம் ஆய்வுக்காக கொண்டு சென்ற பருத்தி விதைகள் முளைக்க ஆரம்பித்துள்ளன.

http://athavannews.com/நிலவில்-முளைத்தது-பருத்த/

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.