Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

குறுக்கெழுத்துப் போட்டி


Recommended Posts

குறுக்கெழுத்துப் போட்டி இல - 28

kurukku28nz8.jpg

இடமிருந்து வலம்

1 - தயிரில் இருந்து கிடைப்பது

3- இது கறுத்தால் மழை வரும்

6- தந்தம் உள்ள மிருகம்

8- தேய்ந்த நிலவு

10- இந்தியாவை கலக்கிய கொள்ளைக்காரி

12-இது படியாத கை என அரசியல்வாதிகள் கூறுவர்

13- சேறு

15- அணுக்களால் ஆனது குழம்பியுள்ளது

17-சமையலறை ஆயுதம்

21- இதைப்போல் அண்ணன் தம்பி உதவாதாம்

22- இளைஞர் யுவதிகளின் நாள்

மேலிருந்து கீழ்

2- இதுவும் ஒரு அளவையாகும்.

4- இது கொடுத்தால் நண்பனும் பகைவனாவான்

5- மணப்பெண் அணிவது

7- செல்லப்பிராணி தலைகீழாகவுள்ளது

8- உருக்கிச் செய்வது தலைகீழாகவுள்ளது

9-இது பிறாந்தால் நியாயம் பிறக்குமாம் தலைகீழாகவுள்ளது.

11- மாடு குதிரை என்பவற்றுக்கு அடிப்பது.

13-கிரகம்

14-திக்கு

15- விதியை இதனால் வெல்லலாமாம்

16-இடையூறு

18-இன்னொருவர் குழந்தையை எடுத்து வளர்ப்பது குழம்பியுள்ளது

19- குழம்பியுள்ளது

20- சாலை போட உதவுவது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 76
  • Created
  • Last Reply

வணக்(கம்) நிலா அக்கா..(வந்துட்டோமல) :rolleyes: ..இன்னைக்கு தான் இதை பார்த்தனான் அல்லோ..யாருமே விளையாடல்ல போல ஆனபடியா நான் விளையாட வந்துட்டன் அல்லோ..எப்படி பந்துகளை முகம் கொடுக்க போறன் எண்டு பார்போமா.. :)

ஆனா ஒன்னு.."அம்பயர்" எனக்கு தான் ஆதரவு வழங்கனும் உது எப்படி இருக்கு...சரி மைதானத்தில இறங்கிறன் என்ன..

இடமிருந்து வலம்

1 - தயிரில் இருந்து கிடைப்பது - மோர் (எண்டு நினைக்கிறன் சரியோ தெரியா)

3- இது கறுத்தால் மழை வரும் - மேகம் (மேகம் கறுக்குது எண்டு "ஜோ" அக்கா பாட்டு பாடினவா அல்லோ) :wub:

6- தந்தம் உள்ள மிருகம் - யானை..(ஓ..எனக்கு யானை எண்டா பயம்)

8- தேய்ந்த நிலவு - பிறை (நிலா அக்கா நீங்களும் தேய்வியளோ)..

10- இந்தியாவை கலக்கிய கொள்ளைக்காரி - பூலான் (யாரோ நல்ல வேகமா பந்த போட்டுவிட்டீனம்).. :D

12-இது படியாத கை என அரசியல்வாதிகள் கூறுவர் - கறை (எண்ட கையும் அப்படின்னா நம்புவியளோ??)..

13- சேறு - சகதி (அடித்து போட்டன் "சிக்சர்").. :)

15- அணுக்களால் ஆனது குழம்பியுள்ளது - கனிமம் (மறுபடி யாரோ வேகமா பந்த போட்டுவிட்டீனம்)..

17-சமையலறை ஆயுதம் - கத்தி (பலருக்கு ஆயுதம் என்ன)..

21- இதைப்போல் அண்ணன் தம்பி உதவாதாம் - அடி (உப்படி சொல்லி சொல்லி தான் எண்ட அம்மா அடிக்கிறவா)

22- இளைஞர் யுவதிகளின் நாள் - காதலர் தினம் (தாத்தா,பாட்டிமாரும் கொண்டாடலாம் அல்லோ).. :)

ஒரு மாதிரி முதல் 25 "ஓவரை" சமாளித்து போட்டன் அடுத்த 25 "ஓவர்" இருக்கு என்ன..

மேலிருந்து கீழ்

2- இதுவும் ஒரு அளவையாகும். - யார் (சுழற்பந்து வீச்சாளர் வந்துட்டாங்க போல)..

4- இது கொடுத்தால் நண்பனும் பகைவனாவான் - கடன் (அடித்து போட்டன் "சிக்சர்") :)

5- மணப்பெண் அணிவது - கூறை (ஏன் சுடிதார் அணிய கூடாதா)..

7- செல்லப்பிராணி தலைகீழாகவுள்ளது - பூனை (மியாவ்..மியாவ்)

8- உருக்கிச் செய்வது தலைகீழாகவுள்ளது - கம்பி (மறுபடி எங்கன்ட அணியில ஒருத்தர் ஆட்டமிழந்து விட்டார்) :D

9-இது பிறாந்தால் நியாயம் பிறக்குமாம் தலைகீழாகவுள்ளது. - கலகம் (எங்கன்ட நாரதர் மாமா)..

11- மாடு குதிரை என்பவற்றுக்கு அடிப்பது. - லாடம் (அவைக்கு நோகாதா??)..

13-கிரகம் - சனி (ஏழரை சனி எனக்கு முடிந்து போச்சு)

14-திக்கு - திசை..

15- விதியை இதனால் வெல்லலாமாம் - மதி (எனக்கு இல்ல எண்டு நீங்க சொல்லுறது கேட்குது)..

16-இடையூறு - கலி (மறுபடி எங்கன்ட அணியில ஒருவர் ஆட்டமிழந்து விட்டார்)..

18-இன்னொருவர் குழந்தையை எடுத்து வளர்ப்பது குழம்பியுள்ளது - தத்து

19- குழம்பியுள்ளது - அம்மா (என்னை குழப்பிட்டியள்)..

20- சாலை போட உதவுவது - தார் (கடசி பந்தில "சிக்சர்" ஆக்கும்).. :(

மட்டுபடுத்தபட்ட 50 "ஒவர்களின்" நிறைவில் எமது அணி அப்படி இப்படி விளையாடி இருக்கிறது..எனவே எனி மத்தியஸ்தர் வந்து வெற்றி தோல்வியை பற்றி சொல்லுங்கோ என்ன..(சிறபாட்டகாரருக்கு பரிசு இருந்தா அதை எனக்கு தாங்கோ சொல்லிட்டன்).. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.