Jump to content

வடமராட்சியில் எம்.ஏ. சுமந்திரனின் படம் நிறம்பூசி மறைக்கப்பட்டுள்ளது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_31041.jpg?zoom=1.2100000262260437&re
யாழ்.வடமராட்சி பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பதாகையில் காணப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனின் படத்திற்கு நிறப்பூச்சு (பெயின்ட்) பூசப்பட்டு உள்ளது.

வடமராட்சி பகுதியில் ‘கம்பெரலிய அபிவிருத்தி யுத்தம் ‘ எனும் தொனிப்பொருளின் ஊடாக வடமராட்சி கொட்டடி சித்தி விநாயகர் ஆலய கேணி மற்றும் பருத்தித்துறை நீதிமன்ற வீதி ஆகியன புனரமைப்பு செய்யப்பட்டன.

புனரமைப்பு செய்யப்பட்ட கேணி மற்றும் வீதி ஆகியன மக்கள் மயப்படுத்தப்பட்ட பின்னர் அது குறித்த பதாகைகள் அருகில் காட்சி ப்படுத்தப்பட்டு உள்ளன.

குறித்த பதாகையினை கடந்த புதன் கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம் . ஏ.சுமந்திரன் திரைநீக்கம் செய்து வைத்தார்.

குறித்த பதாகையில் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் எம். ஏ சுமந்திரன் ஆகியோரின் படங்களும் காணப்பட்டன. அதில் நேற்றைய தினம் இரவு இனம் தெரியாத நபர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் படத்தின் மீது வர்ண பூச்சு (பெயின்ட்) பூசி அவரது படத்தினை மறைத்துள்ளார்கள்.

குறித்த பதாகையில் எம்.ஏ சுமந்திரனின் படம் காணப்பட்டமை சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_31021.jpg?zoom=1.2100000262260437&reIMG_3103.jpg?zoom=1.2100000262260437&res  IMG_3105.jpg?zoom=1.2100000262260437&res

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் உவ்வளவு வெளிநாடுகளுக்கு போய் வந்தும்....அந்தந்த நாட்டு அரசியல் நடைமுறைகளை பார்த்தும் திருந்தேல்லை எண்டது கவலைக்குரிய விசயம்.

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

சுமந்திரன் உவ்வளவு வெளிநாடுகளுக்கு போய் வந்தும்....அந்தந்த நாட்டு அரசியல் நடைமுறைகளை பார்த்தும் திருந்தேல்லை எண்டது கவலைக்குரிய விசயம்.

மேற்கத்தைய கலாச்சாரத்திலிருந்து நாம் எதனை கற்க வேண்டும் என இன்னோரு திரியில் கேட்டிருந்தீர்கள். 

இது ஒரு சின்ன உதாரணம், இப்படி பல் நூற்றுக்கணக்கானவை உள்ளன.

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

சுமந்திரன் உவ்வளவு வெளிநாடுகளுக்கு போய் வந்தும்....அந்தந்த நாட்டு அரசியல் நடைமுறைகளை பார்த்தும் திருந்தேல்லை எண்டது கவலைக்குரிய விசயம்.

அவருடைய படங்களை அவரே நிறப் பூச்சின் மூலம் மறைக்க சொல்லி உத்தரவிட்டிருக்கிறாரா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூசாமல் விட்ட இருவர் படத்தை காணும் போது .. அரசு பேருந்தில் இளவட்டங்கள் புகை பிடிக்காதீர்  என்ற வாசகத்தில் " பு " வை மட்டும் அழித்தது போல் உள்ளது ..  😎

Link to comment
Share on other sites

2 hours ago, மியாவ் said:

அவருடைய படங்களை அவரே நிறப் பூச்சின் மூலம் மறைக்க சொல்லி உத்தரவிட்டிருக்கிறாரா...

உண்மைதான் மியா....! படம்மட்டும் போட்டால் போதுமா...?? பதாகையில் மற்றவர்களைப்போல் தன்னையும் சிறப்புச்செய்து, தனது பெயரும் எழுதப்படவில்லை என்ற ஆதங்க, ஆத்திரத்தில் உத்தரவிட்டிருக்கலாம்.....😲

Link to comment
Share on other sites

1 hour ago, Paanch said:

உண்மைதான் மியா....! படம்மட்டும் போட்டால் போதுமா...?? பதாகையில் மற்றவர்களைப்போல் தன்னையும் சிறப்புச்செய்து, தனது பெயரும் எழுதப்படவில்லை என்ற ஆதங்க, ஆத்திரத்தில் உத்தரவிட்டிருக்கலாம்.....😲

எப்பா இப்படி எல்லாமா யோசிக்கிறாய்ங்க... 

பாவம் வல்லரசுகள் தான் மூளையை போட்டு கசக்கி பிழிந்து ஒரு காரியத்தில் இறங்கி இவர்களிடம் வந்து விளக்கினால், டின் பீர் ஆர்டர் பண்ணட்டுமா என்கிறார்கள் போலுள்ளது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, manimaran said:

மேற்கத்தைய கலாச்சாரத்திலிருந்து நாம் எதனை கற்க வேண்டும் என இன்னோரு திரியில் கேட்டிருந்தீர்கள். 

இது ஒரு சின்ன உதாரணம், இப்படி பல் நூற்றுக்கணக்கானவை உள்ளன.

சொல்லுறனெண்டு கோவிக்கக்கூடாது.....கலாச்சாரம் வேறை அரசியல் வேறை எண்டதை இந்த இடத்திலை சொல்லிக்கொள்ள விரும்புறன். இது உங்களுக்கு புள்ளி குத்தினவருக்கும் சேர்த்து சொல்லியிருக்கு.....அவருக்கு வேறை தனியாய் வெத்திலை வைச்சு சொல்ல எனக்கு நேரமில்லை :grin:

14 hours ago, மியாவ் said:

அவருடைய படங்களை அவரே நிறப் பூச்சின் மூலம் மறைக்க சொல்லி உத்தரவிட்டிருக்கிறாரா...

சுமந்திரன் தன்ரை அரசியல் லாபத்துக்காக செய்யக்கூடிய ஆள்...tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது.

நானும்கூட சுமந்திரன் செய்யும் அரசியல்பற்றி அதீத நம்பிக்கையுட இருக்கவில்லை. அவர் எதைச் செய்ய எத்தனிக்கிறார், அவர் அதை அடைவாரா என்கிற தெளிவுகூட இல்லை. ஏனென்றால் அவர் பற்றி ஆரம்பத்திலிருந்தே எனக்குச் சந்தேகங்கள் இருந்து வருகின்றன. 

சரி, சுமந்திரன் செய்யும் அரசியலுக்கு நிகரான மற்றையவர்கள் செய்யும் அரசியல் என்ன? நாடுகடந்த அரசும் , ஒருங்கிணைப்புக் குழுவும் செய்துவரும் அரசியல் என்ன? தாயக மக்களுடன் இவர்களுக்கு இருக்கும் நெருக்கம் என்ன? தாயக மக்கள் மேல் இவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு எவ்வளவு? சுமந்திரனது அரசியலுக்குப் பதிலாக இவர்கள் மக்கள் முன் முன்வைக்கும் அரசியல் என்ன? 

தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் கட்டமைக்கப்பட்ட புலம்பெயர் தேசத்து கட்டுமானங்களும்  வலையமைப்புக்களும் இன்றுவரை அரசியல் ரீதியாகவும் சமூகப் பொருளாதார ரீதியாகவும் தாயக மக்களுக்குச் செய்திருக்கும் வேலைகள் என்ன?  தேசிய விடுதலைக்கென்று கட்டமைக்கப்பட்ட எமது வளங்கள் இன்று தனியார் கைகளில் மறைந்துகிடப்பதேன்?

தேசியக் கூட்டமைப்பினை புலம்பெயர் அமைப்புக்களும் விமர்சிக்கின்றன  என்பதன் மூலம் அவர்கள் எமக்கு சொல்லும் ஒரே செய்தி, அவர்களிடம் ஒரு அரசியல் வேலைத்திட்டம் இல்லையென்பதும், கூட்டமைப்பின் அரசியலை அவர்களும் மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதும்தான். அல்லது, கூட்டமைப்பின் அரசியலின் முற்றான தோல்வியை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். 

தாயக மக்களுக்கான உண்மையான அரசியலையோ அல்லது சமூகப் பொருளாதார வேலைத்திட்டங்களையோ இன்றுவரை முன்வைக்க மறுத்துவரும் எமது புலம்பெயர் தேசிய அமைப்புக்கள், கூட்டமைப்பின் முற்றான தோல்வியொன்றினை எதிர்பார்ப்பதன்மூலம் அடைய விரும்புவது தாயக மக்கள் அரசியல் அநாதைகள் ஆவதையா?

ஆனால், தாயக மக்கள் இவர்களைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போதாவது தெரியவில்லை என்றால், ஐய்யோ பாவம்

Link to comment
Share on other sites

3 hours ago, ragunathan said:

என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது.

.....

தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் கட்டமைக்கப்பட்ட புலம்பெயர் தேசத்து கட்டுமானங்களும்  வலையமைப்புக்களும் இன்றுவரை அரசியல் ரீதியாகவும் சமூகப் பொருளாதார ரீதியாகவும் தாயக மக்களுக்குச் செய்திருக்கும் வேலைகள் என்ன?  தேசிய விடுதலைக்கென்று கட்டமைக்கப்பட்ட எமது வளங்கள் இன்று தனியார் கைகளில் மறைந்துகிடப்பதேன்?

தேசியக் கூட்டமைப்பினை புலம்பெயர் அமைப்புக்களும் விமர்சிக்கின்றன  என்பதன் மூலம் அவர்கள் எமக்கு சொல்லும் ஒரே செய்தி, அவர்களிடம் ஒரு அரசியல் வேலைத்திட்டம் இல்லையென்பதும், கூட்டமைப்பின் அரசியலை அவர்களும் மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதும்தான். அல்லது, கூட்டமைப்பின் அரசியலின் முற்றான தோல்வியை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். 

சில விடயங்கள் பகிரங்கமாக பேசப்படா விட்டாலும் அவை பலருக்கும் தெரிந்தவை. நீங்கள் நல்ல மனிதர் – இது போன்ற விடயங்களை நீங்கள் நினைத்தும் பார்க்க மாட்டீர்கள். ஆகவே இங்கே நான் பகிரங்கமாகவே எழுதுகிறேன்.

போர்க்குணம்

1985/86 காலப்பகுதி கோட்டையில் இலங்கை இராணுவம் இருந்து செல் அடிக்கும் காலம். நாங்கள் இராணுவம் துவேஷத்தால் செல் அடித்து மக்களை கொல்கிறார்கள் என்று அவர்களை வெறுத்த காலம். கோட்டையை சுற்றி இயக்கங்கள் அரண் அமைத்து காவலுக்கு இருந்த காலம் அது.

பக்கத்தில் யாழ். பெரிய மருத்துவமனை. அங்கு தான் எங்கள் மருத்துவ பீட மாணவ மாணவிகள் செய்முறை மருத்துவ பயிற்சி பெற்று வந்தார்கள். காவலுக்கு இருக்கும் இயக்கங்களின் தலைமை உறுப்பினர்கள் சிலர் மருத்துவ மனையில் ஒரு அலுவகத்தை வைத்து அங்கிருந்து தமது அரண்களை நிருவகித்தார்கள். மருத்துவ பீடத்தின் இளம் மாணவிகளுக்கும் இந்த இளம் தலைவர்களும் இடையே இயற்கையான நட்பும் இருந்தது.

சில நேரங்களில் இராணுவம் செல் அடிப்பது நின்றுவிடும். இந்த நேரங்களில் இந்த தலைமை உறுப்பினர்கள், இப்படி செல் அடிப்பது நின்றால் போர்ச்சூழல் இல்லாமல் போய் மக்கள் போர்க்குணம் அற்று இயக்கங்களுக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்று இந்த மாணவிகளுக்கு விளக்கம் சொன்னார்கள். பின்னர் கோட்டைக்குள் இராணுவத்துக்கு செல் அடிக்குமாறு  தமது அரண்களுக்கு உத்தரவு இடுவார்கள். இவர்கள் செல் அடிக்க இராணுவம் மீண்டும் செல் அடிக்க ஆரம்பிக்கும். மக்கள் மடிவார்கள். மக்கள் இராணுவத்தையும் ஸ்ரீ லங்கா அரசை மேலும் வெறுத்து இயக்கங்களுக்கு அதிக ஆதரவு கொடுத்தார்கள்.

கனவாகிவிடும் தமிழீழம்

இன்று சுமேந்திரன் செய்வது, மக்களை இந்த போர்ச்சூழல் இல்லாத வாழ்வுக்கு கொண்டு சென்று அந்த வாழ்வை நிரந்தரமாக்கும் ஒரு முயற்சி. அதன் பின் ஆயுதங்களை மௌனித்த போராளிகள் தமது மௌனத்தை கலைக்கும் சாத்தியம் இல்லாமல் போய்விடும். தமிழீழம் வெறும் நிரந்தர கனவாகிவிடும்.

சுமேந்திரன் இந்த முயற்சியில் படுதோல்வி அடைந்து, மக்கள் அடக்குமுறையிலும் இராணுவ ஆட்சியிலும் தொடர்ந்து வாழும் போது தான் மக்கள் போர்க்குணம்  கொள்வார்கள்; என்றோ ஒருநாள்  மௌனிக்கப்பட்ட ஆயுங்கள் பேச ஆரம்பிக்கும். இதற்கு சின்ன சின்ன அளவில் சில ஆயுத செயற்பாடுகளும் தேவை. அவற்றில் சில தான் சுமேந்திரன் மீதான கொலை முயற்சி, கிழக்கில் போலீசார் மாவீரர் நாளில் கொலை போன்ற செயற்பாடுகள். இவற்றின் பின்னால் சில புலம்பெயர் அமைப்புகள் இருப்பதாக ஸ்ரீ லங்கா அரசும் அமெரிக்க அரசும் நம்புகின்றன.

அமெரிக்க நலன்கள்

இந்த மௌனிக்க பட்ட ஆயுதங்கள் நிரந்தரமாக மௌனமாகி இருப்பதையே அமெரிக்க பிராந்திய நலன்கள் இன்று விரும்புகின்றன. சீன மற்றும் இந்திய பிராந்திய நலன்கள் சிக்கலானவை. மைத்திரி கொலை முயற்சியின் பின் இந்திய ரோ இருப்பது அதை காட்டுகிறது. அமெரிக்க நலன்களுடன் சிங்கள நலன்கள் ஒத்துப்போவதை ரணில் உறுதிப்படுத்துவார். அமெரிக்க நலன்களுடன் ஈழத் தமிழர் நலன்கள் ஒத்துப்போவதை சுமேந்திரன் உறுதிப்படுத்துவார். இவர்களிடம் அமெரிக்கா இதை எதிர்பார்க்கிறது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீன – இந்திய – அமெரிக்க பனிப்போர் இடம்பெறாமல் இருக்க ரணில் மற்றும் சுமேந்திரனின் வெற்றி இன்றியமையாதது. ஆனால் இவர்களின் வெற்றி தமிழீழத்தை நந்திக்கடலில் நிரந்தரமாக ஆழப்புதைத்து விடும்.

எமது தெரிவுகள் 

அமேரிக்கா எனது நாடு என்ற அளவிலும் ஈழத்தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்று நான் விரும்புவதாலும் நான் சுமேந்திரனும் ரணிலும் தமது முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். தமிழ் மக்களின் அடுத்து வரும் பல தலைமுறைகளின் எதிர்காலம் பாதுகாப்பாகவும் செழிப்பாகவும் இருக்க தமிழீழமே ஒரே வழி என்ற சிந்தனையின் காரணமாக எம்மில் பலர் ரணிலும் சுமேந்திரனும் தோல்வி அடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். கோத்தபாயவையும், மகிந்தவையும் மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்து, அமெரிக்க அரசின் நலன்களையும் அதனை நிறைவேற்ற முயற்சிக்கும் ரணிலையும் சுமேந்திரனையும் தோற்கடித்து, மௌனித்த ஆயுதங்களை மீண்டும் பேசவைத்து, என்றோ ஒருநாள் தமிழீழத்தை நிறுவ சில புலம்பெயர்ந்த அமைப்புகள் விரும்புகின்றன.  ஈழத்தமிழருக்கு இடைக்கால அரசை கொடுக்க சம்மதித்ததுக்காக ஆட்சி கவிழ்க்க பட்ட ரணிலை , ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரித்து தோல்வி அடைய வைத்து மகிந்தவை ஜனாதிபதியாக்கியது இந்த அமெரிக்க எதிர்ப்பு சிந்தனையால் தான். அமெரிக்க நலன்களுக்கு தமிழீழம் பாதகமானது என்ற நிலையில், தமிழீழம் வேண்டுமா இல்லையா என்ற முடிவும், வேண்டுமானால் அதற்கு எமது மக்கள் கொடுக்க தயாரான விலையும் தான் இங்கே உங்கள் பாதையை தெரிவு செய்யும்  காரணிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

அமேரிக்கா எனது நாடு என்ற அளவிலும் ஈழத்தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்று நான் விரும்புவதாலும் நான் சுமேந்திரனும் ரணிலும் தமது முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். 

ஆயுதப் போராட்டம் மீண்டும் துளிர்விட சாத்தியம் இல்லை. இனவிடுதலைக்கான வன்முறைப் போராட்டங்கள் 1960- 2000 ஆண்டுகள்வரை சரியென்ற போக்கு இருந்தது. ஆனால் இப்போது உலகம் மாறிவிட்டது. தமிழர்களும் மாறிவிட்டார்கள். போர்க்குணம் மழுங்கிவிட்டது. அதனைக் கூராக்க முடியாத சூழல்தான் உள்ளது.

ஆனாலும் தமிழர்கள் ஏற்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றைத் தருமளவிற்கு சிங்களவர்கள் இன்னும் மாறவில்லை. அவர்களை மாறாமல் வைத்திருக்க வலுவாக உள்ளது சிங்கள பெளத்த பெருந்தேசியவாதம். 

யதீந்திராவின் பத்தியில் இருந்து..

Quote

சி தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற விவாதத்தின் போது புதிய அரசியல் யாப்பை மகிந்த எதிர்த்து பேசியிருந்தார். தாம் அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் மகிந்த தெரிவித்திருந்தார். இது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே! ஆனால் இதற்கு ரணில் வழங்கியிருக்கும் பதில்தான் இங்கு ஊன்றி கவனிக்க வேண்டியது. ‘ஒற்றையாட்சியை உறுதிப்படுத்துதல், பவுத்தத்திற்கு முன்னுரிமை, சமஸ்டி இல்லை, வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை – பின்னர் எதற்காக இந்த புதிய அரசியல் யாப்பை எதிர்க்கின்றீர்கள்?’ ஆனால் நாம் இங்கு கேட்க வேண்டிய கேள்வி – இதுதான் ரணில் – சம்பந்தன் கூட்டின், புதிய அரசியல் யாப்பு என்றால் – பின்னர் எதற்காக அந்த புதிய அரசியல் யாப்பு? இருக்கின்ற யாப்பையே பின்தொடராலாமே! இதற்கு பின்னரும் கூட்டமைப்பினர் புதிய அரசியல் யாப்பில் சமஸ்டி ஒழிந்திருக்கிறது என்று கூறப்போகின்றனரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சுமத்திரன் தன்னுடைய அரசியல் லாபத்துக்காக தானே ஆட்களைவைத்து படங்களை; போஸ்டர் அடித்தது nரும்விமர்சனத்துக்கு உள்ளாக்காப்பட்டதால் அவரே ஆட்களை வைத்து தன் படங்களை அழிக்கச் சொல்லி  சொல்pயிருப்பார். இதோடு கஞ்சா கேஸ்  முடி மறைக்;பட்டு விட்டது. அவருடைய குரு குள்ளநரி ரணில். அந்தக் குணம் இவருக்கும் கட்டாயம் இருக்கும்.

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

ஆயுதப் போராட்டம் மீண்டும் துளிர்விட சாத்தியம் இல்லை. இனவிடுதலைக்கான வன்முறைப் போராட்டங்கள் 1960- 2000 ஆண்டுகள்வரை சரியென்ற போக்கு இருந்தது. ஆனால் இப்போது உலகம் மாறிவிட்டது. தமிழர்களும் மாறிவிட்டார்கள். போர்க்குணம் மழுங்கிவிட்டது. அதனைக் கூராக்க முடியாத சூழல்தான் உள்ளது.

நீங்களும் யதீந்திரா போல இலங்கை அரசியலில் உள்ள ஓர் முக்கியமான பகுதியை கவனத்தில் கொள்ளவில்லை. அது வல்லரசுகளின் பூகோள அரசியல். எமது மக்களின் போராட்டமும் அதை தொடர்ந்த அழிவும் பெருமளவில் இந்த வல்லரசுகளின் பூகோள அரசியலாலேயே தீர்மானிக்க பட்டது. ஆயுத போராட்டம் மீண்டும் ஆரம்பம் ஆவதும் அது வளர்வதும் பெரும்பாலும் இந்தியா, சீனா அல்லது அமெரிக்க அரசின் திட்டம், ஆதரவு, ஊக்கம், நிதி ஆகியவற்றின் உதவியுடன் தான் இடம்பெறும். இப்படித்தானே முதலும் நடந்தது?

அடுத்த தலைமுறை, போரின் தொல்வியையும், மெய்சிலிர்க்க வீரகாவியங்களையும் நினைவு கொள்ளுமே அன்றி, போரின் வலியையும், இழப்புகளையும் சுமையையும் அனுபவித்து இருக்காது. மேலும் இளம் கன்றுகள் பயம் அறியாது, சொற் கேளாது, அப்பாவித்தனம் இருப்பதால் இலகுவாக சர்வதேச சதித் திட்டங்களுக்கு பலியாகுவர். ஆகவே இந்தியாவும் அமெரிக்காவும் இலங்கையில் சீன ஆதிக்கத்தை குறைத்தால் சீன ஆதரவுடன் பயங்கரவாதமாக மீண்டும் ஆயுத கிளர்ச்சி ஆரம்பமாகும். மாறாக அமெரிக்கா காலூன்றினால் இந்தியா அல்லது சீனா ஆயுத கிளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

3 hours ago, கிருபன் said:

ஆனாலும் தமிழர்கள் ஏற்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றைத் தருமளவிற்கு சிங்களவர்கள் இன்னும் மாறவில்லை.  

தமிழர்கள் ஏற்க கூடிய தீர்வு, தமிழர்களுக்கு தேவையான தீர்வு, தமிழர்களுக்கு கிடைக்க கூடிய தீர்வு என்பவற்றில் இருந்து மாறுபடுகிறது. தமிழரசு கட்சி ஆரம்பம் முதலே சமஷ்டியை கேட்டு வந்ததாலும், பின்னர் சர்வதேச சட்டங்களின் படி சுயநிர்ணய உரிமையை இயக்கங்கள் வலியுறுத்தியதாலும் தமிழர் தாம் ஏற்க கூடிய தீர்வில் இவற்றை எதிர்பார்க்கிறார்கள்.

தமிழர்கள் வாழ தேவையானவை பாதுகாப்புக்கான போலிஸ் நிருவாகம், தமது அரசுடன் தமது மொழியில் தொடர்பு கொள்ளும் உரிமை, தமது வளங்களை அபிவிருத்தி செய்யும் உரிமை (காணி அதிகாரம்), தமது கலாச்சாரத்தை வளர்க்கும் உரிமை, இவற்றுக்கான சட்டங்களை ஆக்கும் உரிமை என்பனவாகும். இது அதிகார பரவலாக்கல் – சமஷ்டி இதற்கான ஒரு வழியே தவிர ஒரே வழி அல்ல. இந்த அதிகார பரவலாக்கல் பற்றி இந்த சட்ட மாற்றத்தில் இடம் பெற்று இருக்கிறது.  சமஷ்டி இல்லை.

Link to comment
Share on other sites

16 hours ago, குமாரசாமி said:

சொல்லுறனெண்டு கோவிக்கக்கூடாது.....கலாச்சாரம் வேறை அரசியல் வேறை எண்டதை இந்த இடத்திலை சொல்லிக்கொள்ள விரும்புறன். இது உங்களுக்கு புள்ளி குத்தினவருக்கும் சேர்த்து சொல்லியிருக்கு.....அவருக்கு வேறை தனியாய் வெத்திலை வைச்சு சொல்ல எனக்கு நேரமில்லை :grin:

சுமந்திரன் தன்ரை அரசியல் லாபத்துக்காக செய்யக்கூடிய ஆள்...tw_glasses:

நீங்கள் இந்த இடத்தில் மட்டுமல்ல எந்த இடத்தில் இருந்து சொன்னாலும் ஒரு மக்களின் கலாச்சாரம் தான் அவர்களின் அரசியலில் எதிரொலிக்கும். இரண்டும் வேறு வேறான விடயங்கள் அல்ல.  மனித கலாச்சாரம் என்பது  Zivilization  என்ற ஆரம்ப புள்ளியில் தொடங்குகிறது. அவர்களின் அரசியலும் அதனுள் அடக்கம். அது மட்டுமல்ல  மக்களின் எல்லா விடயங்களையும் அவர்களின் கலாச்சாரமே தீர்மானிக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

ஆயுத போராட்டம் மீண்டும் ஆரம்பம் ஆவதும் அது வளர்வதும் பெரும்பாலும் இந்தியா, சீனா அல்லது அமெரிக்க அரசின் திட்டம், ஆதரவு, ஊக்கம், நிதி ஆகியவற்றின் உதவியுடன் தான் இடம்பெறும். இப்படித்தானே முதலும் நடந்தது?

தமிழர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகள் என்று சொல்லுவதுபோன்று உள்ளது. தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற இன்னோர் ஆயுதப்போராட்டத்தை வல்லரசுகள் தூண்டினாலும் அதை முன்னின்று தலைமைதாங்கி நடாத்தவோ, அல்லது ஆளணிகளைக் கொடுக்கவோ தமிழினம் தயாராக இல்லை. இறுதி யுத்தத்தில் பட்ட அவலங்களில் இருந்து பெற்ற பாடங்கள் மூலம் மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள். புலிகளால் கெரில்லா யுத்தத்திற்கு மீளவும் போகமுடியாமல் போனதும் நீருக்குள் மீன் போல மக்களுக்குள் ஒளிந்திருக்கமுடியாமல் போனதுதான்.

வல்லரசுகளின் கொள்கை வகுப்பாளர்கள் புலிகளை ஆடுகளத்தில் இருந்து நீக்க ஒத்துக்கொண்ட பின்னர் இந்த காய் நகர்த்தலைச் செய்யும் வாய்ப்பு முற்றுமுழுதாக நீக்கப்பட்டு பத்து வருடங்களாகிவிட்டது. தவிர, சிறிலங்கா ஆயுதப்படை நவீன தொழில்நுட்பங்களைப் பாவித்து சகலரையும் கண்காணிக்கும் நிலையும் உள்ளது. எனவே, இப்போதைய இளம் தலைமுறை சமூகவலைத் தளங்களில் வேண்டுமென்றால் போராட்டம் நடாத்தமுனையலாம். அதற்குமேல் ஒன்றும் செய்யமாட்டார்கள். 

ஆக, ஆயுதக்கிளர்ச்சி என்பது தமிழரைப் பொறுத்தவரை கடந்தகால வரலாறாகிவிட்டது.

3 hours ago, Jude said:

தமிழர்கள் ஏற்க கூடிய தீர்வு, தமிழர்களுக்கு தேவையான தீர்வு, தமிழர்களுக்கு கிடைக்க கூடிய தீர்வு என்பவற்றில் இருந்து மாறுபடுகிறது. தமிழரசு கட்சி ஆரம்பம் முதலே சமஷ்டியை கேட்டு வந்ததாலும், பின்னர் சர்வதேச சட்டங்களின் படி சுயநிர்ணய உரிமையை இயக்கங்கள் வலியுறுத்தியதாலும் தமிழர் தாம் ஏற்க கூடிய தீர்வில் இவற்றை எதிர்பார்க்கிறார்கள்.

தமிழர்கள் வாழ தேவையானவை பாதுகாப்புக்கான போலிஸ் நிருவாகம், தமது அரசுடன் தமது மொழியில் தொடர்பு கொள்ளும் உரிமை, தமது வளங்களை அபிவிருத்தி செய்யும் உரிமை (காணி அதிகாரம்), தமது கலாச்சாரத்தை வளர்க்கும் உரிமை, இவற்றுக்கான சட்டங்களை ஆக்கும் உரிமை என்பனவாகும். இது அதிகார பரவலாக்கல் – சமஷ்டி இதற்கான ஒரு வழியே தவிர ஒரே வழி அல்ல. இந்த அதிகார பரவலாக்கல் பற்றி இந்த சட்ட மாற்றத்தில் இடம் பெற்று இருக்கிறது.  சமஷ்டி இல்லை.

தமிழர்கள் கிடைக்கக்கூடிய தீர்வில் இருந்துதான் தமிழர்கள் ஏற்கக்கூடிய தீர்வும் அதற்குமப்பால் தமிழர்களுக்குத் தேவையான தீர்வும் வரலாம். 

அதிகாரப்பரவலாக்கம் மூலம் தமிழர்களுக்கு காணி, பொலிஸ், அபிவிருத்தித்திட்டங்ளை செயற்படுத்தும் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள என்னதான் முயன்றாலும் பெரும்பான்மையான சிங்கள மக்களின் ஆதரவோடு இருக்கும் மகிந்தவின் பெருந்தேசிய பெளத்த இனவாதிகள் ஒருபோதும் விடப்போவதில்லை. சுமந்திரனும் கூட்டமைப்பும் இலவுகாத்த கிளிகளாகத்தான் இருப்பார்கள்!

Link to comment
Share on other sites

இணைந்த வடக்கு கிழக்கு இல்லாமல் அதுவும் குறைந்த பட்ச எங்கள் தீர்வை தர முடியாத சிங்களம் 50 களில் உள்ள மாதிரியே இருக்கிறது . நாம் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் , உறுதியாக இருக்க வேண்டும் .
இது ஆயுத போராடடம் அல்ல சர்வதேசம் அழிப்பதட்கு .

தமிழ் மக்கள் எப்பவுமே கூட இருப்பார்கள் எங்கள் தேவைகளை அரசியல் ரீதியாக கேட்பதட்கு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.