Jump to content

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக எவ்.சீ. ராகல்

January 18, 2019

ES-UNI.jpg?zoom=3&resize=335%2C234

கிழக்குப் பல்லைக்கழகத்தின் துணைவேந்தராக அப் பல்கலைக்கழகத்தின் பௌதீகவியற் துறைப் பேராசிரியர் எவ்.சீ. ராகல் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய துணைவேந்தர் ரி. ஜெயசிங்கத்தின் பதவிக் காலம் எதிர்வரும் 21ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையிலேயே புதிய துணைவேந்தர் நியமனம் இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களிடையே நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில், பேராசிரியர் எவ்.சீ.. ராகவல் முதல் நிலையிலும், கலாநிதி எம். சந்திரகாந்தா இரண்டாம் நிலையிலும், திருமலை வளாக முதல்வர் ரி. கனகசிங்கம் மூன்றாம் நிலையிலும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

பல்கலைக்கழக சட்டத்திற்கு அமைவாக பேரவையின் பரிந்துரைகளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தராக எவ். சீ. ராகவல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 22ஆம் திகதி முதல், புதிய துணைவேந்தர் தனது கடமைகளை பெறுப்பேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

http://globaltamilnews.net/2019/110368/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழரா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இவர் தமிழரா?
 

Flavian Chalmus Ragel மட்டக்களப்பு பறங்கியர் இனத்தைச் சேர்ந்தவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎1‎/‎18‎/‎2019 at 9:31 PM, கிருபன் said:

Flavian Chalmus Ragel மட்டக்களப்பு பறங்கியர் இனத்தைச் சேர்ந்தவர். 

நன்றி கிருபன்...வேறு எந்த இணையத்திலும் இது பற்றிய செய்தியைக் காணவில்லை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

நன்றி கிருபன்...வேறு எந்த இணையத்திலும் இது பற்றிய செய்தியைக் காணவில்லை 
 

தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் பேசவும் எழுதவும் தெரிந்தவர். மிகவும் ஆற்றலும் அனுபவமும்  கொண்டவர் எனக் கூறுகின்றனர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, வாத்தியார் said:

தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் பேசவும் எழுதவும் தெரிந்தவர். மிகவும் ஆற்றலும் அனுபவமும்  கொண்டவர் எனக் கூறுகின்றனர்..

நன்றி வாத்தியார் ...திறமையானவராய் இருந்தால் சரி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.