Jump to content

செவ்வாய்க்கிரகம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் கிரகம்..

ஐயா வணக்கம் எனது பெயர் செவ்வாய் கிரகம்..

நான் பூமில இருந்து 48.5 கோடி கி.மீ தொலைவில் இருக்கேன்..

பூமில இருந்து என்ன பாக்க வறனும்னா 7 மாதம் பயணம் செஞ்சி வரனும்...

இத ஏன் உங்க கிட்ட சொல்றேன்னா நான் ரொம்ப கெட்ட பையன்...

பூமில குறிப்பா இந்தியா தமிழ் நாட்டுல மற்றும் ஈழத்தில இருக்கவங்கள நான் வந்து புடுச்சிக்குவேன்... இவங்க ஐரோப்பாவோ அமெரிக்காவோ எங்க போனாலும் அவங்களை போய்பிடிப்பேன். அவரகள் வாழும் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வாழும் ஐரோப்பிய மக்களை நான் பிடிக்கமாட்டேன். இவர்களை  விட உலகில் வாழும் மற்றய கோடிக்கணக்கான மக்களை நான் எதுவும் செய்ய மாட்டேன்

அதுக்கு செல்லமா என்ன செவ்வாய் தோசம்னு கூப்புடுவாங்க...

நான்  ஒரு சில பேர புடிச்சிடுவன் எப்படினா..யாழ்ப்பாணத்திலிருக்கிற சாந்தியையும் .......  வட்டுக்கோட்டையில இருக்க பரமசிவத்தையும்  புடிச்சிடுவன் ..

கல்யாணம் பன்றதுனா இந்த 2 பேருக்கு மட்டும் பண்ணி வெக்கனும்.. இல்லனா பெரிய தெய்வ குத்தம் ஆகிடும்.........

எனக்கு ஏஜெண்ட்   பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு அவங்க கிட்ட நான் யார் யார புடிச்சிருக்கேன் சொல்லிருவேன்.. 

அவங்க உங்க கிட்ட சொல்லிருவாங்க... 

நான் அவங்கள விடனும்னா என்ன பரிகாரம் செய்யனும்னு அவங்க கிட்ட சொல்லிருக்கேன்.. 

அவங்க உங்க வசதிக்கு ஏத்த மாதிரி 2000 முதல் 10000 வர குடுத்து பரிகாரம் செஞ்சி என்கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வந்ததும் விட்டு வேற ஆள புடிச்சிக்குவேன்..

இதுல என்ன ஒரு அதிசயம் னா நீங்க என்கிட்ட வரனும்னா 7 மாதம் ஆகும் ஆனா நான் உங்கள புடிக்கனும்னா உடனே புடிச்சிக்குவேன்...

அட கூமுட்டைகளா 48.5 கோடி கி.மீ ல இருக்க செவ்வாய்கிரகம் உங்க கல்யாணத்த நிப்பாட்டுதுனா.. நீ எவளோ பெரிய அடிமுட்டாளா இருப்ப.. உன்ன வெச்சி பணம் சம்பாதிக்கறவன் எவளவு புத்திசாலியா இருப்பான்.. 

ஏமாறவன் இருக்க வர ஏமாத்துறவன் இருக்க தான் செய்வான்..

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஆயிரம் சொந்த பந்தங்கள் இருந்தாலும் அம்மாவுக்கு நிகர் ஏதுமில்லை.
  • கணவர் காவல்துறையில் வேலை பார்ப்பதால் ஒருவகை அதிகார துஸ்பிரயோகமாக தெரிகிறது.
  • இந்த பெண் புரிந்த செயல்களை வாசிக்கையில், பெண்ணின் வழக்கறிஞர்கள் இந்த பெண்ணிற்கு postnatal depression என்றுதான் கூறுவார்கள் என நினைத்தேன் அப்படியே ஆகிவிட்டது.  இந்த பெண்ணிற்கு postnatal depression or obsessive compulsive disorder or insecure behaviours or  whatever.. அதை குணப்படுத்தாமல் இந்த கொலை வரை கொண்டு வந்து நிறுத்தியவர்கள், அந்தப்பெண்ணின் கணவனும் தாயாருமே..மரண தண்டனை கொடுத்தால் எல்லாம் மறந்துவிடும்.. ஆகையால் செய்த குற்றத்தை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படவேண்டும்.. இந்த பெண்ணிற்கு பிறந்த பிள்ளைகளின் உடல்உள வளர்ச்சியில் கூட இது எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என நினைக்கையில் மிகவும் வருத்தத்தை தருகிறது..  இறந்த அப்பாவி பெண்ணின் கனவுகள் எல்லாம் வீணாகிவிட்டது.. 
  • சைவ இறை இசைப் பாடல்கள் ஒலித்த வட்டுவாகலில், தற்போது பௌத்த மத காப்புரைகள் ஒலிக்கின்றன – ரவிகரன் சுட்டிக்காட்டு    3 Views சைவ இறை இசைப் பாடல்கள் மட்டுமே ஒலித்த வட்டுவாகல் கிராமத்தில் தற்போது பௌத்த மதக்காப்புரைகள் காலையும் மாலையும் ஆக்கிரமிப்பு உரைகளாக ஒலிக்கவிடப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை வட்டுவாகல் கிராமம் கடற்படை, இராணுவம், வனஜீவராசிகள் திணைக்களம் என பல்வேறு அரச இயந்திரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில்  நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “வட்டுவாகல் ஒரு தனித் தமிழ் சைவக் கிராமமாகும். இந்த கிராமத்தில் தற்போது சத்தமில்லாதவகையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேலோங்கிவருகின்றன. அந்த வகையில் அங்கு கோத்தபாய கடற்படைத் தளம் என்னும் கடற்படைத்தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வட்டுவாகல் அக்கரையில், வடக்காறுப் பகுதிக்கு எவரும் மீன்பிடிச் செயற்பாட்டிற்குச் செல்ல முடியாதவாறு  670ஏக்கர், 03றூட், 10பேச் காணியினை கடற்படையினர் அபகரித்துள்ளனர். இதுதவிர வட்டுவாகல் இக்கரையிலும் வடக்காறுப் பக்கமாக கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தினை அபகரித்து அங்கு இராணுவமுகாம் அமைக்கப்பட்டதோடு மாத்திரமின்றி, பாரிய பௌத்த விகாரையும் அங்கு அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. அத்தோடு நந்திக்கடலும், நந்திக்கடலோடு சேர்ந்த வயல்நிலங்கள், நிலப்பகுதிகளை உள்ளடக்கி வனஜீவராசிகள் திணைக்களம் ஏறத்தாள 10250ஏக்கர், அதாவது 4141.67ஹெக்டயர் நிலத்தினை தங்களுடைய ஆளுகைக்குள் கெண்டுவந்திருக்கின்றார்கள். இந்தவகையில் கடற்படை, இராணுவம், வனஜீவராசிகள் திணைக்களம் என அரச இயந்திரங்கள் வட்டுவாகல் பகுதியில் தமது ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன. அதேவேளை இப்பகுதி பகுதிமக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட காலத்தில், சிங்கள பௌத்த குடும்பங்களே இல்லாத இந்த வட்டுவாகல் கிராமத்தில்  பௌத்த விகாரை ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையில் பௌத்த மத காப்புரைகள் காலையும் மாலையும் வட்டுவாகல் கிராமம் பூராகவும் ஒலிபெரிக்கியூடாக ஒலிபரப்பப்படுகின்றது. அதாவது பௌத்த மதக் காப்புரைகள் அங்கு ஆக்கிரமிப்பு உரைகளாக அங்கு ஒலிக்கவிடப்படுகின்றன. ஒரு தனித் தமிழ் சைவக் கிராமத்தில் இப்படியானதொரு பௌத்த மத ஆக்கிரமிப்பு இடம்பெறுவதுடன் கடற்படை, இராணுவம், வனஜீவராசிகள் என்பவற்றாலும் ஆக்கிரமிப்புக்கள் இடம்பெற்றுவருவதால், வட்டுவாகல் கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் கூனிக் குறுகிப்போய் இருக்கக்கூடிய நிலையே ஏற்பட்டுள்ளது. நாளாந்தம் சைவ இறைஇசைப் பாடல்கள் ஒலித்துவந்த வட்டுவாகல் கிராமத்தில் தற்போது பௌத்த மத காப்புரைகள் ஆக்கிரமித்துள்ளன”  என்றார்   https://www.ilakku.org/?p=43254      
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.