Jump to content

மூதாளர் பேணகம் தொடர்பான விதிமுறைகள், கருத்தாடல்கள், அறிவுரைகள், தேடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நண்பர்களே,

இந்தக் கருத்துக்களவெளி பல உரையாடல்கள் கடந்தகாலத்தில் பல விடயங்களுக்கு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. காலங்கள் கடந்து செல்லினும் இன்னும் மனதிற்குள்  உருவின்றி அசையும் சிந்தனைகள் தமக்கான இருக்கைகளின் தேடலைக் குறைக்கவில்லை. இங்கு உலவும் நம்மில் பலருக்குள் இருக்கும் தேடல் சிந்தனைதான் இப்போது நான் இங்கு எடுத்துவரும் விடயம்.

 

உறவுகளே, ஒரு மூதாளர்பேணகம் அமைப்பது தொடர்பான விதிகள் எவை? தாயகத்தில் உருவாக்கத் தேவையான அவசியபதிவுகள், தனிமனுசியாக தனிப்பட்ட முறையில் ஒன்றை உருவாக்க செய்யவேண்டியவை இப்படியாக கேள்விகள் நீண்டவை. முடிந்தவரை உங்கள் ஆலோசனைகள், சிறந்த அலசி ஆராயப்பட்ட வழிவகைகள், அரசியல் வெளிக்குள் அகப்படாமல் எப்படி உருவாக்குவது?

 

நண்பர்களே இந்தக்களம் எனக்கு பலமுறை பொதுவெளியில் நான் பணியாற்ற சிறந்த ஆலோசனைக்கூடமாக திகழ்ந்திருக்கிறது. இன்று வரைக்கும் இனியும் தொடரவேண்டும். உங்கள் அபிப்பிராயங்கள் அலசல்களை கருத்தாடல்களை எதிர்பார்க்கிறேன்.

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் வாழ்த்துக்கள் அக்கா.

சகாரா அக்காவிடம் சில கேள்விகள், இலவசமாகவா அல்லது கட்டணம் பெற்று கொண்டா சேவை வழங்க போகின்றீர்கள்? பதிவு செய்வது அவசியம்(வரி விலக்கு), யாப்பு உருவாக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலவசம் என்பதற்கும், கட்டணம் பெற்றுக் கொண்டு என்பதற்கும் இடையில் உள்ள வரி விலக்கு வேறுபாடுகளை தெளிவாக பதிவிடமுடியுமா? நிச்சயமாக யாப்பு உருவாக்கப்படவேண்டும். ஒரு விடயத்தை நடைமுறைக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் நிறையவே விடயங்களை அறியவேண்டியுள்ளது. இப்போது வாழ்த்துகள் வேண்டாம் ஏராளன். செயற்பாட்டில் முன்னெடுக்கும்போது நிச்சயமாக உங்கள் வாழ்த்துகளை ஏற்றுக் கொள்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறக்கட்டளையாக பிரதேச செயலகத்தில் பதிவு செய்யவேண்டும். இலவசம்/கட்டணமற்ற சேவைக்கு வரிவிலக்கு முற்றாக கிடைக்கும் என நினைக்கிறேன், அரசாங்க நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கலாம் என்று அப்பா சொன்னார். மேலும் விபரங்கள் கிடைத்தால் பதிவு செய்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஊரிலும் முதியோர் இல்லக் கலாச்சாரத்தை தொடங்கி/அதிகரித்து  வைக்க போறீங்களா அக்கா?
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.