Jump to content

🤠 பாட்டி வடை சுட்ட கதையின் கதை 🤣


Recommended Posts

சிறு வயதில் நமக்கெல்லாம் முதன்முதலில் அறிமுகமான கதைகளில் ஒன்று பாட்டி வடை சுட்ட கதையாகும். காக்காவைப் பாட வைத்து வடையை அபகரித்துக் கொண்டோடிய நரியின் சாமர்த்தியத்தைக் கொண்டாடும் இக்கதையை இன்னோர் கோணத்தில் நோக்கிய போது சட்டென்று ஓர் சிந்தனை என் மனதில் உதித்தது.

அதாவது இக்கதையில் கஷ்டப்பட்டு வடை சுட்ட பாட்டிக்கு ஓர் நீதியும் கிடைக்கவில்லை. ஆகவே இக்கதையிலிருந்து இன்னோர் விடயத்தையும் கற்றுக்கொள்ள வேண்டுமே என்று வினவியபோது பின்வரும் விடை கிடைத்தது:

'எந்த அநியாயம் நடந்தாலும் சகித்துக்கொண்டு ரொம்பவும் அமைதியா இரு; நல்ல காலம் வர எல்லாம் சரியாகும் எனப் பொறுத்துக்கொண்டு இருப்பம்' என்று நினைச்சு ரொம்ப நல்லவனா இருந்தால் வடையைக் காக்கா தான் தூக்கிட்டுப் போய்டும்; அப்படி காக்கா அதைத் தவற விட்டாலும் வடை நரி கைல தான் சிக்கும். 'காக்கா'பிடிப்பவர்களும், 'குள்ளநரி'ப் புத்தியுடையோரும் மட்டுமே பிழைக்கத் தெரிந்த உலகம் இது; கதையில் கூட வடை சுட்ட பாட்டியை மறந்து போகும் உலகம்! 🤣

நம்முன்னோர்கள் எவ்வளவு பெரிய உண்மையை இக்கதையில் பூடகமாகச் சொல்லிச்சென்றுள்ளனர்!

🤡(***சிரிப்பதற்கு மட்டும்***)🤡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிஜமாகவே சிறப்பான சிந்தனை. மேலும் இதே கதையை வணிக மேலாண்மையுடன் ஒப்பிட்டு கூட கதைகள் உண்டு. (காகங்கள் ஒன்றாகச் சேர்ந்து நரியைக் கொன்று சமத்துவமாக எல்லா காகங்களும் புசிப்பது போல் இருக்கும்.  ...... இங்குதான் எங்கோ படித்த ஞாபகம் ......!  😁

Link to comment
Share on other sites

12 hours ago, suvy said:

நிஜமாகவே சிறப்பான சிந்தனை. மேலும் இதே கதையை வணிக மேலாண்மையுடன் ஒப்பிட்டு கூட கதைகள் உண்டு. (காகங்கள் ஒன்றாகச் சேர்ந்து நரியைக் கொன்று சமத்துவமாக எல்லா காகங்களும் புசிப்பது போல் இருக்கும்.  ...... இங்குதான் எங்கோ படித்த ஞாபகம் ......!  😁

நன்றி சுவி அண்ணா. ஆமாம், நீங்கள் சொல்வது போல் ஓர் கதை வடிவமும் உள்ளது. 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஏராளன்......ஏராளனிடம் ஏராளமான விடயங்கள் இருக்கின்றன போல இருக்குது ......!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.